Saturday, April 28, 2007

சிறிலங்கவின் இரு பிரதான பெற்றோலிய எரிபொருள் களஞ்சியங்கள் மீது வான்புலிகள் தாக்குதல்.

எரியும் எண்ணைக்குதங்கள்.


தமிழீழ வான்படையினரின் வானூர்திகளை நோக்கி சிறிலங்காப் படையினர் நடத்திய தாக்குதல்களின் காட்சி

சிறிலங்காவின் கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், முத்துராஜவெல எண்ணெய்க்குதம் ஆகியவை மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகள் தாக்குதல் நடத்திவிட்டு வெற்றிகரமாக தளம் திரும்பி விட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இரு பகுதிகளிலும் தீச்சுவாலை கொளுந்துவிட்டு எரிவதனை வானோடிகள் கண்ணுற்றதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வான்புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த துணிகரத்தாக்குதலை நடத்தி இரண்டு பெரும் எரிபொருள் களஞ்சியங்களை தாக்கிவிட்டு வெற்றிகரமாகத் தளம் திரும்பியுள்ளன.

சிறிலங்கா வான்படை வானூர்திகளுக்கு எரிபொருளை வழங்கும் களஞ்சியமான கொல்லனாவ பெற்றோலிய எரிபொருள் களஞ்சியமும், முத்துராஜவல எரிபொருள் மற்றும் எரிவாயு களஞ்சியமும் வான்புலிகளின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி சேதமாகியுள்ளன.

கிளிநொச்சி மீது சிறிலங்கா வான்படையின் மிக் ரக வானூர்திகள் இன்று அதிகாலை பரா வெளிச்சக்குண்டுகளை வீசி குண்டுத்தாக்குதலை நடத்திச் சென்ற 1 மணிநேரத்தில் வான்புலிகளின் வானூர்திகள் கொழும்புக்குச் சென்று அதிமுக்கிய பெற்றோலிய எரிபொருள் களஞ்சியங்கள் மீது குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்திவிட்டு தளம் திரும்பிவிட்டன.

வான்புலிகள் தொடர்பாக முழுமையான விழிப்பில் சிறிலங்கா படைத்தரப்பு இருக்கின்ற நிலையில் வான்புலிகளின் வானூர்திகள் சிறிலங்கா தலைநகர் கொழும்பின் மையத்தில் தாக்குதலை நடத்தி தளம் திரும்பியிருக்கின்றன.

தொடர்புபட்ட செய்தி: வான்புலிகள் அச்சம்: மீண்டும் இருளில் மூழ்கியது கொழும்பு
படம்: சண்டே ரைம்ஸ்
நன்றி>புதினம்.

No comments: