தமிழீழ விடுதலைப்புலிகள் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்தை நடத்துவதற்கு தயாரில்லை என்று நோர்வே தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தலைமையிலான விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்தையின் போது இந்த தகவல் நோர்வே தரப்பினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரட்ஸகள் குறிப்பிட்டுள்ளார்.
தனது கிளிநொச்சி விஜயம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பேச்சுவார்தைக் குழு தலைவரான அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வாவிற்று நோர்வே தூதுவர் நேற்று விளக்கமளித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்தை நடத்துவதில் அர்தம் இல்லை என்று விடுதலைப்புலிகள் கருதுவதான நோர்வே தூதுவர் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வாவிடம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மனித உரிமைகளை மீறி வருவதோடு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும் மதிக்காமல் செயல்பட்டு வருவதாகவும் இவ்வாறான நிலையில் பேச்சுவார்தைகளில் தமக்கு நம்பிக்கை இல்லை என்று தமிழ்செல்வன் கூறியதாக நோர்வே தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சமூகம் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு வழங்கி வரும் நிதி உதவிகள் மூலம் யுத்த நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ள தமிழ்செல்வன் அரசாங்கம் யுத்த நடவடிக்கைகளை கைவிட்டு பேச்சுவார்தையில் ஈடுபடுவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் பிரயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் ஹன்ஸ் பிரட்ஸ்களர் தெரிவித்துள்ளார்.
-Pathivu-
Friday, July 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment