அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரசார நடவடிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிப்பது அராசாங்கத்தை வெட்கப்பட வைக்கும் செயற்பாடு எனத் தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகள், இந்தப் பிரசார நடவடிக்கைக்கு முழு ஆதரவு வழங்குவதாகக் கூறியுள்ளனர்.
இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கு சர்வதேசக் கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி ‘விதிமுறைப்படி விளையாடு’ எனும் தலைப்பில் சர்வதேச மன்னிப்புச் சபை சர்வதேச பிரசார நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளது.
இந்தப் பிரசார நடவடிக்கைக்குத் தாம் ஆதரவு வழங்குவதாக விடுதலைப் புலிகள் அமைப்புக் கூறியுள்ளது. விளையாட்டைப் பாவித்து தென்னாபிரிக்க வெள்ளையர்கள் மத்தியில் ஒரு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் மூலம் தென்னாபிரிக்க இன ஒதுக்கல் அரசை மண்டியிடவைக்க முடிந்தது என்று விடுதலைப் புலிகளின் பேச்சாளர் செல்வி நவரூபன் ஏ.எஃப்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
இதேபோன்று, தற்போது அனைத்துலக மன்னிப்புச்சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பிரசார இயக்கம், சிறிலங்கா கிரிக்கட் அணிக்கு எதிரான அனைத்துலக விளையாட்டுப் புறக்கணிப்பாக பரிமாணம் பெறும் என்று நான் எதிர்பார்க்கிறேன். என்றார் அவர்.
எனினும், சிறிலங்கா கிரிக்கட் அணியை இலக்குவைத்துத் தாம் இந்தப் பிரசார நடவடிக்கையை ஏற்படுத்தவில்லையென அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
நன்றி>சங்கதி.
Tuesday, April 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment