Monday, April 09, 2007

பிரான்ஸ் ஒன்றுகூடலில் கலந்துகொண்ட 3000 மேற்பட்ட தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்!!!





பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகளின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ரொக்கட்றோ சதுக்கத்தில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்க இருந்தவேளை பிரஞ்சு காவல்துறையினரால் பொதுமக்கள் அனைவரும் திருப்பியனுப்ப முற்பட்டவேளை தமிழ் மக்கள் இன்னொரு பகுதியில் கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ரொக்கட்றோ நகரபிதா வருகைதந்து அனைவரையும் அமைதியாகத் திரும்புமாறு கேட்டுக்கொண்டதையடுத்தும் பொதுமக்கள் இன்னொரு புறத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.

இதேவேளை பிரச்சு காவல்துறையினர் ரொக்கட்றோ பிரதேசத்தில் காணும் தமிழர்களை திரும்பியனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ரொக்கட்றோ நிலக்கீழ் புரையிரத நிலையம் மூடப்பட்டு தமிழ் மக்கள் திருப்பியனுப்பப்படுகின்றனர


சுதந்திரத்திற்காக குரல் தருவது குற்றமில்லை எனும் கண்டன ஒன்றுகூடலில் மக்கள் சிதறிக் காணப்படுவதால் 3000 - 4000 வரையிலான மக்கள் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பிரஞ்சுக் காவல்துறையினர் இன்றைய ஒன்றுகூடலுக்கு தடைவிதித்த போதும் காவல்துறையினரால் பொதுமக்கள் திருப்பினுப்பிய போதும் தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நன்றி : பதிவு

1 comment:

Anonymous said...

தகவலுக்கு நன்றி, அனைத்து தமிழர் சமூகமே பணம்கொடுக்கும்போது பிரஞ்சு அரசால் மட்டும் என்ன செய்துவிடமுடியும், இது போன்ற சில கைதுகள் மட்டுமே முடியும், உடல்,பொருள்,ஆவி அனைத்தையுமே அர்பனிக்க துணிந்துவிட்ட கூட்டம் இது, இப்படை தோற்கின் எப்படை வெல்லும், எமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்.