Tuesday, April 10, 2007

தமிழர் பிரதிநிதிகள் கைதுக்கு கண்டனம்: பிரான்சில் தடையை உடைத்து நடந்தது "ஒன்றுகூடல்"!








பிரான்சில் கைது செய்யப்பட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பிரதிநிகளை விடுவிக்க தடையை உடைத்து பாரிய அளவிலான ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது.
பிரான்ஸ் காவல்துறையால் ஒன்றுகூடல் நிகழ்வுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையிலும் மக்கள் தன்னெழுச்சியாக குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடினர்.

பாரிசில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இரண்டு மணி முதல் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் பார்வையில் படும் இடமான ரொக்கார்டோ சதுக்கத்தை நோக்கி தமிழ்மக்கள் திரளத் தொடங்கினர்.

பிரான்ஸ் காவல்துறையின் தடையை அமுல்படுத்த ஏராளமான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சதுக்கம் நோக்கி வந்து கொண்டிருந்த மக்களை திருப்பி அனுப்ப முயற்சித்துக்கொண்டிருந்தனர். கலைந்து செல்லும்படியான வேண்டுகோளையும் விடுத்தனர்.

ஆனால் அனைத்தையும் மீறி மாற்று வழிமுறைகளை கையாண்ட மக்கள் ஆயிரக்கணக்கில் சதுக்கத்தை அண்டிய பாதையில் அமைதியாக அமர்ந்து கொண்டனர்.

இந்நிலையில் லாக்கூர்ணவ் நகரசபை உறுப்பினர் அன்தோனி ரூசலின் உதவியை நாடிய காவல்துறையினர் அவரூடாக மக்களுக்கு நிலமையை புரிய வைத்தனர்.
ஒன்றுகூடல் தடை செய்யப்டிருப்பதாக தமிழர்களின் ஊடகங்கள் வழி தெரிவிக்கப்பட்டிருந்த போதும் தமிழ்மக்கள் தங்கள் பிரதிநிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துரைக்கும் வகையில் தன்னெழுச்சியாக கூடியது பிரான்சில் நடத்தப்பட்ட "பொங்குதமிழ்" நிகழ்வாக இருந்தது என்று எமது பிரான்ஸ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

1 comment:

Anonymous said...

இம்முயற்சி எல்லா நாடுகளிலும் நடைபெறவேண்டும். இழப்பதற்கு எதுவுமில்லை எம்மைத்தவிர.