Saturday, April 07, 2007

விழுப்புரத்தில் ஜெலட்டின் குச்சிகளால் வெடித்து சிதறிய கார்: 25 பேர் பலி-வீடுகள் தரைமட்டம்-50 பேர் காயம்!!!

ஏப்ரல் 07, 2007

விழுப்புரம்

விழுப்புரம் அருகே கார் ஒன்று மர்மமான முறையில் வெடித்து சிதறியதில் 25க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி இறந்தனர். 10க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின. 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் ஒரு அம்பாசடர் கார் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் அருகே உள்ள செண்டூர் என்ற இடத்தில் அந்தக் கார் போனபோது திடீரென அதிலிருந்து புகை வரத் தொடங்கியது.

இதையடுத்து கார் நிறுத்தப்பட்டது. அதிலிருந்த 3 பேர் இறங்கினர். காரிலிருந்து புகை வருவதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காரை சூழ்ந்து கொண்டு தண்ணீர் ஊற்றி புகையை அணைக்க முயன்றனர்.

அப்போது பயங்கர சப்தத்துடன் அந்தக் கார் வெடித்துச் சிதறியது. இதில் காரை சூழ்ந்து நின்ற பொதுமக்களில் 25க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தனர். அந்த பகுதி முழுவதும் சிதறிய உடல்களாக காட்சி அளிக்கிறது.

இந்த பயங்கர சம்பவம் காரணமாக அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அவர்களில் பலர் நிலைமை படு மோசமாக உள்ளதால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மீட்புப் பணியில் டுபடுத்தப்பட்டுள்ளன.காயமடைந�
��தவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய அம்பாசடர் காரில் குவாரியில் கல் உடைக்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் வெடி பொருட்கள் இருந்துள்ளன. அவை தான் வெடித்துச் சிதறியுள்ளன.

முன்னதாக அந்த காரில் ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து இருந்ததாக ஒரு தகவல் வெளியானது.

இச் சம்பவம் காரணமாக விழுப்புரத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
http://thatstamil.oneindia.in/news/2007/04/07/bomb.html

No comments: