Thursday, April 12, 2007

செய்கோளை திருடிய விடுதலைப்புலிகள் மீது அமெரிக்க நிறுவனம் குற்றச்சாட்டு:-)

விடுதலைப்புலிகள், அமெரிக்காவிலிருந்து இயங்கும் செய்மதி தொலைத் தொடர்பு நிறுவனமான, இண்டெல்சாட் நிறுவனத்தின், செய்கோளை, அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும், அதனைத் தடுக்க தாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இண்டெல்சாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் ஒலிபரப்பு சமிக்ஞைகளை முறையற்ற வகையில் பயன்படுத்தி, இந்த ஒளிபரப்பை செய்தார்கள் என்று தெரிந்தவுடன், இந்த ஒளிபரப்புகளைத் தடுக்க பல தொழில்நுட்ப மாற்று வழிகளை பரிசீலித்துவருவதாகவும் இண்டெல்சாட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறுகிறது.

இண்டெல்சாட் அதிகாரிகளை அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதர் பெர்னார்ட் குணதிலக அவர்கள் ஏப்ரல் 10ம் தேதியன்று சந்தித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml

1 comment:

Anonymous said...

நான் நினைத்தேன் செய்கோளை கடத்திக்கொண்டு வன்னிக்கு போட்டாங்கள் என்று:-)))))))))