Tuesday, July 31, 2007

கடலின் மடியில் கந்தக வாசம்: மலபார் 07 - ஆய்வுக் கட்டுரை!



பாகிஸ்தானில் நிலை கொண்டுள்ள அல் கைடா போராளிகளை தாக்குவதற்கு இலங்கையை தளமாக பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற அமெரிக்கா தலைமையிலான கூட்டு படைகளின் தாக்குதல்களை அடுத்து அல் கைதாவின் முக்கிய தளபதிகள் மற்றும் போராளிகள் பாகிஸ்தானிற்கு சென்றுள்ளனர்.

பாகிஸ்தானில் அல் கைதா போராளிகள் தங்கியிருப்பதையும் அதன் தலைவரான ஒசாமா பின்லேடன் இன்னமும் உயிருடன் இருப்பதையும் அமெரிக்க புலனாய்வு துறை உறுதி செய்துள்ளது.

அமெரிக்காவிற்கும் அதன் நேச நாடுகளுக்கும் எதிராக தாக்குதல்கள் நடத்தப்படும் என ஒசாமா பின் லேடன் தொடர்ச்சியாக விடுத்து வரும் எச்சரிக்ககைளால் அமெரிக்காவின் அடுத்த தாக்குதல் பாகிஸ்தானிலேயே இடம்பெறும் என போரியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாகிஸ்தானில் தாக்குதலை ஆரம்பித்தால் அதற்கான தளமாக இலங்கையை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு அம்சமாக அமெரிக்க கடற்படையின் முக்கிய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவம் அவர்கள் திருகோணமலை துறைமுகம் தொடர்பாகவும் கிழக்கு மாகாண அமைவிடம் குறித்தும் ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிழக்கில் மிண்டும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்கு இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலையீட்டை கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கமும் விருப்பம் கொண்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் முக்கிய தாக்குதல் கப்பல் ஒன்று விரைவில் திருகோணமலை துறை முகத்திற்கு வருகை தரும் சாத்தியங்கள் காணப்படுவதாகவும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏற்கனவே இந்தியாவின் தமிழ் நாட்டிற்கு அமெரிக்காவின் மிகப் பெரும் போககப்லான யூ.எஸ்.எஸ் நமிட்ஸ் வந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
வளைகுடாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பலான நிமிட்ஸ் அல்லது அதே திறன்கள் மிக்க வேறொரு தாக்குதல் கப்பல் விரைவில் திருகோணமலை துறை முகத்திற்று அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் அமெரிக்கா அவுஸ்ரேலியா ஜப்பான் சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் 20 போர்க் கப்பல்கள் வங்காள விரிகுடாவில் போர் பயிற்ச்சிகளில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலபார் 07 என பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சிகளின் போது மூன்று விமானங்தாங்கி கப்பல்களும் ஈடுபடுத்தப்படவுள்ளன.

ஆமெரிக்காவின் யூ.எஸ்.எஸ் நிமிட்ஸ் மற்றும் யூ.எஸ்எஸ. ஹிட்டி ஹோக் ஆகிய போர் கப்பல்களும் இங்கிலாந்திடம் இருந்து இந்தியா கொள்வனவு செய்த ஐ.என்.எஸ் விராட் என்ற போர் கப்பலும் இவற்றில் முக்கியமானவை.

இந்த கடல் பயிற்சி நடவடிக்கையில் அமெரிகாவின் அணு சக்தியில் இயங்கும் நீர்மூழ்கி தாக்குதல் கலங்களும் ஈபடுத்தப்படவுள்ளன.

இந்த பயிற்சிகளின் நோக்கம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது தான் என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவின் நீண்டகால பிரச்சினையாக இருந்து வரும் பாகிஸ்தான் மீது அமெரிக்கா மேற்கொளளப் போக்கும் இராணுவ நடவடிக்கை இந்தியாவின் பாதுகாப்பு நலன் சார்ந்து சாதகமானதாகவே கருதப்படுகின்றது.

இதனால் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமெரிக்க படைகள் குவிக்கப்படுவதையோ இலங்கையில் அமெரிக்க கடற்படை தளம் அமைப்பதையோ இந்தியா எதிர்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த ஜூன் மாதம் இந்தியா அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து மேற்கொண்ட பயிற்ச்சி நடவடிக்கைள் ஆசியாவின் வல்லரசான சீனாவை கடுமையாக சீற்றம் கொள்ள வைத்துள்ளது.

தமது கடல் பிராந்தியத்திற்கு அருகில் இந்த பயிற்சிகளை மேற்கொண்டமைக்கான காரணத்தை வெளிப்படுத்துமாறு சீனா இந்த நாடுகளை கோரியிருந்தது.
இவ்வாறான பதற்றங்களின் நடுவில் மேலும் இரு நாடுகளையும் மெலதிகமாக இணைத்துக் கொண்டு வரலாற்றில் முதல் தடவையாக இந்து சமுத்திரத்தில் நடைபெறப் போக்கும் மிகப்பெரிய கடல் போர் ஒத்திகை பிராந்திய நாடுகள் மத்தியில் கடுமையாக குழப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

தற்போது சீனாவுடன் நெருக்கமான உறவுகளை பேணி வரும் ஸ்ரீலங்கா அரசாங்கம் அமெரிக்காவின் புதிய இராணுவ நகர்வுகளால் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கும் விதமான சர்வதேச நகர்வுகளை தடுத்து நிறுத்தி வரும் அமெரிக்கா மறுபுறம் தனது நேரடி தலையீட்டை ஏற்படுத்தும் விதமான நகர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றது.

பொருளாதார மற்றும் அனைத்துலக ஒத்துழைப்பு விடயங்களில் நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் அமெரிக்காவின் இலங்கையில் தளமமைக்கும் முயற்சியை தடுக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஏற்கனவே சீனாவிடம் இருந்தும் பாகிஸ்தானிடம் இருந்தும் ஆயுதங்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு இந்தியா விடுத்த எச்சரிக்கையின் பின்னணியில் அமெரிக்கா இருக்கலாம் என்றும் அவதானிகள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.
நன்றி>பதிவு.

Monday, July 30, 2007

கருணாவின் முதலமைச்சர் கனவைக் கலைத்தார் டக்கிளஸ் தேவானந்தா!!!

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இராணுவ துணை படையான கருணா குழுவை தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சியாக அங்கீகரிக்க மறுத்தமைக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு துணை ஆயுதக் குழுவான கருண குழுவே காரணம் என தெரியவந்துள்ளது.

அரசியல் கட்சியாக தோற்றம் பெற்ற காலம் முதலே சிங்கள அரசாங்கங்களுக்கு விசுவாசமான துணைப் படையாக செயல்பட்டு வரும் ஈ.பி.டி.பியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் முன்வைத்த வேண்டுகோளின் பேரிலேயே கருணா குழுவை அரசியல் கட்சியாக அங்கீகரிக்காத நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாணம் படையினரின் ஆக்கரமிப்பிற்குட்பட்டுள்ள நிலையில் அங்கு நடத்தப்படும் தேர்தல்களின் போது அரசாங்கத்தின் ஆதரவுடனான அரசியல் கட்சிகள் வெற்றியீட்டுவது தவிர்க்க முடியாதது.

எனினும் கிழக்கின் ஏகபோக உரிமையும் தமக்கே என அறிவித்துள்ள கருணா குழு அமைச்சர் டக்களஸ் தேவானந்தாவின் கிழக்கை அரசியல் ரீதியில் அபகரிக்கும் திட்டத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தனது அரசியல் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்தி கருணா குழுவினர் நேரடியாக தேர்தல்களில் பங்கேற்பதை டக்ளஸ் தேவானந்தா தடை செய்துள்ளார்.

இரு துணை ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட முரண்பாடுகள் துப்பாக்கிச் சமராக விரிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் ஸ்ரீலங்கா படைத் தரப்பின் கடுமையான அமுத்தங்கள் காரணமாக இரு தரப்பினரும் இணைந்து செயல்படுவதற்கு இணங்கியதான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையின் பின்னர் நேரடி மோதல்களில் இரு தரப்பும் ஈடுபடாத போதிலும் ஊடகங்கள் மூலமான பிரசார போரில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கருணாவின் கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்லது கிழக்கு அபிவிருத்திக்கான அமைச்சர் என்ற நீண்டகால கனவை டக்ளஸ் தேவானந்தா கலைத்து விட்டுள்ளதால் கருணா தரப்பு கடுமையாக விசனமடைந்துள்ளதாகவும் கிழக்கில் தேர்தல் ஒன்று நடத்தப்படுமானால் அது இரு தரப்பிற்கும் இடையிலான முழு அளிவிலான யுத்தமாக மாற்றம் பெறும் என்றும் கிழக்கு மாகாண செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நன்றி>பதிவு.

Wednesday, July 25, 2007

குறைந்தளவு அதிகாரங்களையே இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு வழங்குமாறு இந்தியா!!!

இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை விட குறைந்தளவு அதிகாரங்களையே இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு வழங்குமாறு இந்தியா ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் சகோதரரும் ஆலோசகருமான பசில் ராஜபக்ச இந்த விடயத்தை தமிழ் அரசில்வாதி ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்துமாறு இந்தியா தொடர்ந்து தமது அரசாங்கத்தை வலியுறுத்தி வருவதாகவும் எனினும் இந்தியாவில் உள்ள மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கை விட குறைவான அதிகாரங்களை கொண்ட அலகினை தமிழ் மக்களுக்கு வழங்குமாறு அது வலியுறுத்தியுள்ளதாகவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபை மூலம் முன்வைக்கப்படவுள்ள தீர்வு யோசனைகளுக்கு மக்கள் ஆணையை பெறுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பபை நடத்த வேண்டும் என்று இந்தியா விரும்புவதாகவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகம் என்ற நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து வலியுறுத்துவதாகவும் இதனை மாற்றியமைக்க வேண்டாம் என கடும் தொனியில் எச்சரித்துள்ளதாகவும் அரசியலமைப்பின் 13வது சரத்தில் காணப்படும் குறைபாடுகளை நீக்கி மாகாண மட்டத்தில் அதிகாரங்களை பகிருமாறு கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி>பதிவு

Friday, July 20, 2007

எம்.கே.நாராயணனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: சென்னை ஆர்ப்பாட்டத்தில் சுப.வீ. வலியுறுத்தல்!!!






ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்தியப் பிரதமரின் ஆலோசகர் எம்.கே.நாராயணனை பதவி நீக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையில் இன்று நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு ஆர்ப்பாட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை விக்டோரியா நினைவு அரங்கம் முன்பாக திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் "ஈழத் தமிழர் பாதுகாப்பு ஆர்ப்பாட்டம்" நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார்.
நிகழ்வில் தலைமை உரையாற்றிய கி.வீரமணி, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துள்ளன. ஒருபக்கம் பேச்சுவார்த்தை என்று கூறிக் கொண்டு மறுபுறம் ஈழத் தமிழர்களை திட்டமிட்டு சிறிலங்கா அரசாங்கம் படுகொலை செய்கிறது.

ஜப்பானுக்கும் நோர்வேக்கும் உள்ள அக்கறையும் உணர்வும் இந்தியாவுக்கும் சிறிதும் இல்லாமல் இருக்கிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை- இனப் படுகொலையை இந்திய அரசாங்கம் கண்டிக்க வேண்டும். சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து சுற்றுக்காவல் நடவடிக்கையை இந்தியா மேற்கொள்வதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இந்தியா பாராமுகமாக இருக்காமல் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க தலையிட வேண்டும் என்று கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சுப.வீரபாண்டியன், விடுதலைப் புலிகளுக்கு அமைதிப் பேச்சுகளில் விருப்பம் இல்லை என்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் எம்.கே.நாராயணன் தவறான தகவலை பரப்பி வருகின்றார். அவரை பதவி நீக்கம் செய்ய வேஎண்டும். இதற்குரிய நடவடிக்கைகள தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும் என்றார்.

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும்- சிங்கள அரசாங்கத்தை
இந்திய அரசாங்கம் கண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், ஒவியர் மருது, பாவலர் அறிவுமதி உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஈழத் தமிழர் பாதுகாப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நன்றி>புதினம்.

Thursday, July 19, 2007

தமிழீழ தனியரசை நிறுவும் வேலைகளை புலிகள் திறம்பட முன்னெடுக்கின்றனர் - ஜேன்ஸ் சஞ்சிகை!!!

தமிழீழ தனியரசை நிறுவுவதற்கான வேலைத் திட்டங்களை விடுதலைப் புலிகள் திறம்பட முன்னெடுத்து வருவதாக ஜேன்ஸ் சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் பரந்து விரிந்து நிற்கும் விடுதலைப் புலிகளின் வலைப்பின்னல் அவர்களின் தமிழீழ தனியரசு என்ற இலக்கினை அடைவதற்கு உறுதுணையளிப்பதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பலம் வாய்ந்த போராட்ட குழுவாக விடுதலைப் புலிகள் திகழ்வதற்ககு அவர்களின் கட்டுக் கோப்பான உலகளாவிய வலையமைப்புகளே காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிக நுட்பமாக தமது நிதி ஆதாரங்களை தேடும் விடுதலைப்புலிகள் அவற்றை சரியான முதலீடாக மாற்றவும் தேவை ஏற்படும் போது அதி நவீன ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு அந்த நிதி மூலங்களை பயன்படுத்தவும் வசதி படைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திட்டமிட்ட நிதி முகாமைத்துவம் ஆயுதக் கொள்வனவிற்கான அவர்களின் நகர்வுகள் அபாருத்தமான நிதி முதலீடுகள் தொடர்பில் அவர்கள் கொண்டுள்ள ஆழுமை என்பன அவர்களை மாறுபட்ட போராட்ட அமைப்பாக வெளிப்படுத்தி நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>பதிவு.

Wednesday, July 18, 2007

"கிழக்கின் உதயம்" - அமைதிக்கு சாவுமணி : "உதயன்" நாளேடு சாடல்!!!

மகிந்த அரசின் "கிழக்கு உதயம்" என்கிற கிழக்கு வெற்றி கொண்டாட்டங்களானது இலங்கைத் தீவில் அமைதிக்கு சாவுமணி அடித்திருக்கிறது என்று "உதயன்" தமிழ்நாளேடு சாடியிருக்கிறது.


உதயன் நாளேட்டின் இன்றைய (19.07.2007) தலையங்கம்:

""தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பிரதேசங்களில் இருந்தும் அவர்கள் விரட்டப்படுவார்கள். அந்தப் பிரதேசங்கள் அவர்களிட மிருந்து பிடுங்கி எடுக்கப்பட்டு மீட்கப்படும்.'' இப்படி சூளுரைத்திருக்கின்றார் மகிந்த ராஜபக்ச.

கிழக்கு மாகாணத்தைப் புலிகளிடமிருந்து முற்றாக விடுவித்து விட்டோம் எனப் பெருமிதம் கொள்ளும் மகிந்தர், அதேபோல வடக்கும் மீட்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.

கிழக்கு முற்றாக மீட்கப்பட்டமையைப் பெரு விழாவாக அவரது அரசு கொண்டாடுகிறது. "கிழக்கு உதயம்' என்ற பெயரில் அந்த அரசு இன்று நடத்தும் வெற்றித் திருவிழாவில் வைத்து, வடக்கை மீட்பது பற்றிய சூளுரையை பிரதிக்ஞையை சபதத்தை மீண்டும் ஒரு தடவை மகிந்தர் பிரகடனம் செய்யக்கூடும்.

மகிந்த அரசின் யுத்தத் தீவிரப் போக்கும், யுத்த வெற்றிகள் பற்றிய பீற்றல் பிரசாரங்களும் ஒரு புறம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல "நைஸாக' அரசுக்கான அரசியல் பிரசாரமாக முன்னெடுக்கப்படுகின்றது.

மறுபுறத்தில், தெற்கில் மிக ஆபத்தான கருத்தியல் நிலைப்பாட்டை அது ஊன்றி விதைப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

""இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை ஒட்டி வெடித்துள்ள இந்த சிவில் யுத்தம் எத்தரப்பினாலும் வெல்லப்பட முடியாதது. இந்தப் பிணக்குக்கு இராணுவ வழியில் தீர்வு காண்பது சாத்தியமேயற்றது.'' இப்படித்தான் அனைத்துலகம் மீண்டும் மீண்டும் அடித்துக்கூறிச் சுட்டிக்காட்டி வருகின்றது.

இப்பிரச்சினையை நீண்ட காலமாக அவதானித்துவரும் நோக்கர்களும், பக்கச்சார்பற்ற ஆய்வாளர்களும், இலங்கையில் செயற்படும் பல பிரதான கட்சிகளின் தலைவர்களும் கூட இதனையே கூறிவருகின்றார்கள்.

ஆனால் இதற்கு மாறாக, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் மூலம் அதாவது , இராணுவ நடவடிக்கை வாயிலாக தமிழரின் தேசிய எழுச்சியை அடக்கி, இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என்ற மமதை எண்ணத்தை தென்னிலங்கை மக்கள் மனதில் ஆழமாக விதைக்கின்றன அரசின் போர்த் தீவிரப் போக்கும் அதையொட்டிய வெற்றித் திருவிழாக் கொண்டாட்டங்களும், அரசியல் பிரசாரங்களும்.

கிழக்கு மீட்பை "கிழக்கு உதயம்' என்ற பெயரில் அரசு கொண்டாடுகிறது. ஆனால் அது, அமைதி வழித் தீர்வுக்கு நிரந்தர அஸ்தமனமாக அமைவதும் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாக இருக்கின்றது.

""கிழக்கு மாகாணத்தை முற்றாகப் புலிகளின் கைகளில் இருந்து தமது வீரம் மிக்க துணிச்சலான நடவடிக்கைகளின் மூலம் மீட்டதன் வாயிலாக அரச படைகள் ஆழமான செய்தி ஒன்றை எடுத்துரைத்திருக்கின்றன. இந்த யுத்தம் வெல்லப்படமுடியாத ஒன்று என்ற வீணர்களின் பிரசாரத்தை நமது படையினர் பொய்யாக்கிக் காட்டியிருக் கின்றனர்.

""கிழக்கை மீட்டுள்ள அரசு, இனிப் புலிகளை அமைதிப் பேச்சுக்காக ஜெனிவாவுக்குக் கூட்டிச் செல்லும் செயற்பாட்டில் இறங்கக்கூடாது. கிழக்கை மீட்டமை போன்று வடக்கையும் முற்றாக மீட்டு, புலிகளை விரட்டியடித்து, பிரச்சினையைத் தீர்க்கவேண்டும்.'' என்று நாடாளுமன்றத்தில் வீராவேசமாக முழங்கி இருக்கின்றார் ஜே. வி. பியின் பிரசாரச் செயலாளர் விமல்வீரவன்ச.

கிழக்கு வெற்றியைத் தனது அரசியல் இலாபத்துக்காக முறையற்ற விதத்தில் பிரசாரப்படுத்தும் மகிந்த அரசு அதன்மூலம் அமைதிவழித் தீர்வுக்கு நிரந்தரமாக சாவுமணி அடித்து, யுத்தத்தையே இறுதிப் பாதையாகத் தான் தேர்ந்தெடுத்து நிற்கின்றது என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கின்றது.

இது ஒரு மிக மிக ஆபத்தான போக்காகும்.

மகிந்த அரசின் இந்த யுத்த வெறித் தீவிரத்தை சரியாக அடையாளம் கண்டு, தன்னை அதற்கேற்ப நெறிப்படுத்தத் தமிழினம் தயாராக வேண்டும். தவறுமானால் வெள்ளம் தலைக்கு மேல் போய் எதுவுமே மிஞ்சாது என்ற அனர்த்தத்தில் ஈழத் தமிழினம் அள்ளுண்டு செல்ல நேரும்.

விடுதலைப் புலிகளைக் கூண்டோடு சமாதி கட்டுவதன் மூலம் தமிழரின் தேசிய எழுச்சியையும், இனப்பிரச்சினையையும் ஆழக்குழிதோண்டிப் புதைத்துவிடலாம் எனத் தென்னிலங்கை கருதும் இச்சமயத்தில் புலிகளின் சிந்தனைப் போக்கு எப்படியிருக்கின்றது என்பதை நோக்குவது பொருத்தமானது.

இன்றைய நிலைமை இப்படித்தான் அமையும் என்பதை தமது கடந்த மாவீரர் தின உரையிலேயே கோடி காட்டிவிட்டார் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன்.

""சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் ஒரு நியாயமான தீர்வை ஒருபோதும் முன்வைக்கப்போவதில்லை என்பது இன்று வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. எத்தனை ஆண்டுகள் கடந்து சென்றாலும், எத்தனை யுகங்கள் ஓடி மறைந்தாலும், சிங்கள தேசத்தில் மனமாற்றம் நிகழப்போவதில்லை என்பதும், தமிழருக்கு நீதி கிடைக்கப் போவதில்லை என்பதும் இன்று தெட்டத் தெளிவாகியிருக்கின்றது. எனவே, நடக்க முடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, தொடர்ந்தும் அதே பழைய பாதையில் நடைபோட இனியும் நாம் தயாரில்லை. எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளவும் நாம் விரும்பவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழ் மக்களுக்குத் திறந்து வைத்திருக்கின்றது. .........''

இப்படிப் புலிகளின் தலைவர் கூறியவற்றை ஆழமாகச் சிந்திக்க வேண்டிய நிலையில் இன்று தமிழினம் இருக்கின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Sunday, July 15, 2007

புலிகளுக்கு எதுவித ஆயுத, ஆளணி இழப்பு ஏற்படுத்தாத குடும்பிமலை நடவடிக்கை வெற்றியானது அல்ல: இக்பால் அத்தாஸ்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதுவித ஆயுத மற்றும் ஆளணி இழப்புக்கள் ஏற்படுத்தப்படாத குடும்பிமலை நடவடிக்கை ஒரு வெற்றியான நடவடிக்கை இல்லை என்று கொழும்பு படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.


கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே ரைம்ஸ் வார ஏட்டில் அவர் எழுதிய கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

குடும்பிமலையை கைப்பற்றியதை பெருமெடுப்பில் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை (19.07.07) பலத்த பாதுகாப்புடன் சுதந்திர சதுக்கத்திற்கு வரும் அரச தவைர் மகிந்த நல்ல நேரமான காலை 8.30 மணிக்கு 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட சிறிலங்காவின் தேசியக் கொடியை ஏற்றுவார். அதன் பின்னர் சிங்கள பாடசாலைச் சிறுவர்கள் சிறிலங்காவின் தேசிய கீதத்தை பாடுவார்கள். அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணம் முழுவதையும் விடுவித்த செய்தியை இராணுவத்தளபதி மகிந்தாவிற்கு தெரிவிப்பார்.

இதன் பின்னர் சிங்கள மக்களுக்கு மகிந்த உரை நிகழ்த்துவார். இந்த நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் நேரடி ஒளி, ஒலிபரப்பு செய்யப்படும்.

சிறிலங்கா வான்படையின் உலங்குவானூர்திகளும் பறப்பில் ஈடுபடும். இறுதியாக 800 படையினரின் அணிவகுப்புடன் இந்த நிகழ்ச்சிகள் முடிவடையும்.

சுதந்திர தினத்தை போன்ற இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகள் எல்லா மாவட்டங்களிலும், பாடசாலைகளிலும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஒழுங்குகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், காவல்துறையினர், மதத்தலைவர்கள் ஆகியோரின் ஆலோசனைகளுடன் செய்யும் படி பிரதேச செயலாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த முக்கிய நிகழ்வு தொடர்பாக மாணவர்களுக்கு கூறும் படி அதிபர்களுக்கு சிறப்பு வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கொண்டாட்டங்கள் 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் அரச தலைவர் செயலகத்தில் நடைபெற்ற கொண்டாட்டம் போன்றது.

யாழ். குடாநாடு கைப்பற்றப்பட்டது என்ற செய்தியை பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை அன்றைய அரச தலைவர் சந்திரிக்கா குமாரதுங்காவிடம் கையளித்தார். இந்த நிகழ்வுகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன.

எனினும் இராணுவ அணிவகுப்புடன் நிகழ்ந்த இந்த நிகழ்வில் அன்று சிங்கக்கொடியை ரத்வத்தை யாழ்ப்பாணத்தில் ஏற்றினார். தற்போது மகிந்த சுதந்திர சதுக்கத்தில் சிங்கக்கொடியை ஏற்றப் போகின்றார். மேலும் இராணுவ அதிகாரிகளுக்கான பதவி உயர்வுகளும் தற்போதைய நிகழ்ச்சி நிரலில் உண்டு.

யாழ். குடாநாடு கைப்பற்றப்பட்ட கொண்டாட்டங்கள் நிகழ்ந்த 9 மாதங்களின் பின்னர், யாழ். குடாநாட்டிற்குள் விடுதலைப் புலிகள் ஊடுருவியதை 1996 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள் தாக்குதல் சம்பவம் உறுதிப்படுத்தியது.

யாழ். நகரத்தில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சரும், நாடாளுமன்றத் தலைவருமான நிமால் சிறீபால டீ சில்வா மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார்.

ஆனால் அந்த தாக்குதலில் யாழ். நகரக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஆனந்த கமான்கொட, பிரதி காவல்துறை மா அதிபர் சார்லி டயஸ் ஆகியோர் பலியாகினர்.

அத்தாக்குதல் நடைபெற்ற இரு வாரங்களின் பின்னர் விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு இராணுவ தளத்தின் மீது மரபுவழி தாக்குதலை மேற்கொண்டனர். அதில் 1,500-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான ஆயுதங்களும் இழக்கப்பட்டன.

குடும்பிமலையை கைப்பற்றியது முக்கியமானது, அதனை கைப்பற்றுவதற்காக இராணுவத்தினர் பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால் அதனை மீளக் கைப்பற்றியதை விட தக்கவைப்பதே முக்கியமானது. அதனை பாதுகாப்பதற்கு அதிகளவான இராணுவத்தினரும் காவல்துறையினரும் தேவை என்பதில் சந்தேகமில்லை.

அங்கு கெரில்லாக்களின் ஊடுருவலை தடுப்பதுடன் அவர்களின் வளர்ச்சியையும் தடுக்க வேண்டும். அப்படி இல்லாது விட்டால் முன்னரைப் போல சிறிய அளவிலான தாக்குதல்கள் தொடங்கி பின்னர் அது பெருமளவிலான தாக்குதல்களாக மாற்றம் பெறலாம்.

இது முன்னரும் இரு முறை நிகழ்ந்துள்ளன.

1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய இராணுவம், சிறிலங்காவை விட்டு வெளியேறியதும், மூன்று மாதங்களின் பின்னர், விடுதலைப் புலிகள் மாகாணத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் தமதாக்கி விட்டனர்.

பல இடங்களுக்கு இராணுவத்தினர் செல்வதற்கு விடுதலைப் புலிகளிடம் அனுமதியை பெறவேண்டியும் இருந்தது. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ள இராணுவ நிலைகள் தாக்குதலுக்கும் உள்ளாகியிருந்தன.

பின்னர் அப் பகுதியானது காலம் சென்ற மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நடைவடிக்கை மூலம் மீண்டும் கைப்பற்றப்பட்டது.

இந்த நடவடிக்கையில் அப்போது லெப். கேணல் தரத்தில் இருந்த தற்போதைய இராணுவத் தளபதியான சரத் பென்சேகாவும் பங்கு பற்றியிருந்தார். அவர் சிங்க றெஜிமென்டின் முதலாவது பற்றாலியனுக்கு தலைமை தாங்கியிருந்தார்.

பின்னர் சில வருடங்களில் விடுதலைப் புலிகள் மீண்டும் அங்கு அதிகரித்திருந்தனர். 1994 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்காக மீண்டும் ஒருமுறை இராணுவ நடைவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை அங்கு ஏற்பட்டது.

காலம் சென்ற மேஜர் ஜெனரல் லக்ஸ்மன் (லக்கி) அல்கம மற்றும் சுயாதீன படை பிரிக்கேட்டின் (சிறப்புப் படை) கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா ஆகியோர் அதற்கு தலைமை தாங்கினார்கள். பின்னர் அது குடும்பிமலை வரை தொடர்ந்தது. அப்போது அங்கு பெரும் சமர்கள் இடம்பெறவில்லை.

1993 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நடைவடிக்கை ஒரு வருடம் நீடித்ததுடன் கிழக்கின் பெரும் பகுதி கைப்பற்றப்பட்டது. இந்தியப் இராணுவத்தினர் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தை துருப்புக்களால் நிரப்பும் உத்திகளை கொண்டிருந்தனர். கிழக்கின் நிலைமை வடக்கைப் போல ஒரு நிச்சயமற்ற நிலையில் இருந்தது என அந்த நடவடிக்கையின் பின்னர் சண்டே ரைம்சிற்கு வழங்கிய நேர்காணலில் அல்கம தெரிவித்திருந்தார்.

இந்த மீளக் கைப்பற்றலுக்கு பின்னரும் கெரில்லாக்கள் கிழக்குக்கு திரும்பவும் வந்தது மட்டுமல்லாது அவர்கள் அங்கு தம்மை பலப்படுத்தியும் இருந்தனர். இது பல முகாம்களை மூடி இராணுவத்தினரை விலக்கியதனால் ஏற்பட்டது. ஏனெனில் சந்திரிகா அரசினால் மேற்கொள்ளப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு இராணுவத்தினர் தேவைப்பட்டனர்.

ஒமந்தையில் இருந்து கிளிநொச்சிக்குப் பாதையை திறந்து பின்னர், அதனை யாழ். குடாவுடன் இணைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம். ஆனால் மூன்று வருடத்தின் பின்னர் அந்த நடவடிக்கை படுதோல்வி அடைந்ததுடன் பெரும் ஆளணி மற்றும் ஆயுத தளபாட இழப்புக்களையும் சந்தித்ததுடன் அது கைவிடப்பட்டது.

கடந்த 13 வருடங்களில் விடுதலைப் புலிகள் திருகோணமலை துறைமுகத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தனர். அதன் கேந்திர முக்கியத்துவமான தெற்குப்புறத்தில் பல தொடர்ச்சியான முகாம்களை அமைத்திருந்தனர். திருகோணமலைத் துறைமுகத்தின் பாதுகாப்பை ஆராய்ந்த அமெரிக்க பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடத்தை சேர்ந்த அதிகாரிகள் திருகோணமலைத் துறைமுகத்தின் பாதுகாப்புக்கு விடுதலைப் புலிகள் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என பரிந்துரைத்திருந்தனர்.

யாழ். குடாநாட்டில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினருக்கு திருகோணமலைத் துறைமுகமே உயிர்நாடியாகும். அங்கிருந்தே உணவு மற்றும் இராணுவ விநியோகங்கள் வடபகுதிக்கு தொடர்ச்சியாக கடல்வழி மூலம் அனுப்பப்படுகின்றது.

விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலும் முகாம்களை கொண்டிருந்தனர். அவர்கள் பெரும் பகுதியை கொண்டிருக்காத போதிலும், இராணுவத்தினரின் நடவடிக்கையை மேற்கொள்ளும் போது வெளியேறிவிட்டு பின்னர் இராணுவத்தினர் வெளியேறியதும் மீண்டும் வந்துவிடுவார்கள்.

அதனால் தான் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டிலும் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையிலான எல்லைகள் கிழக்கில் தெளிவாக பிரிக்கப்பட்டிருக்கவில்லை.

கண்காணிப்புக் குழுவின் துணையுடன் பல முயற்சிகள் செய்யப்பட்ட போதும் வடக்கைப் போன்று கிழக்கில் பகுதிகளை பிரிப்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

அண்மையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்தில் குடும்பிமலை மீதான நடைவடிக்கையின் போது விடுதலைப் புலிகளை தப்ப முடியாதபடி பெட்டி வடிவில் சுற்றி வளைத்திருப்பதாக இராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். விடுதலைப் புலிகளுக்கு தப்பும் வழி இருக்க போவதில்லை, அவர்கள் இராணுவத்தினருக்கு இரையாகப் போகின்றனர். அவர்களுக்கு பேரழிவு நிச்சயம் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

ஆனால் விடுதலைப் புலிகள் பெருமளவான தமது இராணுவத் தளபாடங்களுடன் அங்கிருந்து இலகுவாக பின்வாங்கிவிட்டனர்.

குடும்பிமலையில் பெருந்தொகையான புலிகள் கொல்லப்பட்டதாக இராணுவத்தினர் மிகைப்படுத்தியிருந்தமைக்கு முரணாக பெருமளவான விடுதலைப் புலிகளை கொல்லாத போது அல்லது அவர்களின் இராணுவ இயந்திரத்தை அழிக்காத போது அந்த வெற்றியில் உண்மையில்லை என்று இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.
நன்றி>தமிழ்வின்

Saturday, July 14, 2007

இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி இலண்டனில் கண்டனக் கூட்டம்-BBC.






இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி அதனைக் கண்டித்து இங்கே லண்டனில் டிராவால்கர் சதுக்கம் பகுதியில் இலங்கை தமிழ் அமைப்புக்களால் ஒரு பெரும் எதிர்ப்பு நிகழ்வு இன்று அனுட்டிக்கப்பட்டது.

இங்குள்ள தமிழ் நகராட்சி மன்ற உறுப்பினர்களின் அமைப்புடன் பல தமிழ் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததற்கான நோக்கம் குறித்து அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான, ஹரோ கவுன்ஸிலின் உறுப்பினர் தயா இடைக்காடர் அவர்கள் விளக்குகையில், இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாகவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அனைவரும் அவற்றைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காகவே தாம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததாகக் கூறினார்.

இலங்கை மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியாக தானும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொண்டதாகக் கூறினார் அங்கு சமூகமளித்திருந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம்.

அதேவேளை இங்கு பிரிட்டனிலும் தமிழர்களின் சில உரிமைகள் போலி காரணங்களைக் காட்டி மீறப்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார் வெண்புறா அமைப்பைச் சேர்ந்த டாக்டர் மூர்த்தி.

இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழர்கள் மாத்திரமல்லாமல் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த சில பிரமுகர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004/05/040528_tamil_currentaffairs.shtml

புலிகளின் அறிவித்தலை அடுத்து சிறீலங்கா பொருளாதராத்தில் பாரிய தாக்கம்!!!

ஸ்ரீலங்காவின் பொருளாதார நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளமை ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று தீடிரென வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டொலரின் பெறுமதி 111 ரூபா 80 சதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்னும் சில தினங்களில் டொலரின் பெறுமதி 120 ரூபாவரை உயர்வடையும் என பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை பங்கு பரிவர்தனையும் நேற்றைய தினம் மிகவும் மந்தமடைந்துள்ளதாக பங்கு சந்தை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் அறிவித்தலுக்கே பொருளதார தளம்பல் நிலை உணரப்புடும் நிலையில் அறிவித்தபடி பொருளாதார நிலைகள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தினால் இலங்கையின் பொருளாதார நிலை மிகவும் மோசமடையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நன்றி>பதிவு

லண்டனில் ஜூலை 14, இன்று மாபெரும் பேரணி

ஈழத் தமிழர் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி லண்டனில் இன்று சனிக்கிழமை (14.07.07) நடைபெறவுள்ளது.


இக்கண்டனப் பேரணியினை ஒழுங்கு செய்துள்ள பிரித்தானிய நகராட்சி மன்றக்குழுவும் அங்கத்தவர்களும் ஏனைய தமிழ் அமைப்புக்களும் விடுத்துள்ள அறிக்கை:


ஈழத் தமிழர் மீதான இலங்கை அரசின் மனித உரிமை மீறல்ளைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி

காலம்: சனிக்கிழமை (14.07.07)
நேரம்: முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 2.30 மணிவரை

இடம்:

ரவல்கர் சதுக்கம் (Trafalgar Square) - இலண்டன்
(நிலக்கீழ்த் தொடரூந்து நிலையங்கள்: Charing Cross, Leicester Square and Piccadilly Circus)

காலத்தின் தேவை - இது எங்கள் தேசியக் கடமை

வாய் பேசாது இருந்தால்
வந்த இடத்திலும் சொந்த இடம் போலே மனித உரிமை மீறப்பட்டு
நாம் அடக்கப்படுவோம்.
உலகிலேயே அழிக்கப்படுவோம்.

எனவே பெருந் திரளாக வாருங்கள். உங்கள் குடும்பத்தவர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும்
அழைத்து வாருங்கள்.

எமது தொப்புள்க்கொடி உறவுகள் மீதான அழிவைத் தடுத்து நிறுத்துவோம்.

ஒரே அணியிலே நின்று ஒரே குரலிலே உலகிற்கு எடுத்துரைப்போம்!

எமது சுதந்திரத்திற்காக நாம் குரல் கொடுப்பது குற்றமல்ல.

ஒழுங்கமைப்பு: பிரித்தானிய நகராட்சிமன்ற உறுப்பினர்கள் குழுவும் அங்கத்தவர்களும் ஏனைய தமிழ் அமைப்புகளும்.

தொடர்புகளுக்கு:

07812028741/ 07967565477 13 Cambridge Rd, Harrow, HA2 7LA

மின்னஞ்சல்: Tamils4peace@aol.com

-புதினம்

Friday, July 13, 2007

ஜேர்மன் தூதுவரை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு சிறீலங்கா அரசு திட்டம்!

சிறீலங்காவிற்கான ஜேர்மன் தூதுவரை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாக, அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளேயை ஆதாரம் காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஹில்டன் தங்ககத்தில் அண்மையில் ஜேர்மன் தூதுவரைச் சந்தித்து, சிறீலங்காவிற்கான நிதியுதவிகளை நிறுத்துமாறு கோரியிருப்பதாகவும் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே கண்டனம் தெரிவித்திருக்கின்றார்.

அண்மைக் காலமாக சிறீலங்கா அரசாங்கத்திற்கான அழுத்தங்களை ஜேர்மனி அரசு பிரயோகிப்பதற்கு கொழும்பிற்கான ஜேர்மன் தூதுவரே காரணமாக இருந்திருப்பதாக, சிறீலங்கா அரசு நம்புகின்றது.

எனவே ஜேர்மன் தூதுவரை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு சிறீலங்கா அரசு முனைந்து வருவதை, தகவல் தொடர்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் வேண்டுகோளுக்கு அமைவாக ஜேர்மன் தூதுவர் பற்றிய விசாரணைகளை மேற்கொள்வதற்கு, சிறப்பு நாடாளுமன்றக் குழுவொன்று நியமிக்கப்பட இருப்பதாகவும் தெரிய வருகின்றது.

சிறீலங்கா அரசின் உள்ளக விடயங்களில் ஜேர்மன் தூதுவர் தலையிட்டு வருவதாக மறைமுகமாகக் குற்றம் சாட்டிய அமைச்சர் ஜெயராஜ், பிறேமதாஸ ஆட்சிக் காலத்தில் தேர்தல் பற்றி விமர்சித்த பிரித்தானியத் தூதுவர் நாடு கடத்தப்பட்டதையும் நினைவு கூர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி>பதிவு.

விடுதலைப்புலிகள் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துடன் பேச்சுவார்தைக்கு தயாரில்லை!!!

தமிழீழ விடுதலைப்புலிகள் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்தை நடத்துவதற்கு தயாரில்லை என்று நோர்வே தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தலைமையிலான விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்தையின் போது இந்த தகவல் நோர்வே தரப்பினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரட்ஸகள் குறிப்பிட்டுள்ளார்.

தனது கிளிநொச்சி விஜயம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பேச்சுவார்தைக் குழு தலைவரான அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வாவிற்று நோர்வே தூதுவர் நேற்று விளக்கமளித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்தை நடத்துவதில் அர்தம் இல்லை என்று விடுதலைப்புலிகள் கருதுவதான நோர்வே தூதுவர் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வாவிடம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மனித உரிமைகளை மீறி வருவதோடு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும் மதிக்காமல் செயல்பட்டு வருவதாகவும் இவ்வாறான நிலையில் பேச்சுவார்தைகளில் தமக்கு நம்பிக்கை இல்லை என்று தமிழ்செல்வன் கூறியதாக நோர்வே தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சமூகம் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு வழங்கி வரும் நிதி உதவிகள் மூலம் யுத்த நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ள தமிழ்செல்வன் அரசாங்கம் யுத்த நடவடிக்கைகளை கைவிட்டு பேச்சுவார்தையில் ஈடுபடுவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் பிரயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஹன்ஸ் பிரட்ஸ்களர் தெரிவித்துள்ளார்.

-Pathivu-

Thursday, July 12, 2007

சிறிலங்காவின் பொருளாதாரத்தை அழிக்கும் பாரிய தாக்குதல்களை நடத்துவோம்!!!

சிறிலங்காவின் பொருளாதாரத்தை அழிக்கும் வகையிலான பாரிய தாக்குதல்களை நடத்துவோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார்.


ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இன்று வியாழக்கிழமை அவர் அளித்த நேர்காணல் விபரம்:

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் அமைதிப் பேச்சுக்கள் நடத்துவது சாத்தியமற்றது.

சிறிலங்கா அரசாங்கத்தின் பொருளாதார நிலைகளே எமது தாக்குதல் நிலைகளாக இருக்கும். அவைகள்தான் சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகளுக்கும் இராணுவ ஆட்சிக்கும் உதவி செய்கின்றவையாக உள்ளன.

உதாரணமாக எண்ணெய்க் களஞ்சியங்கள் மீது நாம் தாக்குதல் நடத்துகிறோம் எனில் அது சிறிலங்காவின் பொருளாதாரத்தை அழிக்கக் கூடிய வகையிலான ஒரு இலக்காகும். இராணுவத்தின் வலிமையையும் அது பாதிக்கும். ஆகையால் அதுபோன்ற உத்திகளையே நாம் கையாள்வோம்.

குடும்பிமலை காட்டுப் பகுதியை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா அரசாங்கமானது ஒரு புதிய நாட்டை கைப்பற்றிவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

வலிந்த இராணுவ நடவடிக்கைகளை ஒருபக்கம் நடத்திக் கொண்டு மறுபக்கம் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறிவரும் தற்போதைய சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் அமைதிப் பேச்சுக்களை நாம் நடத்தமாட்டோம்.

மற்றொரு தரப்பினர் பேச்சுக்களில் பங்கேற்பதற்கான அனைத்து வழிகளையும் மூடிவிட்ட பின்னர் பேச்சுக்களில் பங்கேற்க சிறிலங்கா அரசாங்கம் அழைப்பது அர்த்தமற்றது.

இந்த அரச தலைவருடன் அமைதி என்பது சாத்தியமற்றது. கிழக்கில் வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறி கேளிக்கையும் விழாக்களும் நடத்தும் இத்தகைய அரச தலைவர் அமைதியை உருவாக்கும் சாத்தியம் இல்லை.

2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் இப்போது முறிந்துள்ளது. அதனை நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார் தமிழ்ச்செல்வன்.

நன்றி>புதினம்

ரொய்ட்டர்ஸ் சிறப்புக் கட்டுரை: "சக போராளியின் மரணம் குறித்து புலிகளின் மனநிலை"




தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு போராளியின் மரணம் குறித்து இதர போராளிகளின் மனோநிலை என்ன என்பது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது.


அதன் தமிழ் வடிவம்:

கழுத்தில் சயனைட் குப்பி சுற்றியிருக்க... கொல்லப்பட்ட போராளி ஒருவரின் உடலை உறவினர்களின் கண்ணீருக்கும் போராளிகளின் கீதத்துக்கும் இடையே புதைத்துவிட்டு நிற்கிறார் மருத்துவர் வாமன்.

மரணங்களே தம்மை பலப்படுத்துவதாக அவர் கூறுகிறார்.

1990 களில் நடந்த யுத்தம் ஒன்றில் தன் காலை அவர் இழந்தார்.

"தனியரசு பெறுவதற்காக சாவடைய தான் தயாராக இருப்பதாக" வாமன் தெரிவித்தார்.

போராளிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வீதியோரத்தில் பொருத்தப்பட்ட கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டதில் உயிரிழந்த மூன்று போராளிகளில் வாமனின் நண்பரும் சக போராளியுமான லெப்.கேணல் தமிழ்வாணனும் ஒருவர். கெரில்லாத் தாக்குதல் முறையை இராணுவத்தினர் கடைப்பிடிப்பதாக போராளிகள் குற்றம் சாட்டுகின்றனர். வெறிநாய்க்கடி சிகிச்சைக்காக சென்று கொண்டிருந்த மருத்துவக் குழுவினர் மூவர் உயிரிழந்தாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

"சிறிலங்கா இராணுவத்தினரின் இத்தகைய தாக்குதல்களால் எமது கடமைகளை நிறுத்திவிட முடியாது" என்கிறார் வாமன். போராளிகளின் "தமிழீழ சுகாதார சேவைகள்" குழுவின் இயக்குநராக வாமன் உள்ளார். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தங்கள் தாயகப் பகுதிக்கு புலிகள் சூட்டியிருக்கும் பெயர்தான் "தமிழீழம்".

2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் சீர்குலைந்த பின்னர் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இராணுவத்தினர்.

மேலதிகமாக இறப்புகளைத்தான் சிறிலங்கா எதிர்பார்க்க முடியும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

1983 ஆம் ஆண்டு யுத்தம் தொடங்கியது முதல் 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 4,500 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்தும் இரத்தம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

"நாம் எமது இளைய தலைமுறைக்காகப் போராடுகிறோம். கடந்த 5 தசாப்தகாலமாக நாம் ஒடுக்கப்பட்டுள்ளோம். ஆகையால் எம்முடைய கடைசி மூச்சு இருகும்வரை நாம் போராடுவோம்" என்கிறார் 39 வயதான வாமன். யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த வாமன், சிறுபான்மைத் தமிழர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளுடன் 18 வயதில் இணைந்ததாக தெரிவித்தார்.

பிடிபடுவதைத் தவிர்ப்பதற்காக கழுத்தில் சயனைட் குப்பிகளை அணிந்திருக்கின்றனர். அவற்றை கடித்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.

போராளிகளின் பலமிக்க பகுதியான கிளிநொச்சி அருகே உள்ள "மாவீரர் துயிலும்" இல்லத்தில் திறந்திருக்கும் சவப்பெட்டிகள் முன்பாக அழுகுரல்களுடன் உறவினர்கள் அமர்ந்திருக்கின்றனர்.

"நாங்கள் எமது தோழர்களின் புதைகுழி மீது மண்ணை இடுகிறோம். அவர்கள்; சிந்திய இரத்தம் தமிழீழத்தை உருவாக்கும்" என்ற பாடல் ஒலிபெருக்கிகளில் ஒலிபரப்பாகிறது.

அங்கே தமிழ்ப் போராளிகள், சீனத் தயாரிப்பு ரைபிள்களை நேர்நிலையில் நின்றபடி பிடித்திருக்கின்றனர். மற்றவர்கள் அமைதியாக தலையை குனிந்து நிற்கின்றனர். நேர்த்தியான வரிசையில் கடல்போல் நினைவுக் கற்கள் நடப்பட்டு ஆயிரக்கணக்கில் "மாவீரர்கள்" அங்கு புதைக்கப்பட்டுள்ளனர்.

போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கின் பெரும்பகுதியை கைப்பற்றியதாக அறிவித்திருக்கும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம், வடபகுதியையும் கைப்பற்றப் போவதாக அறிவித்திருக்கிறது.

ஆனால் வடபகுதியில் மேலதிக பலத்துடன் புலிகள் உள்ளனர். யார் வெற்றி பெறுவது என்பது தெளிவானதாக இல்லை.

மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக இருதரப்பையும் அனைத்துலக சமூகம் குற்றம்சாட்டி வருவது அதிகரித்துள்ளது.

தமிழர்கள் இடம்பெயர்ந்ததாலும் கொல்லப்பட்டாலும் புலிகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரிவில் 1997 ஆம் ஆண்டு இணைந்தவர் செல்வி நவரூபன்.

"வீட்டில் உட்கார்ந்து கொண்டு எதுவுமே செய்யாமல் இறந்து போவதைக் காட்டிலும் எமது தாயகத்துக்காக போராடி மரணிப்பது சிறந்தது எனக் கருதினேன்." என்றார் செல்வி. பல பெண் போராளிகளைப் போல் அவரது தலைமுடிப்பின்னல் இருந்தது.

"எமது சக போராளிகள் ஒருவர் உயிரிழக்கின்றபோது எமக்கு போரிடும் வலுவை அவர்கள் அளிக்கின்றனர்" என்றார் செல்வி என ரொய்ட்டர்ஸ் சிறப்புக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Wednesday, July 11, 2007

புலிகள் வடக்கில் அல்லது தெற்கில் பாரிய படை நடவடிக்கையை மேற்கொள்ளலாம் - கொழும்பு ஊடகம்!!!

ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது முழுமையான படை பலத்தையும் கிழக்கில் மையப்படுத்தியுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் வடக்கில் அல்லது தெற்கில் பாரிய படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக படைத்துறை ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவும் அவருடைய படைத்துறை ஆலோசகர்களும் விடுதலைப் புலிகளிள் தாக்குதல் உத்திகள் குறித்து பூரண அனுபவமற்றவர்களாக இருப்பதாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இராணுவ ரீதியில் முக்கியத்துவமற்ற நிலப்பரப்பை கைப்பற்றுவதற்கு ஸ்ரீலங்கா படையினர் மேற்கொண்டு வரும் பாரிய படை நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொப்பிகலையில் விடுதலைப் புலிகளின் மரபு வழி தாக்குதல் அணிகள் எவையும் நிலை கொண்டிருக்கவில்லை என்றும் அவர்களின் கரந்தடிப்படையணியே தாக்குதல் நடத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரந்தடிப்படையின் சில உறுப்பினர்களை தொப்பிக்கலையில் இருந்து வெளியேற்றுவதற்கு இராணுவம் பாரிய படைநடவடிக்கைகளை மேற்கொள்வது அவர்களின் அனுபவமின்மையின் வெளிப்பாடே என்று இராணுவ ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் குடாநாட்டை 1995ம் ஆண்டு முழுமையாக கைப்பற்றியதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்து பெருமெடுப்பிலான வெற்றி விழாவினை நடத்தியிருந்தது எனினும் இன்று வரை யாழ் குடாநாட்டில் விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை படையினரால் தடுக்க முடியவில்லை என்றும் அந்த செய்திக்குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்கள் செறிவு மிக்க கரந்தடி தாக்குதலுக்கோ தற்காலிக தங்குமிட அமைத்தலுக்கோ ஏதுவற்ற யாழ் குடாநட்டிலேயே விடுதலைப் புலிகளால் படையினருக்கு எதிரான தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்த முடியுமாயின் கிழக்கு மாகாணத்தில் அதனைவிட மோசமான தாக்குதல்களை விடுதலைப்புலிகளால் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காடுகள் நிறைந்த முழுமையாக அரச படைகளால் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட முடியாத ஈரூடக தொடுப்புகள் மிக்க கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை முற்றாக தடுப்பதற்கு அரசாங்க படைகளால் முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது படையினர் சந்தித்து வரும் இழப்புகளை விடவும் கூடுதலான இழப்புகளை படையினர் எதிர்காலத்தில் சநதிக்க நேரிடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் முழுமையான கட்டுப்பாட்டை அரசாங்கம் கொண்டிருப்பது விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் என்ற எண்ணம் தவறானது என்றும் விடுதலைப்புலிகள் 95ம் ஆண்டு அவர்களின் கோட்டையாக கருதப்பட்ட யாழ் குடாநாட்டை விட்டு வெளியேறிய பின்னரே ஸ்ரீலங்கா படைகளின் வரலாற்றில் பாரிய இழப்புகளை சந்திக்கும் வகையிலான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலப்பரப்பின் ஆழுகைகளை கைப்பற்றுவதன் மூலமாகவோ குறிப்பிட்ட பிரதேசத்தில் அகலக் கால்பரப்பி நிற்பதன் மூலமாகவோ யுத்தத்தின் போக்கை மாற்றி விட முடியாது என்ற வரலாற்று உண்மையை ஸ்ரீலங்கா அரசாங்கம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

தற்போது ஈராக்கிலும் முன்பு வியட்நாமிலும் உலக வல்லரசு மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான விளைவுகளை ஸ்ரீலங்கா நினைவு கூர வேண்டும் என்றும் உலக வல்லரசாகவும் பொருளாதார ரீதியல் பலம் பொருந்தியதாகவும் உள்ள அமெரிக்காவால் தாங்க முடிந்த இழப்புகளை கடனில் தத்தளித்து வெளிநாட்டு உதவிகளை நம்பி நாட்களை நகர்த்தும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் தாங்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்த நடவடிக்கைகள் ஸ்ரீலங்காவிற்கு பாரிய பொருளாதார சுமையை அதிகிக்கச் செய்யும் அதே வேளை படையினர் சந்திக்கும் இழப்புகள் அரசியல் ரீதியில் பல்வேறு நெருக்கடிகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளால் மிகக் குறைந்த இழப்புகளோடு ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்ய முடியுமும் என்பதால் யுதத்தத்தின் மூலம் தான் பிரச்சினைக்கு தீர்வு என்ற நிலைப்பாட்டை மகிந்த ராஜபக்ச மாற்றிக் கொள்ளாவிட்டால் மீட்கமுடியாத பாதாளத்திற்கும் இலங்கை விழுந்து விடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்து வரும் நாடக்களில் விடுதலைப்புலிகளின் பதில் தாக்குதலின் விளைவுகளை முழுமையாக அரசாங்கம் அனுபவிக்கும் என்றும் ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்தாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி>பதிவு

Tuesday, July 10, 2007

ஆனந்தசங்கரியை ஆள்பவர்களுக்கு!!!


தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்று, தன்னைத்தானே அழைத்துக் கொண்டு வருகின்ற திரு. ஆனந்தசங்கரி அவர்கள், அண்மைக் காலங்களில் அறிக்கைகளையும், ~பகிரங்கக் கடிதங்களையும் எழுதி வருகின்றார். ~தமிழீழம் என்பது பகல் கனவு என்றும், ~தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்றும், ~சமஷ்டி அடிப்படையிலான தீர்வுதான் இப்போதைய பிரச்சனைக்கு உரிய ஒரே தீர்வு என்றும், ~தமிழீழத் தேசியத் தலைவருக்குத் தான் எழுதிய கடிதங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை - என்றும் திரு ஆனந்தசங்கரி கூறி வருகின்றார்.

~யாரோ சிலரின் தூண்டுதல் காரணமாக, ~அவர்களுடைய தேவைகளுக்காகச் செயல்படுகின்ற, - அரசியல் வாழ்க்கையில், ஒழுக்கமோ, குறிக்கோளோ இல்லாத - ஓர் அரசியல்வாதியான ஆனந்தசங்கரிக்குப் பதில் சொல்ல வேண்டிய தேவை எவருக்கும் இல்லை. அரசியல் ரீதியாக, மக்களால் தெரிவு செய்யப்படாத அரசியல்வாதிகளுக்கு, மக்களால் ஒதுக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளுக்கு, யாரோ சிலரின் பணத்திலே, யாரோ சிலரின் பலத்திலே இருப்பவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய தேவையும் இல்லை. அறியாமல் பேசுபவர்களுக்குப் பதில் சொல்லலாம். தெரிந்து கொண்டு, விடயங்களை அறிந்து கொண்டு, ஆனால் வேண்டுமென்றே அரசியலுக்காகக் குதர்க்கமாகப் பேசுபவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைத்தான்.!

ஆனாலும் திரு ஆனந்தசங்கரியை ஆள்பவர்களுக்குப் பதில் சொல்ல விழைகின்றோம்.

ஏன்? எதற்காக??

இன்றைய இளைய தலைமுறைக்கு ஆனந்தசங்கரியைப் பற்றியோ, அவருடைய அரசியல் திருகு தாளங்கள் குறித்தோ தெரியாது. இவரைப் போன்றவர்கள் எவ்வாறு கட்சி விட்டு கட்சி தாவினார்கள், பதவிக்காக எங்கெங்கெல்லாம் ஓடினார்கள், தங்களுடைய கொள்கை இலட்சியங்களிடமிருந்து எவ்வாறு குத்துக்கரணம் அடித்தார்கள் என்று இளைய தலைமுறைக்குத் தெரியாமல் இருக்க கூடும்.! பழைய தலைமுறை, ஆனந்தசங்கரி போன்றவர்களைக் கண்டு கொள்வதில்லை. அவர்களுக்கு ஆனந்தசங்கரியின் சுயரூபம் நன்கு தெரியும். ஆனால் இளைய தலைமுறைக்குச் சில விடயங்களைச் சொல்லவேண்டிய தேவை உள்ளது. அதனால் முக்கியமான சில விடயங்களைச் சொல்ல விழைகின்றோம். இதன்மூலம் திரு ஆனந்தசங்கரியை ஆள்பவர்களின் நோக்கங்களை நாம் அறியக்கூடியதாக இருக்கும்.!

சுதந்திரன் பத்திரிகையின் 09.12.1977 ஆம் ஆண்டு இதழில் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 28.11.1977ம் ஆண்டு, சிறிலங்காத் தேசிய அரசுப் பேரவையில், தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசிய உரையை, சுதந்திரன் பத்திரிகை வெளியிட்டிருந்தது. அந்தத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் கீழ்வருமாறு பேசியிருந்தார்:-

~தமிழீழக் கொள்கையை மறுபரிசீலனை செய்வதற்கு இன்று காலம் கடந்து விட்டது. தமிழீழம் ஏற்கனவே அமைந்து விட்டது. தமிழீழத்தை (முன்பு) போர்த்துக்கீயரும், ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் படைப்பட்டாளம் கொண்டு அடக்கி ஆண்டது போல், (இன்று) நீங்களும் இராணுவ முகாம்களை அமைத்து அடக்கி, ஆள்கின்றீர்கள். உங்களுடைய இராணுவ முகாம்கள்- அவை எத்தனை முகாம்களாக இருந்தாலும், அவற்றை எதிர்த்துச் சுதந்திரத் தமிழீழம் அமையப் போகின்றது!

- இவ்வாறு அந்தத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் சிறிலங்கா பாராளுமன்றத்தில் 1977 ஆம் ஆண்டு முழங்கியிருந்தார்.

இவ்வாறு சுதந்திரத் தமிழீழ முழக்கமிட்ட தமிழ்;ப் பாராளுமன்ற உறுப்பினர் யார் என்று வாசகர்கள் கேட்கக்கூடும்! அவர் வேறு யாருமில்லை. இன்று ~தமிழீழம் ஒரு பகல் கனவு - என்று கூறி வருகின்ற திரு வீ.ஆனந்தசங்கரி அவர்கள்தான், அன்று பாராளுமன்றத்தில் ~தமிழீழக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய முடியாது என்று முழங்கியவராவார்.

இதைத் தவிர திரு ஆனந்தசங்கரி மேலும் பல விடயங்கள் குறித்து, அன்று- 28-11-1977 அன்று- பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றார். எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தைச் சிங்களப் பொலிஸ் தாக்கியது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், ஆனால் உதவிப் பொலிஸ் அதிபராக இருந்தவரை, பொலிஸ் அதிபராக பதவி உயர்வு கொடுத்து உயர்த்தியிருப்பதாகவும் ஆனந்தசங்கரி தெரிவிக்கின்றார். அது மட்டுமல்லாது, கிளிநொச்சி-வவுனிக்குளத்தில் ஐந்து தமிழ் இளைஞர்கள், சிறிலங்காப் படையினரால் நாயைப்போல் சுட்டுக்கொல்லப்பட்ட விடயம் குறித்தும்; ஆனந்தசங்கரி அன்று முறையிட்டிருக்கின்றார். அன்று சிறிலங்கா அரசோடு சேர்ந்தியங்கிய ஒரு தமிழ் அமைச்சர் குறித்தும் எள்ளலாக ஆனந்த சங்கரி குறிப்பிட்;டுள்ளார். ~ஒரு தமிழரை அரசாங்கம் குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளது. ஒரு 500 வாக்குகளால் தப்பித் தவறி வென்ற ஒரு தமிழரை, செல்வாக்காக அரசு வைத்திருக்கின்றது என்று ஆனந்த சங்கரி கருத்து வெளியிட்டிருந்தார்.

ஆனந்தசங்கரி, அன்று இன்னுமொரு கருத்தையும் வெளியிட்டிருந்தார். ~இன்று (அதாவது 1977ல்) காலம் கடந்து விட்டது. பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு (அதாவது 1957 காலப்பகுதியிலேயே) இந்தப் பிரச்சனையைத் தீர்த்திருக்க வேண்டும். ஆனால் இன்று காலம் கடந்து விட்டது- என்று ஆனந்தசங்கரி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ~தமிழீழக் கொள்கையை மீள் பரிசீலனை செய்ய முடியாது என்றும், ~சிறிலங்காப் பொலிஸின் அராஜகங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றும், ~இராணுவம், தமிழர்களை நாய்களை சுடுவது போல் சுட்டுத்தள்ளுகின்றது என்றும், ~சிங்கள அரசோடு சேர்ந்து இயங்கும் தமிழர்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டவர்கள; என்றும், ~சிங்கள இராணுவ முகாம்களை எதிர்த்துச் சுதந்திரத் தமிழீழம் அமையப் போகின்றது என்றும் பாராளுமன்றத்தில் கூறிய ஆனந்தசங்கரி அவர்கள் இன்று தன்னுடைய இலட்சியத்தைக் காவு கொடுத்துவிட்டு, ~தமிழீழம் ஒரு கனவு என்றும், ~தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்றும், ~சமஷ்டி முறையில்தான் தீர்வு என்றும், ~சிங்கள அரசுகளுடன் ஒத்துப்போவதுதான் நல்லது என்றும், ~சிங்கள அரசு நல்ல தீர்வு தரும் என்றும் சொல்லி வருகின்றார்.

முன்னர் ஆனந்தசங்கரி சமசமாஜக் கட்சியிலிருந்து பின்னர் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு கட்சி மாறியதைப் போல் இன்றும் ஆனந்த சங்கரி ~கட்சி மாறுகின்றார். ஏனென்றால், ஆனந்தசங்கரியை ஆள்பவர்கள், அவரையும் குத்தகைக்கு எடுத்து விட்டார்கள்.

இவற்றினூடாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டிய முக்கியமான விடயம் ஒன்றுள்ளது!

ஆனந்தசங்கரியின் இந்தப் பாராளுமன்றப் பேச்சு, பேசப்பட்ட காலம் 1977 ஆம் ஆண்டு! தமிழீழ விடுதலைப் புலிகளுடைய விடுதலைப் போராட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகியது, 1972 ஆம் காலப்பகுதியாகும். வேறு தமிழ் அமைப்புக்களும் ஆயுதமுனையில் போராடத் தொடங்கி விட்டன. ஆனந்தசங்கரியின் அன்றைய பேச்சு, தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தால், இராணுவ முகாம்கள் அழிக்கப்படும், பின்னர் தமிழீழம் கிடைக்கும் என்ற நம்பிக்கையால் எழுந்த பேச்சாகும். இதனூடாகத் தன்னைப் போன்றவர்கள் சொகுசாகப் பதவிக்கு வரலாம் என்று ஆனந்தசங்கரி எண்ணினார். விடுதலைப் போராட்ட இயக்கங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என்றும் ஆனந்தசங்கரி நம்பினார். இதன் அடிப்படையில்தான் அமிர்தலிங்கமும், தன்னுடைய இரண்டாவது மகன் மூலம் ஒரு படையமைப்பை உருவாக்கினார். (இந்தப் படையமைப்புப் பின்னர் கலைக்கப்பட்டு இப்போது அவரது மகன் வெளிநாட்டில் உள்ளார்.) தன்னுடைய கட்டுப்பாட்டை மீறி, மற்றைய அமைப்புக்கள் செயல்படுகின்ற காரணத்தினால், தன்னுடைய சொந்தக் கட்டுப்பாட்டுக்குள் ஓர் அமைப்பைக் கொண்டுவர அமிர்தலிங்கம் ஆசைப்பட்டார். இதே ஆசையைத்தான் ஆனந்தசங்கரியும் கொண்டிருந்தார்.

இங்கே அடிப்படையான விடயம் என்னவென்றால், ஆயுதப் போராட்டம் ஊடாகத்தான் தமிழீழத்தை அடையலாம் என்பதே ஆனந்தசங்கரி, அமிர்தலிங்கம் போன்றோரின் உறுதியான கருத்தாக அமைந்திருந்தது என்பதேயாகும்.! ஆனால் ஆயுதப் போராட்டம், தங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்றுதான் ஆனந்தசங்கரி போன்றோர் விரும்பியிருந்தார்கள். ஆனந்தசங்கரி ஆயுதப் போராட்டத்தை ஆள முடியாத காரணத்தால், எதிரியை எசமானனாக வரித்து, அவர்கள் தன்னையே ஆளும்படி தடம் புரண்டு விட்டார்.!

தான் எழுதிய கடிதங்களுக்குத் தமிழீழத் தேசியத்தலைவர் பதில் தரவில்லை என்று இப்போது புலம்பிக் கொண்டிருக்கும் ஆனந்தசங்கரி அவர்கள், ஒரு விடயத்தை மட்டும் குறிப்பிட (வேண்டுமென்றே) மறந்து விட்டார். சமாதானப் பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில், ஆனந்தசங்கரி அவர்களை வன்னிக்கு வந்து கருத்தாடல்களில் கலந்து கொள்ளுமாறு விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் பலமுறை கேட்டுக்கொண்ட போதும், ஆனந்தசங்கரி அதற்கு இணங்கவில்லை. தன்னைத் தற்போது ஆளுகின்ற சிங்களப் பேரினவாதத்திற்குத் தன்னை அர்ப்பணித்துவிட்டுத் தன்னுடைய துரோகத்தை மூடி மறைக்கும் சதி முயற்சியில் இன்று ஈடுபட்டு வருகின்றார். தமிழினம் யாரையெல்லாம் வெறுத்து ஒதுக்குகின்றதோ, அவர்களையெல்லாம் தலைவர்களாக அல்லது முக்கியமானவர்களாக மாற்றுவது, சிங்கள அரசின் போக்காகும். ஆனந்தசங்கரிக்கும் கருணாவிற்கும் என்ன வித்தியாசம்? இவர்கள் யாவரும் ~செயற்கைத் தவைர்களே!. பதவி கிடைப்பது என்றால், தம்மை முழுமையாக விற்பதற்கும் இவர்கள் தயார்!

இன்று - தன்னை ஆள்பவர்களான, சிங்கள பௌத்தப் பேரினவாதத்தின் கட்டளைப்படி, - தமிழீழக் கோரிக்கையைக் கைவிடும்படி, தமிழீழத் தேசியத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளதாக ஆனந்தசங்கரி தெரிவிக்கின்றார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்று தன்னை அழைத்துக் கொண்டு வருகின்ற ஆனந்த சங்கரியை இன்று ஆள்பவர்களிடம், ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றோம்.

உங்களுடைய கட்டளைப்படி, தமிழீழக் கோரிக்கையைக் கைவிடும்படி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்று தன்னைச் சொல்லிக் கொள்கின்ற ஆனந்தசங்கரி கோரிக்கை வைத்து வருகின்றார். ஆனால் 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதியன்று, தமிழர் விடுதலைக் கூட்டணி, வட்டுக்கோட்டையில், வரலாற்றுப் புகழ் வாய்ந்த ~வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று அழைக்கப்படுகின்ற தமிழீழப் பிரகடனத்தை அறிவித்தது. அதில் உள்ள இரண்டு பந்திகள் வருமாறு:-

~இத்தீவில் உள்ள தமிழீழ நாட்டினத்தின் நிலையான வாழ்வைப் பாதுகாப்பதற்கு, ஒவ்வொரு நாட்டினத்திற்கும் உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், ஒரு சுதந்திர, இறைமையுள்ள, மதச் சார்பற்ற சோசலிசத் தமிழீழ அரசை மீள்வித்துப் புனரமைப்புச் செய்வது தவிர்க்க முடியாததாகி விட்டது என்று இந்த மகாநாடு தீர்மானிக்கின்றது. ???.

~சுதந்திரத்திற்கான புனிதப் போரில் தம்மை முற்று முழுதாக அர்ப்பணிக்க முன்வருமாறும், இறைமையுள்ள சோசலிசத் தமிழீழ அரசு என்ற இலக்கை அடையும்வரை, தயங்காது உழைக்குமாறும், தமிழ்த் தேசிய இனத்திற்குப் பொதுவாகவும், தமிழ் இளைஞர்களுக்குச் சிறப்பாகவும், இந்த மகாநாடு அறைகூவல் விடுகின்றது.

(~புதிய தமிழ்ப் புலிகள் என்று இயங்கி வந்த விடுதலைப் புலிகள், இந்த வட்டுக்கோட்டை மகாநாட்டிற்கு முன்னதாகவே அதாவது 5.5.1976 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் என்று மீளப் பெயர் சூட்டிக் கொண்டமை ஒரு வரலாற்றுத் தகவலாகும்.)

பிறிதாகப் பாராளுமன்றத்திலும் பிரகடனப்படுத்தப்பட்ட தமிழீழக் கோரிக்கையை முன் மொழிந்தவர்களில், கிளிநொச்சித் தொகுதியைச் சேர்ந்த வீரசிங்கம் ஆனந்தசங்கரியும் ஒருவராவார்!

ஆனந்தசங்கரி அவர்களின் எசமானர்களுக்கு நாம் கேட்கும் கேள்வி இதுதான்:-

~தமிழீழக் கோரிக்கையைக் கைவிடும்படி, உங்களது சிந்தனையைச் சொல்கின்ற ஆனந்தசங்கரியின் கட்சியான ~தமிழர் விடுதலைக் கூட்டணி தன்னுடைய வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை மாற்றி விட்டதா? பாராளுமன்றத்தில் தமிழீழப் பிரகடனத்தை முன்மொழிந்த ஆனந்த சங்கரி, அதனை உத்தியோக பூர்வமாக மீளப்பெற்று கொண்டு விட்டாரா? இல்லையென்றால் - அவற்றை அவர் செய்யுமாறு, அவருக்கு ஆணையிடுங்கள், அவருடைய எசமானர்களே!

அரசியல் தலைவர்கள் மாறி மாறி வரக்கூடும். ஆனால் தமிழ் மக்களால் கொடுக்கப்பட்ட, தமிழ் மக்களால் அறிவிக்கப்பட்ட, தமிழ் மக்களின் வேட்கையைப் பிரதிபலித்த அந்தக் கோட்பாடு இன்னும் மாறவில்லை. ஆனந்தசங்கரி இன்று தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல! தமிழ் மக்களுக்காகப் பெரிய போராட்டங்களையும் நடாத்திய வரும் அல்ல! சிங்களப் பௌத்தப் பேரினவாத எசமானர்களது வேலைக்காரனின் கூக்குரல், தமிழ் மக்களிடம் பலிக்காது.

இன்று இந்திய சமஷ்டி முறையின் அடிப்படையில் ஒரு தீர்வை அடையலாம் என்று ஆனந்த சங்கரி தன்னை ஆள்பவர்களுக்காகக் குரல் கொடுத்து வருகின்றார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையே தூக்கி எறிந்து விட்ட இவரது எசமானர்கள், தமிழர்களுக்கு ஒன்றும் தரப்போவதில்லை என்பது வெளிப்படையான விடயம்தான்!. இந்தியாவின் சமஷ்டி ஆட்சி முறையானது இலங்கைக்கு உகந்தது அல்ல என்பதையும் நாம் முன்னரும் தர்க்கித்து வந்துள்ளோம். எனினும் ஆனந்த சங்கரி அவர்களின் எசமானர்களது பார்வைக்காக, இந்திய சமஷ்டி ஆட்சிமுறை குறித்துச் சில கருத்துக்களைத் தர விழைகின்றோம்.

~இந்தியாவின் சமஷ்டி ஆட்சி முறை என்பது, உண்மையிலேயே ஒரு முழுமையான சமஷ்டி ஆட்சி முறையா? என்ற கேள்விக்கு ~இல்லை என்பதுதான் சரியான பதிலாகும்! ஏனென்றால் இந்திய சமஷ்டி ஆட்சி முறை அடிப்படையில் ஓர் ஒற்றையாட்சி முறையைக் கொண்டதாகும்.

உப கண்டம் என்று சொல்லக்கூடிய இந்தியாவின் விரிந்து பரந்துள்ள பாரிய நிலப்பரப்பானது, பல்வேறு மொழி பேசுகின்ற, பல்வேறு தேசிய இனங்களை, மாநில ரீதியாகக் கொண்டிருந்தாலும், அங்கே மத்தியிலேதான் அதிகாரம் அமைந்துள்ளது. மத்திய அரசு மாநில அரசைக் கலைக்க முடியும். சர்க்காரியா கமிஷன் அதிகாரப் பரவலாக்கலைச் சிபாரிசு செய்திருந்தாலும், பாதுகாப்பு, வெளிநாட்டுக் கொள்கை போன்ற பல விடயங்களில் மத்திய அரசுதான் இறுதி முடிவுகளை எடுக்கும். மொழி வழி மாநிலங்களாக, ஆட்சியின் சில அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவின் சமஷ்டி ஆட்சி முறை என்பது அடிப்படையில் ஓர் ஒற்றை ஆட்சி முறைதான்! இந்தி மொழி மசோதாவை ஓர் உதாரணத்திற்கு நாம் சுட்டிக்காட்டலாம்.!

ஆயினும் இந்திய சமஷ்டி ஆட்சி முறை, இன்றைய காலகட்டத்தில் ஓர் ஒற்றையாட்சி முறையைக் கடந்து செல்வதையும் நாம் காண்கின்றோம். கடந்த பல ஆண்டுகளாக மாநில அரசுகள் வலுப்பெற்று வருகின்றன. முன்னரைப்போல் ஒரு கட்சியின் தனி ஆட்சியாக, இன்று மத்திய அரசு இல்லை. தாயகக் கோட்பாட்டில், வெளிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள மாநிலங்களில், திட்டமிட்ட குடியேற்றங்களை மத்திய அரசு செய்ய முடியாது. இந்தியாவின் ஊடகத்துறையும், நீதித்துறையும் பல குறைகளைக் கடந்து மெதுவாக வலுப்பெற்று வருவதையும் நாம் இப்போது காண்கின்றோம். சுருக்கமாச் சொன்னால், அடிப்படையில் ஓர் ஒற்றையாட்சி முறையைக் கொண்டுள்ள இந்திய சம~;டி ஆட்சி முறை தனது ஒற்றையாட்சித் தன்மையை மெதுவாக இழந்து வருகின்றது என்று கூறலாம்.

இந்தியாவின் சமஷ்டி ஆட்சி முறை, ஒரு முழுமையான சமஷ்டி ஆட்சி முறை அல்ல என்ற கருத்தைத் தர்க்கித்த நாம், அதே வேளை தற்போது இந்தியா தனது ஒற்றையாட்சிக்குரிய தன்மையை மெதுவாக இழந்து வருவதையும் சுட்டிக்காட்டியிருந்தோம். இரண்டு வேறு தளங்களில் இருந்து, இக்கருத்துக்களை நாம் தர்க்கித்தமைக்குக் காரணம் உண்டு!

இந்தியாவையும், இலங்கையையும் சமஷ்டி ரீதியில் ஒப்பிட முடியாது என்பதையும், அப்படி ஒப்பிட முனைவது தவறானது என்பதையும் சுட்டிக் காட்டுவதற்காகத்தான் நாம் மேற்கூறிய விடயங்களைத் தர்க்கித்திருந்தோம்.

இந்தியாவின் சம~;டி ஆட்சி முறை ஏன் இலங்கைக்குப் பொருந்தி வராது என்பது குறித்து மேலும் சில முக்கிய காரணிகளை இங்கு சுட்டிக் காட்டுவது அவசியமானதாகும்.

- இன்று இந்தியாவில் அமையக் கூடிய மத்திய அரசு, ஒரு கட்சி ஆட்சியாக இல்லை. பல மொழிகளைப் பேசுகின்ற பல இனங்களைச் சேர்ந்த கட்சிகளின் ஆதரவு மத்திய அரசுக்கு தேவையாக உள்ளது. ஆனால் இலங்கையில் பெரும்பான்மை இனக்கட்சியின் ஆட்சியாகவோ அல்லது பெரும்பான்மை இனத்தவர்கள் சேர்ந்த கட்சிகளின் ஆட்சியாகவோதான், அரசு அமைவதற்குரிய நிலைமை உள்ளது!

- இந்தியாவில் சிறுபான்மை இனத்தவருக்கு எதிராகச் சட்டத்தை மாற்றுவதற்கு முடியாது. ஆனால் இலங்கையில் சிங்களப் பெரும்பான்மை, தமிழ் இனத்திற்கு எதிராகச் சட்டத்தை மாற்றும். மாற்றியும் உள்;ளது!. இந்திய சமஷ்டி ஆட்சி முறை, அதாவது பல்லின பல மொழிகளைப் பேசுகின்ற பல தேசிய இனங்களை உள்ளடக்கிய சம~;டி ஆட்சி முறையானது, ஒரு தனிப் பெரும்பான்மை இனம் செய்யக்கூடிய அநீதிகளைத் தடுத்து நிறுத்தும். அந்த நிலைமை இலங்கைச் சமஷ்டி ஆட்சி முறையில் ஏற்பட வழியில்லை.

- இந்தியா சுதந்திரம் அடைந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் பல்வேறு பிரச்சனைகளையும், இடர்களையும் சந்தித்தபோதும், ஒப்பீட்டளவில், தன்னகத்தே உள்ள சிறுபான்மைத் தேசிய இனங்களை அழித்தொழிக்க முயன்றதில்லை. இந்தியா தன் முழுத்தேசத்தின் சகல மக்களுக்கும் உரிய வளர்ச்சியை நோக்கியே நகர்ந்து வந்துள்ளது. மாறாக, சிறிலங்கா அரசோ இலங்கைத் தீவில் வாழுகின்ற ஒரு தேசிய இனமான தமிழினத்தை அழிக்கின்ற இன அழிப்புச் செயல்களிலும், அந்த இன மக்களின் பொருளாதார வளர்ச்சிகளை அழிப்பதற்குரிய செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளது.

- தனிப் பெரும்பான்மை இனத்தின் ஆட்சி இல்லாத இந்தியாவில், அதனது நீதித்துறை ஒப்பீட்டளவில், மதிப்பிற்குரிய வகையில் செயல்பட்டு வருகின்றது. ஆனால் சிறிலங்காவில், அதன் அரசு மட்டுமல்ல, அதன் நீதித்துறையும் நீதிக்குப் புறம்பான செயல்களை மட்டுமே புரிந்து வருகின்றன. ஓர் உதாரணத்திற்கு, சுனாமி நிவாரணத்திற்காக உருவாக்கப்பட்ட பொதுக்கட்டமைப்புக்கு, சிறிலங்காவின் நீதித்துறை விதித்த இடைக்காலத் தடையுத்தரவைக் குறிப்பிடலாம்.

- இவற்றைத் தவிர வேறு சில சரித்திர நிகழ்வுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய தேசம் என்பது மிகப் பெரிய போராட்டத்தின் பின்பு, எத்தனையோ பாரிய இழப்புக்களின் பின்பு, வேதனைகளின் பின்பு தனது சுதந்திரத்தைப் பெற்றது. இந்தியா தனது சுதந்தரத்திற்காகக் கொடுத்த காலத்தின் விலையும் பெரிதுதான்! மிகப் பெரிய போராட்டத்தின் மூலம் தனது சுதந்திரத்தினைப் பெற்றதன் காரணமாகவோ என்னவோ, சுதந்திரத்தின் பின்னர் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் இந்தியாவில் நடாத்தப்படாமலேயே, மொழிவாரி ரீதியாகவும் மாநிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன.

- ஆனால் இலங்கைத் தீவோ, அப்படியல்ல! ஒப்பீட்டளவில் இலங்கைத் தீவு இரத்தம் சிந்தாமலேயே தன் சுதந்திரத்தைப் பெற்றது. இங்கே இரத்தம் சிந்தியவர்கள் இன்னொரு தேசிய இனமான தமிழர்கள்தான்! தமிழர்கள் அதிகம் இரத்தம் சிந்தியதும், இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகுதான் தமிழர்களை இவ்வாறு இரத்தம் சிந்த வைத்தது, இரத்தம் சிந்தாமலேயே சுதந்திரத்தைப் பெற்றுவிட்ட சிங்களப் பௌத்தப் பேரினவாதம்தான்!

- ஒரு புறம் இந்திய தேசமானது, கடந்த ஐம்பது ஆண்டு காலத்தில். பல தேசிய இனங்களோடு இணைந்து குறிப்பிடத்தக்க வளர்ச்;சியை நோக்கி நகர்ந்;தது. ஆனால் மறுபுறம், இலங்கைத்தீவில் பெரும்பான்மைச் சிங்கள இனம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக, மற்றைய தேசிய இனமான தமிழினத்தை அழித்தொழிப்பதையே முன்னெடுத்து வந்துள்ளதை நாம் மேற்கூறிய கருத்துக்களோடு மீண்டும் இணைத்துப் பார்ப்பது பொருத்தமானதாகும்!

- இந்திய தேசம் என்பதானது இரண்டு தேசிய இனங்களையும், இரண்டு தேசிய மொழிகளையும் மட்டும் கொண்டுள்ள தேசமல்ல! பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டுள்ள தேசமாகும்! அத்தோடு, தன்னிச்சையாக ஒரு பெரும்பான்மைத் தேசிய இனம், மற்றைய தேசிய இனத்தை அழித்து விடுவதற்கு முயல முடியாது. அதற்கு மற்றைய சிறுபான்மைத் தேசிய இனங்களும் அங்கு இடம் கொடுக்காது. ஆகவே அடிப்படையில், இந்திய தேசமும் அது எதிர்கொள்ளுகின்ற பிரச்சனைகளும்;;;; இலங்கைத்தீவும் அது எதிர் கொள்ளுகின்ற பிரச்சனைகளும் எதிர்மாறானவை! ஆகவே இந்தியாவின் சமஷ்டி முறை ஆட்சி என்பதானது இலங்கையின் தேசியப் பிரச்சனையைத் தீர்க்காது! மாறாகப் பிரச்சனையை மேலும் அதிகரிக்கவே செய்யும்!! இது நாமெல்லோரும் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விடயமாகும்!!!

ஆகவே இந்தியாவின் உள்ள ஆட்சி முறையை மீறி, அதற்கும் மேலாக, ஈழத் தமிழர்களுக்கு எதுவும் கொடுக்கக்கூடாது, கொடுக்க முடியாது என்ற சிந்தனை முற்றிலும் மூடத்தனமானதாகும். இந்தச் சிந்தனை முதலில் மாற வேண்டும். இன்று இந்தியாவே பாரிய அதிகாரப் பரவலாக்கலை நோக்கி நகர்ந்து செல்கின்றது என்ற யதார்த்தத்தையும், ஆனந்த சங்கரியின் எசமானர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய சமஷ்டி ஆட்சி முறை ஈழத்தமிழர்களுக்குப் பொருந்தி வராது.

காலத்தைக் கடத்தும் பொருட்டு ஆனந்தசங்கரி மூலம், இந்திய சமஷ்டி ஆட்சி முறை பற்றிப் பேசி வருகின்றார்கள், அவரது எசமானர்கள். இந்தியா கொண்டு வந்த 13 ஆவது சட்டத்திருத்தத்தையே தூக்கி எறிந்துவிட்ட சிங்கள அரசா, இந்திய சமஷ்டி ஆட்சி முறையை இலங்கையில் அமல் படுத்தும்.? அது பொருத்தமற்றதாக இருந்தாலும் கூட, சிங்களப் பௌத்த பேரினவாத அரசு, தமிழர்களுக்கு எதையும் தரப்போவதில்லை!

தமிழீழக் கொள்கையில் இருந்து குத்துக்கரணம் அடித்த ஆனந்தசங்கரி அவர்களின் அரசியல் பின்புலத்;தைப் பற்றியும், அவருக்குள்ளே இருக்கின்ற முரண்பாடுகள் பற்றியும், தன்னுடைய புதிய எசமான விசுவாசம் காரணமாக அவர் பேசி வருகின்ற இந்திய சமஷ்டி ஆட்சி முறையில் உள்ள பொருத்தமற்ற தன்மை குறித்தும் இதுவரை தர்க்கித்திருந்தோம். தன்னுடைய எசமானர்களின் பொருட்டு அவர் எழுப்பியுள்ள சில கேள்விகளுக்கான பதில்களை எமது அடுத்த வாரக் கட்டுரை ஊடாகத் தர விழைகின்றோம்.!

http://www.tamilnaatham.com/articles/2007/jul/sabesan/10.htm

Sunday, July 08, 2007

சரிவை நோக்கிய திசையில் மகிந்த அரசு!!!

மகிந்த ராஜபக்ச பதவிக்கு வந்த நாள் தொடக்கம் தன் கட்சிக்குள்ளேயும், எதிர்க்கட்சிக் கட்சிகளுக்குள்ளேயும், தனக்கெதிராக செயற்பட முற்படுபவர்களை தந்திரோபாயமாக கையாண்டு வந்தார். ஜே.வி.பி. யினுடைய ஆதரவில் ஆட்சிக்கு வந்தாலும் பின்னர் ஜே.வி.பி உள்ளேயிருந்தே தொல்லை கொடுக்க ஆரம்பித்ததும், அதனை தந்திரமாக வெட்டிவிட்டார்.

நாடாளுமன்றத்தில் பலத்தை தக்கவைக்க ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து சிலரை விலைக்கு வாங்கினார். சிறுபான்மை கட்சிகளை விலைக்கு வாங்கினார். இதில் மூன்று இலாபங்கள் அவருக்கிருந்தன. ஒன்று ஜே.வி.பி.யை ஓரங்கட்டுவது, நாடாளுமன்றத்தில் தனக்கான பலத்தை தக்கவைப்பது, மற்றது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியை பலவீனப்படுத்துவது.

இவற்றை கெட்டித்தனமாக மகிந்த கையாண்டு வந்தார். சமீபகாலமாக அனைத்துலக நாடுகளையும் மிகத்தந்திர
மாக கையாண்டு வந்தார். மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறீலங்காவிற்கு அழுத்தங்களை அனைத்துலக நாடுகள் - குறிப்பாக இலங்கைக்கு நிதி வழங்கும் இணைத்தலைமை நாடுகள் கொடுத்து வந்த போதும், நிதியுதவிகளை மட்டுப்படுத்துவாக அறிவித்தபோதும், அவற்றை கணக்கிலெடுப்பதாக மகிந்த ராஜபக்ச காட்டிக்கொள்ளவில்லை.

மாறாக அவரும் அவரது அமைச்சர்களும் தாங்கள் மேற்குலகை நம்பியிருக்கவில்லை, தங்களுக்கு உதவ ஆசியநாடுகள் இருக்கின்றன என வீராப்பாகக் கருத்துத் தெரிவித்தனர். இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தங்களை ஈடுபடுத்தியிருக்கும் நாடுகள், யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடியுங்கள் - சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுங்கள் - மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துங்கள் எனப் படிப்படியாக இறங்கிவந்து, இப்போது கிளிநொச்சிக்குச் செல்ல அனுமதி தாருங்கள் என சிறீலங்காவைக் கெஞ்சுமளவிற்கு வந்து விட்டன.


படைத்துறை உதவிகளைப்பெறுவது தொடர்பான விடயத்தில் பிராந்திய வல்லரசான இந்தியா
வைக்கூட பணியவைக்குமளவிற்கு மகிந்தவின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. இந்தியா ஆயுத உதவிகள் தராவிட்டால் தாம் பாகிஸ்தானிடமோ, சீனா
விடமோ ஆயுதங்கள் வாங்குவோம் என்று தெரிவித்த பின்பு, இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி சிறீலங்காவிற்கு என்ன உதவி தேவையோ அதனை நாம் வழங்குவோம் என்று கூடத் தெரிவித்திருந்தார்.


இலங்கையில் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் வகையில் படைநடவடிக்கைகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற நிலையில், தமிழர்கள் அழிந்தாலும் பரவாயில்லை சிறீலங்கா சீனா
விற்கோ, பாகிஸ்தானிற்கோ சென்று ஆயுதம் வாங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதாகவே இந்திய பாதுகாப்பு அமைச்சரின் கருத்து அமைந்தது. அந்தளவிற்கு சிறீலங்கா சனாதிபதியின் தந்திரமான காய்நகர்த்தல்கள் அமைந்திருந்தன.


ஆனால், உள்ளேயும் வெளியேயும் இவ்வாறெல்லாம் காய்களை நகர்த்திவந்த மகிந்த குழுவினர் தற்போது தடுமாறி நிற்பதற்கு என்ன காரணம்? மங்களசமரவீரவும், சிறீபதி சூரியாராய்சியும் மகிந்தவை நிலைகுலைய வைக்குமளவிற்கு பலசாலிகளா என்கிற கேள்விகள் எழலாம். உண்மை இதுதான். உள் இரகசியங்களை தெரிந்து வைத்திருக்கும் இவ்விருவரும் வெளியே வந்து அவற்றை மகிந்தவிற்கு எதிரான அஸ்திரமாக பாவிக்கத் தொடங்கி விட்டனர்.

தென்னிலங்கையிலே மோசமாக தலைவிரித்தாடிய படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் கோரல்களுக்கு பின்னணியில் இருந்து இயங்கியவர் சனாதிபதியின் சகோதரர் கோத்தாபய ராஜபக்ச என்பது தெரியவந்துள்ள போதும், அதற்கான ஆதாரங்களை சிறிபதி சூரியாராட்சி தற்போது புட்டுப்புட்டு வைக்கத் தொடங்கிவிட்டார்.


இக்குற்றச்செயல்களுக்கு காரணமானவர்கள் - இதன்வலையமைப்பு - பின்னணி என்பன குறித்து சிறிபதி சூரியாராட்சிக்கு நன்றாகத் தெரியும். தனக்கு கொலை அச்சுறுத்தல் வந்திருப்பதாக காவல்துறையில் அவர் பதிவு செய்திருக்கும் முறைப்பாட்டில் கோத்தபாய ராஜபக்ச தொடர்பான பல இரகசியங்களை வெளியிட்டிருக்கிறார். ஏதிர்காலத்தில் மேலும் பல திடுக்கடும் தகவல்கள் அவரால் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்தான் கோத்தபாய ராஜபக்ச திடீரென வெளிநாடொன்றிற்கு தலைமறைவாகியுள்ளார்.
மங்கள சமரவீரவும், சிறீபதி சூரியராய்ச்சியும் ஆரம்பித்துள்ள புதிய அணி எந்தளவிற்கு பலம் பெறும் என்பதற்கு அப்பால், அவர்கள் இப்போது மேற்கொண்டு வரும் மகிந்த அரசிற்கெதிரான நடவடிக்கைகள் முக்கியமானவை. மங்கள சமரவீர, மகிந்தவிற்கு பல
விதங்களில் உதவியவர். மகிந்தவை பதவியிலமர்த்த பாடுபட்டவர்.

ஜே.வி.பி, மகிந்தவிற்கு ஆதரவளிக்க முன்வந்தமைக்கு மங்களவின் ஜே.வி.பியுடனான செல்வாக்கே காரணம். பின் மகிந்த அரசில் வெளியுறவு அமைச்சராக பணிபுரிந்த போது மகிந்தவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பரப்புரைகள் செய்தவர் மங்கள. இப்போது ஜே.வி.பியுடன் கலந்துரையாடி மகிந்த அரசை கவிழ்ப்
பதற்கான திட்டங்களில் ஈடுபடுகிறார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக முன்பு செயற்பட்ட அவர், தற்போது ஐக்கிய தேசியக் கட்சிடனும் கலந்துரையாடி மகிந்த அரசை கவிழ்ப்பதற்கான பொது உடன்பாடொன்றை ஏற்படுத்தியுள்ளார். சிறுபான்மை கட்சிகளோடும் சந்தித்து உரையாடி வருகிறார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ளவர்களையும், ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணியினது முக்கியஸ்தர்களையும் மகிந்
தவிடமிருந்து பிரிக்க முயல்கிறார்.


இதைக்கண்டு மகிந்த அச்சமுற்றிருக்கின்றமையை அவதானிக்கமுடிகிறது. மகிந்த, சிறீபதி வழியை பின்பற்றி மேலும் யாரும் செல்வார்களேயானால், உடனடி
யாக நாடாளுமன்றத்தை கலைத்து விடுவேன் என தன்னோடிருப்பவர்களை எச்சரிக்கும் நிலை மகிந்தவிற்கு ஏற்பட்டதே இந்த அச்சத்தின் வெளிப்பாடுதான். மங்கள, இனி அடுத்தகட்டமாக இந்தியா உட்பட வெளிநாடுகளில் மகிந்தவிற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கத்தொடங்கிவிட்டார்.

ஏற்கனவே வெளிநாட்டமைச்சராக இருந்த காரணத்தால் மங்களவிற்கு தொடர்புகள் அதிகம். இது அவருக்கு சுலபமான பணி. மகிந்த தனது அதிகாரத்தளத்
திலும். அரசியல் தளத்திலும். வெளிநாடுகளுடனான உறவுகளை பேணுகின்ற தளத்திலும் இப்போது ஈடாடத் தொடங்கிவிட்டார். உள்நாட்டில் அவருக்கிருந்த அதிகார, அரசியல் பலம் தான் வெளிநாடுகளுக்கு சவால் விடு
மளவிற்கு அவருக்கு சக்தியூட்டியது.

விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றிபெற்று வருவதான பரப்புரைகளே அவர் மீது சிங்கள மக்கள் மத்தியில் ஒரு மாயையான கவாச்சி ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது. போரை முன்வைத்தே எல்லாப்பிரச்சினைகளையும் அவர் இது வரை சமாளித்து வந்தார். இப்போது தென்னிலங்கையில் மகிந்தவிற்கு எதிரான சக்திகள் தங்களுக்குள் உள்ள முரண்பாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு மகிந்த என்கிற பொது எதிரிக்கெதிராக ஒன்றுபட ஆரம்
பித்து விட்டன.

விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, அதனால் வாழ்க்கைச் செலவு மளமளவென அத்கரித்துச்செல்லும் நிலை இவை எல்லாவற்றையும் முன்னிறுத்தி சிங்கள மக்களை மகிந்தவிற்கு எதிராக வீதியிலிறக்கிப் போராட்டங்களை மேற்காள்ள மகிந்தவிற்கெதிரான சக்திகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
மேற்குலகம் சார்ந்த சர்வதேச நாடுகளும் சிறீலங்காவில் ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்படுவதையே தற்போது விரும்பகின்றன.

இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் தமக்குச் சார்பான ஒரு சுமூக நிலையைத் தக்கவைக்க வேண்டுமானால், ரணில் போன்ற மேற்கோடு அனுசரித்துப்போகும் அரசியல் தலைவர்களே மேற்குலகத்திற்கு இப்போது அவசியம்.
ஒவ்வொரு தரப்பும் தத்தம் நலன் கருதி நகர்வுகளை மேற்கொண்டுள்ள வேளையில், இப்போது மகிந்த ராஜபக்ச எல்லாப் பக்கத்தாலும் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.

நன்றி>ஈழமுரசு

Friday, July 06, 2007

சிறிலங்காவின் ரூபாய் கடுமையான வீழ்ச்சி!!!

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை அடுத்து நாணயமான ரூபாய் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.


நேற்று வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த சரிவு இறக்குமதியாளர்கள் தமது நிலுவைகளை டொலரில் செலுத்த வேண்டி வற்புறுத்தியதனால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய பல மாதங்களாக ரூபாயில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சியில் இது கடுமையான சரிவாகும். தற்போது ஒரு டொலரின் பெறுமதி 111.53 - 111.60 ரூபாய்களாகும்.

கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட சரிவின் போது ஒரு டொலரின் பெறுமதி 111.46 - 111.53 ரூபாய்களாக இருந்தது. எனினும் இது 118 - 120 ரூபாய்களாக இந்த ஆண்டின் இறுதியில் மேலும் வீழ்ச்சி அடையலாம் என சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாயின் இந்த வீழ்ச்சிக்கு எரிபொருட்களின் விலையேற்றம், நாட்டில் ஏற்பட்ட பணவீக்கம் என்பனவே காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் 5 வீத வீழ்ச்சியை சந்தித்த நாணயம் இந்த வருடம் மேலும் 4 வீத வீழ்ச்சியை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

Thursday, July 05, 2007

இன்று கரும்புலிகள் நாள்!!!






இன்று கரும்புலிகள் நாள்: தாயக விடுதலைக்காய் உயிர்களை ஆயுதங்களாக்கிய கரும்புலி மாவீரர்கள் எண்ணிக்கை 322

தாயக விடுதலைப் போராட்டத்தில் தம் உயிர்களை ஆயுதங்களாக்கி போராட்டத்தின் தடைநீக்கிகளாக வெற்றிகளுக்காக தம்மை அர்ப்பணித்த கரும்புலி மாவீரர்கள் அனைவரையும் ஒன்றுசேர நினைவில் கொண்டு போற்றும் நாள் நாளை வியாழக்கிழமை (05/07/07) தமிழீழ மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்றது.


கரும்புலிகள் நாளை கடைப்பிடிக்கும் நாளில் தமிழீழ மக்கள் எழுச்சிக்கோலம் கொண்டுள்ளனர். தமிழர் தாயகப் பகுதிகளில் மஞ்சள் சிவப்பு தோரணங்களோடு எழுச்சிக்கோலம் காணப்படுகின்றது.

1987 ஜூலை 5 முதல் 2007 ஜூன் 27 வரை தாயக விடுதலைப் போராட்டத்தில் கரும்புலி மாவீரர்கள் 322 பேர் வீரகாவியமாகியுள்ளனர்.

இவர்களில்

81 பேர் தரைக்கரும்புலி மாவீரர்கள் ஆவர்.

241 பேர் கடற்கரும்புலி மாவீரர்கள் ஆவர்.

கரும்புலிகள் நாள் நிகழ்வுகள் நாளை காலை 9 மணிக்கு பொதுச்சுடரேற்றப்பட்டு தமிழீழ தேசியக் கொடியேற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு தொடங்கப்படும்.

வடமராட்சி நெல்லியடியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா இராணுவ முகாம் மீது 1987 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் நாள் கப்டன் மில்லர் நடத்திய கரும்புலித் தாக்குதலே விடுதலைப் புலிகளின் முதலாவது கரும்புலித் தாக்குதலாகும். தாயக விடுதலைக்காக கரும்புலிகள் தங்களது பயணத்தின் 20 ஆம் ஆண்டை நிறைவு நிறைவு செய்திருக்கிறார்கள்.
நன்றி>பிதினம்.

Wednesday, July 04, 2007

யூலை 1983 - யூலை 2007 எதிர் விளைவுகள்!



அன்றைய சிங்கள அரசினால் 1983ம் ஆண்டு, யூலை மாதத்தில், நன்கு திட்டமிடப்பட்டு மேற் கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு நடாத்தப்பட்டு, இந்த 2007ம் ஆண்டு யூலை மாதத்துடன் இருபத்திநான்கு ஆண்டுகள் ஆகின்றன. இந்தத் தமிழின அழிப்பினூடாகத் தமிழீழ மக்களின் பொருளாதாரமும், இந்தியத் தமிழர்களின் பொருளாதாரமும், மலையகத் தமிழர்களின் பொருளாதாரமும் சேர்த்தே அழிக்கப்பட்டன.

முதன்முறையாக உலக நாடுகளையும் உலுக்கி விட்ட இந்தத் தமிழின அழிப்பானது, பௌத்த சிங்களப் பேரினவாதம் எதிர்பார்க்காத விளைவுகளையும் கொண்டு வந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய ஜனாதிபதியான ஜேஆர் ஜெயவர்த்தனாவிலிருந்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச வரை, சிங்கள-பௌத்தப் பேரினவாத அரசுகள் மேற்கொண்ட தமிழின அழிப்பு நடவடிக்கைகள், உண்மையில் எதிர் விளைவுகளைத்தான் கொண்டு வந்துள்ளன. இந்த எதிர் விளைவுகள் குறித்துச் சில கருத்துக்களை முன் வைப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.!

முதலில், யூலை 83 தமிழின அழிப்பினை ஒரு மீள் பார்வையூடாக நோக்குவது பொருத்தமானதாக இருக்கும் என நம்புகின்றோம்.

அன்றைய யூலை - கறுப்பு யூலை 83 - தமிழின அழிப்பு, சில அடிப்படையான விடயங்களைக் காரணத்தில் கொண்டு சிறிலங்கா அரசினால் நடத்தப்பட்டதாகும். அதில் ஒரு முக்கிய காரணம், தமிழ் மக்களின் பொருளாதாரத் தளத்தைச் சீர்குலைப்பதாகும். அன்றைய தினங்களில் - அதாவது 1983ம் ஆண்டு யூலை மாதக் கடைசி வாரத்தில் - சிங்கள அரசால் அழிக்கப்பட்ட தமிழ் மக்களின் சொத்துக்களின் மதிப்புக்கள் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டாலும், உண்மையான இழப்பு இன்னும் பல மடங்காகும் என்றே கருதப்படுகிறது. ஒரு தர்க்கத்திற்காக, 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற கணிப்பீட்டை ஏற்றுக் கொண்டாலும் கூட, இருபத்திநான்கு ஆண்டுகளுக்கு முன்பு அது ஒரு மிகப்பாரிய இழப்பு என்பதில் ஐயமில்லை. அதைத்தவிர இலங்கை, பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற தினத்திலிருந்து மிக அண்மைக்காலம் வரை, மாறி மாறி வந்த சிங்கள அரசுகள் தமிழினத்தின் மீது மேற்கொண்ட பொருளாதாரத் தாக்குதல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இச் சிங்களப் பேரினவாத அரசுகள் தமிழீழ மக்கள் மீது தொடர்ந்து மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கைகளும், விதித்த பொருளாதாரத் தடைகளும் தமிழீழ மக்களின் வாழ்க்கையை ஓர் இன்னல் மிக்க, துயரம் மிக்க வாழ்க்கையாக மாற்றின.

1983ம் ஆண்டு இனக்கலவரங்களுக்குப் பிறகு நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இலங்கைத்தீவில் சுமார் 65,000 பேர்கள் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 800,000 மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும், சுமார் 700,000 மக்கள் புலம் பெயர்ந்துள்ளதாகவும் உலகவங்கியின் அறிக்கை ஒன்று தெரிவித்து இருந்தது. அதுமட்டுமல்லாது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்காக, சிங்கள அரசுகள் ஆறு பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவழித்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் அன்று மதிப்பிட்டிருந்தார்கள்.

இது பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த மதிப்பீடாகும். இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், பாதுகாப்புச் செலவிற்காக மட்டும், 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் சிறிலங்கா அரசு ஒதுக்கியுள்ளது. இது 139.6 பில்லியன் ரூபாய்களாகும். 1977ம் ஆண்டு 0.75 பில்லியன் ரூபாய்களைப் பாதுகாப்புச் செலவிற்காகப் பயன்படுத்திய சிறிலங்கா அரசு, 1986ம் ஆண்டு ஆறு பில்லியன் ரூபாய்களைப் பாதுகாப்புச் செலவிற்கு பயன்படுத்தியது. இது படிப்படியாக வளர்ந்து, இன்று, 2007ல் 139.6 பில்லியன் ரூபாய்களைச் சிறிலங்கா அரசு தனது பாதுகாப்புச் செலவிற்காகப் பயன்படுத்தப் போகிறது. இன்றும், மேலும் பல பில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவிகளாகப் பெற்று, அவற்றினூடாக மேலும், மேலும் நவீன ஆயுதங்களை வாங்குவதற்குச் சிறிலங்கா அரசு முயன்று வருகின்றது.

அன்புக்குரிய வாசகர்களே! இந்த வேளையில் நாம் ஒரு விடயத்தை கருத்தில் கொள்ள விழைகின்றோம். 2003ம் ஆண்டு யூன் மாதம், அமெரிக்க அரசின் அன்றைய உதவிச் செயலர் றிச்சட் ஆமிடேஜ் ஒரு விடயத்தைத் தெரிவித்திருந்தார். அது ஒரு முக்கியமான விடயமாகும்.

‘சிறிலங்காவிற்குச் செய்து வந்த உதவிகள் யாவற்றையும் நிறுத்தி விடுவதற்கு அமெரிக்கா எண்ணியிருந்த வேளையில்தான் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்’ என்றும் ‘அதன் காரணமாக சிறிலங்காவிற்கு உதவிகளை நிறுத்துகின்ற தன்னுடைய எண்ணத்தை அமெரிக்கா மாற்றிக் கொண்டது.’ என்றும் அமெரிக்க அரசின் அன்றைய உதவிச் செயலர் றிச்சட் ஆமிடேஜ் தெரிவித்திருந்தார். இதற்குரிய அடிப்படைக் காரணம் அன்றைய சிறிலங்கா அரசு சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கும், யுத்த நிறுத்தத்திற்கும் விருப்பம் தெரிவித்ததேயாகும்.

அன்புக்குரிய வாசகர்களே! யூலை 83 - தமிழின அழிப்பு - தமிழ் மக்கள் மீது திட்டமிட்டுப் பிரயோகிக்கப்பட்டதில் சில அடிப்படைக் காரணங்கள் இருந்ததென்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம். அதில் ஒன்று நாம் இப்போது குறிப்பிட்டவாறு தமிழரின் பொருளாதாரத் தளத்தை அழிப்பதாகும். ஆனால் தன்வினை தன்னைச் சுடும் என்ற முதுமொழிக்கிணங்க சிறிலங்கா அரசு தன்னைத்தானே பொருளாதார ரீதியில் எரித்துக் கொண்டது. இதனை மனத்தில் நிறுத்திக் கொண்டு யூலை 83 இனக்கலவரத்தின் இன்னுமொரு முக்கிய காரணியைச் சற்று விரிவாகத் தர்க்கிக்க விழைகின்றோம். யூலை 83 இனக்கலவரத்தின் மூலம் தமிழ் மக்களின் மன வலிமையை அழித்து அவர்களுக்குக் கடுமையான, கொடுமையான வன்முறை ஊடாக ஒரு பாடத்தைப் புகட்டுகின்ற முயற்சியை அன்றைய சிறிலங்கா அரசு - ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசு - மேற்கொண்டது. அதாவது உளவியல் ரீதியாக “தமிழர்கள் தாங்கள் ஒரு நிர்க்கதியான இனம்;, தங்களைக் காப்பாற்றுவதற்கு எவரும் இல்லை, தாங்கள் எந்நேரமும் சிங்களவர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்படலாம், தாங்கள் எப்போதும் ‘சிங்கள-பௌத்த ஆட்சியின் கருணையின்(?)’ கீழ், தயவின் கீழ் வாழ வேண்டிய இரண்டாம் தரக் குடி மக்கள்” - என்கின்ற ஏக்கமான எண்ணத்தைத் தமிழ் மக்களின் நெஞ்சங்களுக்குள் ஆழமாகப் புதைக்கும் நோக்கோடும், இந்த ஜீலை 83 இனக்கலவரம் நடாத்தப்பட்டது.

அன்றைய சிறிலங்கா அமைச்சரான காமினி திசநாயக்காவின் உரையை நாம் எடுத்துக் காட்டாக கொள்ளலாம்.

1983ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதியன்று ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரான காமினி திசநாயக்கா பின்வருமாறு கொக்கரித்தார். ஆமாம் கூறவில்லை -கொக்கரித்தார்- என்பதே சரியான சொல்லாகும்.

தமிழ் மக்களைப் பார்த்து காமினி திசநாயக்கா இவ்வாறுதான் கொக்கரித்தார்.:-

‘உங்களைத் தாக்கியது யார்?- சிங்களவர்கள்!

உங்களைக் காப்பாற்றியது யார்?- சிங்களவர்கள்!

ஆமாம்! எங்களால் தான் உங்களைத் தாக்கவும், காப்பாற்றவும் முடியும்! உங்களைக் காப்பாற்ற இந்திய இராணுவம் இங்கே வருமாக இருந்தால் அதற்கு 14 மணித்தியாலங்கள் தேவை! ஆனால் 14 நிமிடங்களுக்குள் இந்த நாட்டினில் உள்ள ஒவ்வொரு தமிழனின் இரத்தத்தையும், இந்த நாட்டிற்காக நாம் அர்ப்பணிப்போம். உங்களுடைய நெற்றிகளில் நீங்கள் ஒரு யாழ்ப்பாணத் தமிழன் என்றோ, மட்டக்களப்புத் தமிழன் என்றோ, மலையகத் தமிழன் என்றோ, இந்துத் தமிழன் என்றோ, கிறிஸ்தவத் தமிழன் என்றோ எழுதப்படவில்லை! எல்லோருமே தமிழர்கள்தான்!’

- இவ்வாறு அமைச்சர் காமினி திசநாயக்கா 1983ல் கொக்கரித்தார்.

ஆனால் பின்னாளில் தமிழீழ மக்களின் அமைதி கொல்லும் படையாக வந்திறங்கிய இந்திய இராணுவத்தையும், சிறிலங்கா இராணுவத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடித்து துரத்தியதை வரலாறுகூட வியந்துதான் கூறும்.

1983ம் ஆண்டு ஆகஸ்ட மாதம் 4ம் திகதியன்று ‘;வோசிங்டன் போஸ்ட்’ பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் தீர்க்கதரிசனமான கருத்தொன்றைக் கீழ்வரும் பொருட்பட எழுதியது.:-

‘சேர்ந்து வாழ்வது இவ்வளவு கடினமென்றால் ஏன் பிரிந்து வாழ முடியாது? தமிழ் மக்களுக்கு தனி ஆட்சி கொடுத்தால் என்ன? ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள பல நாடுகள் போல் தமிழ் மக்களும் தாங்கள் ஒரு தனித்துவமான தேசம் என்பதற்குரிய சரியான சான்றுகளை வைத்திருக்கிறார்கள். இந்த ஒருங்கிணைந்த இலங்கைத்தீவில் சிங்களவர்கள் மட்டுமே அதிகாரங்களை வைத்திருக்கின்றார்கள். இந்த அதிகாரங்களை கொண்டுள்ள சிங்களவர்களுக்கு தமிழர்கள் இந்த ஒருங்கிணைந்த இலங்கையில் வாழமுடியாத அளவில் நடத்தப் பட்டிருக்கின்றார்கள் என்ற அறிவாவது உள்ளதா?’

-என்று ‘வோசிங்டன் போஸ்ட்’ பத்திரிகை 1983ம் ஆண்டிலேயே எழுதியிருந்தது.

1983ம் ஆண்டு யூலை மாதத்தில் நடைபெற்ற தமிழினப் படுகொலைகளின் மூலம் உலக நாடுகள் யாவும் முதன் முறையாக விழித்தெழுந்தன. ஆனால் ஒரே ஒரு நாடு மட்டும் விழித்தெழவேயில்லை. விழித்தெழாத அந்த நாடு வேறெந்த நாடும் அல்ல, சிங்களப் பௌத்த சிறிலங்காவேதான்!. அதன் அன்றைய ஜனாதிபதியான ஜேஆர் ஜெயவர்த்தனா அன்று நடந்து கொண்ட விதமும், பேசிய பேச்சுக்களும் ஒரு சிங்கள பௌத்தப் பேரினவாதியின் சிந்தனைகளை அப்படியே பிரதிபலித்தன. தமிழினப் படுகொலைகள் நடைபெற்று தமிழர்களின் சொத்துக்களும் நாசமாக்கப்பட்ட, நாசமாக்கப்படுகின்ற அந்தவேளையில் அன்றைய ஐக்கிய தேசியக்கட்சியின் அரசு நடந்து கொண்ட விதங்கள் ஏற்கனவே ஆவணப் படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் சிலவற்றை வாசகர்களுக்கு இங்கே தருவதற்கு விழைகின்றோம்.

1983ம் ஆண்டு யூலை மாதம் 24ம் திகதி இரவிலிருந்து தொடந்து இலங்கைத்தீவே எரிந்து கொண்டிருந்த போதும் அன்றைய ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனா மௌனமாகவே இருந்தார். ஐந்து கோரமான நாட்களுக்குப் பின்னர்தான்; - அதாவது யூலை 28ம் திகதி வியாழக்கிழமை இரவுதான் - ஜனாதிபதி ஜெயவர்த்தனா முதன்முதலாக இனக்கலவரம் குறித்து நாட்டுமக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது கூட தமிழ்மக்கள் மீது நடாத்தப்பட்டு வருகின்ற இந்த இன படுகொலைகள் குறித்து அவர் வருத்தம் தெரிவித்தோ, கவலை தெரிவித்தோ, அனுதாபம் தெரிவித்தோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக இந்தக் கோரமான இனப்படுகொலைகளை நியாயப்படுத்தும் விதத்திலேயே ஜனாதிபதி ஜேஆரின் உரை அமைந்திருந்தது.

‘1956 ம் ஆண்டிலிருந்து தமிழ் மக்கள் மீது சிங்கள மக்கள் கொண்ட நம்பிக்கையின்மை வளர்ந்து வந்ததன் வெளிப்பாடே இந்த இனக்கலவரங்கள்’ என்றும், ‘இவ்வாறான மனக்குறைகள் சிங்கள மக்களுக்கு இருக்கும் பட்சத்தில் அவர்கள் (அதாவது சிங்களவர்கள்) வன்முறையில் ஈடுபடுவது எளிதான செயலாகும்’ என்றும் 77வயது நிரம்பிய சிறிலங்கா ஜனாதிபதியான ஜேஆர் ஜெயவர்த்தனா அன்று தெரிவித்தார்.

அத்தோடு மட்டும் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர் மேலும் இவ்வாறு கூறினார். ‘சிங்கள மக்களை அமைதிப்படுத்துவதற்காகவும், அவர்களுடைய இயல்பான வேட்கையைப் பூர்த்தி செய்வதற்காகவும் ஒரு புதிய சட்டத்தை நான் அமலாக்க இருக்கிறேன். இப் புதிய சட்டத்தின் பிரகாரம் நாட்டுப் பிரிவினை கோரும் எவரும் இந்தப் பாராளுமன்றத்தில் அங்கத்தவர்கள் ஆகமுடியாது. அதுமட்டுமல்ல, நாட்டுப் பிரிவினை கோரும் எந்த ஒரு கட்சியும் தடை செய்யப்படும். இனிமேல் நாட்டைப் பிரிப்பது குறித்து எவரும் சட்ட ரீதியாகச் செயல்படமுடியாது.’

அன்புக்குரிய வாசகர்களே! இருபத்திநான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிங்களபௌத்த பேரினவாதிகளின் வன்முறைச் செயல்களால் தமிழினம் எரிந்து கொண்டிருந்த நிலையில் சிங்கள ஜனாதிபதி கூறிய வார்த்தைகள் தாம் இவை. இது குறித்து TAMIL NATION இணையத்தளம் பின்வருமாறு குறிப்பிட்டது.

“சிங்கள ஜனாதிபதி தமிழர்களின் நிலை குறித்துக் கவலை தெரிவிக்க வில்லை. - ஏனென்றால் தமிழர்கள் குறித்து அவர் கவலைப்படவில்லை. சிறிலங்கா ஜனாதிபதி தமிழர்களுக்கு நேர்ந்தததையிட்டு அனுதாபம் தெரிவிக்கவில்லை. ஏனென்றால் சிறிலங்கா ஜனாதிபதி தமிழர்கள் மீது அனுதாபம் கொண்டிருக்கவில்லை. சிறிலங்கா ஜனாதிபதி தமிழர்களுக்கு நேர்ந்த கதி குறித்து பேரதிர்ச்சி தெரிவிக்க வில்லை. ஏனென்றால், அன்று தமிழர்களுக்கு ஏற்பட்ட கதி ஜனாதிபதிக்குப் பேரதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கவில்லை.”

சிறிலங்கா ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனா தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து அதிர்ச்சியோ, அனுதாபமோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை என்பதைக் குறிப்பிட்ட International Commission of Jurist டிசம்பர் 83ல் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

1983ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி வெளிவந்த ‘ECONOMIST’ சஞ்சிகையும் இதே கருத்தைத்தான் பிரதிபலித்தது. உலகளாவிய வகையில் சிறிலங்கா அரசிற்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தன. சிறிலங்காவின் சிங்கள பௌத்த மேலாண்மையை மட்டும் உறுதி செய்கின்ற சிறிலங்காவின் அரசியல் யாப்புக் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

யூலை 83 இனக்கலவரத்த்pல் கோரமும், அழிவும் முழுமையாக ஆவணப் படுத்தப்பட்டு மக்கள் முன் வைக்கப்படவில்லை. இதைப்பற்றி சிந்திக்கும்போது முன்பு உலகநாடுகளால் ‘பயங்கரவாதி’ என்று அழைக்கப்பட்டுப் பின்னாளில் உலகத் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்பட்ட திரு நெல்சன் மண்டெலா அவர்களின் கூற்று ஒன்று எமது ஞாபகத்திற்கு வருகிறது. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் திரு நெல்சன் மண்டெலா அவர்கள் கூறியது யூலை 83 இனக்கலவரத்திற்கு பொருத்தமாகவே அமைந்துள்ளது.

திரு நெல்சன் மண்டெலா கூறியது இதுதான்!

‘மன்னிக்கவும், மறக்கவும் வேண்டுமானால் என்ன நடந்ததென்ற முழு உண்மையும் எமக்கு தெரிய வேண்டும்.!’

இதுவரை நாம் தர்க்கித்த கருத்துக்கள் ஊடாக, 1983 யூலை – தமிழின அழிப்பு கொண்டுவந்த எதிர் விளைவுகளைச் சுட்டிக்காட்ட விழைகின்றோம். சிங்களப் பௌத்தப் பேரினவாதம் எதிர்பார்த்திராத விளைவாகத் தமிழர்கள் உலக நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இந்தியா வெளிப்படையாக, இலங்கைப் பிரச்சனையில் தலையிட நேர்ந்தது. சர்வதேச மயப்படுத்தப் பட்டிராத, தமிழீழ விடுதலைப் போராட்டம் பின்னாளில் சர்வதேச மயப்படுத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டம், புதிய பரிமாணத்தின் ஊடாக கூர்மையடைந்தது. இவை யூலை 83 கொண்டு வந்த எதிர் விளைவுகளாகும்.!

தமிழ் மக்களை நசுக்கி அழித்து விடுவதற்கு எண்ணியிருந்த சிங்கள-பௌத்தப் பேரினவாதம், இத்தகைய எதிர் விளைவுகளை எதிர் பார்க்கவில்லை. ஆனாலும், இன்றும், இருபத்திநான்கு ஆண்டுகளுக்குப் பின்னரும், சிங்களப் பௌத்தப் பேரினவாதம், 1983 போன்ற சம்பவங்களை நோக்கித்தான் நகர்ந்து கொண்டு போகின்றது. அன்றைய சூழலைத் தாம் கையாண்டது போல், இன்றைய சூழலையும் தாம் கையாளலாம் என்று சிங்களப் பௌத்த பேரினவாதம் சிந்திக்கின்றது. அன்றைய சூழல்போல் இன்றைய சூழல் இல்லை என்பதும், அன்றைய சூழலைக் கையாண்டதுபோல், இன்று கையாள முடியாது என்றும், மகிந்த ராஜபக்சவிற்கு இன்னும் புரியவில்லை.

அன்று சர்வதேசத்திற்கு இலங்கையில் என்ன நடக்கின்றது என்ற விபரம் சரியாகத் தெரிந்திருக்கவில்லை. இன்று சர்வதேசத்திற்கு விபரங்கள் நன்கு தெரியும். அன்று இந்தியா தடுமாறியதைப் போன்று, இன்று சர்வதேசமும் தடுமாறிக் கொண்டு நிற்கின்றதே தவிர, சிங்கள தேசத்தின் உண்மை நிலையைச் சர்வதேசம் புரிந்து கொண்டுதான் உள்ளது. சர்வதேசம், தன்னுடைய முடிவு நிலையில் குழப்பமாக இருக்கிறதே தவிர, நிலவரத்தைச் சரியாக அறிந்து வைத்துத்தான் உள்ளது.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காகத் தன்னால் அழைத்து வரப்பட்ட அனைத்துலக வல்லுநர்கள் குழுவோடும் சிpறிலங்கா அரசு முரண்பட்டு நிற்கின்றது. சிறிலங்கா அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் செயலற்ற தன்மையைச் சுட்டிக்காட்டிக் குற்றம் சாட்டிய, அனைத்துலக வல்லுநர்கள் குழுவின் தலைவர் பி.என் பகவதியோடும், சிறிலங்கா அரசு பிரச்சனைப்பட்டு நிற்கின்றது. தங்களால் அழைத்து வரப்பட்டவர்களோடும் முரண்படுகின்ற சிங்கள அரசு, தமிழர்களின் பிரச்சனையை எவ்;வாறு தீர்க்கும்?

இன்று - இந்த 2007ம் ஆண்டு - சிறிலங்காவின் அரச அதிபராக விளங்குகின்ற மகிந்த ராஜபக்சவின் ‘சிந்தனைகளும்’ அவருடைய முன்னோடிகளின் சிங்கள பௌத்தப் பேரினவாத சிந்தனைகளையே பிரதிபலிக்கின்றன. மகிந்த ராஜபக்சவின் முப்படைகள் இன்று வெளிப்படையாகவே தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்றன. ஈழத் தமிழினத்தின் மீது வலிந்து ஒரு பாரிய போரைத் திணிப்பதற்காக இன்று சிறிலங்கா அரசு, தமிழினத்தின் மீதான தனது படுகொலைகளை முடுக்கி விட்டிருக்கின்றது.

தற்போதைய காலச் சூழ்நிலை மாற்றத்தையும் விளங்கிக் கொள்ளாமல், தமிழீழ விடுதலைப் புலிகளையும் புரிந்து கொள்ளாமல், பழைய நிலைக்கே போவதற்கு, மகிந்த ராஜபக்ச முயற்சிக்கின்றார். 1983ல் ஏற்பட்ட எதிர்விளைவுகள் போல், 2007லும் எதிர்விளைவுகள் ஏற்படும். தமிழீழ விடுதலைப் போராட்டம் மேலும் புதிய பரிமாணத்தை அடையும். அது சுதந்திரத் தமிழீழமாக அமையும்!
நன்றி>பதிவு.

கோத்தபாயவுக்கு வரலாறு தெரியவில்லை. இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் தொப்பிக்கல பகுதியில் இந்தியப் படையினர் முகாம் அமைத்திருந்தனர்.

கிழக்கில் சாதிப்பதாக சிறிலங்கா சொல்லும் விடயம் எவ்வளவு காலம்தான் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.


அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலிக்கு (ATBC) நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:

சிங்கள அரசாங்கங்களின் தமிழினத்தை அழித்தொழித்தல் எனும் தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் வன்னிப் பெருநிலப்பரப்பின் மீது பெருமளவிலான யுத்தத்தை முன்னெடுக்க முனைகிறது என்பதற்கு அப்பால் நாங்கள் ஒரு அரசாங்கத்தை நடத்துகிற வடக்குப் பிரதேசத்தில் இராணுவ ரீதியான ஒரு வெற்றியைக் காட்டி தங்களுடைய அரசியல் பலத்தைத் தக்க வைக்க வேண்டிய தேவை ஒன்று மகிந்த அரசாங்கத்துக்கு இருக்கிறது. அந்த வகையில்தான் இத்தகைய ஒரு நடவடிக்கையை மகிந்த அரசாங்கம் மேற்கொள்ள முனைகிறது.

புலிகளின் தாக்குதல்களை முறியடிக்க மிக உச்சமான பயிற்சி பெற்ற- பிற படையணிகள் நம்புகிற படையணிகளை முன்னே நிறுத்திதான் பதில் தாக்குதலை மேற்கொள்ள வேண்டிய நிலைமை அங்குள்ளது. ஏனெனில் சிறிலங்காவின் அனைத்து படையணிகளுமே புலிகளின் தாக்குதலுக்கு முகம் கொடுக்கும் என்பதல்ல.

சிறிலங்கா இராணுவமானது இழப்புக்களின் மத்தியில் மன்னார்- மடுப் பகுதியை நோக்கி முன்னேற முயற்சித்தது. ஆனால் கடந்த ஆனி மாதம் முற்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அந்த முன்னேற்ற முயற்சி முற்றாக முறியடிக்கப்பட்டது. அதனால் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் மற்றொரு போர் அரங்கை அமைக்க முயல்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால் அது மணலாற்றில் அமையுமா? வவுனியாவில் அமையுமா என்பது பற்றி முடிவெடுத்துவிட்டார்களா என்பது தெரியவில்லை. மணலாறைப் பொறுத்தவரையில் பாரிய சிங்களச் சதியின் பின்னணி உள்ளது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொடுங்கோலாட்சியின் 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் நாள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் 42 கிராமங்களைச் சேர்ந்த 13,228 தமிழ்க் குடும்பங்கள் வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.

அந்த வர்த்தமானி அறிவித்தலின்படி பச்சை தமிழ்க் கிராமங்களான செம்மலை, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், தென்னமரவாடி உள்ளிட்ட 42 கிராமங்கள் அனுராதபுரம் மாவட்டத்தின் நிர்வாக ஒழுங்குமுறையில் இணைக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், தமிழர் தாயகத்தின் தொடர்நிலப்பரப்பில் வடக்கையும் கிழக்கையும் துண்டாடிவிட்டு நிலையான சிங்களக் குடியேற்றத்தை நிரந்தரமாக அமைக்கும் சதி முயற்சியாக அது நிகழ்த்தப்பட்டது. அந்த சிங்கள ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடத்தப்பட முடியாவிட்டாலும் படை ஆக்கிரமிப்பு என்பது இன்னமும் உள்ளது. காடுகள் அதிகமாகவும் ஒன்றிரண்டு நீர்நிலைகளும் கொண்ட அரணாக உள்ளது. இதனைப் பயன்படுத்தி சில நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடும். இருந்தாலும் அது எங்களின் இதயபூமி. அங்கு சிறிலங்கா இராணுவத்தினருக்கு நாம் தரப்போகும் பதில் என்பது மிகக் காத்திரமானதாக இருக்கும்.

எந்த ஒரு ஆக்கிரமிப்பாளனும் தனது ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடுகிற சக்தியினது அடி ஆழமான மக்கள் ஆதரவு தளத்தைக் குறிவைத்து முறைகேடான தாக்குதல்களை நடத்துவது வழக்கம். அனைத்து சிறிலங்கா அரசாங்கங்களுமே இந்த உத்தியைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் மகிந்த ராஜபக்ச ஒன்றும் விதிவிலக்கல்ல. தற்போது நடத்தப்பட்டு வரும் வான் தாக்குதல்களில் 90 வீதமானது பொதுமக்களை இலக்கு வைத்தே நடத்தப்படுகிறது. ஆனால் எங்கள் மக்கள், இந்தச் சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்கக் கூடியவர்களாக தங்கள் இடங்களில் கட்டுமானங்களை அமைக்கக் கூடியவர்களாகவும் உளவியல் தாக்கத்தை எதிர்கொள்ளக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர். ஆகையால் இந்த வான்படைத் தாக்குதல்களானது எமது மக்களிடத்தில் இனிமேலும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.

எமது போராட்டம் மக்களுக்கானது. இந்த அச்சுறுத்தல் எழுந்த காலகட்டத்தில் மக்களின் வீடுகளுக்குச் சென்று தற்காப்பு தொடர்பான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தோம். எவ்வகையான குண்டு வீசுகளை வீசினால் எவ்வகையான தாக்கங்கள் ஏற்படும் என்றும் எத்தகைய கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் விவரித்தோம். வன்னிப் பெருநிலப்பரப்பில் எங்களது நிர்வாகப் பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பதுங்கு அகழிகள் உள்ளன. வானூர்திகள் வானில் பறக்கும்போது எங்கள் குழந்தைகள் பதுங்கு அகழிகளில் இருந்துவிட்டு மீண்டும் வெளியே வந்து படிப்பைத் தொடரும் நிலை உள்ளது. பொதுஇடங்கள், சந்தைகள், மருத்துவமனைகள் ஆகியவற்றிலும் இத்தகைய ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். சிறுவர்களைப் பற்றியும் மனித உரிமைகள் பற்றியும் பேசுகிற வெளிநாட்டு அமைப்புகள் இந்த விடயங்களில் வாய்மூடிக் கொண்டிருப்பது விநோதமான விடயம். எங்கள் தலைவரின் திட்டத்தின் அடிப்படையில் மிகக் கச்சிதமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழீழ வான்படை தொடக்க நிலையில் உள்ளது. அது தனது அடுத்தடுத்த சிறகுகளை விரிக்கின்ற காலத்தை நாங்களும் எதிர்பார்த்திருக்கிறோம். ஒருநாடும் இன்னொரு நாடும் நடத்தும் வான் சமருக்கான கலங்களை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்து வருகிறது. வலுவுள்ள ஒரு வான்படை இங்கு இருப்பதால் அதனை எதிர்த்துப் போரிட வேண்டியுள்ளது என்பதை சிறிலங்கா அரசாங்கமே ஏற்றுக் கொண்டிருக்கிறது.

கிழக்குப் பகுதி என்பது ஒரு வித்தியாசமான தரையமைப்பைக் கொண்ட தனித்துவமான நிலம். அந்த நிலம், கெரில்லா வகை போராளிகளின் தாய்மடியாகும். கடந்த 25 வருடகாலமாக அங்கு எங்களுடைய படைகள் பல நடவடிக்கைகளைக் கரந்தடிப் படையாக மேற்கொண்டு வருகின்றனர். குடும்பிமலை உள்ளிட்ட கிழக்குப் பகுதியில் சிறிலங்கா இராணுவம் செறிவாக- பரவலாக இருப்பது உண்மைதான். அவர்களுடைய நடமாட்டம் அதிகம்தான். ஆனால் யார் கட்டுப்பாட்டை இழக்கிறார்கள்- கட்டுப்பாட்டுக்குள் எடுக்கிறார்கள் என்கிற விடயத்துக்குள் இவை சிக்குப்பட்டுவிட முடியாது.

கிழக்கில் யாருடைய செயற்படும் திறனைக் கட்டுப்படுத்த முடிகிறதோ அவரது செயற்படும் திறன்தான் உண்மையானதாக இருக்க முடியும். கடந்த வாரம் அம்பாறைப் பகுதியில் எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் ஊடுருவ முயன்ற சிறிலங்கா அதிரடிப்படையினரைத் தாக்கி எம்மவர்கள், படைச்சிப்பாயின் உடலையும் ஆயுதங்களையும் கைப்பற்றியிருக்கின்றனர்.

அம்பாறையைப் பிடித்துவிட்டோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிற சிறிலங்காவினால் இது தொடர்பில் பதிலேதும் சொல்ல முடியாது. கிழக்கைப் பொறுத்தவரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தரையினில் தங்களது செல்வாக்கைச் செலுத்தலாம். மறுதரப்பினரால் எந்த ஒரு சம்பவமும் இல்லாத ஒரு சூழ்நிலையை அங்கே கொண்டுவருவது என்பது சாத்தியமற்றதாகும்.

சிறிலங்கா அரசாங்கத்தின் செய்திகளின் அடிப்படையிலும் கிழக்கில் நாங்கள் மேற்கொள்கிற தந்திரோபாய நடவடிக்கைகளை அவ்வப்போது சொல்லாத நிலையிலும் மக்களின் மனதில் ஒருவித அச்சம் ஏற்படுவது வழமைதான். ஆனால் ஒருவிடயம்.. கிழக்கில் இப்போதுள்ள படையணிகளின் எண்ணிக்கையைவிட நாம் குறைவாக இருந்த காலத்திலும் எமது செயற்பாடுகள் இருந்தன. இப்போது ஒரு முழு ஒழுங்குபடுத்துதல் காலகட்டம் என்கிற அளவில்தான் நாம் தெரிவிக்க இயலும். ஆனால் சிறிலங்கா அரசாங்கமும் இராணுவமும் கிழக்கிலே சாதிப்பதாகச் சொல்லுகிற விடயம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்ப்போம்.

இந்திய அமைதிப்படை செய்ய இயலாததை சிறிலங்கா இராணுவம் செய்துள்ளது என்று கூறியிருக்கும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவுக்கு வரலாறும் தெரியவில்லை- படைத்துறை வரலாறும் தெரியவில்லை. இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் தொப்பிக்கல என்று சிங்களப் பெயர் மூலம் அழைக்கப்படுகின்ற தூய தமிழ்ப் பகுதியான குடும்பிமலை பகுதியில் இந்தியப் படையினர் முகாம் அமைத்திருந்தனர். இன்று வரை சிறிலங்கா இராணுவத்தால் அந்த இடத்துக்குச் செல்ல முடியவில்லை. எதைச் சொல்ல வருகிறார் என்று புரியவில்லை. கிழக்கில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்துள்ள குழுவினர் ஒன்றும் முதலாவது துரோகிகள் அல்ல. இதற்கும் முன்னர் துரோகிகள் அங்கிருந்தனர். அவர்கள் எதனைச் சாதித்தார்கள்? தமிழின உணர்வாளர்கர்ளை இவர்களால் காட்டிக்கொடுக்க முடியும் அவ்வளவுதான். படைப்பிரிவு ரீதியாக அக்குழுவினர் சாதிப்பார்கள் என சிங்களம் நினைத்தால் ஏமாந்துதான் போவார்கள். அவர்கள் துரோகிகள்- காட்டிக் கொடுப்பவர்கள் அவ்வளவுதான்.

கண்காணிப்புக் குழு மீண்டும் பணியைத் தொடங்க உள்ளதாகக் கூறியிருக்கிறது. அப்படியானால் அவர்கள் இவ்வளவு காலமும் அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? இதையேதான் நாம் சந்திக்கும் கண்காணிப்புக் குழு நண்பர்களிடமும் கேட்டு வருகிறேன். அவர்களினது செயற்பரப்பை சுருக்கி அவமானப்படுத்தி ஒடுக்கி அவர்களை மூலையிலே வைத்திருக்கிறது சிறிலங்கா அரசாங்கம். கண்காணிப்புக் குழுவினர் 10 பேர் கூடுதலாக வந்திருக்கிறார்கள்தான். ஆனால் அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும்.

திருகோணமலை என்பது எமது தொன்மத் தமிழர் நிலம். திருமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையே ஒரு சிங்களச் சொருகலை ஏற்படுத்த முயற்ச்க்கிறது சிங்களம். குறிப்பாக இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க சிங்களம் முயற்சிகிறது. மகாவலித் திட்டத்தை அம்லபடுத்தினால் வாகரை வரை சிங்களக் குடியேற்றம் நீளும் அபாயம் உள்ளது. சேனநாயக்க, ஜயவர்த்தனாவைபோல் சம்பூர் பகுதியை மகிந்த ராஜபக்ச சட்டம் மூலம் சிங்களக் குடியேற்றமாக்க முயற்சிக்கிறார் என்றார் இளந்திரையன்.
நன்றி>புதினம்.

Tuesday, July 03, 2007

பாதையைத் திறந்து, யுத்தநிறுத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்தி இயல்பு நிலைமையை ஏற்படுத்தாமல் அமைதிப் பேச்சு சாத்தியமே இல்லை!

ஏ9 பாதையைத் திறந்து, யுத்தநிறுத்த ஏற்பாட்டை சொல்லிலும் செயலிலும் முழு அளவில் கடைப்பிடித்து, தமிழர் தாயகத்தில் இயல்பு நிலைமையை மீள உருவாக்காமல் அமைதிப் பேச்சுக்கு சாத்தியமேயில்லை.

விடுதலைப் புலிகளின் உயர் வட்டாரங்கள் இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றன.


சமாதான நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கான முன் முயற்சிகளை மேற்கொள்ளும்படி அனுசரணைத் தரப்பான நோர்வேயை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியிருக்கின்றார் என்றும் இதனடிப்படையில் அனுசரணைத் தரப்பின் விசேட தூதுவர் ஹன்ஸன் போவர் விரைவில் கொழும்புக்கு வந்து, கிளிநொச்சி சென்று, இரு தரப்புத் தலைவர்களையும் சந்தித்து, அமைதி முயற்சிகளை மீள ஆரம்பிக்கும் எத்தனங்களை மேற்கொள்வார் என்றும்
கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்திகள் குறித்து புலிகளின் உயர் வட்டாரங்களோடு தொடர்புகொண்டு கேட்டபோதே அவை மேற்கண்டவாறு திட்டவட்டமாகத் தெரிவித்தன.

ஹன்ஸன் போவர் கிளிநொச்சிக்கு வந்தால், எமது அரசியல் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவரைச் சந்திப்பார். அமைதி முயற்சிகள் தொடர்பான எமது மாறாத இறுக்கமான நிலைப்பாட்டை அவரிடம் தெரிவிப்பார்.
யுத்தநிறுத்தத்தை மோசமாக மீறி, பல்வேறு இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, எமது தாயக பூமியை இந்த யுத்த நிறுத்தகாலத்தில் கபளீகரம் செய்து, பல்லாயிரக்கணக்கில் தமிழர்களை அவர்களது வாழிடங்களில் இருந்து இடம்பெயர வைத்து, மனிதப் பேரவலத்தை உருவாக்கிக் கொடூரத்தின் உச்சியில் நிற்கின்றன இலங்கைப் படைகள்.எதிர் விளைவுகளை இனித்தான் எதிர் கொள்ள நேரிடும் இவற்றின் விளைவுகளை பதில் நடவடிக்கைகளை இலங்கை அரசு எதிர்கொள்ளவேண்டிய வேளை இனித்தான் வரப்போகின்றது. சமாதான முயற்சிகள் என்ற பெயரால் அவற்றை இலகுவில் தடுத்துவிட முடியாது.

யுத்தநிறுத்த ஏற்பாடுகளை முழு அளவில் சொல்லிலும், செயலிலும் நடைமுறைப்படுத்தி, அதன் மூலம் தமிழர் தாயகத்தில் இயல்பு நிலைமையை ஏற்படுத்தினால் மட்டுமே அமைதி முயற்சிகளுக்கு இணங்குவோம். அதற்கான வாய்ப்பும் கிட்டும்.

யுத்தநிறுத்தத்தை தனக்குச் சாதகமா கப் பயன்படுத்திக்கொண்டு, தமிழர் தாயகத்தின் மீது தான் கட்டவிழ்த்துவிட்ட கொடூர நடவடிக்கைகளைச் சீர்செய்து நிவர்த்திப்பது மற்றும் ஏ9 பாதையை நிபந்தனையின்றி மீளத்திறப்பது உட்பட இயல்பு நிலையை மீள உறுதிப்படுத்துவதற்கு அரசுத் தரப்பு செய்யவேண்டிய கடப்பாடுகள் பொறுப்புகள் பல இருக்கின்றன.

நோர்வேக்கு விரிவாக விளக்குவோம்

அவற்றை நோர்வேத் தரப்பினர் வரும் போது அவர்களுக்கு விரிவாக விளக்குவோம். அவற்றைச் செய்வதற்குக் கொழும்பு அரசு இணங்கி முன்வந்து, செயற்படுத்தினால் மட்டுமே அமைதி முயற்சிகளுக்கான சூழல் உருவாகும். சமாதானப் பேச்சுகளும் சாத்தியமாகும். இவ்வாறு புலிகளின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.

கிளிநொச்சிக்கு விசேட தூதுவர் ஹன்ஸன் போவர் வருகை தர இருக்கிறார் என்று செய்திகள் அடிபடும் பின்னணியில், அப்படி அவர் இம்முறை வரும்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அவர் சந்திக்க வாய்ப்புண்டா? என்று அந்த உயர் வட்டாரத்திடம் கேட்டோம். இல்லை. நிச்சயமாக இல்லை. அமைதி முயற்சிகளுக்கான இயல்பு நிலைமை ஏற்படாத இந்நிலையில் போர்த் தீவிரம் நீடிக்கும் இந்நிலையில் சர்வதேசப் பிரதிநிதிகள் எவரையும் தலைவர் பிரபாகரன் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அடியோடு இல்லை என்றன அந்த வட்டாரங்கள்.
நன்றி>லங்காசிறீ