Monday, April 30, 2007

தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இல்லை: தமிழீழ விடுதலைப் புலிகள் விளக்க அறிக்கை.

தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் 12 தமிழக உறவுகள் காணாமல் போனமைக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்
30.04.2007

தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கடலில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வெளிவருகின்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

இவை தமிழ் மக்களுக்கும் அவர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரான சக்திகளால் திட்டமிடப்பட்டு வெளிக்கொணரப்படும் கட்டுக்கதைகளே ஆகும்.

தமிழக மக்களுக்கும் எமது மக்களுக்கும் இடையிலான நல் உறவினைப் பிரித்து எமது மக்களைத் தனிமைப்படுத்தி அவர்களின் மீது மிகப்பெரும் மனிதப் பேரவலங்களை கட்டவிழ்த்து விட்டு இன அழிப்பொன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அதன் ஒரு பகுதியாகவே தமிழக மீனவர்களை அவ்வப்போது கடலில் வைத்துச் சுட்டுக்கொன்று விட்டு அதற்கான பழியை தமிழ் மக்கள் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் சுமத்தி விடுகின்ற வழமை தொடர்ந்து வருகின்றது.

இப்படியான குற்றச்சாட்டுக்களை காரணமாக வைத்து இந்திய அரசுடன் ஒரு கூட்டு கடல் ரோந்து நடவடிக்கையை தொடங்குவதற்கும் அதன்மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை நசுக்கிவிடலாம் என்றும் சிறிலங்கா அரசு கனவு காண்கிறது.

அதற்காகவே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களை தொடர்ந்து நடாத்தி வருகின்றது. இதன் மூலம் தமிழக உறவுகளை எமது மக்களிடமிருந்து அன்னியப்படுத்தி தனது இனப்படுகொலை முயற்சிகளை அவர்களுக்கு மறைத்து அரசியல் இலாபம் சம்பாதிக்க நினைக்கின்றது.

எமது மக்களும் அமைப்பினரும் எப்போதும் தமிழக உறவுகளுடன் ஒரு நல்ல உறவினைப் பேணி வருகின்றனர். அவர்களை அச்சுறுத்துவதற்கோ, அவர்களின் உயிர்களுக்கு ஊறுவிளைவிப்பதற்கோ நாம் ஒருபோதும் முயற்சிக்கவில்லை.

பதிலாக பல ஆபத்துக்களில் இருந்தும், சிறிலங்கா அரசின் வன்முறைகளில் இருந்தும் பல சந்தர்ப்பங்களில் அவர்களை காப்பாற்றி பத்திரமாக கரை சேர்த்திருக்கின்றோம். தமிழகத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றோம்.

அப்படியிருந்தும் 300-க்கும் மேற்பட்ட தமிழக உறவுகள் சிங்களக் கடற்படையால் இதுவரையும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது மிகவும் மனவேதனைக்குரியதே.

அந்த விதத்திலே அண்மையில் இடம்பெற்ற வன்முறையும் திட்டமிடப்பட்டு சிங்கள இராணுவத்தினராலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. மேலும் அதற்கு விடுதலைப் புலிகள் தான் காரணம் என்ற பொய்யான பரப்புரையையும் அது முன்னெடுத்து வருகின்றது.

இவ் வன்முறையில் 12 தமிழக உறவுகள் காணாமற் போய்விட்டதாக கூறப்படுகின்றது. இவர்கள் குறித்த நிலவரங்களை அறிவதற்கு எமது கடற்படையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

எமது பிரதேசத்தில் இதுவரைக்கும் அப்படியானவர்கள் இருப்பது தொடர்பாக எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை.

ஆயினும் எமது பிராந்தியத் தலைவர்களுடன் இது தொடர்பாக தொடர்பு கொண்டிருக்கின்றோம். மீனவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் அவர்களை மீட்பதற்கான எந்த நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

தமிழக காவல்துறையினர் பேச்சு நடத்தவில்லை

தமிழகக் காவல்துறை இது தொடர்பாக எமது அமைப்புடன் தொடர்புகொண்டதாகவும், பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் வெளிவருகின்ற செய்திகள் யாவுமே உண்மைக்குப் புறம்பானவையாகும். இதுவரையில் தமிழகக் காவல்துறைக்கும் எமது அமைப்புக்குமிடையில் உத்தியோகபூர்வமான எந்தத் தொடர்புகளும் ஏற்படுத்தப்படவில்லை என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

தமிழக மக்கள் மீது சிறிலங்கா அரசு முன்னெடுத்து வருகின்ற நீண்ட கால வன்முறையின் பின் புலத்தினை தமிழக மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள்.

அத்துடன் எமது மக்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்திற்குமாக அவர்கள் குரல் கொடுத்தும் வருகிறார்கள். இத்தகைய பின்னணியில் இவ்வாறான வன்முறைகளையும் இதற்குக் காரணமானவர்களையும் தமிழக உறவுகள் உண்மையாகவே இனங்காணுவார்கள் என்றே நம்புகின்றோம்.

தொடர்ந்தும் இத்தகைய வன்முறைகள் இடம்பெறாது தடுப்பதற்கு எமது மக்களும், அமைப்பினரும் பூரண ஆதரவினை வழங்கிநிற்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்பேன்: வைகோ!

ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்பேன் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்பேன் என்று வைகோ தெரிவித்து வரும் நிலையில் அவரைக் கைது செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருட்டிணசாமி வலியுறுத்தினார்.

அதேபோல் வைகோவை கைது செய்ய வேண்டும் என்று இந்திய அமைச்சர் இளங்கோவனும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "மாலைமலர்" நாளிதழுக்கு வைகோ அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளதாவது:

முதல்வரை கிருட்டிணசாமி சந்தித்து பேசியது தொடர்பாக நான் எதுவும் சொல்வதற்கில்லை. விடுதலைப்புலிகள் தொடர்பாக நான் புதிதாக எதுவும் பேசி விடவில்லை. தொடர்ந்து கூறி வரும் கருத்துக்களைத்தான் இப்போதும் கூறியிருக்கிறேன்.

பிரதமரை நான் சந்தித்து பேசிய போது என்ன கருத்தை வெளியிட்டேனோ அந்த கருத்தைதான் சமீபத்தில் நான் அறிவிப்பாக வெளியிட்டேன்.

இந்தியாவில், தமிழ்நாட்டில் எந்த ஒரு வன்முறையிலும் நாங்கள் ஈடுபட்டதுமில்லை. வன்முறைச் சம்பவங்களை ஆதரித்ததும் இல்லை.

இலங்கையில் தற்போது உச்ச கட்ட உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கிறது. தமிழர்களை சிங்கள வெறியர்கள் தாக்கி அழிக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் துன்பத்தில் தள்ளப் படுகிறார்கள்.

ஈழத்தில் வாடி வதங்கி கொண்டிருக்கும் தமிழர்களுக்கு மற்றும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண விடுதலைப்புலிகள் போராடி வருகிறார்கள்.

தமிழர்கள் வெல்ல வேண்டும். அவர்களுக்காக போராடும் விடுதலைப்புலிகள் வெல்ல வேண்டும் என்ற இயற்கையான கருத்தைத்தான் நான் கூறி இருக்கிறேன்.

என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்பேன் என்றார் வைகோ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நன்றி>புதினம்.

Sunday, April 29, 2007

இரு வெளிநாட்டு பயணிகள் போக்குவரத்து விமானங்கள் சேவை நிறுத்தம்!

இரண்டு வெளிநாட்டு பயணிகள் வான்போக்குவரத்து சேவை நிறுவனங்கள் கொழும்புக்கான சகல விதமான போக்குவரத்துகளையும் இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளன.

ஹொங் கொங்கை தளமாக கொண்டு இயங்கும் கத்தே பசுபிக், மத்திய கிழக்காசியாவை தளமாக கொண்டு இயங்கும் எமிரேற்ஸ் ஆகிய விமானங்களே மறு அறிவித்தல் வரை தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.

பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக இவ்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
நன்றி>பதிவு.

இந்தியத் தமிழர்களை பிச்சைக்காரர்போல் நடத்துகிறார் மகிந்த: தொண்டமான் குற்றச்சாட்டு!

இலங்கையில் உள்ள இந்திய வம்சாவழித் தமிழர்களான மலையகத் தமிழர்களை பிச்சைக்காரர்களைப் போல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நடத்துவதாக மகிந்தவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் குற்றம்சாட்டியுள்ளார்.


அரச தலைவராக சந்திரிகா குமாரதுங்க பொறுப்பில் இருந்த போது ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின்படி மலையக பாடசாலைகளில் 300 ஆசிரியர்களை நியமனம் செய்து அதற்கான நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு மகிந்தவின் அலரி மாளிகையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வு நடைபெறுவது குறித்து புதன்கிழமைதான் ஆறுமுகம் தொண்டமானுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குழுவினர் உத்தியோகப்பூர்வமாக இந்தியப் பயணம் மேற்கொண்டிருந்தனர். புதுடில்லியில் இந்திய அதிகாரிகளுடனான சந்திப்புக்கும் வியாழக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அவற்றை இரத்துச் செய்துவிட்டு புதன்கிழமை இரவே இலங்கைத் தொழிலாளர் காங்கிரசார் கொழும்பு திரும்பினர்.

இருப்பினும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அதிருப்தியாளர்களான பிரதி அமைச்சர்கள் சுரேஸ் வடிவேல் மற்றும் பைசர் முஸ்தாபா ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டதை கேள்விப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடும் அதிருப்தியடைந்தனர்.

அதிருப்தியாளர்களை அழைத்தால் நிகழ்விலிருந்து தாங்கள் வெளிநடப்புச் செய்ய நேரிடும் என்றும் மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது தமது இனத்தவர்களையும் கட்சியையும் பிச்சைக்காரர்களைப் போல் நடத்துவதாகவும் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்த குற்றச்சாட்டை மேல்மாகாண ஆளுநர் அலாவி மௌலானாவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தரப்பினர் தெரிவித்தனர். நிகழ்வை ஒத்திவைக்கலாம் என்று அலாவி மௌலானா பதிலளித்துள்ளார்.

ஆனால் நீண்டகாலமாக ஆசிரியர் நியமன ஆணைகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில் நிகழ்வை ஒத்திவைக்க விரும்பவில்லை என்று இலங்கை தொழிலாளர் காங்கிரசினர் கூறியுள்ளனர். இதையடுத்து அலரி மாளிகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
நன்றி>புதினம்.

Saturday, April 28, 2007

சிறிலங்கவின் இரு பிரதான பெற்றோலிய எரிபொருள் களஞ்சியங்கள் மீது வான்புலிகள் தாக்குதல்.

எரியும் எண்ணைக்குதங்கள்.


தமிழீழ வான்படையினரின் வானூர்திகளை நோக்கி சிறிலங்காப் படையினர் நடத்திய தாக்குதல்களின் காட்சி

சிறிலங்காவின் கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், முத்துராஜவெல எண்ணெய்க்குதம் ஆகியவை மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகள் தாக்குதல் நடத்திவிட்டு வெற்றிகரமாக தளம் திரும்பி விட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இரு பகுதிகளிலும் தீச்சுவாலை கொளுந்துவிட்டு எரிவதனை வானோடிகள் கண்ணுற்றதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வான்புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த துணிகரத்தாக்குதலை நடத்தி இரண்டு பெரும் எரிபொருள் களஞ்சியங்களை தாக்கிவிட்டு வெற்றிகரமாகத் தளம் திரும்பியுள்ளன.

சிறிலங்கா வான்படை வானூர்திகளுக்கு எரிபொருளை வழங்கும் களஞ்சியமான கொல்லனாவ பெற்றோலிய எரிபொருள் களஞ்சியமும், முத்துராஜவல எரிபொருள் மற்றும் எரிவாயு களஞ்சியமும் வான்புலிகளின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி சேதமாகியுள்ளன.

கிளிநொச்சி மீது சிறிலங்கா வான்படையின் மிக் ரக வானூர்திகள் இன்று அதிகாலை பரா வெளிச்சக்குண்டுகளை வீசி குண்டுத்தாக்குதலை நடத்திச் சென்ற 1 மணிநேரத்தில் வான்புலிகளின் வானூர்திகள் கொழும்புக்குச் சென்று அதிமுக்கிய பெற்றோலிய எரிபொருள் களஞ்சியங்கள் மீது குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்திவிட்டு தளம் திரும்பிவிட்டன.

வான்புலிகள் தொடர்பாக முழுமையான விழிப்பில் சிறிலங்கா படைத்தரப்பு இருக்கின்ற நிலையில் வான்புலிகளின் வானூர்திகள் சிறிலங்கா தலைநகர் கொழும்பின் மையத்தில் தாக்குதலை நடத்தி தளம் திரும்பியிருக்கின்றன.

தொடர்புபட்ட செய்தி: வான்புலிகள் அச்சம்: மீண்டும் இருளில் மூழ்கியது கொழும்பு
படம்: சண்டே ரைம்ஸ்
நன்றி>புதினம்.

Friday, April 27, 2007

சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தவும்: அனைத்துலக நாடுகளுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள்!


இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

சிறிலங்காவைப் போல் 20 நாடுகளும் சிறார்களை படையில் பயன்படுத்துவதால் அந்த நாடுகளுக்கான இராணுவ உதவிகளை மட்டுப்படுத்தும் படி நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் அனைத்துலக மன்னிப்புச் சபை உட்பட பல முன்னணி மனித உரிமை அமைப்புக்கள் அமெரிக்காவை கேட்டுள்ளன.

2007 ஆம் ஆண்டுக்கான சிறார் படைச்சேர்ப்பு தடை விதிகளின் படி இராணுவ உதவிகளின் மட்டுப்படுத்தல் அவசியம் என அமெரிக்க செனட் உறுப்பினர்களான றிச்சார்ட் டேர்பன், சாம் பிறவுன்பக் ஆகியோர் கூறியுள்ளனர்.

அதற்கு புஸ்சின் நிர்வாகம் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தனர். சில நாடுகள் தமது சொந்தப் படையினருக்காக சிறார்களை படையில் சேர்க்கின்றனர். வேறு சில நாடுகள் சிறார்களை படையில் கொண்டுள்ள ஆயுதக்குழுக்களுடன் நேரடியான தொடர்புகளை கொண்டுள்ளன.

இப்படியான நாடுகளில் ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, புரூன்டி, சாட், கொலம்பியா, கோட் இவோறி, கொங்கோ, சூடான், உகண்டா ஆகியன அடங்கும்.

இந்த நாடுகளுக்கு இராணுவ பயிற்சிகளுக்காக சிறிய தொகையும், ஆயுதக் கொள்வனவுக்காக நூற்றுக்கணக்கான மில்லியன் அமெரிக்க டொலர்களும் அமெரிக்க அரசினால் இராணுவ உதவிகளாக வழங்கப்படுகின்றன.

அமெரிக்க மக்களால் வரியாக செலுத்தப்படும் இந்த பணம் சிறார்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படக் கூடாது. மேலும் அமெரிக்காவின் ஆயுதங்களும் இந்த சிறார்களின் கைகளில் போய்ச் சேரக்கூடாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்துலக மன்னிப்புச் சபையும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறார் படைச் சேர்ப்பில் சிறிலங்கா, அங்கோலா, புரூண்டி, கொலம்பியா, கொங்கோ, ருவாண்டா, சிரோலியோன், உகண்டா போன்ற நாடுகள் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்த அமைப்பின் அனைத்துலக மன்னிப்புச் சபையின் சிறார் படை மற்றும் ஆயுதப் பரிமாற்றத்திற்கான திட்டமிடல் முகாமையாளர் கொல்பி குடமான் அறிக்கை:

சிறார் படைச்சேர்ப்பை நிறுத்துவதற்கு அழுத்தங்கள் அவசியமானது. எனவே சிறிலங்கா உகண்டா, கொங்கோ போன்ற நாடுகளில் உள்ள ஆயுதப்படைகளில் உள்ள சிறார்களை மீட்பதற்கு அனைத்துலக நாடுகள் அழுத்தங்களை தமது ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அது சிறிலங்காவை பாதிக்கும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஏனெனில் அது சிறார் படைகளை கொண்டுள்ள ஆயுதக்குழுக்களுடன் நேரடித் தொடர்புள்ள நாடுகளின் பட்டியலில் உள்ளதது. அமெரிக்காவின் இராணுவ உதவிகளை பெற்று வருகிறது.

சிறார் படை பாதுகாப்பு திட்டமானது ஐந்து வகையான அமெரிக்க இராணுவ உதவிகளை மட்டுப்படுத்துகின்றது.

- அனைத்துலக படைத்துறை கற்கைநெறி மற்றும் பயிற்சிகள்

- வெளிநாட்டு படைத்துறை நிதி உதவி

- வெளிநாட்டு படைத்துறை விற்பனைகள்

- நேரடியான வர்த்தக விற்பனைகள்

- மேலதிக பாதுகாப்பு உதவிகள்

போன்ற உதவிகள் சிறார் படைச் சேர்ப்பை குறிப்பிட்ட நாடுகள் நிறுத்தும் வரை மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

கட்டுநாயக்க வான்படைத் தளத்தில் துப்பாக்கி வெடிச்சத்தங்கள்- குண்டுச்சத்தங்கள்: இருளில் மூழ்கியது கொழும்பு மாநகர்!!!


சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்துக்கு அருகில் உள்ள வான்படைத்தளப் பகுதிக்கு அருகில் இன்று வியாழக்கிழமை இரவு 10.45 மணியளவில் கேட்கப்பட்ட துப்பாக்கி வெடிச்சத்தங்களாலும், குண்டுச்சத்தங்களாலும் கொழும்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இச்சம்பவம் இடம்பெற்ற அதேவேளையில் கொழும்பின் பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது இந்தப் பதற்ற நிலையை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது.

அதேவேளையில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்திலிருந்து நடத்தப்படும் வானூர்தி சேவைகளும் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

புத்தளம் கடற்பரப்பை அண்மித்த பகுதியிலிருந்து கட்டுநாயக்க பிரதேசத்தை நோக்கி விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகள் வருவதாக படைத்தரப்பினருக்கு கிடைத்த தகவலையடுத்து, கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த வானூர்தி எதிர்ப்பு தன்னியக்க கருவிகள் செயற்படத் தொடங்கியதாகவும், அதனால் தொடர்ச்சியான குண்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் பத்து தடவைகளுக்கு மேலாக இந்த எதிர்ப்பு கருவிகள் இயக்கப்பட்டதாகவும், எனினும் சந்தேகத்திற்கிடமான வானூர்திகள் குறித்து எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை.

இச்சம்பவம் இடம்பெற்ற அதேவேளையில் கொழும்பின் பல பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

சுமார் ஒரு மணி நேரத்தின்பின்னர் அனேகமான பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பிரதேசங்களில் நேற்றிரவு பல மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும், முன்னறிவித்தலின்றி மின்சாரம் துண்டிக்கப்பட்டதனால் அந்த பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது.

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை நோக்கிச் சென்ற பயணிகள் வாகனங்கள் அனைத்தும் படையினரால் மறித்து வைக்கப்பட்டுள்ளன. கட்டுநாயக்க வானூர்தி நிலையப் பகுதிக்குள் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.

வானூர்தி சேவைகளும் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன. வானூர்தி நிலையத்திலுள்ள சுங்கத் தீர்வையற்ற கடைகளையும் உடனடியாக மூடிவிடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சந்தேகத்திற்கிடமான வானூர்தி ஒன்று நேற்றிரவு 11.40 மணியளவில் வவுனியாவை அண்மித்த பகுதியை கடந்து சென்றதாகவும், அதனையடுத்து சிறிலங்கா படைத்தரப்பினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூட்டினை நடத்தி தாக்குதல்களை நடத்தியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி>புதினம்.

Thursday, April 26, 2007

சிறீலங்கா மனித உரிமை மீறல்கள் - ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் அறிக்கை!

சிறீலங்கா மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரசாரத்திற்கு, பிரித்தானியாவின் மூன்றாவது பெரும் கட்சியான லிபறல் டெமோகிறட்ஸ் என்றழைக்கப்படும் தாராண்மைவாத ஜனநாயகக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் உலகக் கிண்ணக் கிறிக்கட் போட்டியில் அனைத்துலக மன்னிப்புச் சபை பிரசாரம் செய்து வருகின்றது.

இந்த பிரசாரத்திற்கு எதிராக சிறீலங்கா அரசு கருத்து வெளியிட்டுவரும் நிலையில், பிரித்தானியாவின் மூன்றாவது பெரும் கட்சியான தாராண்மைவாத ஜனநாயகக் கட்சி அனைத்துலக மன்னிப்புச் சபைக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, தாராண்மைவாத ஜனநாயகக் கட்சியின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சஜாத் கறீம், சேறா லுட்பேட், மற்றும் லிஸ் லின்னி ஆகியோர் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் சமர்த்தித்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி தாராண்மைவாத ஜனநாயகக் கட்சியின் மனித உரிமை விடயங்களுக்குப் பொறுப்பானவரும், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினருமான சஜாத் கறீமை தொடர்பு கொண்டு கேட்டபோது, இணைத் தலைமை நாடுகளில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்காவின் இனப் பிரச்சினையில் தலையிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
நன்றி>பதிவு.

17 தன்னார்வ பணியாளர் படுகொலை விவகாரத்தில் ஐ.நா.வின் தலையீட்டுக்கு இடமளிக்க போவதில்லை!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதியில் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் குறுக்கீடு செய்யவோ அந்த விசாரணைகளை வேறொருவருக்கு ஒப்படைக்கவோ அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கொள்ளுப்பிட்டி கிராமோதய நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; தன்னார்வ நிறுவன ஊழியர்கள் (அக்ஷன்பாம்) 17 பேர் படுகொலை சம்பந்தப்பட்டமை தொடர்பான சுயாதீன விசாரணைகளுக்கென ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு நிஸங்க உதலாபிட்டிய தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

அதேநேரம், முன்னாள் இந்தியப் பிரதம நிதியரசர் பகவதி தலைமையில் சர்வதேச நிபுணர் குழுவொன்றும் அந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் பலம் பொருந்திய இந்த இரண்டு குழுக்களும் இப் படுகொலை சம்பவத்தின் பின்னணியை கண்டு பிடிக்கவும் மனித உரிமைகளை பேணவும் நீதியான விசாரணைகளை நடத்தி வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் இந்த விடயத்தில் தன்னை சம்பந்தப்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்த முனைந்துள்ளது. அவர்களின் இந்த எதிர்பார்ப்பானது ஜனாதிபதி விசாரணைக் குழுவையும் சர்வதேச நிபுணர்களின் குழுவையும் அவமதிப்பது போல் உள்ளது.

ஐக்கிய நாடுகள் இக்குழுக்களின் நேர்மைத் தன்மையை களங்கப்படுத்த முனைகிறது. இதனால் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் இந்த படுகொலை விசாரணையில் ஏனையவர்களின் தலையீடுகளை அனுமதிக்க முடியாது.

பகவதி குழு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக புகாரிடப்பட்டுள்ள 16 சம்பவங்கள் தொடர்பாக இங்கு விசாரணை நடத்த வந்துள்ளது. முதலாவது சம்பவமாகவே மூதூர் படுகொலை சம்பவத்தை ஏற்றுள்ளது.

குறிப்பிட்ட முறைப்பாடுகள் தொடர்பாக சாட்சியமளிக்கவும் சாட்சியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் அரசாங்கம் ஒழுங்குகளை செய்துள்ளது. சாட்சிகள் இன்னும் முன்வராமல் இருக்கும் பின்தங்கிய நிலை மட்டுமே இங்குள்ளது என்றார்.
நன்றி>தினக்குரல்

Wednesday, April 25, 2007

தென்னாப்பிரிக்காவைப் போல் சிறிலங்காவுக்கும் துடுப்பாட்டத் தடை ஏற்படுத்த புலம்பெயர் தமிழர்கள் தீவிரம்!




இனவெறி கொண்ட சிறிலங்காவுக்கு அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாட தடை ஏற்படுத்த புலம்பெயர் தமிழர்கள் தீவிர திட்டமிடலில் ஈடுபட்டு வருகின்றனர்.


விளையாட்டும் அரசியலும் பின்னிப்பிணைந்தவையாகவே காலங்காலமாக இருந்து வருகின்றது. இந்த வகையில் தென்னாபிரிக்க அணி தனது வரலாற்றில் சந்தித்த துடுப்பாட்டப் போட்டிகளுக்கான தடை பற்றிய விழிப்புணர்வு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடத்தில் எழுந்துள்ளது.

அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறிலங்காவின் பிரச்சாரப் போரிற்கு முழுமையான ஆதரவைத் தருவதாக இங்கிலாந்தின் முக்கிய கட்சியான லிபரல் டெமோக்கிரட்ஸ் அறிவித்துள்ளது.

சிறிலங்கா அணி துடுப்பாட்டப் போட்டித் தடைகளை எதிர்காலத்தில் பெறலாம் என்ற நிலையிலேயே தமிழர்களும் இது குறித்த ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இனவெறி மற்றும் தமது குடிமக்களுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நாடுகள் நடத்தும் போது இத்தகைய விளையாட்டுக்களில் அந்நாடுகள் பங்கேற்பதற்கு தடைகள் ஏற்படுத்தும் நிகழ்வுகள் அனைத்து விளையாட்டுக்களிலும் இடம்பெற்று வந்திருக்கின்றன.

துடுப்பாட்டத்திலும் சிறிலங்காவுக்கு எதிராக தற்போது அனைத்துலக மன்னிப்புசபையால் முன்னெடுக்கப்படும் பிரச்சாரமானது ஏதோவொரு புதிய நடவடிக்கையல்ல.

ஏனெனில் நிறவெறியில் தென்னாபிரிக்கா மேலாண்மை பெற்றிருந்த காலப்பகுதியில் அது அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

1970 ஆம் ஆண்டு அனைத்துலக துடுப்பாட்டச் சபையால் மேற்கொள்ளப்பட்ட இத்தடை தென்னாபிரிக்காவை மிகவும் பாதித்ததுடன் அதன் பொருளாதாரத்திலும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

தென்னாப்பிரிக்காவின் விளையாட்டு வீரர்கள் கூட தேசப்பற்றைத் துறந்து வேறு நாட்டு அணிகளில் இணைந்து அந்த நாடுகளுக்காக விளையாடும் நிகழ்வும் அரங்கேறியது.

இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா தனது நிறவெறிக் கொள்கையை கைவிடும் நிலையையடைந்ததும் சுமார் 21 வருடங்களுக்குப் பின்னர் இத்தடை 1991 ஆம் ஆண்டே அனைத்துலக துடுப்பாட்டச் சபையால் நீக்கப்பட்டது.

இது போலவே பல லட்சக்கணக்கான மக்களை அவர்களது மண்ணிலிருந்து அகதிகளாக வெளியேற்றியும், தனது குடிமக்கள் எனக் கூறிக் கொள்ளும் தமிழ் மக்கள் மீது இலக்கற்ற முறையில் வான் மற்றும் ஆட்டிலெறித் தாக்குதல்களை மேற்கொண்டு கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் 3,000-க்கும் மேலான எமது உறவுகளைக் கொண்றுள்ள சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இத்தகைய தடையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும்.

ஈராக்கிய நாட்டிற்கு அடுத்தபடியாக காணமல் போவோர் பட்டியலைக் கொண்டுள்ள சிறிலங்கா, மேற்படி இலக்கற்ற கொலைகளிற்கும் மேலாக தமிழ்மக்கள் மீதான பொருளாதார, உணவு மற்றும் மருந்துத் தடையையும் தொடர்ச்சியாக அமுல்படுத்தி வருகிறது.

இந்த விவகாரங்களை எமது நாடுகளிலுள்ள அரசியற் கட்சிகள் மற்றும் அரச தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்து சிறிலங்கா மீது பாரிய அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

மேலும் இணையத்தளங்கள், செய்தி ஊடகங்களினூடாக இப் பிரச்சாரத்தை பலமாக முன்னெடுத்து நமது மக்களின் இன்னல்களை உலகறியச் செய்வோமானால் சிறிலங்காவிற்கான தென்னாபிரிக்காவை ஒத்த தடை தானாகவே ஏற்படும்.

நன்றி>புதினம்.

தமிழர்களின் உரிமைப் போராட்டம் நியாயமானது: பிரான்ஸில் இன்று மாபெரும் பேரணி.


தமிழர்கள் பயங்காரவாதிகள் அல்ல எனவும், தமிழர்களின் உரிமைப் போராட்டம் நியாயமானது என்பதை வலியுறுத்தியும், பிரான்ஸில் இன்று மாபெரும் பேரணி இடம்பெறவுள்ளது.

பிரான்ஸ் தமிழ் மாணவர் அமைப்பு ஒழுங்கு செய்துள்ள இந்தப் பேரணி, இன்று பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை நடைபெறவுள்ளது.

தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள இன அழிப்பு நடவடிக்கைளை பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு எடுத்து விளக்குவதுடன், அனைத்துலக ரீதியாக சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் பரப்புரையை முறியடிக்கவும் இந்தப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணியை பிரான்ஸ் தமிழ் மாணவர் அமைப்பு ஒழுங்கு செய்துள்ளது.
நன்றி>பதிவு.

Tuesday, April 24, 2007

சிங்கள இராணுவத்துக்கு ஆயுத உதவி: சென்னையில் நெடுமாறன், இராமதாஸ் கண்டன ஆர்ப்பாட்டம்.







சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா ஆயுத உதவி செய்வதனைக் கண்டித்து பாட்டாளி மக்கள் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் கோ.க.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பேசியதாவது:

சிங்கள இராணுவத்துக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்குவதாக செய்தி வரும் போதெல்லாம் அவ்வாறு வழங்கப்படவில்லை என்ற மறுப்பும் வருகிறது. ஆனால் ஆயுதம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பது தான் உண்மை.

போப் ஆண்டவர் உள்பட மனித நேயத்தை விரும்பும் உலகத் தலைவர்கள் எல்லாம் அமைதியான முறையில் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அதற்கு சிறிலங்கா அரசு உடனே போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் தொப்புள் கொடி உறவான தமிழர்கள் வாழும் இந்தியா மட்டும் மெளனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை. இந்திரா காந்தி காலத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும்.

வங்காளதேச மக்கள் விரும்பியதற்கு ஏற்ப நாட்டின் பிரிவினைக்கு இந்தியா உதவி செய்ததாக சோனியா குறிப்பிட்டுள்ளார். அதே போல இலங்கைப் பிரச்சினைக்கும் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். உடனடியாக இந்தியா இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும்.

சாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த தமிழர்களும் ஒன்று திரள வேண்டும். ஈழத் தமிழர்கள் சாகடிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஒரு தமிழனையும் சாகவிட மாட்டோம் என்ற முதல் குரல் முதல்மைச்சர் கருணாநிதியிடம் இருந்து வரவேண்டும்.

சிறிலங்கா ஆயுதம் வழங்கமாட்டோம் என்ற உத்தரவாதத்தை மத்திய அரசிடம் இருந்து அவர் பெற்றுத் தர வேண்டும். இந்திய அரசு தலையிடாமல் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு வராது என்றார் அவர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்,
ஈழத்தமிழன் எங்கள் உடன்பிறப்பு
அவனுக்கு உதவுவது தமிழர்களின் பொறுப்ப
தமிழர்களை கொன்று குவிக்க இந்திய அரசே உதவாதே!
தமிழர்களை காக்க உடனே நடவடிக்கை எடு!
தூதரக உறவை உடனே துண்டித்து விடு என்பது உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பபட்டன.
நன்றி>புதினம்

விடுதலைப் புலிகள் மீண்டும் விமான தாக்குதல்: பலாலியில் குண்டு மழை - 6 பேர் பலி!!! ஆயுதக்களஞ்சியம் எரிந்து நாசம்!!!



யாழ்ப்பாணம்: விடுதலைப் புலிகள் மீண்டும் விமானம் மூலம் தாக்குதல் நடத்தி இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். பலாலி விமான தளம் மீது விடுதலைப் புலிகளின் இலகுரக விமானங்கள் சரமாரியாக குண்டுகளைப் பொழிந்து நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் இலங்கை படையினருடன் போராடி வந்த விடுதலைப் புலிகள் தற்போது வான் பலத்தையும் பெற்றுள்ளனர். கடந்த மாதம் 26ம் தேதி கொழும்பு அருகே உள்ள காட்டுநாயகே விமானப்படை தளம் மீது அதிகாலையில் நடத்திய விமானத் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்தது.

உலக அளவில் வேறு எந்த போராளி அமைப்பிடமோ அல்லது தீவிரவாத அமைப்பிடமோ விமான பலம் இல்லை என்பதால் புலிகளின் இந்த புதிய பலம் அனைவரையும் அதிர வைத்தது.

கொழும்பு தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்தனர். இந்த அதிர்ச்சியிலிருந்தே இலங்கை அரசு இன்னும் மீளாத நிலையில் மீண்டும் ஒரு விமான தாக்குதலை புலிகள் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள பலாலி விமானப்படை தளத்தில் இன்று அதிகாலை புலிகள் தங்களது இலகு ரக விமானத்தால் தாக்குதல் நடத்தியுள்ளனர். சரமாரியாக குண்டு மழை பொழிந்து இந்த விமானங்கள் நடத்திய தாக்குதலால் விமானப்படை தளத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் நிலை குலைந்தனர்.

புலிகளின் தாக்குதலில் 7 பேர் பலியானதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 17 பேர் காயமடைந்தனர். வான் வழித் தாக்குதலின்போது பீரங்கித் தாக்குதலையும் விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர்.

இந்த தாக்குதலில் விமான படைத் தளத்தில் உள்ள ராணுவ முகாம் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. விமானப் படைத்தளத்திலும் கணிசமான அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் இந்த இரண்டாவது விமானத் தாக்குதல் இலங்கையில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி>தற்ஸ் தமிழ்

Monday, April 23, 2007

சிங்கள இராணுவத்தினருக்கு இந்தியா ஆயுதம் வழங்கக்கூடாது: தமிழ்நாடு முதல்வர் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் கடும் எதிர்ப்பு.



தமிழர்களை வதைக்க இலங்கையில் உள்ள சிங்கள இராணுவத்தினருக்கு மத்திய அரசு ஆயுதம் வழங்கி உதவிடக்கூடாது, தமிழர்களை வதைப்பதற்காக அது பயன்படும் ஆகவே அந்தச் செயலைக் கண்டிப்பாக நிறுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கின்ற உரிமை எமக்கு இருக்கின்றது, பொறுப்பும் எமக்கு இருக்கின்றது என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இது தொடர்பாக நடந்த விவாதம்:

பாட்டாளி மக்கள் கட்சியின் கோ.க. மணி:

இராணுவத் தளபாடங்களை சிறிலங்காவுக்கு மத்திய அரசு கொடுப்பதாக வந்துள்ள செய்தி நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

அங்கு முப்படை தாக்குதல் நடக்கின்றது. தமிழர் வீடுகளுக்கு சென்று கணவன் கண்முன்பு மனைவியை சிறிலங்கா இராணுவத்தினர் கற்பழிக்கின்றார்கள். அங்கே சோகமான சம்பவங்கள் நடைபெறுகின்றன.

அங்குள்ள தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையில் சமரச தீர்வு வரவேண்டும் என்று போப் ஆண்டவர் உட்பட பலர் சொல்கின்றார்கள்.

இந்த சூழ்நிலையில் சிறிலங்காவுக்கு இராணுவ உதவியை மத்திய அரசு வழங்காமல் இருக்க முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்.

இதற்காக இங்கு ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அனுப்ப வேண்டும்.

(கோ.க. மணி பேசியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். பதிலுக்கு பா.ம.க.வினரும் எழுந்து நின்று தாங்கள் பேசுவது சரிதான் என்று குரல் கொடுத்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரையும் சபாநாயகர் அமைதிப்படுத்தினார்.)

சுதர்சனம் (காங்கிரஸ்):

பா.ம.க. தலைவர் இங்கு ஒரு விளக்கத்தைச் சொல்லி இருக்கின்றார். மத்திய அமைச்சரவையில் பா.ம.க.வும் பங்கு வகிக்கின்றது. அங்கே அவர்களுக்கு சொல்ல வாய்ப்பு இருக்கின்றது. அதனை விட்டு விட்டு இங்கே தீர்மானம் கொண்டு வர சொல்கின்றார். இதனை விவாதிக்கும் இடம் மத்திய அரசு தான்.

சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்டு):- இதில் மத்திய அரசு நிலைப்பாடு சரியில்லை.

முதலமைச்சர் கருணாநிதி:

நம்முடைய பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பிலும் காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் எடுத்துச் சொல்லப்பட்ட கருத்துக்கள் இந்த அவையில் பதிவாகியிருக்கின்றன.

அதே நேரத்தில் இந்தப் பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள் பத்திரிகைகளிலே வந்த கருத்துக்கள் அந்த கருத்துக்களின் அடிப்படையிலே தான் இங்கே நம்முடைய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவரும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவரும் இங்கே உரையாற்றிருக்கின்றார்கள்.

பத்திரிகையிலே வந்த இந்த கருத்துக்கள், செய்திகள் உண்மையானவைதானா என்பதனை அறிந்துகொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். என்ன செய்தி வந்திருக்கின்றதென்றால் இலங்கைக்கு போர்க் கருவிகளை வழங்குவதில்லை என்ற முடிவுக்கு மாறாக இந்திய அரசு தற்போது ஆயுதங்களை வழங்கியுள்ளது என்று செய்தி வந்திருக்கின்றது.

இதனை படிக்கின்ற யாரும் நம்முடைய மணி

துடித்தது போல,

பதைத்தது போல

பதறியதிலே எந்தவிதமான தவறும் இல்லை.

ஆனால் இது உண்மைதானா என்பதனை அறிந்து கொள்ள வேண்டிய அந்த வாய்ப்பை நாம் உருவாக்கிகொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அந்த வாய்ப்பு நமக்குக் கிடைத்தது உண்மைதான் என்றால் நாம் மத்திய அரசுக்கு, இதிலே இன்னும் ஒற்றுமையோடு இருந்து நம்முடைய அழுத்தமான வேண்டுகோளை விடுப்பதற்குத் தயாராக இருக்கின்றோம்.

- நீங்கள் தமிழர்களை வதைக்க இலங்கையில் உள்ள சிங்கள இராணுவத்தினருக்கு ஆயுதம் உதவிடக்கூடாது,

- தமிழர்களை வதைப்பதற்காக அது பயன்படும் ஆகவே அந்தச் செயலைக் கண்டிப்பாக நிறுத்துங்கள்

என்று கேட்டுக் கொள்கின்ற உரிமை நமக்கு இருக்கின்றது,

பொறுப்பும் நமக்கு இருக்கிறது என்று மாத்திரம் சொல்லி இந்த அவையில் அமைகிறேன் என்றார் முதலமைச்சர் கருணாநிதி.

தமிழ்நாடு சட்டப்பேரவை விவாதம் தொடர்பாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

சிங்கள அரசுக்கு இந்திய அரசு பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை வழங்கியிருக்கிறது என்ற செய்தி, தமிழ் மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கிறது. பல நூறுகோடி ரூபாய் பெறுமான கண்ணிவெடிப் பாதுகாப்பு வாகனங்கள், கரையோர ரோந்துக் கப்பல், எறிகணைகள், உயர்ரக வெடி பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டுள்ளன என்ற செய்தி ஏப்ரல் 20 ஆம் தேதியன்றே வெளிவந்துவிட்டது. உடனடியாக மருத்துவர் இராமதாஸ் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இன்று அதாவது ஏப்ரல் 23 ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் கோ.க.மணி இப்பிரச்சினையை எழுப்பியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சிவ. புண்ணியம் அவர்களும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் முதலமைச்சர் "இச்செய்தி உண்மைதானா என்று அறிந்து கொண்டு பிறகு கண்டனம் தெரிவிக்கலாம் என்று தமிழர்களின் கொதிப்புணர்வை அடக்குவதற்கு தண்ணீர்த் தெளித்திருக்கிறார்.

செய்தி வந்து 3 நாட்கள் ஆகியும் இச்செய்தியில் உள்ள உண்மையை மத்திய அரசிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ள முதலமைச்சர் எவ்வித முயற்சியும் செய்யவில்லை என்பது வருந்தத்தக்கது.

சிங்கள அரசுக்குப் போர்க்கருவிகளை வழங்குவதில்லை என பிரதமர் மன்மோகன்சிங் உட்பட மத்திய அமைச்சர்கள் பலரும் அளித்த வாக்குறுதிகளை அப்பட்டமாக மீறும் வகையில் நடைபெற்றுள்ள இச்செயலுக்கு தமிழகம் தன்னுடைய கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டிய வேளையில் பிரச்சினையை ஆறப்போடுவது ஈழத்தமிழர்களின் அழிவுக்கு வழிவகுக்கும்.

உடனடியாக மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்கள் மூலம் நமது கடும் கண்டனத்தை பிரதமருக்குத் தெரிவிக்க முதலமைச்சர் மு.கருணாநிதி முன்வரவேண்டுமென வற்புறுத்துகிறேன் என்றார் நெடுமாறன்.
நான்றி>புதினம்.

பி.பி.சி செய்திக்கு எதிராக புலம்பெயர்ந்த பிரித்தானிய தமிழ் மக்கள் திரண்டெழுகின்றனர்!!!

பிரித்தானியாவில் இடம்பெறும் வங்கிக் கடனட்டை மோசடியில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக, பிரித்தானியாவுக்கான சிறீலங்கா தூதரகம் தெரிவித்த குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் மிக வன்மையாக மறுத்துள்ளனர்.

பி.பி.சி தொலைக்காட்சிக்கு நேற்று முன்தினம் செவ்வி வழங்கிய பிரித்தானியாவிலுள்ள சிறீலங்காத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் மக்ஸ்வெல் கீகல், பிரித்தானியாவில் இடம்பெறும் வங்கிக் கடனட்டை மோசடிக்கு விடுதலைப் புலிகளே காரணம் எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

மேற்படி பி.பி.சி செய்தியில் இக்குற்றச்சாட்டு தொடர்பான விடுதலைப்புலிகளை இணைக்கும் சான்றாதாரங்களை வழங்கப்படவில்லை அதேசமயம் குற்றம் சாட்டப்பட்ட தமிழ் சமூகத்திடம் இருந்தான வெளிப்பாடுகள் இந்நிகழ்ச்சியில் இணைக்கப்படவில்லை. இக்காரணங்களால் மேற்குறிப்பிட்ட செய்தியாசிரியர் சிறீலங்கா அரசின் தமிழர் மீதான விசம பிரசாரத்திற்கு விரும்பியோ விரும்பாமலோ பக்கச்சார்பாக உதவியுள்ளார் என்றே தமிழ்சமூகம் வேதனையடைகிறது.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மற்றும் கடைகளில் பாவிக்கப்படும் வங்கிக் கடன் அட்டைகளின் விபரங்கள், அங்கு பணி புரியும் தமிழர்கள் ஊடாகப் பெறப்பட்டு, அதன் மூலம் ஆசிய நாடுகளில் பணம் எடுக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக நேற்று கருத்துரைத்த தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், அனைத்துலக சமூகம் சிறீலங்கா அரசு மீது சுமத்தியுள்ள மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டை திசை திருப்பும் வகையில், இந்தப் பொய்யான பரப்புரையை சிறீலங்கா அரசு மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

இத்தகைய பொய்யான பரப்புரைச் செய்திகள் தொடர்பாக, பி.பி.சி போன்ற பொறுப்பான ஊடகங்கள், மிக அவதானமாகச் செயற்பட வேண்டும் என்றும், சு.ப. தமிழ்ச்செல்வன் கேட்டுக்கொண்டார்.

தமிழீழ தாயகத்திலுள்ள மக்கள் உயரிய ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்து வருவதுடன், குற்றமற்ற சூழல் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய தமிழ்ச்செல்வன், இதனை வெளிநாட்டு இராஜதந்திரிகள் நன்கு அறிவார்கள் என்றும் கூறியுள்ளார்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தாங்கள் வாழும் நாடுகளின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்றும், தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கேட்டுள்ளார்.

பிரித்தானியாவிலுள்ள தமிழர்கள் அனைவரும் வங்கிக் கடனட்டை மோசடியில் ஈடுபகின்றார்கள் என்ற பாணியில் பி.பி.சி நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தி, அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை உண்டாக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பல தமிழர்கள் பி.பி.சி தொலைக்காட்சி சேவையை தொடர்ச்சியாகத் தொடர்பு கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொலைபேசி வாயிலான முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்ள மறுக்கும் பி.பி.சி தொலைக்காட்சி சேவையினர், மக்களின் குற்றச்சாட்டுக்களை எழுத்தில் தருமாறு கேட்டதற்கு அமைவாக, பலர் தமது கண்டனத்தினை எழுத்து மூலம் அனுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக கருத்துக் கூறிய பிரித்;தானியாவிலுள்ள தமிழ் மக்கள், அனைத்துத் தமிழர்களுக்கும் இழுக்கு ஏற்படுத்தும் இந்தச் செய்தி தொடர்பாக பி.பி.சி, மற்றும் பிரித்தானியாவிலுள்ள சிறீலங்கா தூதரகம் என்பவற்றைக் கண்டித்து. தமிழர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனக் கூறினர்.

இதேவேளை, வங்கிக் கடனட்டை மோசடியில் ஈடுபடுவர்கள் தொடர்பான விபரங்களைக் கண்டறிவதற்கான பிரித்தானியக் காவல்துறையின் விசாரணைகளுக்கு முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும், பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

பி.பி.சியின் செய்தி பற்றிக் கருத்துக்கூறிய அரசியல் ஆய்வாளர் ஒருவர், பிரித்தானியாவிலும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும், ஆதரவாளர்களையும் ஒடுக்கும் முயற்சிக்கு பி.பி.சி அடியெடுத்து வைத்திருப்பதாகக் கூறினார்.

பி.பி.சியின் இந்தச் செய்தி உள்நாட்டுச் சேவையான பி.பி.சி-1, பி.பி.சி-24 (24 மணி நேர செய்திச் சேவை), மற்றும் பி.பி.சியின் உலகச் சேவை என்பவற்றில் முதன்மைச் செய்தியாக தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டதால், உலக அளவில் தமிழ் மக்களுக்கும், அவர்களின் தலைமைக்கு இழுக்கை ஏற்படுத்தும் கைங்கரியத்தில் பி.பி.சி கச்சிதமாக ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
நன்றி>பதிவு.

Sunday, April 22, 2007

கடன் அட்டை விவகாரம்: சிறிலங்கா தூதரக அதிகாரியின் பொய்க்கு சு.ப.தமிழ்ச்செல்வன் பதில்!

கடன் அட்டை முறைகேடுகள் நடைபெறுவதன் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருப்பதாக பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதரகத்தின் முதல்நிலைச் செயலாளர் தெரிவித்த குற்றச்சாட்டை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் நிராகரித்துள்ளார்.


இது தொடர்பில் தமிழ்நெட் இணையத்தளத்துக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்:

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சிறிலங்கா அரசாங்கமானது அதனைத் திசை திருப்பும் வகையில் இத்தகைய குற்றச்சாட்டைக் கூறுகிறது.

இத்தகைய பொய்யான பரப்புரைச் செய்திகள் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என்று பி.பி.சி. போன்ற பொறுப்பான ஊடகங்களை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

எமது தமிழர் தாயகத்தில் உயரிய நெறிகளோடு குற்றமற்ற சூழலை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம் என்பதை இராஜதந்திர சமூகத்தினர் நன்கு அறிவர்.

புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தாங்கள் வாழும் நாடுகளின் சட்டங்களைச் செயற்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்றும் நாம் கேஎட்டுக் கொள்கின்றோம் என்றார் தமிழ்ச்செல்வன்.

பி.பி.சி.யில் கடந்த சனிக்கிழமை பிரித்தானியாவில் கடன் அட்டை மோசடி உள்ளிட்டவைகளின் பின்னணியில் விடுதலைப் புலிகள் இருப்பதாக பிரித்தானியாவுக்கான சிறிலங்காவின் தூதரக அதிகாரி மேக்ஸ்வெல் பொய்யாக குற்றம் சாட்டியதனைத் தொடர்ந்து சு.ப.தமிழ்ச்செல்வன் இந்த விளக்கம் அளித்துள்ளார்.
நன்றி>புதினம்.

BBC இன் பொய் பிரச்சாரம்!!!

பிரிட்டனில் கடன் அட்டை மோசடி சம்பவங்களின் புலிகளுக்கு தொடர்பு என குற்றச்சாட்டு!

பிரித்தானியாவில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் நிரப்பவரும் பாவனையாளர்களின் கடன் அட்டைகள் சட்டவிரோதமாக பயன்படுத்துவதாகவும் பாவனையாளரின் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கும் மோசடிகள் இடம் பெருவதாகவும் இவற்றில் பெருமளவு இலங்கையர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் எனவும் பி.பி.சி தொலைகாட்சி செய்தி பிரிவு செய்தி தெரிவித்துள்ளது குறிப்பிட்ட மோசடி சம்பவங்களில் இலங்கைகர்களுக்கு சிறிலங்காவில் தனிநாடு கோரி போராடும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது .

இன்று பி.பி.சி தொலைகாட்சிக்கு போட்டியளித்த பிரித்தானியவிற்கான இலங்கை தூதுரக அதிகாரி மக்ஸ்வெல் கில் குறிப்பிட்ட கடன் அட்டை மோசடியில் பல மில்லியன் பிரித்தானிய பவுண்ஸ்கள் சுரண்டப்பட்டு விடுதலைப்புலிகள் பணம் சேர்த்து வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்

ஆனால் நியு ஹம் மாநகர சபை கவுன்சிலர் போல் சத்தியநேசன் குறிப்பிட்ட கடன் அட்டை மோசடி தொடர்பில் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றும் மேலும் அங்கு வாழ் ஒட்டு மொத்த தமிழர்கள் இந்த செயலில் ஈடுபடுவதில்லை எனவும் தெரிவித்திருந்தார் எனினும் கடன் அட்டை விபரங்கள் திருடி பணம் சுரண்டும் குற்றச்செயலில் சில தமிழ் இளைஞர்களுக்கு தொடர்பு உள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.

வேண்டுமென்றே சிலர் கடன் அட்டை மோசடியில் விடுதலைப்புலிகளை சம்பந்தபடுத்தி வருகின்றனர் என்று மேலும் தெரிவித்திருந்தா.

மேலும் குறிப்பிட்ட குற்றசெயல் தொடர்பாக பிரித்தானிய செயலாளார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் .

முறைப்பாடுகள் கவனத்தில் எடுக்கப்பட்டு எடின்பரோ , லீட்ஸ் , நொட்டின்காம் , பிரிஸ்டல் , ஹல் , நோர்விச் பல இடங்கலின் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன பிரித்தானியாவில் இயங்கும் 9500 பெற்றோல் நிறப்பு நிலையம் 200 நிரப்பு நிலையங்களில் குற்றசெயல்கள் நடைபெற்றுள்ளன .

பி.பி.சி தொலைக்காட்சி சிறிலங்கா அரசாங்கம் கடன் அட்டை மோசடியின் பின்புலமாக விடுதலைப்புலிகள் இயங்குவதாக தெரிவித்துள்ளது.

ஆனால் பொலிஸார் இக்குற்றசெயலில் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக இதுவரை தெரியவரவில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
மூலம்>வீரகேசரி

http://www.bbc.co.uk/complaints/

Your complaint is important to us
This site explains the BBC's complaints process. For more about issues in our news coverage please read our Editors' blog.

We hope you enjoy BBC programmes, but if you have a complaint we want to know.

Chitra Bharucha
Acting Chair of the BBC Trust

Make a complaintPhone:
08700 100 222*

Textphone:
08700 100 212*

Email:
Send your complaint


Cymru:
Cwyno

Write:
BBC Complaints,
PO Box 1922,
Glasgow G2 3WT

சிறிலங்காவிற்கான நிதியை முடக்க வேண்டாம்: புஸ்சுக்கு மகிந்த அவசர கடிதம்!

சிறிலங்காவிற்கான மிலேனியம் சலஞ் கணக்கு நிதியை முடக்க வேண்டாம் என அமெரிக்க அரச தலைவர் ஜோர்ச் புஸ்சுக்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்களை தாம் விரைவில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் தனது கடிதத்தில் உறுதியளித்துள்ளார்.

சிறிலங்காவில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களால் ஏறத்தாழ 300,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். எனவே இதனை கட்டுப்படுத்த அழுத்தங்களை கொண்டு வருமாறு அமெரிக்காவிற்கு அதன் செனட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஏனைய அமைப்புக்களிடம் இருந்து அதிக அழுத்தங்கள் ஏற்பட்டு வருவதை தொடர்ந்து மகிந்த இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

மகிந்தவின் கடிதம் வெள்ளை மாளிகைக்கு அமெரிக்காவின் வெளிவிவகாரதுறை அமைச்சின் ஊடாக அமெரிக்காவிற்கான சிறிலங்காவின் தூதுவர் பேர்னாட் குணதிலக்க மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதனை குணதிலக்க உறுதிப்படுத்திய போதும் மேலதிக தகவல்கள் எதனையும் வழங்க மறுத்துவிட்டார். எனினும் தாம் வெள்ளை மாளிகையின் பதிலுக்காக காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் ஏற்பட்டு வரும் மோசமான மனித உரிமை மீறல்களால் தமது செனட் குழுவில் பிரச்சினைகள் தோன்றியிருப்பதாக கடந்த மாதம் அமெரிக்காவின் வெளிவிவகார உறவுகளுக்கான செனட் குழுவின் உயர் அதிகாரியான றிச்சாட் ஜீ லூகர் மகிந்தவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் நாள் சிறிலங்காவில் 'மனித உரிமைகள் மோசமடைந்து வருவது மிலேனியம் சலஞ் கணக்கு நிதியை வழங்குவதில் சிக்கல்களை ஏற்படுத்தியிருப்பதாக' குடியரசுக் கட்சியை சேர்ந்த லூகர் தெரிவித்திருந்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

நீதி, பொதுமக்களின் உரிமைகள், அரசியல் உரிமை, சுதந்திரமாக குரல் கொடுக்கும் உரிமை, அரசின் செயற்திறன், சட்டத்தை நிலைநாட்டுதல் போன்ற செயற்பாடுகளின் நற்பெறுபெறுகளின் அடிப்படையில் தான் இந்த நிதி வழங்கப்படுவது உங்களுக்கு தெரிந்த விடயம்.

இந்த செயற்பாடுகளில் ஏற்படும் பாதிப்புக்கள் மிலேனியம் சலஞ் கணக்கு நிதியம் சிறிலங்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை மீள்பரிசீலனை செய்யும் நிலைக்கு தள்ளப்படும் என தெரிவித்தார்.

லூகரிடம் இருந்து கடிதத்தை பெற்றுக் கொண்டதாக குணதிலக்க உறுதிப்படுத்தியதுடன், அதற்கு மகிந்த பதில் அளித்தாகவும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தொடர்பான நிலைப்பாட்டை அமெரிக்காவின் நாடாளுமன்றம், மற்றும் காங்கிரஸ் சபை என்பன மீளாய்வு செய்ய வேண்டும் என அமெரிக்காவின் வலிமை மிக்க அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று ஏப்ரல் 6 ஆம் நாள் வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

அதிகரித்துள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளமை என்பன மிலேனியம் சலஞ் கணக்கு நிதியை பெறும் தகமைகளில் இருந்து சிறிலங்காவை நீக்குவதற்கு போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமது நிறுவனம் சிறிலங்காவின் நிலைமைகள் தொடர்பாக தொடர்ச்சியாக மீளாய்வு செய்து வருவதாகவும் அங்கு நடைபெறும் மோதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தமக்கு கவலையை அளிப்பதாகவும் மிலேனியம் சலஞ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி<புதினம்.

Saturday, April 21, 2007

அவர்கள் சிங்கள கடற்படையா? இலங்கை தமிழரா? - மரியா படகின் மர்மம் விலகிய கதை!

இந்திய கடலோர பாதுகாப்புப் படையினரால் நடுக்கடலில் பிடிக்கப்பட்ட ஆறு பேரும் இலங்கையைச் சேர்ந்த சிங்களர்கள்தான். அவர்கள்தான் குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரைச் சுட்டுக்கொன்றவர்கள்!’ என்று பகீர் செய்தியைக் கசிய விட்ட போலீஸ், மறுநாளே ‘அவர்கள் சிங்களர்கள் இல்லை. இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள்தான்!’ என்று அந்தர்பல்டி அடித்திருக்கிறது. இதனால் எது உண்மை என்று தெரியாமல் குழம்பிப்போய் இருக்கிறார்கள், மீனவ அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினரும், சிங்களர்களும் திடீர் திடீரென்று காக்காய் குருவிகளைச் சுடுவதைப்போல சுட்டுக்கொல்வது வாடிக்கையான ஒன்றாகவே மாறிவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த அந்தப் பயங்கரத் தாக்குதல், கடந்த மாதம் 30ம் தேதியன்று உக்கிரத்தை எட்டியது. குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேர் அன்று சுட்டுக்கொல்லப்பட்டதுதான் அதற்குக் காரணம். மொத்தமாக ஐந்து மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்களைக் கொதித்தெழச் செய்துவிட்டது.

மீனவர்களின் உயிரைக் காப்பாற்றத் தவறும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, மீனவர்கள் போராடத் தொடங்கிவிட்டார்கள். நாகர்கோயில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கில் திரண்டு, குமரி மாவட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் மீனவர்கள் ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். மீனவர்களின் இந்தப் போராட்டத்திற்கு அ.தி.மு.க., தே.மு.தி.க. உட்பட எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளித்தன.

மீனவர்களின் இந்தப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நீடித்ததால், மீனவர்களைச் சமாதானப்படுத்தும் நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்த அரசு, அவர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. அதோடு ‘தமிழக மீனவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும்’ என்றும் உறுதி அளித்தது. கடலோர பாதுகாப்புக் காவல் படையினரை மத்திய அரசு முடுக்கிவிட்டது. தூத்துக்குடியில் முடங்கிக் கிடந்த ‘நாய்கிதேவி’ என்ற கடலோர ரோந்துக் கப்பல் கடலுக்குள் அவசர அவசரமாக இறக்கப்பட்டு ரோந்து சுற்றத் தொடங்கியது.

இந்த நிலையில்தான் கடந்த 11_ம் தேதி, இந்திய எல்லைப் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த பன்னிரண்டு மீனவர்களையும், மூன்று படகுகளையும் கடலோர காவல்படையினர் பிடித்து தூத்துக்குடிக்குக் கொண்டு வந்தனர். அதில் ஒரு படகில் ‘மரியா’ என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது.

‘மரியா என்று எழுதப்பட்டிருந்த படகில் வந்தவர்கள்தான் எங்களைச் சுட்டார்கள்’ என்று குமரி மாவட்ட மீனவர்கள் முன்பு சொல்லியிருந்ததால், மீனவர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்தது. அதைத் தொடர்ந்து குமரி மாவட்ட மீனவர்களைச் சுட்ட இலங்கையைச் சேர்ந்த மரியா படகிலிருந்த சிங்களர்கள் கடலோர காவல் படையிடம் மாட்டிக் கொண்டார்கள்’ என்ற செய்தி வேகமாகப் பரவியது. போலீஸே அந்தச் செய்தியைக் கசியவிட்டது என்கிறார்கள். அதற்குக் காரணம், தமிழக மீனவர்களின் மனம் குளிரச் செய்யும் நிலையில் அரசு இருந்ததுதான் என்றும் கூறப்பட்டது.

போலீஸ் நினைத்தது போலவே, இங்குள்ள மீனவர்களும் சிங்களர்கள் பிடிபட்டதால் மனம் குளிர்ந்துதான் போனார்கள். அரசுக்கு நன்றி தெரிவித்து பத்திரிகைக்கு விளம்பரம் கொடுத்த தூத்துக்குடி மாவட்ட மீனவ அமைப்புகள், விளம்பரத்தில் ‘குமரி மாவட்ட மீனவர்களைச் சுட்டுக்கொன்ற சிங்களர்களைப் பிடித்த கடலோர காவல்படையினருக்கு நன்றி’ என்ற வாசகத்தையும் சேர்த்து சந்தோஷப்பட்டார்கள்.

ஆனால் ‘மரியா’ படகின் மர்மத்தை மறுநாள் உப்புச்சப்பில்லாமல் செய்துவிட்டார், தூத்துக்குடி எஸ்.பி.யான ஜான் நிக்கல்சன். ‘‘குமரி மாவட்ட மீனவர்களை நடுக்கடலில் சுட்டது யார் என்பது இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது. மரியா என்ற படகில் வந்தவர்கள் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்களா? அல்லது இலங்கையைச் சேர்ந்த சிங்களர்களா? என்பது தெரியவில்லை. பொதுவாக மரியா, மாதா என்ற பெயர்களில் மீனவர்கள் படகு வைத்திருப்பது தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் அதிகம். எனவே யாரோ ‘மரியா’ என்ற படகை தமிழ் மீனவர்களைச் சுட தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அதே நேரத்தில், இப்போது பிடிபட்ட ‘மரியா’ படகு இலங்கையைச் சேர்ந்த தமிழ் மீனவர்களுக்குச் சொந்தமானதுதான். இலங்கைத் தமிழ் மீனவர்கள் ஆறு பேர் ‘மரியா’ என்ற படகில் மீன் பிடிக்க வந்திருக்கிறார்கள். அப்போது அந்தப் படகு ரிப்பேர் ஆகியிருக்கிறது. அதனால் அவர்கள் 21 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அந்த வழியாக வந்த குமரி மாவட்ட மீனவர்களிடம் அவர்கள் தங்களைக் காப்பாற்றும்படி கேட்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழில் பேசியதால், அவர்களைத் தங்களது படகுகளில் ஏற்றியிருக்கிறார்கள் குமரி மீனவர்கள். அப்போதுதான் அந்த மூன்று படகுகளையும் (குமரி மீனவர்கள் கொண்டு சென்றது இரண்டு படகுகள்) கடலோர பாதுகாப்புப் படையினர் பிடித்து வந்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழ் மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்ட மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் விடப்படுகிறார்கள்!’’ என்று ‘மரியா’ படகு சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் அவர்.

இது குறித்து நம்மிடம் கருத்துத் தெரிவித்த மீனவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ‘‘தமிழக மீனவர்களை நடுக்கடலில் சுட்டுக் கொல்வது இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள்தான். இதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், இந்திய அரசாங்கம் இதை மறைக்கப் பார்க்கிறது. இப்போது பிடிபட்டிருக்கும் மரியா படகில் கூட ஏகப்பட்ட சந்தேகம் இருக்கிறது. முதலில் அந்தப் படகில் இருந்து ஆயுதங்கள் பிடிபட்டதாகச் சொன்னார்கள். இப்போது அதில் ஒன்றும் இல்லை என்கிறார்கள். கடைசியில் அது இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.

நடுக்கடலில் 21 நாட்கள் அவர்கள் தத்தளித்ததாகக் கூறுகிறார்கள். 21 நாட்கள் காணாமல் போனவர்களை இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஏன் தேடவில்லை என்று தெரியவில்லை. மற்றும் அதில் இருந்த ஆயுதங்கள் என்ன ஆனது என்றும் தெரியவில்லை. கடலோர பாதுகாப்புப் படையினர் பிடித்தவுடன், அவர்கள் இலங்கையைச் சேர்ந்த சிங்களர்கள் என்றார்கள். ஆனால், அவர்கள் போலீஸ் வசம் வந்ததும், ஒரே நாள் இரவில் அவர்கள் இலங்கைத் தமிழர்கள் ஆகிவிட்டார்கள். இதனால் எங்களுக்கு இதில் ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கின்றன.

இதை நாங்கள் விட்டுவிடப்போவதில்லை. சம்பந்தப்பட்ட குமரி மாவட்ட (கடலோர காவல் படையிடம் சிக்கிய மீனவர்கள்) மீனவர்களிடம் கடலில் என்ன நடந்தது என்ற உண்மையைக் கேட்கப் போகிறோம். போலீஸ் சொல்வதுதான் உண்மையா? அல்லது போலீஸ் அவர்களை அப்படி சொல்லச் சொன்னதா என்று கேட்போம். அதில் ஏதாவது முன்னுக்குப் பின் முரணாகச் செய்திகள் வந்தால், அரசுக்கு எதிராக எங்கள் போராட்டம் தொடரும்!’’ என்றார்கள் அவர்கள்.
நன்றி>குமுதம்

Friday, April 20, 2007

முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படையின் வேவு வானூர்தி வீழ்ந்தது!

முல்லைத்தீவு கொக்கிளாய் களப்புப் பகுதியில் சிறிலங்கா வான் படைக்குச் சொந்தமான தானியங்கி வேவு வானூர்தி ஒன்று வீழ்ந்து சேதமாகியுள்ளது.


சிறிலங்கா வான்படைக்கு வீடியோப் படங்கள் மூலம் வேவுப்பணி செய்யும் ஆட்கள் அற்ற தானியங்கி வேவு வானூர்தி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலை - முல்லைத்தீவு கடற்பரப்புக்கு மேலாக வேவுப் பறப்பை மேற்கொண்டு படம் பிடித்துக் கொண்டிருந்த போது, அந்த வேவு வானூர்தி கொக்கிளாய் களப்புக்கு மேலாக பறந்த போது களப்புக்குள் வீழ்ந்து சேதமாகியுள்ளது.

முதலில் வீழ்ந்ததாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல் வெளியிட்டது. ஆனால் இன்று பிற்பகல் கோளாறுக்கு உள்ளான வேவு வானூர்தி தமது கட்டுப்பாட்டு நிலையம் மூலம் தரையிறக்கப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் வானூர்தி வீழ்ந்து சேதமாகி உடைந்துள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா வான்படை வானூர்திகள் தாக்குதல்களை நடத்துவதற்காக வேவுப்பறப்பை மேற்கொண்டு வீடியோ படம் எடுத்துக்கொடுக்கும் பணியைப் புரியும் இந்த ஆளற்ற வேவு வானூர்திகள் சிறிலங்கா வான்படைத் தளத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

தமிழ் மக்களால் வண்டு என்று இந்த வேவு வானூர்திகள் அழைக்கப்பட்டுகின்றது. இதற்கு முன்னர் வன்னி கனகராஜன்குளம் விஞ்ஞானகுளத்தில் இத்தகைய வேவு வானூர்தி வீழ்ந்து நொருங்கியது.

சிறிலங்கா வான்படைத் தாக்குதலுக்கு முக்கிய ஆதாரமாக இந்த ஆளற்ற வானூர்திகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி>புதினம்.

சிறிலங்காவிற்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வழங்கியது இந்தியா!!!

பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை சிறிலங்காவிற்கு வழங்குவதில்லை என்ற உறுதிமொழிகளை மீறி சிறிலங்காவிற்கு இந்திய மத்திய அரசாங்கம் உயர் ரக வெடிமருந்து மற்றும் ரிபிரி வகை 40 மி.மீ எறிகணை செலுத்திகளுக்குரிய குண்டுகள் உட்பட பெரும் தொகையான பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை வழங்கியுள்ளது.


மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் கோரிக்கைகளையும் மத்திய அரசாங்கம் இதன் மூலம் புறக்கணித்துள்ளது.

சிறிலங்காவிற்கு ஆபத்துக்கள் அற்ற தற்பாதுகாப்பு உபகரணங்களையே வழங்குவது என்ற உறுதிமொழிகளில் இருந்து மீறிய மத்திய அரசாங்கம் பின்வரும் நாசகார ஆயுதங்களை சிறிலங்காவிற்கு வழங்கியுள்ளது.

அந்த ஆயுதங்களின் விபரம்:

கண்ணிவெடி பாதுகாப்பு வாகனங்கள் - 30

'வாரகா' என்ற கரையோர ரோந்துக் கப்பல் - 01

40 மி.மீ எறிகணை செலுத்திக்கான குண்டுகள்

உயர் ரக வெடிபொருட்கள் - 60

பாதுகாப்பு உடைகள் - 2,000

குண்டுதுளைக்காத உடற்கவசம் - 4500

பிளாக் உடைகள் - 2,800

பாதுகாப்பு தலைக்கவசங்கள் - 3,245

குண்டுப் பாதுகாப்பு வாகனங்கள் - 10

25 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உறைநிலை கொள்கலன்கள்

சிறிய உளவு இயந்திரங்கள்

குண்டு துளைக்காத வாகனங்கள் - 10

இரவுப்பார்வைச் சாதனங்கள் - 400

கண்ணிவெடிப் பாதுகாப்பு வாகனங்கள் - 50

3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தொலைத்தொடர்பு சாதனங்கள் இவற்றில் இன்ரெல் பி -4 கணணிகள், அவற்றுடனான யுஎஸ்பி 200

உயர் அலைவரிசை கொண்ட தொடர்பு சாதனங்கள் - 35

மின் நிறுத்த பலகைகள் - 25

பாதுகாப்பான தளங்கள் - 35,

யுஎச்எஃப் கையடக்க சாதனங்கள் - 350 என்பன இதில் அடங்கும்.

பொறியியல் சாதனங்களை கொண்ட 1.2 மில்லியன் டொலர் பொருட்களும், 4.4 மில்லியன் டொலர் பெறுமதியான உடைகள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.

மொத்தமாக 8,550 குண்டுதுளைக்காத உடற்கவசங்கள், 12,300 பிளாக் உடைகள், 22,733 பாதுகாப்பு தலைக்கவசங்கள் என்பன வழங்கப்பட்டன.

இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டிக்கு நாசகார ஆயுதங்களை சிறிலங்கா அரசாங்கத்துக்கு வழங்கி அப்பாவித் தமிழ் மக்கள் மீது சிறிலங்காவினால் நடத்தப்பட்டு வரும் கொடூரமான போரை உக்கிவித்து வருவது மிகவும் வருந்தத்தக்கது என அவதானிகள் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர்.
நன்றி>புதினம்.

Thursday, April 19, 2007

We are Sri Lankans "Play by the Rules!"

We are Sri Lankans "Play by the Rules!"

கடற் புலிகள் பலமானவர்கள் - அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி!!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் புலிகள் மிகப் பலம் பெற்றிருப்பதாக, இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி அட்மிறல் மைக்கல் முலென் தெரிவித்துள்ளார்.

கடற் புலிகள் மட்டுமல்ல, இந்தியாவிற்கு அண்மையிலுள்ள சீனக் கடற் படையும் பலமடைந்து வருவதாகவும், இதனால் இந்தியா போன்ற அண்மையிலுள்ள நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி அட்மிறல் மைக்கல் முலென் கூறியிருக்கின்றார்.

இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் இந்தியா சென்ற அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி, ஊடகர் மத்தியில் பேசும்போது இந்தக் கருத்தினை வெளியிட்டார்.

இந்தியாவில் 4 நாட்கள் தங்கியிருக்கும் அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி அட்மிறல் மைக்கல் முலென், இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் பேச்சு நடத்தவுள்ளார்


http://www.pathivu.com/

கிளிநொச்சியில் அகழாய்வு: சுடுமண் சிற்பங்கள் கண்டெடுப்பு!






கிளிநொச்சி அக்கராயனை அடுத்த ஆற்றுப்படுக்கையின் ஓரமாக உள்ள சின்னப்பல்லவராயன்கட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது தொன்மையான செய்நேர்த்தியுடன் கூடிய பல சுடுமண் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழீழ கல்விக் கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரனின் வழிகாட்டலில் ந.குணரட்ணம் குழுவினரால் இந்த சுடுமண் சிற்பங்கள், உடைந்து சிதைந்த நிலையில், 4 அடி ஆழம் வரையான குழிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட உடைந்த நிலையிலான சுடுமண் சிற்பங்களின் துண்டுகளை இக்குழுவினர் தற்போது பொருத்தி முழுமை நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

கண்டெடுக்கப்பட்டவற்றில் 22 அங்குல உயரம் கொண்ட தியான நிலையுடன் கூடிய பெண்ணுருவ சுடுமண் சிற்பம், 45 அங்குல உயரம் கொண்ட சுடுமண் யானைச்சிற்பம், 12 அங்குலமளவு உயரமான யானைச்சிற்பம், கரடி, பன்றி, நாய் ஆகியனவற்றின் உருவச்சிற்பங்களும் சிறப்பான கலை நேர்த்தியுடன் மண்ணில் உருவாக்கப்பட்டு சுடப்பட்டுள்ளன.

இதில் பெண் உருவச்சிலையின் தியானநிலை அதிகம் துல்லியமான செய்நேர்த்தி கொண்டதாகும். இங்கு தியான நிலைப் பெண் சிலையின் முழுவடிவமும், அதன் பகுதி வடிவங்களும் ஒளிப்படங்களில் உள்ளன. இவற்றுடன் மண்ணினால் செய்யப்பட்டு சுடப்பட்ட விளக்குகள் உட்பட்ட பெருமளவிலான பொருட்களும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நன்றி>புதினம்.

தமிழர் பிரச்சினையை எடுத்துச் சொல்லவே அனைத்துலக துடுப்பாட்டப் போட்டி மைதானத்தில் இறங்கினேன்: பரபரப்பை ஏற்படுத்திய கனேடிய இளைஞர் மயூரன்.


ஈழத் தமிழர் பிரச்சனையை அனைத்துலக சமூகத்துக்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்துடனேயே நான் மைதானத்தில் உள்நுழைந்தேன் என்று அனைத்துலக துடுப்பாட்ட மைதானத்தில் தமிழீழத் தேசியக் கொடி ஏந்தி பரபரப்பை ஏற்படுத்திய கனேடிய இளைஞரான மயூரன் தெரிவித்துள்ளார்.

'தமிழ்நாதம்' இணையத்தளத்துக்கு மயூரன் அளித்த சிறப்பு நேர்காணலில் கூறியுள்ளதாவது:
தாயக மண்ணிலிருந்து நான்கரை வயதில் கனடிய நாட்டுக்கு நான் வந்தேன்.

பொதுவில் துடுப்பாட்டாப் போட்டிகளில் எனக்கு ஆர்வம் உண்டு. கனடாவில் நான் இருப்பதால் கூடைப்பந்தாட்டம் போன்ற போட்டிகளைத்தான் அதிகம் பார்ப்பதுண்டு. ஆனால் மேற்கிந்திய தீவுகளுக்கு துடுப்பெடுத்தாட்டப் போட்டிகளை பார்க்கச் சென்றது என்பது எம்முடைய பிரச்சினை எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான்.
இப்போதுதான் முதல் முறையாக துடுப்பாட்டப் போட்டியைப் பார்க்கச் சென்றேன்.
எங்களுடைய மக்கள் எல்லோருக்கும் எங்கள் நாட்டில் நடைபெறுவது என்ன என்று தெரியும். அனைத்துலக மன்னிப்புச் சபையும் உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியையொட்டி பரப்புரை மேற்கொண்டது. ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சியால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.

ஆகையால் அனைத்துலக மன்னிப்புச் சபையின் பரப்புரைக்கு ஆதரவாகவும் எமது பிரச்சனையை அனைத்துலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கருதி இந்த இளைஞராக இருப்பதால் நேரடி நடவடிக்கையை மேற்கொண்டேன்.
என்னுடைய நண்பர்களுடன் நான் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்றேன்.
நாம் மேற்கொண்ட நடவடிக்கையானது முன்னரே திட்டமிட்டதுதான்.
அந்த மைதானத்தில் பல்வேறு நாடுகளின் கொடிகளெல்லாம் இருக்கின்றபோது எங்களுடைய நாட்டினது புலிக்கொடியும் அதாவது தமிழீழத் தேசியக் கொடியைக் கொண்டு போனால் என்ன மாதிரி விளைவை உண்டாக்கும்- பரபரப்பை ஏற்படுத்தும் என்று திட்டமிட்டுத்தான் இதனைச் செய்தோம்.

அவுஸ்திரேலியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையேயான போட்டியைத் தெரிவு செய்யக் காரணம் உண்டு.

சிறிலங்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே நெருக்கமான உறவு உண்டு. சிறிலங்காவின் அமைச்சரான கேகலிய ரம்புக்வெல, அவுஸ்திரேலியாவுக்குச் சென்று எங்கள் மக்களின் செயற்பாடுகளைத் தடுக்கப் பார்க்கிறார். எங்களுடைய போராட்டத்தைத் தடை செய்ய அவர் முயற்சித்து வருகிறார். ஆகையால்தான் தற்போது இந்தப் போட்டியை நாம் தெரிவு செய்தோம்.

எங்களுக்கு மைதானத்தின் எந்தப் பகுதியைத் தெரிவு செய்ய வேண்டும் என்று வெளியிலிருந்து தெரியவில்லை. மைதானத்தின் பகுதியில் நகரக்கூடிய இடங்களும் இருந்தன.

மைதானத்தைச் சுற்றி மிகவும் வலுவான பாதுகாப்பாகத்தான் இருந்தது. ஆனால் சரியான நேரத்தையும் சரியான இடத்தையும் நாம் தெரிவு செய்தமையால்தான் எமது திட்டம் வெற்றி பெற்றது.

மைதானத்தில் சிறிலங்கா அணி நிற்க அவுஸ்திரேலிய அணி மட்டையெடுத்து ஆடும்போதுதான் இறங்க வேண்டும் என்று திட்டமிட்டேன். அதன்படி நான் மைதானத்தில் இறங்கி பிட்ச் பகுதிக்குச் செல்ல தீர்மானித்தேன்.

ஆனால் மைதானத்தில் நின்றிருந்த சிறிலங்கா அணியினரோ அச்சத்துடன் இருந்தனர். அந்தப் பாதிப்பைவிட வந்திருக்கும் பார்வையாளர்களுக்கு விடயத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கருதினேன். அதற்கேற்ப பார்வையாளர்களும் என்னை உற்சாகப்படுத்தினர். பார்வையாளர்கள் வரிசையில் இலங்கையர்களும் இருந்திருக்கக் கூடும். ஆனால் எந்தப் பகுதியிலிருந்து உற்சாகமளித்தனர் என்பது எனக்குத் தெரியவில்லை.

நான் மைதானத்தில் இறங்கும் வரை திட்டமிட்டதனை சரியாக முடிக்க வேண்டும் என்று கருதிக் கொண்டிருந்தேன். மைதானத்தில் இறங்கிய பின்னர் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தேன்.

சிறிலங்கா அணியினர் அச்சத்துடனும் அவமானப்பட்ட நிலையிலுமாக அவர்கள் முகம் இருந்ததை நான் சரியாகப் பார்த்தேன்.

நான் மைதானத்தில் தமிழீழத் தேசியக் கொடியுடன் இறங்கிய உடனே அங்கிருந்த காவல்துறையினர் என் பின்னால் வந்தனர். அவர்கள் என்னை நோக்கி வந்தபோது அவர்களுக்கு ஒத்துழைப்புத் தரும் விதத்தில் நான் எனது கையை உயர்த்தினேன்.
இதனை நான் விளையாட்டுக்குச் செய்யவில்லை. பரப்புரைக்காகத்தான் செய்கிறேன் என்பதனை அனைத்துலக துடுப்பாட்டச் சபையினரும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இடையூறு செய்யவில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நாம் அவர்களோடு ஒத்துழைத்தேன்.

நான் செய்தது ஒரு போராட்ட ரீதியான செயல்தான். விளையாட்டுக்காக பிழையாக நான் செயற்படவில்லை.

நான் மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டபோது, முதலில் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். எங்கள் நாட்டில் இப்படியான பிரச்சினைகள் நடைபெறுகின்றன. அதனை வெளிப்படுத்தவே இத்தகைய செயற்பாடு மேற்கொண்டோம் என்றும் விளக்கம் அளித்தேன்.

மைதானத்திலிருந்த போதுதான் அனைத்துலக துடுப்பாட்டச் சபையினர் விசாரித்தனர்.
எந்த ஒரு பார்வையாளரும் மைதானத்தில் இறங்கக் கூடாது என்பதுதான் அந்த அதிகாரிகளின் சட்டம். என்னிடம் விசாரணை செய்த ஒவ்வொரு உயர் அதிகாரியிடமும் என்னுடைய மன்னிப்பைக் கூறி அத்துடன் எமது அரசியல் பிரச்சினையையும் நான் விளங்கப்படுத்தினேன். எதற்காக இந்தச் செயலை செய்தேன் என்றும் விளக்கினேன்.

மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அங்கிருந்து புலனாய்வுத்துறை தலைமை அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.

முதலில் என்னை குற்றவாளியாகக் கருதித்தான் 40 அல்லது 50 பேர் கொண்ட புலனாய்வுப் பிரிவினர் விசாரித்தனர். என் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளத்தான் அவர்கள் முயற்சித்தனர்.

ஆனால் ஒவ்வொரு அதிகாரியும் என்னிடம் விசாரித்த போதும் விளக்கம் கூறினேன். அதன் பின்னர் எனது சார்பில் கதைக்கத் தொடங்கினர்.

அதன்பின்னர் அந்த நாட்டிலிருந்து வெளியேறுமாறு என்னைக் கேட்டுக் கொண்டனர். ஏனெனில் இன்னொரு போட்டிக்கு நான் திரும்பவும் போய் இப்படியான ஒரு சம்பவம் நடப்பதை அவர்கள் விரும்பவில்லை. அப்படி நடப்பதன் மூலமாக வெளிநாட்டினருக்கு மேற்கிந்திய தீவுகள் குறித்து பிழையான அபிப்பிராயம் வருமென கருதினர். ஆகையால் அதனை ஏற்று அந்நாட்டிலிருந்து வெளியேற இணங்கினேன்.

மேற்கிந்திய தீவுகள் நாட்டின் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அங்கிருந்து வெளியேறினேன்.

கனடா நாட்டுக்கு நான் திரும்பியபோதும் இதுவரை எதுவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. விசாரணைகள் வரலாம். அதனை எதிர்கொள்ளவும் நான் தயாராக உள்ளேன்.

ஆனால் கனடா நாட்டினது சட்டத்தை நாம் சரியான முறையில் கையாண்டால் எங்களுக்கு எதுவித பிரச்சனையும் வராது என்ற நம்பிக்கையுடன்தான் நான் மைதானத்திற்குச் சென்றேன்.
நான் மேற்கொண்ட நடவடிக்கையானது ஊடகங்களில் படங்களுடன் வெளியானதன் மூலம் எனது நோக்கம் நடந்தேறியிருப்பதால் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறேன். எமக்கு மட்டுமல்ல தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுக்கும் என்று கருதுகிறேன்.

நான் மேற்கொண்ட செயற்பாடு சரியானது என்று இளைஞர்கள் பலரும் தொடர்பு கொண்டு தெரிவித்ததோடு தங்களை அழைத்துச் செல்லாதது குறித்து கோபமடைந்தும் உள்ளனர்.
நாம் வெற்றி கிடைக்கும்வரை சிந்திக்க வேண்டும். நாங்கள் பெருந்தொகையில் திரண்டு போராட்டம் நடத்திய போதும் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை. இத்தகைய புதிய வடிவங்களினூடே தொடர்ச்சியாக எமது செயற்பாடுகளை மேற்கொள்வோம்.

எங்களுடைய தேசியத் தலைவரின் விருப்பத்தின்படி அதாவது எமது தேசியத் தலைவர் அவர்கள் ஒருமுறை, வெளிநாட்டில் இருக்கும் தமிழ் இளைஞர்கள் அடுத்த கட்டப் போராட்டத்துக்கு முன்வர வேண்டும் என்று கூறியிருந்தார். நாங்கள் பீனிக்ஸ் பறவை போல் எழும்ப வேண்டும் என்றும் கூறினார்.

அதற்கேற்ப செயற்திட்டங்களையும் வடிவங்களையும் மாற்றி அனைத்து தமிழ் இளைஞர்களும் முன்வந்தால் நம் பிர்சினைக்கு விரைவில் நாம் தீர்வு காண்போம் என்றார் மயூரன்.

படங்கள்: ஏ.எஃப்.பி, ரொய்ட்டர்ஸ், ஏ.பி
நன்றி>புதினம்.

Wednesday, April 18, 2007

மனித உரிமை மீறல்களில் இலங்கை அலட்சியம் பாப்பரசருக்கு `ஹியூமன் றைற்ஸ் வோற்ச்' கடிதமும், அனுப்ப விரும்புவோருக்கான மாதிரிக்கடிதமும்.

அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான முன்னணி சர்வதேச அமைப்பான ஹியூமன் றைற்ஸ் வோற்ச் (Human rights watch) அமைப்பு இலங்கையின் அண்மைக்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பான விரிவான விபரங்கள் அடங்கிய கடிதமொன்றை பரிசுத்த பாப்பரசருக்கு அனுப்பியுள்ளது.

இலங்கையில் ஆயுதப் பிணக்குகளில் ஈடுபட்டுள்ள தரப்பான அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பை புறக்கணித்து அலட்சியப்படுத்தி நடந்து கொள்வதாக இக்கடிதத்தில் இவ்வமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை அலட்சியப்படுத்தி செயற்படுவதாக விடுதலைப் புலிகள் மீது தாம் பல வருட காலங்களாகவே குற்றஞ் சுமத்தியுள்ளபோதிலும் அண்மைக் காலமாக இலங்கை அரசாங்கத்தின் படைகளும் பொலிஸாரும் இவர்களுடன் இணைந்து செயற்படும் ஆயுதக் குழுக்களும் மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவது தமக்கு பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இவ்வமைப்பு பாப்பரசருக்கு அக்கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இலங்கை அரச படைகளாலும் பொலிஸாராலும் அரசுடன் இணைந்து இயங்கும் ஆயுதக் குழுக்களாலும் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்துவதற்கும் குற்றவாளிகளை தண்டிப்பதற்கும் இலங்கை அரசாங்கம் இதுவரைக்கும் எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் பாப்பரசருக்கு இவ்வமைப்பு அக்கடிதத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கை ஜனாதிபதியின் இத்தாலி விஜயத்தின் போது பாப்பரசர் அவரை சந்திக்குமிடத்து இலங்கையில் இடம்பெற்று வரும் பெரும்தொகையான மனித உரிமை மீறல்களுக்குள் மிக முக்கிய சில விடயங்களை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான உத்தரவாதத்தினை ஜனாதிபதியிடம் பெற்றுக் கொள்ளவோ அல்லது இவை குறித்த பாப்பரசரின் ஆழ்ந்த அவதானத்தை எடுத்துக் கூறவோ முன்வருமாறும் அக்கடிதத்தில் பாப்பரசருக்கு இவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருமாறு கோரி ஹியூமன் றைற்ஸ் அமைப்பு பாப்பரசருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முன்வைத்துள்ள முக்கிய ஐந்து விடயங்கள் வருமாறு;

இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாருக்குத் தெரிய கிழக்கில் சிறுவர்களை கடத்துவதை இலங்கை அரசாங்கம் தலையிட்டு உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கனவே கடத்தப்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும் விடுவிக்கப்பட்டு அவர்களின் குடும்பங்களிடம் சேர்பிக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்தினாலும் அரசாங்கத்தின் அனுசரணையுடன் செயற்படும் ஆயுதக் குழுக்களாலும் மேற்கொள்ளப்படும் கடத்தல், காணாமல்போதல் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும். இக்குற்றங்களுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

அவசரகாலச் சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களின் கீழ் இராணுவத்தினராலும் பொலிஸாராலும் தடுத்து வைக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்களை அரசாங்கம் பகிரங்கமாக வெளியிட வேண்டும். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்கள் தமது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவும் ஏனைய சட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்ளவும் அனுமதிக்கப்பட வேண்டும்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளவர்களை எக்காரணம் கொண்டும் கட்டாயமாக பலவந்தப்படுத்தி சொந்த இடங்களுக்கு செல்ல நிர்ப்பந்திக்கக்கூடாது. இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் தமது சொந்த இடங்களுக்கு பாதுகாப்பாக செல்வதற்கான புறச்சூழ்நிலைகளை நேர்மையாக உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

இலங்கை அரசாங்க படைகளாலும் புலிகளாலும் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு தருவிக்க இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும். ஆகிய மேற்படி ஐந்து விடயங்கள் குறித்து ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுடன் பாப்பரசர் கலந்துரையாட வேண்டும் என அக்கடிதத்தில் மேற்படி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும், தற்பொழுது இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்களை விசாரிக்கவும் கண்காணிக்கவும் ஐக்கிய நாடுகள் சபையினால் நிறுவப்படும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு அவசியம் என்று தெரிவித்துள்ள இவ்வமைப்பு, இவ்வாறான சர்வதேச கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தினைச் சேர்ந்த பல நாடுகள் தமது ஆதரவினை பகிரங்கமாக தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், சர்வதேச கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு அனுப்ப முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு அமெரிக்க அரசும் தனது ஆதரவை தெரிவிப்பதோடு, இந்தியா போன்ற தனது நட்பு நாடுகளுக்கும் இம்முயற்சிக்கு ஆதரவளிக்க வலியுறுத்தும் என்று தாம் நம்புவதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹியூமன் றைற்ஸ் வோற்ச் அமைப்பின் சார்பில் அதன் ஆசிய பிராந்திய இயக்குநர் பிராட் அடம்ஸ் ஐந்து பக்கம் அடங்கிய இக்கடிதத்தினை இலங்கையின் நிலைவரம் எனத் தலைப்பிட்டு பரிசுத்த பாப்பரசருக்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை அனுப்பி வைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


நான்றி>தினக்குரல்.

விடயம்: சிறீலங்கா சனதிபதியின் வத்திக்கான் பயணம்

நோக்கம்: சிறீலங்கா சனதிபதி எதிர்வரும் வெள்ளி 20.04.07ல் வத்திக்கானில் புனித பாப்பரசரை
சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது சிறீலங்காவின் மனிதவதை
மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான கவன ஈர்ப்பினைக் கோரும் நடவடிக்கை.
படுகொலைகள் - காணமல் போதல் உட்பட்ட மனிதவதைகளை உடனடியாக சிறீலங்கா நிறுத்தல்
வேண்டுமெனக் கோரியும், சர்வதேசக் கண்காணிப்பை ஏற்றுக்கொள்ளல், பயங்கரவாத தடுப்புச்சட்டம்,
அவசரகாலச் சட்டம், ஏ-9 வீதி மூடப்படல் போன்ற விடயங்களை நீக்கும் உறுதிமொழியை
சிறீலங்காவிடமிருந்து புனித பாப்பரசர் கோரல் வேண்டுமெனக் வேண்டுதல்.

வழிமுறை: புனித பாப்பரசருக்கு நேரிடையாகவும், வாழும் நாடுகளில் உள்ள வத்திக்கானிற்கான தூதுரகம்
ஊடாகவும் மனுக்களை உடனடியாக தொலைநகல் மூலம் அனுப்புதல். மனுக்களிற்கான பதில்
அல்லது கிடைத்ததை உறுதிப்படுத்தும் கடிதம் உங்களுக்குக் கிடைக்கும் வகையில் உங்கள்
முகவரியிடப்பட்டு தபால்மூலம் மனுக்களை உரிய இடங்களுக்கு அனுப்பி வைத்தல் முக்கியமானது.
மனு உள்நாட்டு மொழிகளில் இடம்பெறலாம். சுருக்கமான முறையில் அமைய வேண்டும்.
மனுவில் பின்வரும் விடயங்களை அவதானியுங்கள்:

1. அண்மைக்காலங்களில் மதகுருமார்கள், கல்வியாளர்கள், அரசியல் - சமூகத் தலைவர்கள், சிறுவர்கள்
பெண்கள் உட்பட சுமார் 1700 பொதுமக்களை மகிந்த ராஐபக்ச தலைமையிலான சிறீலங்கா அரசு
படுகொலை செய்துள்ளது. 300 000 மேற்பட்ட புதிய இடம்பெயர்ந்த மக்கள் (ஐனுP) உருவாக்கப்பட்டுள்ளனர்.
ஜெனீவா உடன்பாடுகளுக்கு முரணாக வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், கோவில்கள்
போன்றன சிறீலங்காப் படைகளால் தாக்கப்பட்டுள்ளன. வண.பிதா ஜிம் பிறவுண் அடிகளார் உட்பட
பலநூற்றுக்கணக்கான தமிழர்கள் காணமல் போயுள்ளனர். ஐநா அமைப்புக்கள், அனைத்துலக மனிதஉரிமைகள்
அமைப்புக்கள், உள்நாட்டு அமைப்புக்கள், ஊடகங்கள், இலங்கையில் உள்ள போர்நிறுத்தல்
உடன்பாட்டிற்கான ஐரோப்பிய கண்காணிப்பாளர்கள் உட்பட பலதரப்பும் இந்தப் படுகொலைகளை பதிவு
செய்துள்ளன.
2. பல்வேறு நாடுகளும், அரசுகளும் சிறீலங்கா அரசின் மனிதப்படுகொலைகளை நிறுத்துவதற்கும்,
கண்காணிப்பதற்குதான சர்வதேச கண்காணிப்பைக் கோரியுள்ளன. சிறீலங்கா இதனை மறுத்து வருகின்றது.
ஐநா மனிதஉரிமைகள் கவுன்சிலில் இதற்கான ஐரோப்பிய வரைவு காத்திருக்கின்றது.

இந்தப் பின்னணியில் வத்திக்கான பின்வரும் விடயங்களை மேற்கொள்ளுமாறு சிறீலங்கா அரச தலைவரை
பகிரங்கமாக கேட்டுக்கொள்ளல் வேண்டும்:

1. பயங்கரவாதச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் (Pவுயு - நுசு) உட்பட அனைத்து மனிதஉரிமைகளுக்கு
முரணான சட்டங்களையும் சிறீலங்கா அரசு ரத்துச் செய்து தமிழ் மக்களிற்கு எதிரான அரச
பயங்கரவாத்தினை நிறுத்தல் வேண்டும் என புனித பாப்பரசர் சிறீலங்காவிடம் வலியுறுத்தல் வேண்டும்.
2. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மதித்து நடந்து மக்களிற்கு எதிரான அனைத்து ஒடுக்குமுறை
நடவடிக்கைகளையும் நீக்கல் வேண்டும். குறிப்பாக மக்கள் குடியிருப்புக்கள் மீதான குண்டுவீசு;சுக்கள், ஐனுP
களுக்கு எதிரான தாக்குதல்கள், ஏ-9 உட்பட பாதைகளை மூடி மக்களை பணயக்கைதிகளாக
வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும் என வத்திக்கான
பகிரங்கமாகக் கோரல் வேண்டும்.
3. மேற்கூறிய விடயங்கள் உண்மையாக இடம்பெறுவதை உறுதிப்படுத்த சர்வதேச மனிதஉரிமைகள்
கண்காணிப்பு நிபுணர்கள் சுயாதீனமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்.


புனித போப் அவர்களை விழிக்கும் முறை:HIS HOLINESS BENEDICT XVI
fax no.: 00 39 0669885863
அவரது தபால் முகவரி
His Holiness Pope Benedict XVI
Apostolic Palace
Vatican
Italy

பிரதிகளை ஈ-மெயில் மூலம் அல்லது பக்ஸ் மூலம் வாழும் நாடுகளில் உள்ள வத்திக்கான தூதரங்களுக்கு
அனுப்புதல் வேண்டும். புனித பாப்பரசரின் கவனத்திற்கு அனுப்பப்படும் மனுவை சமர்ப்பிக்குமாறு
தூதரங்களைக் கோரல் வேண்டும்.

தூதர்களை அழைக்கும் முறை: Apostolic Nuncio
nஐனீவாவில் உள்ள ஐநாவிற்கான வத்திக்கான் தூதரகம்:

His Excellency Monsignor Silvano M.Thomasi
Apostolic Nuncio
Permanent observer mission of the holy see to the UN
UN office at Geneva
Chemin du Vergeron 16
1292 Chambesy
Swiss
Fax. 00 41 22 758 1729
mission.holy-see@ties.itu.int

மேலதிக விபரங்களுக்கு: ift@bluewin.ch


மாதிரிக் கடிதம்
His Holiness Pope Benedict XVI
Apostolic Palace
VATICAN CITY
Italy
E-mail: benedictxvi@vatican.va

Papal E-mail/Fax/Phone:
The Vatican Press Office is considered the "official" means of email contact for the Holy Father. The following email address does gain a response.
e-mail: av@pccs.va
phone: +390669881022
fax: +390669885373

His Excellency Archbishop Luigi Ventura
Apostolic Nuncio to Canada
Apostolic Nunciature
724 Manor Avenue
Ottawa, Ontario K1M 0E3
Tel.: (613) 746-4914
Fax: (613) 746-4786

His Excellency Monsignor Silvano M. Thomasi
Apostolic Nuncio
Permanent observer mission of the holy see to the UN
UN Office at Geneva
Chemin du Vergeron 16
1292 Chambesy
Swiss

Fax: 0041 22 758 1729
mission.holy-see@ties.itu.int





Your Holiness,
On the eve of your meeting with the President of Sri Lanka Mr. Mahinda Rajapakse, we would like to bring to your attention the current human rights abuses against the Tamil minority in general and with Catholics in particular.
The human rights situation has deteriorated since President Rajapakse took office over a year ago. Many Tamils including parliamentarians, members of the clergy, journalists, civil society leaders and aid workers were assassinated by the security forces. During the recent military operations over 1,600 innocent people have been killed and several thousands were seriously injured or maimed. Also, over a thousand people have disappeared, several women raped and hundreds abducted.
There are continuous reports of aerial bombing and shelling of civilian targets in the East by the Government forces, resulting in around 200,000 people fleeing their homes and living as internally displaced people (IDPs). This is in addition to the nearly 500,000 people who continue to be displaced due to the earlier phases of the conflict and the Tsunami. Due to the much of the conflict taking place in traditionally Tamil areas, most of the IDPs are Tamil civilians. Even the IDPs are harassed by the security forces and their allied paramilitary groups. Already thousands have fled by sea to India and joined around 100,000 already living in Indian refugee camps.
For the last six months, the northern province of Jaffna has been cut off from the rest of the country, after the Government closed the only highway (called A9 highway) that links it to other parts of the country. This is resulting in acute shortages of food and medicine. The most affected are babies, pregnant women, and the elderly. Due to the lack of economic activity and resulting loss of income, several poor families have only one meal a day. There are also reports of malnutrition in these communities. Facing starvation and daily abductions, civilians in the northern province of Jaffna who have tried to flee are prevented from doing so by the security forces. Security forces have instituted a strict permit system, thus effectively holding the innocent civilians as human shields and hostages.
Several international organizations and local relief groups are also prevented by the security forces from taking relief to the affected population. In some instances workers and vehicles of such organizations have come under attack by the security forces.
Some of the issues are:
December 2005: Assassination of a popular Member of Parliament Joseph Pararajasingam, during a midnight mass at the St. Mary's Cathedral Church in Batticaloa. This Church was surrounded by several military check points and in the military's high security zone.
May 2006: Sri Lankan Navy personnel and affiliated paramilitary group complicit in murdering a Catholic family (including a 4 month baby and 4 year old child.)
June 2006: 200 people took shelter in Our Lady of Heart church when a hand grenade was lobbed through the window. Eyewitnesses claim that the Navy and Army had stormed in and opened fire. Additionally another Catholic family of 4 (including two children) was massacred in Vankalai. The mother was raped before killed, while all four members had severe torture marks and their bodies were found hanging by rope.
August 2006: The Disappearance of Father Jim Brown (Amnesty urgent action). In addition the Sri Lankan army shelled St. Philip Neri's Church in Allaipidy killing 15 refugees on the spot.
September 2006: The Glorious Church of Jesus Christ was set on fire in Mannar. Heavy winds made it difficult to put out the flames and the church was completely gutted.
January 2007: Reverend Nallathamby Gnanaseelan was brutally gunned down by security forces. His body, with shots to his stomach and head, was discovered on the street.
In his Easter address for 2007, Bishop Thomas Soundaranayagam of Jaffna, Sri Lanka, reflected on the horrific conditions the innocent people in North East Sri Lanka are forced to endure:
"In the northern corner of Sri Lanka, we are living in unspeakable human conditions amid shocking imposition of draconian laws, threats of incarceration, and escalating preparations for a renewed battles. In the east more than 150,000 of the most vulnerable people are undergoing immense sufferings uprooted from their ancestral lands and living in camps with shortage of rations, worsening health conditions and with minimum basic facilities."
It is in the face of this urgent humanitarian crisis that we humbly request your help in asking President Rajapakse to open the A9 highway and allow the much needed humanitarian aid to flow unimpeded. President Rajapakse has thus far ignored the outcries of the international community that call upon him to end the human rights abuses and work toward peace. Please help convey the urgency of this issue. Thank you for your assistance.
Yours Sincerely,
________________

April 14th 2007
His Excellency Archbishop Pietro Sambi,
Embassy of the Holy See
3339 Massachusetts Ave.,
Washington, DC 20008

Your Excellency,

It has come to my attention that His Holiness Pope Benedict XVI will be meeting next week with Sri Lankan President Mahinda Rajapakse in Rome. I am distressed that this heinous political leader who is allowing and even perpetrating unspeakable human rights abuses against hundreds of thousands of innocent civilians in his own country of Sri Lanka has been granted an audience with our Holy Father.
The message of our Lord Jesus Christ is one of love and compassion towards all, especially the meek and oppressed. Rather than showing compassion towards the historically oppressed Tamil people in Sri Lanka, President Rajapakse has further victimized this vulnerable, long-suffering population, as is well documented by the United Nations, The U.S. State Department, NGOs including Amnesty International and Human Rights Watch as well as independent media outlets..
In his Easter address, Bishop Thomas Soundaranayagam of Jaffna, Sri Lanka, reflected on the horrific conditions the innocent people in North East Sri Lanka are forced to endure:
"In the northern corner of Sri Lanka, we are living in unspeakable human conditions amid shocking imposition of draconian laws, threats of incarceration, and escalating preparations for renewed battles. In the east more than 150,000 of the most vulnerable people are undergoing immense sufferings uprooted from their ancestral lands and living in camps with shortage of rations, worsening health conditions and with minimum basic facilities. Bishop Thomas Soundaranayagam (Jaffna, Sri Lanka) April 5, 2007
It is of dire importance that in meeting with President Rajapakse, Holy Father makes a strong statement against the human rights abuses that continue to escalate in Sri Lanka. President Rajapakse has thus far ignored the outcries of the international community calling upon him to end the abuses and work toward peace; Pope Benedict XVI has a unique opportunity to appeal to Rajapakse from a non-political perspective. Please help convey the urgency of the Pope’s addressing this issue with Rajapakse to the Vatican in advance of the scheduled meeting.
Thank you for your assistance. May God bless the innocent victims in Sri Lanka and throughout the world.
Yours in Christ,
----------------------------------------

Fact Sheet


Excerpts from recent press and NGO reports on the prevailing humanitarian and human rights situation in Sri Lanka:

The latest round of bloodletting is much like previous ones—bombings (including a Tuesday blast that killed 15, mostly women and children, in a bus), shellings, suicide attacks against political leaders, government air raids on rebel-held areas, abductions and disappearances of anyone believed to be aiding the other side. In the past 16 months, more than 4,000 people have been killed, and 220,000 people forced from their homes; a total of half a million Sri Lankans are now displaced in their own country. Nordic peacekeepers who are supposed to be monitoring peace have "gone from reporting single shots as [cease-fire] violations to reporting whole battles," according to one international observer…. The violence is not chaotic, as in parts of Africa, but controlled and sadistic. It's as if the entire nation is suffering a slow-burning but destructive psychosis. "There's been a brutalization of society," says Saravanamuttu. Time Magazine, April 5, 2007.
According to Amnesty International’s information, the human rights situation in Sri Lanka continues to deteriorate seriously… Many civilians are caught up in the fighting between the Government of Sri Lanka and the Liberation Tigers of Tamil Eelam and urgently require effective protection. More than 220,000 civilians have been displaced by the violence. Amnesty International is concerned that the parties to the conflict are not doing all they can to protect the civilian population. Humanitarian access to civilians has been severely curtailed and humanitarian personnel have been attacked and killed. The Jaffna Peninsula remains isolated with a lack of food, dwindling medical supplies and severe restrictions on travel. Reports of political killings and enforced disappearances by the government and armed groups are re-emerging and increasing. A climate of impunity persists. Amnesty International public statement, March 9, 2007.
Despite the billions of dollars in aid that flowed into Sri Lanka after the tsunami, tens of thousands of tsunami survivors have spent more than two years in crowded tent camps or temporary homes. According to U. N. statistics, Tamil regions have received 20 percent less aid than other areas, despite having suffered 65 percent of the tsunami destruction. And as little as 29 percent of the required permanent houses have been completed in the war-torn Tamil regions, compared to 98 percent in the south.
A U.N. report released by the organization’s special envoy for tsunami recovery last month criticizes the Sri Lankan government for unequal access to housing grants for Tamils and slower disbursement of funds to Tamil areas. NGOs trying to work in Tamil regions complain that the government has placed onerous restrictions on their operations, ranging from excessive checkpoints to burdensome work-permit requirements. Hard-line Sinhalese members of Sri Lanka’s main ethnic group—have derailed a crucial aid-sharing agreement between the government and rebels, and a presidential decree enacted last month effectively criminalizes any interaction with the Tamil rebels, known as the LTTE. "All aid has come to a complete standstill in the Tamil areas," said a government official from the Tamil city of Jaffna.
Rampant government corruption also hasn’t helped: an internal government investigation by the Sri Lankan Auditor-General uncovered the disappearance of millions of dollars of aid money into "General Deposit Accounts without being used for the intended purposes" and other "blatant violations" of the law by government agents. Newsweek February 9, 2007.
The protection of internally displaced persons by the government remains a paramount concern as civilians. By directing artillery fire at military targets and civilians without discrimination, firing artillery from populated areas, summarily executing persons, and unnecessarily preventing the delivery of humanitarian aid, both sides have violated international humanitarian law (the laws of war).
The protection of internally displaced persons by the government remains a paramount concern as civilians continue to flee areas under LTTE control after government offensives. More than 100,000 displaced persons are currently in the eastern district of Batticaloa, and hundreds more are arriving every day as the fighting spreads. Government protection for these people has been very weak despite the presence of UNHCR, with regular threats and occasional violence, including abductions, by both the LTTE and pro-government armed groups.
Of deep concern is the government’s continued support for abusive armed groups. There is now a clear pattern of the state turning a blind eye to abductions, extrajudicial executions, and extortion committed by these groups.
Enforced disappearances attributed to state security forces are also on the rise'At the same time, the government is using the 'war on terror' paradigm to intimidate the media, non-governmental organizations, and others with independent or dissenting views. Human Rights Watch is deeply concerned that the government, driven by the Sri Lankan defence establishment, is dismissing critics as allies of the LTTE and traitors of the state. Human Rights Watch Letter to UN HR Council March 13, 2007.
The government's respect for the human rights of its citizens declined due in part to the breakdown of the CFA. Credible sources reported human rights problems, including unlawful killings by government agents, high profile killings by unknown perpetrators, politically motivated killings by paramilitary forces associated with the government and the LTTE, and disappearances. Human rights monitors also reported arbitrary arrests and detention, poor prison conditions, denial of fair public trial, government corruption and lack of transparency, infringement of religious freedom, infringement of freedom of movement, and discrimination against minorities. There were numerous reports that armed paramilitary groups linked to government security forces participated in armed attacks, some against civilians. Following the December 1 LTTE attempt to assassinate Defense Secretary Gothabaya Rajapaka, the government strengthened emergency regulations that broadened security forces' powers in the arrest without warrant and non-accountable detention of civilians for up to 12 months. US State Dept. Report 2006, released March 6, 2007.
Kidnappings and disappearances, apparently by the police and allied forces, have resumed in Colombo. The civil war has made more than 200,000 people homeless in the past year, almost as many in the same period as in Darfur, which gets 10 times the international attention. Like the Sudanese authorities, the government is using its monopoly of air power to conduct a vicious counter-insurgency in the face of lesser rebel provocations. The Guardian, February 9, 2007.

நன்றி>யாழ்.காம்.

புலிக்கொடியுடன் உலக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி மைதானத்தில் நுழைந்து பரபரப்பு ஏற்படுத்திய தமிழ் இளைஞர்!!!









சிறிலங்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியின் போது புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட தமிழீழ தேசியக்கொடியுடன் தமிழ் இளைஞர் ஒருவர் மைதானத்தில் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இலங்கையில் தமிழ் மக்கள் மீதான சிங்கள இன ஒடுக்குமுறையை அம்பலப்படுத்தும் ஒரு கவன ஈர்ப்பு நடவடிக்கையாக தமிழீழத் தேசியக் கொடியுடன் துணிச்சலாக வந்த உறவுக்கு தாயகத்தில் இருந்து தமிழீழத் தாயக மக்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழத் தாயக உறவுகளின் கூட்டமைப்பினர் விடுத்துள்ள அறிக்கை:

தாயகத்தில் தமிழினத்தை கொன்றொழித்து கொடூரமாக வதைத்துக்கொண்டு இருக்கும் சிங்கள அரசாங்கத்தின் முகத்தை அனைத்துலக மட்டத்தில் அம்பலப்படுத்தும் வகையில் உலகக்கிண்ண துடுப்பாட்டத்தில் சிறிலங்கா விளையாடும் தொடரும் போட்டிகளில் இத்தகைய ஒரு கவன ஈர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டமையானது முக்கியத்துவம் வாய்ந்ததாக நாங்கள் கருதுகின்றோம்.

தொடரும் துடுப்பாட்டப் போட்டிகளில் இன்னும் அதிகமாக எமது உறவுகள் எங்கள் தமிழீழ தேசியக்கொடியை மைதானத்திலும் அரங்கிலும் காட்டுவதோடு சிங்கள அரசாங்கத்தின் கொடூரத்தை சித்தரிக்கும் படங்களையும் காட்டி மகிந்த அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும்.

இதனை புலம்பெயர் மக்களால் செய்யமுடியும். இதுவே செய்வதற்கான சந்தர்ப்பம் என்று அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
படங்கள்: ஏபி, ஏ.எஃப்.பி, ரொய்ட்டர்ஸ்.
நன்றி>புதினம்.

Tuesday, April 17, 2007

கனேடியப் பிரதமர் தமிழ் மக்களுக்கு வாழ்த்து - சிங்களவர்கள் சீற்றம்!

கனடாவின் பிரதமர் ஹார்பர் தமிழ் மக்களுக்கு மட்டும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியதற்கு சிங்கள மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சித்திரைப் புத்தாண்டை தமிழ்ப் புதுவருடமாக வர்ணித்து கனடியப் பிரதமர் ஹார்பர் கடந்த 14ஆம் நாள் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அத்துடன், கனடாவின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கனேடிய தமிழ் மக்கள் ஆற்றும் பணிக்கும் பிரதமர் தன்னுடைய நன்றியைத் தெரிவித்திருந்தார்.

சித்திரைப் புத்தாண்டை தமிழ் மக்கள் மட்டுமன்றி, சிங்களவர்களும், ஆசியாவிலுள்ள இந்துக்கள் செறிந்து வாழும் நாடுகளில் பலவற்றிலும் கொண்டாடப்படுவதாகவும் சிங்களவர்கள் தெரிவித்துள்ளனர்.

கனேடியப் பிரதமர் ஹார்பர் தமிழ் மக்களுக்குக் கூறிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை அரசியலாக்கி, கனேடிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையில் கனடாவிலுள்ள சிறீலங்கா தூதரகமும், சிங்களவர்களும் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
நன்றி>பதிவு

Monday, April 16, 2007

அன்று எம்.ஜி.ஆர்... இன்று கலைஞர்!



- குமுதம் ரிப்போர்ட்டர்-
இது வரை வெளி உலகத்தை எட்டிப் பார்க்காத ஒரு செய்தி உண்டு. ஈழத்திற்கு இந்திய ராணுவத்தை அழைப்பதில் வெற்றி பெற்ற ஜெயவர்தனே, அந்த ராணுவம் தமது சுட்டுவிரல் கட்டளைக்கு அடி பணிந்து செயல்படவேண்டும் என்றார். அதனையும் அன்றைய சூழ்நிலையில் இந்திய அரசு ஏற்றுக்கொண்டது.

ஈழப் போராளிகளின் கடல் பயணங்களைக் கட்டுப்படுத்த இந்திய_இலங்கை கடற்படையினர் கூட்டாக ரோந்து போக வேண்டும் என்றார். அதனையும் ராஜிவ் காந்தி ஏற்கும் நிலையில் இருந்தார். உடன்பாடு தயார். கையெழுத்தாகும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அன்றைய முதல்வர் அமரர் எம்.ஜி.ஆருக்குத் தகவல் தெரிந்தது. அவர் மின்னல் வேகத்தில் தலையிட்டார். கூட்டு ரோந்து என்ற உடன்பாடு புதைகுழிக்குப் போனது.

கூட்டு ரோந்து என்ற கூட்டுச் சதியை முறியடிப்பதற்காகவே அவர் டெல்லி பறந்தார். சிங்கள இனவாதிகள் சீற்றம் கொண்டனர்.

அண்மையில் கொழும்பு ராணுவ விமான தளத்தை வான் வெளியில் பறந்து வந்து ஈழப் போராளிகள் தாக்கினர். நமது வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர மேனன் கவலை தெரிவித்தார். இந்தியா_இலங்கை கடற்படை கூட்டு ரோந்துத் திட்டம் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்தார். திடுக்கிட்டுப் போனோம். எதற்காகக் கூட்டு ரோந்து? யாரைக் காப்பதற்காகக் கூட்டு ரோந்து?

அண்மைக் காலமாக இந்தக் கூட்டு ரோந்துத் திட்டம் வெகுவேகமாக வியாபாரம் செய்யப்படுகிறது. தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கைக் கடற்படையினரால் படுகொலை செய்யப்படுகிறார்கள். அதனைத் தடுக்கக் கூட்டு ரோந்து என்கின்றனர்.

தமிழக மீனவர்களைத் தாக்குவது இலங்கைக் கடற்படையினர் அல்ல. விடுதலைப் புலிகள்தான். ஆகவே அதனை முறியடிக்க கூட்டு ரோந்து என்று சிங்கள இனவாத அரசு பொய்யை விற்பனை செய்கிறது.

தங்களைத் தாக்குவது_சுடுவது இலங்கைக் கடற்படையினர்தான் என்பதனை, ஒவ்வொரு சம்பவத்தின் போதும் தமிழக மீனவர்கள் உறுதி படக் கூறுகிறார்கள். தமிழக மீனவர்களை ஈழப் போராளிகள் தாக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி ஒரு சம்பவம் இதுவரை நடைபெற்றதும் இல்லை.

ஈழப் போராளிகளுக்கு பெட்ரோல், டீசல் எடுத்துச் செல்கிறார்கள் என்று, முன்னர் தமிழக மீனவர்கள் நமது கடலோரக் காவல்படையினரால் சோதனைகளுக்கு ஆளானார்கள். இப்போது அப்படி ஒரு குற்றச்சாட்டும் எழவில்லை.

அண்மையில் கன்னியாகுமரிக்கும் கொழும்பிற்கும் இடையே தமிழக மீனவர்கள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களைச் சுட்டது விடுதலைப் புலிகள்தான் என்று சிங்கள அரசு சேதி சொன்னது. இல்லை இல்லை. தங்களைக் கடத்திச் சென்று தாக்கிச் சுட்டது இலங்கை கடற்படையினர்தான் என்று, நமது மீனவர்கள் சொன்னார்கள். அவர்கள் சாதாரண உடையில் வந்த ராணுவ ரவுடிகள் என்பதனை உறுதி செய்தனர்.

ஆனால், இந்திய மீனவர்களைச் சுடுவதில் விடுதலைப்புலிகளின் பங்கும் இருப்பதாக, நமது கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தா சொன்னதாக ‘இந்து’ ஏட்டில் மட்டும் (31 மார்ச் 2007) ஒரு செய்தி வந்தது. இந்தச் செய்தி இலங்கை அரசிற்கு ரொம்ப மகிழ்ச்சி அளித்தது. பாருங்கள். இந்தியக் கடற்படைத் தளபதியே சொல்கிறார் என்று சொக்கிப் போனார்கள்.

இந்திய_இலங்கைக் கடற்படையின் கூட்டு ரோந்துத் திட்டத்தை நியாயப்படுத்துவதற்குப் பல்வேறு தரப்பிலும் முயற்சிக்கின்றனர். ஒரு வாரமாக டெல்லியில் முகாம் போட்ட இலங்கை வெளியுறவு அமைச்சர் கூட்டு ரோந்துத் திட்டம் கனியப் போகிறது என்று களிப்படைந்தார். அந்தத் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக நமது வெளியுறவுச் செயலாளரே சொல்லும் போது, சிங்கள இனவாதிகளின் சிந்தை குளிரத்தானே செய்யும்?

ஆனால் சரியான நேரத்தில் தட்டி முதல்வர் கலைஞர் தக்க பதிலடி கொடுத்துவிட்டார். கூட்டு ரோந்துத் திட்டம். தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும். இதனை ஏற்கமாட்டோம் என்று சட்டமன்றத்திலேயே அவர் அறிவித்திருக்கிறார்.

சிங்களக் கப்பற்படையினரின் தாக்குதல்களிலிருந்து தமிழக மீனவர்களைக் காக்க கூட்டு ரோந்துத் திட்டமாம். மனநோயாளிகள் கூட அதனை ஏற்க மாட்டார்கள்.

தங்கள் ஆவியால் ஈழத்தை ஆராதனை செய்பவர்கள் ஈழப் போராளிகள்.

அவர்களை இன்றுவரை இலங்கை ராணுவம் நேருக்கு நேர் சந்திக்க அஞ்சுகிறது. எனவே, கடந்த முப்பது ஆண்டுகளாக கூட்டு ரோந்து என்று, இந்தியாவை அவர்களுக்கு எதிராகத் திருப்ப முனைகிறது.

இரு நாடுகளின் கடல் எல்லைகளைத் தெளிவாக வரையறுக்க முடியாது. எனவே, பாகிஸ்தான் மீனவர்கள் குஜராத் கடற்பரப்பிற்குள் வந்து விடுகிறார்கள். அப்படி வருகின்றவர்களை இந்தியக் கடற்படையோ, கடலோரக் காவல் படையோ சுட்டு வீழ்த்துவதில்லை. கைது செய்கிறார்கள். அதே போல் எல்லை கடந்து கராச்சி கடற் பரப்பிற்குள் நுழையும் இந்திய மீனவர்களைப் பாகிஸ்தான் கடற்படையினர் சுட்டுப் பொசுக்குவதில்லை. கைது செய்கிறார்கள்.

ஆனால், எல்லை தாண்டி வந்து விட்டதாகத் தொடர்ந்து தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் சுட்டுக் கொண்டே இருக்கிறது. சிங்கள மீனவர்கள் எல்லை கடந்து இந்தியக் கடல் பகுதிக்கு வருகிறார்கள். நமது கடற்படையோ கடலோரக் காவல் படையோ அவர்களைச் சுட்டுப் பிணமாக்குவதில்லை.

வங்கதேச மீனவர்கள் வழி தவறி சென்னைக்கும் வந்து விடுகிறார்கள். அவர்களை நாம் சுடுவதில்லை. ஏன்? தாய்லாந்து. மியான்மர் நாட்டு மீனவர்களும் சென்னை வரை வந்து விடுகிறார்கள். அவர்களை நாம் சுடுவதில்லை. கைது செய்கிறோம். திருப்பி அனுப்புகிறோம். ஏன்? அண்மையில் சிங்கள மீனவர்கள் கடற் சுழற்சியால் திசை மாறி தேவனாம்பட்டினம் வந்தனர். அவர்களை நமது மீனவர்களே வரவேற்றனர். காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர் இவைதான் உலகம் முழுமையும் உள்ள மரபு.

ஆனால், தங்கள் கடல் எல்லையோரம் வரும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுட்டுக் கொண்டேயிருப்பார்களாம். அந்தக் கடற்படையினரை இலங்கை அரசால் கட்டுப்படுத்த முடியாதா? இலங்கைக் கடற்படையினர் என்ன கட்டுக்குள் அடங்காத ரவுடிகளா? அப்படி அவர்கள் தமிழக மீனவர்களைச் சுடுவதைத் தடுக்க, இரு நாட்டுக் கடற்படையினரும் கூட்டு ரோந்து போக வேண்டுமாம்.

அந்த வாதத்தை வலுப்படுத்தத்தான் கன்னியாகுமரி மீனவர்களை இலங்கைக் கடற்படை ரவுடிகள் சுட்டுக் கொன்றனர். இத்தகைய படுகொலைகளை சிங்கள அரசின் உத்தரவின் பேரில், அதன் கடற்படையினர் தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆமாம். கூட்டுரோந்துத் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கிறது என்கிறார்கள். நல்ல மனச்சாட்சியுள்ள மனிதர்களால்தான் நியாயத்திற்குக் குரல் கொடுக்க முடியும். தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், முதல்வர் கலைஞரின் முடிவு அறியாமல் மைய அரசு எந்த முடிவு எடுத்தாலும். விபரீத விளைவுகளுக்கே வழி வகுக்கும். ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்கும் நமது பிரதமர் அதனை அறிவார்.

ஈழப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு, அதற்கான திட்டம் தயார் என்று ராஜபட்சே அரசு அறிவிக்கிறது. அதே சமயத்தில் விடுதலைப் புலிகளை அடியோடு அழிக்கும் நாசவேலைகளைத்தான் செய்கிறது என்று நாம் கூறவில்லை, இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கூறுகிறார். (இந்து 6.4.2007)

கொழும்பு ராணுவ விமான தளத்தை ஈழப் போராளிகள் தாக்கினர். அதனை இலங்கையின் நட்பு நாடுகள் கூட கண்டிக்கவில்லை. சர்வதேச சமுதாயம் இலங்கைக்கு அனுதாபம் தெரிவிக்கவில்லை. காரணம், மனித உரிமைகள் அனைத்தையும் ஒழித்துவிட்டோம் என்று அவரே கூறுகிறார்.

இப்படிச் சொந்த மண்ணிலேயே தனிமைப் பட்டு நிற்கும் ராஜபட்சே அரசு, இன்றைக்கு யாழ் மாவட்டத்தில், குறிப்பாக முல்லைத் தீவுகளைச் சுற்றி 40 ஆயிரம் துருப்புகளைக் குவித்திருக்கிறது. அதே சமயத்தில் இந்தியா_ இலங்கைக் கடற்படை கூட்டு ரோந்து என்கிறது. இதன் விளைவு மன்மோகன் சிங் அரசிற்குத் தெரியாதா என்ன?

கூட்டு ரோந்து என்பது தமிழ் இனத்தையே அழிக்கத் துடிக்கும் சிங்கள இனவாதத்திற்குச் சேவை செய்ததாகவே இருக்கும்.

- குமுதம் ரிப்போர்ட்டர், April 19, 2007