Thursday, May 31, 2007

சிறீலங்கா அரசு கேட்கும் இராணுவ தளபாடங்களை நாம் வழங்கவுள்ளோம் - இந்தியா அறிவிப்பு!!!

சிறீலங்கா அரசு கேட்கும் ஆயுத தளபாடங்களை வழங்கப்போவதாக இந்தியா அறிவித்துள்ளது. இரண்டாவது தடவையாக இன்று சென்னையில் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதியைச் சந்தித்த இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே. நாராயணன் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆசியப் பிராந்தியத்தில் இந்தியா வல்லரசாக இருக்கும் போது அண்டை நாடான இலங்கை பாகிஸ்தானிடம் இருந்தோ அல்லது சீனாவிடமிருந்தோ இராணுவ தளபாடங்களை கொள்வனவு செய்ய இந்திய விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவுக்கான தேவைகள் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கான உதவிகளை எம்மிடமே அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இருந்தும் சிறீலங்காப் படையினருக்கு நாம் வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ளும் ஆயுதங்களை வழங்கப் போவதில்லை. தற்காப்பு ஆயுதங்களையே வழங்கவுள்ளோம் என எம்.கே. நாராயணன் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த கடற்ரோந்தே சிறந்த வழிமுறை என நினைக்கிறேன். தமிழக மீனவர்கள் கடல்லெல்லையைத் தாண்டி அத்துமீறி உள்நுழைந்தாலும் அவர்களை சுடவேண்டாம் என இலங்கை அரசிடம் வலியுத்தியுள்ளோம். இதற்கு இலங்கை அரசும் இணங்கியுள்ளது எனவும் இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே. நாராயணன் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி>பதிவு.

யாழ். நகரை மீட்க புலிகள் பெரும் திட்டம்: இந்தியாவிடம் ஏவுகணை கேட்கும் இலங்கை!

யாழ்ப்பாணம் தீபகற்பத்தை ராணுவத்திடமிருந்து விடுவிக்க விடுதலைப் புலிகள் பெரும் திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், விடுதலைப் புலிகளை சமாளிக்க விமானங்களைத் தாக்கும் ஏவுகணைகளை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது இலங்கை. இந்தியா தர மறுத்தால், பிற நாடுகளை அணுகி ஏவுகணைகளைப் பெறவும் அது திட்டமிட்டுள்ளது.

இலங்கை அரசுக்கும், படைகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் விடுதலைப் புலிகள், தற்போது விமான பலத்தையும் பெற்றுள்ளனர். மூன்று முறை வெற்றிகரமான தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர். இதனால், இலங்கை அரசுக்கும், அந்நாட்டு பாதுகாப்புப் படைகளுக்கும் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் தீபகற்பத்தை ராணுவத்திடமிருந்து மீட்க விடுதலைப் புலிகள் பெரும் திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. விடுதலைப் புலிகள் வசம் இருந்த யாழ்ப்பாணம் 2002ல் அரசுப் படைகள் வசம் வந்தது.

தற்போது யாழ் தீபகற்பத்தின் பெரும்பகுதியை அரசுப் படைகள் வைத்துள்ளன. அங்கு குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தினரின் பிடியில் சிக்கி தமிழர்கள் சொல்லொணா அவதிகளை அனுபவித்து வருகின்றனர்.

செயற்கையான உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தியுள்ள இலங்கை அரசு தமிழர்களை அங்கிருந்து வெளியேறவும் விடாமல் கொடுமைப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் விமான பலத்துடன் முன்பை விட வலுவாக திகழும் விடுதலைப் புலிகள், யாழ்ப்பாணம் பகுதியை ராணுவத்திடமிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதுதொடர்பான திட்டம் பிரபாகரன் தலைமையில் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தை மீட்கும் இறுதிப் போராக இதை திட்டமிட்டுள்ள புலிகள், இதற்காக சில உயிரிழப்புகளை தமிழர்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளனர். உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் யாழ்ப்பாணத்தை மீட்பதற்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்துள்ளார். அதை பிரபாகரனும் அங்கீகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

விரைவில் யாழ் தீபகற்பத்தை மீட்க புலிகள் பெரும் போரில் குதிக்கக் கூடும் என்று கூறப்படுவதால் இலங்கையில் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் விமான தாக்குதலை சமாளிக்க, விமானம் தாக்கும் ஏவுகணைகளை தர வேண்டும் என இந்தியாவிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அதிபர் ராஜபக்க்ஷேவின் தம்பி கோத்தபயா ராஜபக்ஷே டெல்லி வந்துள்ளார்.

அவரது பயண விவரம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. டெல்லி வந்துள்ள அவர் தாழ்வான உயரத்தில் பறக்கும் விமானங்களைக் கண்டறியும் ரேடார்கள், தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் ஆகியவற்றை இந்தியா வழங்க வேண்டும் என இலங்கை அரசு, இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், பாதுகாப்புத்துறை செயலாளர், ராணுவ, கடற்படை, விமானப்படைத் தலைமைத் தளபதிகள் உள்ளிட்டோரை படு ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளார் கோத்தபயா ராஜபக்ஷே.

இப்பேச்சுவார்த்தை விவரங்களை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஒரு வேளை இந்தியா இந்த உதவிகளைச் செய்ய மறுத்தால் பிற நாடுகளிடமிருந்து இவற்றைப் பெற இலங்கை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இனியும் இந்தியாவை நம்பி இருக்கப் போவதில்லை. இந்த உதவிகளை இந்தியா செய்யாவிட்டால் பாகிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளின் உதவியை நாட இலங்கை தயங்காது என்றும் இந்தியத் தரப்பிடம் கோத்தபயா திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

செய்தி மூலம்: தற்ஸ் தமிழ்

Tuesday, May 29, 2007

வான்புலிகளின் வான் தாக்குதலுக்கே இப்படியென்றால்? வான் சண்டைகளுக்குத் தாயாராகிவிட்டால்?

-கேசவன்-

விடுதலைப்புலிகளிடம் விமனத் தாக்குதல் நடத்துகின்ற அளவுக்குப் பலம் கிடையாது அப்படித் தாக்குதல் நடத்த வந்தால் கூட அடுத்த நொடியிலேயே சுட்டு வீழ்த்திவிடுவோம். என அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது ஆனால் இப்போது புலிகள் வான் வழியாக வந்து தாக்குதல் நடத்திவிட்டுப் பத்திரமாகச் சென்று தரையிறங்கியிருக்கின்றனர் இந்தத் தாக்குதல் புலிகளின் வான்படைப்பலம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

முன்னர் புலிகளிடம் இருக்கும் விமானங்கள் எந்த ரகத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்ற கேள்வி இருந்து வந்தது. ஆனால் கட்டுநாயக்கா தாக்குதலுக்குப் பின்னர் புலிகளிடம் இருப்பது செக் நாட்டுத் தயாரிப்பான ணுடுஐNணு143டு விமானங்களே என்பது திட்டவட்டமாக உறுதியாகியிருக்கிறது. இந்த விமானங்களைப்பயன்படுத்திப் புலிகளால் எத்தகைய தாக்குதல்களை நடத்தி அழிவுகளை ஏற்படுத்த முடியும் என்ற கேள்விக்கு விடைகாண்பதே அரசாங்கத்துக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.

புலிகளால் விமானங்களைப் பயன்படுத்தி தற்கொலைத்தாக்குதல்களை மட்டுமே நடத்த முடியும். என்றும் அப்படியான தாக்குதல்களைக்கூட ஒரிரண்டு தடவைக்குமேல் நடத்த முடியாது என்றுமே இலங்கை அரசு கருதியிருந்தது.

ஆனால் புலிகளோ கட்டுநாயக்க வரை வந்து குண்டுத்தாக்குதல்களை நடத்தி விட்டுச் சென்றிருக்கிறார்கள். இது புலிகளின் வான்படைப்பலம் ஏற்கனவே கணிக்கப்பட்டதையும் விட அதிகமானதென்பதை எடுத்துக் காட்டியிருக்ககிறது. புலிகளால் விமானப்படைப் ஒன்று அமைக்கப்பட்டதே வியப்புடன் பார்க்கப்படும் நிலையில் அவர்கள் தம்மிடமுள்ள விமானங்களைத் தாக்குதலுக்காக மட்டும் பயன்படுத்தி விட்டு விமானிகளுடன் அவற்றை இழப்பதற்கு தயாராக இல்லை என்ற செய்தியே முக்கியத்துவமாக நோக்கப்படுகிறது

புலிகள் பெருமளவு பணத்தைக்கொடுத்து பல்வேறு தடைகளுக்கு மத்தியில் கொள்வனவு செய்த விமானங்களையும் மிகுந்தசிரமங்களின் மத்தியில் உருவாக்கி பயிற்றுவித்த விமானிகளையும் தற்கொலைத் தாக்குதலுக்காகப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்த்தது தவறானதே.

இதனால்தான் புலிகளின் விமானத் தாக்குதல் பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. புலிகளிடமுள்ள விமானங்கள் குண்டுவீச்சுக்களுக்கெனத் தயாரிக்கப்பட்டவையல்ல ஆயினும் அவர்கள் சுய முயற்சியால் தான் குண்டு வீச்சுத் தொழில்நூட்பத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

புலிகளிடமுள்ள குண்டுவீச்சு தொழில்நூட்பமானது நவீனமாயமானதாக இல்லாவிடினும் அவர்களால் துல்லியமான தாக்குதலை நடத்த முடிந்திருக்கிறது. இப்போது அரசாங்கத்திற்கும் விமானப்படைக்கும் உள்ள முக்கிய பிரச்சினை அதுவல்ல வான்புலிகள் தனியே குண்டுத்தாக்குதல்களை நடத்துகின்ற அளவுக்கு மட்டும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனரா அல்லது அதற்கும் அப்பால் வான் சண்டைகளை நடத்துகின்ற அளவுக்குத் திறன் பெற்றிருக்கிறார்களா எனபதே இலங்கை அரசுக்கு விடைகாண வேண்டிய முக்கிய வினாவாக உள்ளது

இலங்கை அரசுக்கு இந்தச் சந்தேகம் ஏற்பட்டுள்ளமைக்கு பிரதான காரணமாக இருப்பது கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீதான தாக்குதலுக்கு வந்த புலிகளின் இரண்டு விமானங்களில் ஒன்றே குண்டுத் தாக்குதல்களை நடத்தியமை ஆகும்.

புலிகளால் தாக்குதலுக்குப் புறப்பட்ட விமானங்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. இதன்படி விமானத்தின் அடிப்பகுதியில் பின் சக்கரங்களுக்கிடையில் நான்கு குண்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. இவை ஒவ்வென்றும் சுமார் 25 கிலோ எடை கொண்டதாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. உள்ளுரிலேயே இந்தக்குண்டுகள் வடிவமைக்கப்பட்டதும் உறுதியாகியிருக்கிறது.

கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்த இரண்டு விமானங்களில் வந்த புலிகள் தலா நான்கு வீதமாக எட்டுக்கொண்டுகளையல்லவா வீசியிருக்கவேண்டும்? ஆனால் நான்கு குண்டுகள் மட்டுமே வான்புலிகளால் வீசப்பட்டன இதில் மூன்று குண்டுகள் வெடித்துச் சேதங்களை ஏற்படுத்தின ஒன்று மட்டுமே வெடிக்கவில்லை. இதில் ஒரு விமானம் மட்டுமே தாக்குதல் நடத்தியது உறுதியாகிறது. அப்படியானால் இரண்டாவது விமானம் எதற்காக வந்தது என்ற கேள்வி எழுகிறது புலிகளை பொறுத்தவரையில் மிகவும் பெறுமதி வாய்ந்த சொத்தான விமானம் ஒன்றையும் விமானிகள் இருவரையும் தேவையில்லாத ஒரு களத்துக்குள் அனுப்பியிருக்க மாட்டார்கள்.

எனவே கட்டுநாயக்கா தாக்குதலுக்காக வந்த மற்றைய விமானத்தையும் இராணுவ நோக்கங்களின்றிப் புலிகளால் அனுப்பப்பட்டிருக்க வாய்ப்புகளில்லை. கட்டுநாயக்க மீதான தாக்குதலில் அதியுயர் விளைவுகளை எதிர்பார்த்திருக்கக் கூடிய புலிகளின் தலைமை இரு விமானங்களின் மூலமும் ஆகக் கூடியளவுக்கு இழப்புக்களை ஏற்படுத்தவே திட்டமிட்டிருக்கும்.

ஆனால் இரண்டு விமானங்களை அனுப்பி நான்கு குண்டுகளை மட்டும் போடும் அளவுக்குத் திட்டமிடல் அமைந்துள்ளதென்றால் அதில் ஏதோ ஒரு உட்காரணம் இருந்திருக்க வேண்டும.; குண்டுத்தாலுக்காக வந்த விமானத்துக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்காக மற்றைய விமானம் வந்திருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது வலுப்பெறுகிறதல்லவா?

பொதுவாக குண்டுவீச்சுக்களை நடத்தச் செல்லும் விமானங்களுக்கும் ஆபத்தான இடங்களில் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் விமானங்களுக்கும் போர் விமானங்கள் மூலம் பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கமே 1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இந்திய விமானங்கள் உணவுப்பொட்டலங்களை வீச வந்தபோது இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரகப் போர் விமானங்கள் அவற்றுக்குப் பாதுகாப்பளித்தமை நினைவிருக்கலாம் இதுபோன்று புலிகளின் குண்டு வீச்சு விமானத்துக்குப் பாதுகாப்பாக இன்னொரு விமானம் வந்திருக்கலாம் ஆனால் ஒரு விமானத்துக்குப் பாதுகாப்புக் கொடுப்பதற்கான விமானம் சாதாரணமானதாக இருக்கமுடியாது.

வானில் சண்டயிடக் கூடிய திறன் அந்த விமானத்துக்கு இருப்பது அவசியம் விமானத்தில் அப்படிப்பட்ட வசதிகள் இருப்பினும் விமானிகளுக்குப் போதிய பயிற்சியும் அனுபவமும் தேவை இந்த நிலையில் புலிகளிடம் இருக்கின்ற இலகு ரக விமானங்கள் வன் சண்டைகளுக்கு ஏற்றதா? வான்புலிகளால் வான் சமர்களை நடத்தமுடியுமா? ஏன்ற கேள்விகள் எழுகின்றன.

புலிகளிடமுள்ள ZLIN Z 143 L ரக விமானங்கள் அடிப்படையில் பயிற்சி மற்றும் சாகசங்களுக்காகவே தயாரிக்கப்பட்டவையாகும் இந்த விமானங்களால் கிபிர் மிக் போன்ற போர் விமானங்களுக்கெதிராகச் சண்டையிட முடியாவிட்டாலும் சராசரி வேகமும் ஆற்றலும் இருக்கின்றன. கடந்த பல வருடங்களாகவே இரகசியமாக வான்புலிகளைப் பயிற்றுவித்து வந்த புலிகள் அவர்களை வான் சண்டைகளுக்காகத் தயார்படுத்தியிருக்க மாட்டார்களா?

புலிகள் தம்மிடமுள்ள இலகு ரக விமானங்களில் 12.7 மி.மீ விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளையோ அல்லது 14.5 மி.மீ சிறு பீரங்கிகளையோ பொருத்தி வான் சண்டைக்களுக்காகத் தயார்படுத்தியிருக்கலாம் சாதாரணமாக குண்டு வீச்சுத் தொழில் நூட்பத்தையே சுயமாக கண்டறிந்த புலிகளுக்கு இது ஒன்றும் கடினமான காரியமாக இருக்கது.

இப்படியாக வன் சண்டைககளுக்காகத் தயார்படுத்தப்பட்ட விமானத்தில் குண்டுகளை ஏற்றிச் சென்றிருக்க முடியாது ஆகக் கூடியது 240 கிலே எடையையே சுமக்கக் கூடிய இந்த விமானத்தில் கனரக துப்பாக்கிகளைப் பொருத்தினால் குண்டுகளை எடுத்துச்செல்ல முடியாது. இதனால் கட்டுநாயக்க தாக்குதலுக்காக வந்த விமானத்துக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் நோக்கில் மற்றைய விமானம்வந்திருக்கக்கூடும்.

2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வவுனியாவுக்கு வடக்கே விஞ்ஞானகுளத்தில் இலங்கை விமானப்படையின் ஆளில்லா வேவுவிமானம வீழ்ந்து நொருங்கிய போது அது மற்றொரு விமானத்தால் சுடப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.

இப்போது இந்தச் சந்தேகம் மேலும் வலுப்பெற்றிருக்கிறது. புலிகள் வான் தாக்குதலை நடத்தியதற்கே ஆடிப்போன அரசு அவர்கள் வான் சண்டைகளை நடத்துகின்ற அளவுக்கு வளர்ந்து விட்டார்கள் என்ற செய்தி உறுதியானால் எப்படித்தான் தாங்கிக் கொள்ளப்பபோகிறதோ தெரியவில்லை.
நன்றி>பதிவு.

Monday, May 28, 2007

நெடுந்தீவு ராடார் நிலையம் படையினருக்கு பெரும் இழப்பு: ஏஎஃப்பி.

இடம்பெற்று வரும் மோதல்களில் இருதரப்பும் இழப்புக்களை சந்தித்துள்ளனர். எனினும் நெடுந்தீவில் இருந்த கரையோர ராடார் நிலையத்தின் இழப்பே படையினருக்கான பெரும் இழப்பாகும். இந்த ராடார் நிலையம் இந்தியாவிற்கும், சிறிலங்காவிற்கும் இடையிலான ஒடுக்கமான பாக்கு நீரிணையை கண்காணிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி ஆய்வில் அமல் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.


அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

புதிதாக இடம்பெற்று வரும் வான், கடல் தாக்குதல்கள் அரச படையினரும், விடுதலைப் புலிகளும் ஒரு பெரும் சமருக்கு தயாராகி வருவதையே கட்டுகின்றது. அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்த பின்னர் உக்கிரமடைந்த மோதல்களால் சிறிலங்காவில் 5,000 மக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் கடல், வான் தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக சிறிலங்காப் படையினர் மிக்-29 ரக மிகை ஒலி வானூர்திகளையும், எம்ஐ-24 ரக உலங்குவானூர்திகளையும், கடற்படையின் கப்பல்களுக்கான கனரக பீரங்கிகளையும் கொள்வனவு செய்ய எண்ணியுள்ளனர்.

2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைதி முயற்சிகள் இறந்துவிட்டன. அமைதி முயற்சிகளுக்கு சிறியளவிலான சந்தர்ப்பமே உண்டு. போர்நிறுத்தம் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை. எதிர்வரும் மாதங்களில் நாம் அதிக மோதல்களை காணலாம் என மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தை சேர்ந்த சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஒரு மாதமாக மந்தமாக இருந்த களநிலைமைகள் கடந்த வாரம் விடுதலைப் புலிகளால் கேந்திர முக்கியத்துவம் மிக்க நெடுந்தீவில் நடத்தப்பட்ட தாக்குதலால் முடிவுக்கு வந்துள்ளது.

இருதரப்பும் இழப்புக்களை சந்தித்துள்ளனர், எனினும் கரையோர ராடார் நிலையத்தின் இழப்பே படையினருக்கான பெரும் இழப்பாகும். நெடுந்தீவில் இருந்த ராடார் நிலையம் இந்தியாவிற்கும், சிறிலங்காவிற்கும் இடையிலான ஒடுக்கமான பாக்கு நீரிணையை கண்காணிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த தாக்குதலின் மூலம் விடுதலைப் புலிகள் கடல்வழி தாக்குதல் திறனை நிரூபித்துள்ளனர் என பாதுகாப்பு பத்தி எழுத்தாளர் நமால் பெரேரா தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டை கைப்பற்றும் ஒரு நடவடிக்கையே நெடுந்தீவு தாக்குதல். யாழை கைப்பற்றும் தமது திட்டத்தை விடுதலைப் புலிகள் கைவிடவில்லை என்பதன் அறிகுறி இது என டெய்லி நியூஸ் தனது பாதுகாப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது.

தீவகத்தின் மீது தொடர்ச்சியான தாக்குத்கள் நிகழுமாயின் அது யாழ். குடாநாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகும். விடுதலைப் புலிகள் இராணுவத்தின் பலத்தை பரவலடைய செய்கின்றனர். இது போரை பலவீனப்படுத்தும் என ஓய்வுபெற்ற பிரிக்கேடியர் ஜெனரல் விபுல் பொரெயூ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தங்களிடம் உள்ள Zlin-143 ரக வானூர்திகள் மூலம் நான்கு தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர். இது போரை வேறு பரிமாணத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

சிறிலங்கா அரசும், விடுதலைப் புலிகளும் இராணுவ வெற்றிகள் சாத்தியமானது என நம்பவைக்க முற்படுகின்றனர். இதனால் எதிர்வரும் வாரங்களில் வன்முறைகள் அதிகரிக்கலாம் என இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

படையினர் தமது நடவடிக்கைகளை நிறுத்தாத போது தாம் பேச்சுக்களுக்கு செல்லப் போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் 2006 ஆம் ஆண்டில் மிகவும் மோசமான நிலையை அடைதுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் இருதரப்பினதும் மோதல்களுக்கு இடையில் பொதுமக்கள் சிக்கிக் கொள்ளலாம் எனவும், நீதிக்கு புறம்பான படுகொலைகள், சிறார் படைச்சேர்ப்பு, கடத்தல்கள், பலவந்தமாக காணாமல் போதல், மனித உரிமை மீறல்கள் என்பன அதிகரித்து வருவதாக அது தனது அச்சத்தை வெளியிட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டின் முடிவில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளதுடன், 215,000 மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களும், ஏனைய மனித உரிமை அமைப்புக்களும் தெரிவித்துள்ளன.

சிறிலங்காவில் பெருமளவில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதனை தடுப்பதற்கான ஒரே வழி எல்லா தரப்பினரும் தமது வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதேயாகும் என பிரித்தானியாவின் சிறிலங்காவிற்கான தூதுவரான டொமினிக் சில்கொட் தெரிவித்துள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Sunday, May 27, 2007

சிறிலங்காவிற்கான அனைத்துலகத்தின் உதவிகள் நிறுத்தப்பட வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்.

சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசு மனித உரிமை மீறல்களை தடுக்காது போனால் அரசுக்கான அனைத்துலகத்தின் உதவிகளை அந்த நாடுகளின் ஊடாக தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்போவதாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.


அந்த அமைப்பின் ஆசியப் பிராந்திய இயக்குனர் பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளதாவது:

எமது அமைப்பு சிறிலங்கா தொடர்பான விடயங்களில் செயற்திறனுள்ள நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, யப்பான் உட்பட பல நாடுகளுடன் சிறிலங்காவில் உள்ள தற்போதைய நிலை தொடர்பாக தொடர்புகளை கொண்டுள்ளது.

எனினும் நாம் சிறிலங்காவிற்கான உதவிகளை நிறுத்தும்படி அவர்களை இன்றுவரை கோரவில்லை. மனித உரிமைகள் தொடர்பாக கொழும்பு மீது அதிக கவனத்தை செலுத்தி அங்கு சட்ட ஒழுங்கை நிலைநாட்ட அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

மனித உரிமைகளை மதிப்பதற்கும் பொதுமக்களின் மீதான வன்முறைகளை குறைப்பதற்கும் இணைத்தலைமை நாடுகளும், ஏனைய நாடுகளும் அரசு மற்றும் விடுதலைப் புலிகள் மீது அழுத்தங்களை மேற்கொள்ள வேண்டும். நிதி உதவியானது இத்தகைய அழுத்தங்களில் ஒன்று. சில நாடுகள் இந்த வழியில் செல்வதற்கு தற்போது தீர்மானித்துள்ளன.

மனிதாபிமான உதவிகளை நிறுத்துவதை நாம் எதிர்க்கின்றோம் ஏனெனில் அது பொதுமக்களை பாதிக்கலாம். எனினும் துரதிர்ஸ்டமாக அனைத்துலக சமூகத்தினால் மேற்கொள்ளப்படும் தற்போதைய அணுகுமுறைகள் அங்கு நடைபெறும் பலவந்தமாக காணாமல் போகச் செய்தல், கடத்தல்கள், எழுந்தமானமாக தடுத்து வைத்தல், கண்மூடித்தனமான வான் குண்டுவீச்சுக்கள், பலவந்தமாக மீளக்குடியமர்த்துதல், ஊடகத்துறையின் மீதான கட்டுப்பாடுகள் போன்றவற்றில் சிறிய தாக்கத்தையே உண்டுபண்ணியுள்ளது என்றார் அவர்.
நன்றி>புதினம்.

Saturday, May 26, 2007

நெடுந்தீவில் இருந்த முக்கிய ராடாரை விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்:

கடந்த வியாழக்கிழமை அதிகாலை நெடுந்தீவு ராடார் நிலையத்தின் மீது தாக்குதலை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள், அங்கிருந்த முக்கியமான ராடார்களையும், ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர் என கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.


கொழும்பு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்:

இந்த தாக்குதலை அடுத்து யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி, 51 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியான பிரிக்கேடியர் லிஓநாட் மார்க்கை தொடர்பு கொண்டு நிலைமை தொடர்பாக விவாதித்ததை தொடர்ந்து அவர் தனது பிரிக்கேட் கட்டளை அதிகாரிகளை தொடர்பு கொண்டு நெடுந்தீவை மீட்பதற்கான எதிர் நடவடிக்கைகள் குறித்து திட்டங்களை வகுத்திருந்தார்.

நெடுந்தீவை மீட்பதற்கு இரு பற்றலியன் துருப்புக்கள் தயார்படுத்தப்பட்டன. அந்தப் பகுதிக்கு காங்கேசன்துறை கடற்படைத்தளத்தில் இருந்து 10 டோராக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் மேற்கு கரையிலான நடமாட்டங்களை கண்காணித்த ராடார் நிலை அழிக்கப்பட்டுள்ளது. சமர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் நடுக்கடலில் உள்ள தமது கப்பலில் இருந்து ஆயுதங்களை இறக்கும் திட்டத்தையும் விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர்.

நெடுந்தீவு இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கு மிக அருகில் உள்ளதனால் அது படையினரின் மேற்கு கரையோர கண்காணிப்புக்களுக்கு மிகவும் கேந்திர முக்கியத்துவமானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Friday, May 25, 2007

நெடுந்தீவு தாக்குதல்- யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதற்கான அறிகுறி:

யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர் என்பதனையே நெடுந்தீவுத் தாக்குதல் உணர்த்துகின்றது. அங்கு நிலைமைகள் மோசமடைந்து வருகின்றன என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இன்று (நேற்று) அதிகாலை நெடுந்தீவுப் பகுதியில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் அவர்களின் திட்டதிற்கான ஒரு தகவல். விடுதலைப் புலிகள் நெடுந்தீவை தக்க வைத்திருந்தால் அது குடாநாட்டின் வடபகுதிக்கான விநியோகங்களை பெருமளவில் பாதிக்கும்.

விடுதலைப் புலிகள் பூநகரியில் இருந்து 130 மி.மீ பீரங்கிகள் மூலம் பலாலித் தளத்தை தாக்கியிருந்தனர். அது 27 கி.மீ தூரவீச்சு கொண்டது.

இந்த பீரங்கித் தாக்குதலின் போது படையினர் தமது பாதுகாப்பைத் தேடி ஓடியுள்ளனர். அவர்கள் பதுங்கு குழிக்குள் பதுங்கும் போது அவர்களால் தரையின் ஒரு பகுதியையே பார்க்க முடியும். வானத்தைப் பார்க்க முடியாது இது தான் அன்று பலாலியில் நடந்தது. முதலில் பீரங்கித் தாக்குதலை நடத்திவிட்டு பின்னர் வான்தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தியிருந்தனர்.

விடுதலைப் புலிகளிடம் இரண்டுக்கும் மேற்பட்ட வானூர்திகள் உள்ளன. அவர்களின் வானூர்திகள் கொழும்புக்கு வந்து தாக்குதலை நடத்திவிட்டு பாதுகாப்பாக திரும்பிவிட்டன. அவர்களால் கொழும்புக்கு வந்து குண்டுவீச முடியுமானால் மிக இலகுவாக யாழ். குடாநாட்டுக்கும் செல்ல முடியும். அது அவர்களின் தளத்தில் இருந்து 10 நிமிட பயணத்தூரத்தில் உள்ளது. இது தான் பலாலியினதும் அங்கு உள்ள படையினரினதும் நிலைமைகள்.

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் மேலும் ஒரு தடவை வானில் எழுந்தால் அவை அழிக்கப்படும் என பாதுகாப்பு விவாகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார். ஆனால் இது தொடர்பாக அவரால் உத்தரவாதம் தர முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார் சரத் முனசிங்க.

மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க சிறிலங்கா இராணுவத்தில் 30 வருடங்களாக பணியாற்றி இருந்ததுடன், யாழ். குடாநாட்டின் கட்டளை அதிகாரியாகவும், இராணுவத்தின் பேச்சாளராகவும் பணியாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

Wednesday, May 23, 2007

தமிழக மக்களின் செய்தி அறியும் சுதந்திரத்தை தடுக்கிறார்கள், கியூ ப்ராஞ்ச் போலீஸார்.




மீண்டு வந்த மீனவர்கள்... விலகாத மர்மங்கள்!

அறுபத்தெட்டு நாட்களுக்குப் பிறகு மீனவர்கள் மீண்டு வந்தது குமரியில் சந்தோஷத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டபோதும், அவர்கள் கடத்தப்பட்டது சம்பந்தமான மர்மம் இன்னும் முழுமையாக விலகியபாடில்லை.

ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் மாயமான பன்னிரண்டு மீனவர்களைக் கடத்தியது சிங்கள ராணுவமா? விடுதலைப்புலிகளா? என பட்டிமன்ற ரேஞ்சுக்கு விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. தமிழக டி.ஜி.பி. முகர்ஜி, ‘கடத்தியது விடுதலைப்புலிகள்தான்’ என உறுதியாக கருத்துத் தெரிவித்து வந்தார். கடந்த மார்ச் ஆறாம் தேதி எப்படி மர்மமாக அவர்கள் கடத்தப்பட்டார்களோ, அதேபோல கடந்த பதினெட்டாம் தேதி இரவு ராமேஸ்வரம் கடல் பகுதியில் கொண்டு வந்து விடப்பட்டிருக்கிறார்கள்.

மீண்டு வந்த மீனவர்களில் பத்துப் பேர் குமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். கேரளாவைச் சேர்ந்த ஒருவர் மட்டும் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

மீனவர்கள் விடுதலையானதுமே இந்தக் கடத்தல் நாடகத்தின் மர்மங்கள் விலகும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், ராமேஸ்வரம் வந்திறங்கிய மீனவர்கள் கியூ ப்ராஞ்ச் போலீஸாரின் இறுகிய வளையத்தைவிட்டு வெளியே வந்து பத்திரிகையாளர்களுடன் சகஜமாகப் பேச முடியவில்லை. சென்னையில் முதலமைச்சரை சம்பிரதாயமாக அவர்கள் சந்தித்தபோதும், குமரியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜோதிநிர்மலா அவர்களை வரவேற்றபோதும் கிளமென்ஸ் என்ற மீனவர் மட்டுமே நிருபர்களிடம் பேசினார்.

அவர் கூறுகையில், ‘‘எங்களைக் கடத்தியவர்கள் முதலில் புரியாத மொழியில் பேசினார்கள். ஆனால், காட்டுக்குள் சிறைவைத்திருந்தபோது தமிழில்தான் பேசினர். தவிர, புலிகள் விமானத் தாக்குதல் நடத்தியபோது, இவர்கள் பட்டாசு வெடித்தார்கள். எனவே, எங்களைக் கடத்தியது விடுதலைப்புலிகள்தான்’’ என்றார், தீர்க்கமாக. அவரோடு மீண்டு வந்த மற்ற மீனவர்கள் எல்லாம் ஏனோ நிருபர்களிடம் பேசுவதையே தவிர்த்தனர். மீண்டு வந்தவர்களில் பதினான்கு வயதுச் சிறுவனான அனிஸ்டன் மட்டும் பத்திரிகையாளர்களின் பகீரத முயற்சிக்குப் பின் வாயைத் திறந்தான். ‘‘எங்களை விடுவிக்கும் முன்பாக கண்ணைக்கட்டி அழைத்து வந்தனர். அப்போது துப்பாக்கிச்சூடு நடக்கும் சத்தம் கேட்டது. உடனே எங்களைக் கடத்தியவர்கள் ஏதோ புரியாத மொழியில் பேசி துப்பாக்கிச் சூட்டை நிறுத்தச் செய்தனர். எனவே, கடத்தியது சிங்கள கடற்படையாக இருக்கும்’’ என போட்டுடைத்திருக்கிறான் அனிஸ்டன்.

அதற்குமேல் அவகாசம் கொடுக்காமல் அத்தனை மீனவர்களையும் கியூ ப்ராஞ்ச் போலீஸார் தங்கள் வசப்படுத்திக் கொண்டனர். அனைவரையும் பத்திரமாக வீடுவரை கொண்டு போய் விட்ட போலீஸார், மீடியாக்களிடம் அதிகம் பேச வேண்டாம் என உத்தரவு போட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். (இறுதியில், சர்ச்சைக்குரிய பேட்டியைக் கொடுத்த அனிஸ்டனைக் காண, நாம் அவனது இல்லத்திற்குச் சென்றோம். அவன் மீண்டு வந்ததற்கான நேர்ச்சைகளைச் செய்வதற்காக ஏதோ வெளியூர் கோயிலுக்கு குடும்பத்துடன் போயிருப்பதாக அக்கம்பக்கத்தினர் கூறினர்.)

இதற்கிடையே, மீண்டு வந்த மீனவர்களை வரவேற்று உபசரித்த குமரி டி.ஆர்.ஓ. ஜோதி நிர்மலாவின் கண்களிலும் பளிச்சென பட்டது அனிஸ்டன்தான். ‘தம்பி, இங்கே வா’ என அனிஸ்டனை அழைத்து அவரது வயது விவரங்களைக் கேட்ட டி.ஆர்.ஓ., மீனவப் பிரதிநிதிகளுக்கு ஒரு மினி லெச்சரே கொடுத்தார். ‘இந்தப் பதினான்கு வயதுச் சிறுவனை கடலுக்கு அனுப்பியிருக்கிறீர்களே! தயவு செய்து இனியாவது இப்படிச் செய்யாதீர்கள். எல்லா கடலோர கிராமங்களிலும் இதை ஓர் அறிவிப்பாகச் செய்யுங்கள்’ என வேண்டுகோள் விடுத்தார்.

பதிலுக்கு அனிஸ்டனின் குடும்பச் சூழல் பற்றி டி.ஆர்.ஓ.விடம் மீனவப் பிரதிநிதிகள் சொன்ன தகவல்கள் படுசோகமானவை. 1992_ம் ஆண்டில் அனிஸ்டனின் தந்தை பர்த்தலோமை, இதேபோல் கடலில் காணாமல் போய் 57 நாட்களுக்குப்பிறகு மீண்டு வந்தாராம். அதில் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட அவர், அதன்பிறகு கடல்தொழிலுக்குச் செல்வதில்லை. எனவே, தனது இளைய தம்பிகள் இருவர் மற்றும் பெற்றோரைப் பாதுகாக்கவே அனிஸ்டன் கடல் தொழிலுக்கு வந்தாராம்.

இந்த நிலைமைகளைக் கேள்விப்பட்ட குளச்சல் எம்.எல்.ஏ. ஜெயபால், அனிஸ்டனின் படிப்புச்செலவை ஏற்பதாகக் கூறியிருக்கிறார். அவரது குடும்பத்திற்கும் அரசு உதவ வேண்டும் என மீனவப் பிரதிநிதிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர். வீடு திரும்பிய அனிஸ்டனை, அவரது பெற்றோர் உச்சிமோந்து ஆனந்தக்கண்ணீர் பெருக வரவேற்ற விதம் நெகிழ வைப்பதாக இருந்தது.

இதேபோல கோடிமுனை, கொட்டில்பாடு கிராமங்களில் பட்டாசு வெடித்து இந்த மீனவர்களுக்கு உற்சாக வரவேற்புக் கொடுத்தனர். ‘‘பத்து மீனவர்கள் மீட்கப்பட்டதால் பத்துக் குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுவிட்டன’’ என நெகிழ்வோடு கூறினார், மீனவப்பிரதிநிதி ஒருவர்.

ச. செல்வராஜ்

- குமுதம் ரிப்போர்ட்டர், May 27, 2007

Monday, May 21, 2007

கடத்தியது சிங்களப்படை; விடுதலைப் புலிகள் அல்ல.

கடத்தியது சிங்களப்படை; விடுதலைப் புலிகள் அல்ல. செய்தியை படிக்க செய்தியின் மீது அழுத்தவும்.

Sunday, May 20, 2007

மீனவர்களைக் கடத்தியது சிறீலங்கா கடற் படையினரே! கடத்தப்பட்ட சிறுவன் வாக்குமூலம்.


கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 கடற்தொழிலாளர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் காணமல் போயிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இராமேஸ்வரம் வடக்கே உள்ள பிசாசுமுனையில் மற்றும் தங்கச்சிமடத்தில் கரைதிரும்பியிருந்தனர்.

இந்த நிலையில் கரைசேர்ந்த மீனவர்கள் உடனடியாக தமிழக காவல்துறையினரால் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தமிழக முதல்வர் கலைஞர் கருனாநிதியைச் சந்தித்த பின்னர் தமிழக காவல்துறை மற்றும் புலனாய்வுத்துறையினரின் விசாரணையின் பின்னர் அவர்களது சொந்த இடங்களுக்குத் அனுப்பி வைக்கப்பட்டனர்.

விசாரணையின் பின்னர் விடுதலைப் புலிகள் தான் மீனவர்களைக் கடத்திச் சென்றதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்திருந்த நிலையில் கடத்தப்பட்டிருந்த சிறுவனான 13 அகவையுடைய அனித்தன் தங்களைக் கடத்தியது விடுதலைப் புலிகள் அல்ல சிறீலங்கா கடற்படையினரே கடத்திச் சென்றதாக மக்கள் தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார்.

சிறுவனின் இந்த வாக்குமூலம் பலரையும் வியப்புக்குள் ஆழ்தியதோடு பெரும் பரபரப்பையும் ஏற்படுதியுள்ளது.

மூகமூடியணிந்த நபர்கள் தங்களை படகு மூலம் கடத்திச் சென்று சிறீலங்கா கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். அங்கு அவர்கள் தங்களை சிறீலங்கா கடற்படையினர் என கூறிக்கொண்டார்கள் அத்துடன் தங்களைக் கடத்திச் சென்ற முகமூடிதாரிகளும் சிறீலங்காப் கடற்படையினருடன் இணைந்திருந்தார்கள்.

கடத்திச் செல்லப்பட்ட நாங்கள் 13 நாட்கள் வீடு ஒன்றினுள் தங்கவிடப்பட்டதாகத் அச்சிறுவன் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் தங்களை சிறீலங்கா கடற்படையினரே கடலில் கொண்டு வந்து விடுவித்ததாகவும் அச்சிறுவன் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி>பதிவு.

கடத்தியது சிறீலங்காகடற்படைதான் - கடத்தப்பட்ட மீனவச்சிறுவன்.







இச்செய்தியில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!! இது என்ன, இன்னும் இதை விட மோசமான நாடகங்களை இந்திய "றோ" அரங்கேற்றலாம்!! குறிப்பாக தமிழகத்தில் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக ஒலிக்கத் தொடங்கியிருக்கும் குரல்களை அடக்க முற்படுவதற்காகவே இது போன்ற நாடகங்களை இந்திய "றோ" அரங்கேற்றத் தொடங்கியிருக்கிறது.

இந்தக் கடத்தல் நாடகத்துக்கு முன்னமே தமிழ் நாட்டில் இரும்பு உருளைகளை கடத்தியதாக இன்னொரு நாடகம் நடத்தப்பட்டது. அதன் அடுத்த எப்பிசோட்டெ இது!! இதற்கடுத்த எப்பிசோட்டுகளையும் நாம் எதிர்பார்க்கலாம்!!

இது இந்தியாவிற்கு மட்டுமானதல்ல, உலகிலுள்ள பல உளவுத்துறையினர்கள் இதைப்போல கைக்கரியங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து .... என்று கூறிக்கொண்டே போகலாம்!! இவைகள் காலகட்டங்களில் உலகிற்கு அம்பலமாகிக் கொண்டே வருகின்றது!! ஆனாலும் இவர்கள் இந்நாடகங்களை தொடர்ந்தே அரங்கேற்றி வருகிறார்கள்.

இந்திய "றோ" வின் நாடகங்கள் 83லிருந்தே தொடங்கி விட்டது. ஆனால் இனி இதை விட மேசமான நாடகங்கலை அரங்கேற்றுமோ என்றுதான் பயப்பட வேண்டியுள்ளது!! தமிழ்நாட்டில் பாரிய குண்டு வெடிப்புகள், கொலைகள், கடத்தல்களை நடத்தி விட்டு எம் தலையில் போட அவர்களுக்கு எல்லா வளங்களும் உள்ளன, அதை தமிழகத்திற்கு மட்டுமல்ல உலகிற்கே எடுத்துச் செல்ல ஊடகப் பலமும் உள்ளது. இதை நம்ப அப்பாவி தமிழக மக்களும் உள்ளனர்!!

இந்தச் சதி நாடகங்களை எம்மூடகங்களும், தமிழக தமிழ் ஆர்வலரும் காலத்தே முறியடிக்க வேண்டிய தேவையும் உள்ளது.
http://www.yarl.com/videoclips/view_video.php?viewkey=295f8076b1c5722a46aa

சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணை யூன் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவரவுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றம் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையைக் கொண்டுவரவுள்ளது. சிறீலங்கா அரசின் ஜனநாயக மரபுகளை மீறி மனித உரிமை மீறல்கள் தொடர்ப்பில் இந்த தீர்மானம் கொண்டுவரவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வருடாந்த நாடாளுமன்ற ஒன்றுகூடல் பிரான்ஸ் ஸ்ராஸ்போர்க் நகரில் எதிர்வரும் 5ம் நாள் நடைபெறவுள்ளது. இதிலேயே சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையை கொண்டுவரவுள்ளதாகத் தெரியவருகிறது.

அன்றைதினம் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 அங்கத்துவ நாடுகளும் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையை ஆமோதித்தால் இந்த நாடுகளினால் சிறீலங்காவுக்கு வழங்கப்படும் நிதியுதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறீலங்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கை இணக்கத்தில் கையெழுத்து இட்டதால்தான் சிறீலங்காவுக்கு எதிரான பிரேரணையைக் கொண்டுவரக் காரணமாகின்றது.

இதேநேரம் சிறீலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றில் 750 பேர் ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே சிறீலங்காவுக்கு எதிராக பிரேரணை சாத்தியமாகும் என அரசியல் அவதானிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
நன்றி>பதிவு.

Saturday, May 19, 2007

முடிவுக்கு வந்தது இந்திய உளவுத்துறையின் "மீனவர்" கடத்தல் நாடகம்!!!

தமிழக மீனவர்கள் கடத்தல்- சுடப்பட்டது எல்லாமே இந்திய உளவுத்துறையின் நாடகம்தான் என்பதனை திரும்பிவிட்ட தமிழக மீனவர்கள் சொல்லியிருக்கும் வாக்குமூலம் அம்பலப்படுத்தியிருக்கிறது.


மீனவர் கடத்தல் தொடர்பான ஒரு செய்தி ஆய்வு:

4 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் 12 பேர் மாயம்

29 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

(தினமணி மார்ச் 30: சிறிலங்கா கடற்படை சுட்டு குமரி மீனவர்கள் 4 பேர் பலி

களியக்காவிளை, மார்ச் 30: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் வியாழக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 மீனவர்கள் உயிர் இழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தால் கன்னியாகுமரி மாவட்ட கடலோரக் கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூர் அருகேயுள்ள சின்னத்துறை மீனவக் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கா. சதீஷ் (26), கா.ஜஸ்டின் (24), தோ.தீஸஸ் தாஸ் (37), மரிய ஜான் (50), லினீஸ் (52) அருள் லாம் தூஸ் (31), நீரோடி கிராமத்தைச் சேர்ந்த ஜெரின் (17), மரிய ஜான் லூயிஸ் (32), ஈஸ்டர்பாய் (30) ஆகிய 9 மீனவர்கள் கடந்த 23 ஆம் நாள் விசைப் படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அவர்கள் கன்னியாகுமரி கடல் பகுதியிலிருந்து 45 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சிறிலங்கா கடற்படைக் கப்பல், திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது. இதில் சதீஸ், ஜஸ்டின், மரிய ஜான், லினீஷ் ஆகிய 4 மீனவர்கள் பலியானார்கள். மேலும் துப்பாக்கிச் சூட்டில் தீசஸ் தாஸ் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

31 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் சுட்டுக்கொலை: சிறிலங்கா அரசு- இந்திய கடற்படை மறுப்பு

(Hindu Mar 31, 2007)

Navy Chief won't rule out LTTE role in firing on Indian fishermen

Sandeep Dikshit
`Sri Lankan Navy has asked to exercise restraint'
`State Government not warning fishermen enough'

NEW DELHI: The Chief of the Naval Staff, Admiral Sureesh Mehta, did not rule out the involvement of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in the recent incidents of firing on Indian fishermen in order to create a misunderstanding between the two countries.

Basing his views on assurances given by the Sri Lankan Naval chief, Admiral Mehta said the purpose could be to create a rift between the two nations.

"I had personally spoken to the Chief of the Sri Lankan Navy five days back [following another incident of firing on Indian fishermen] and he assured me that his men had no intention of harassing fishermen in this manner. The Sri Lankan Navy has also issued strict instructions asking its personnel not to open fire on Indian fishermen who had strayed into Lankan waters," he told newspersons on Friday.

In a recent meeting between top officers from the Sri Lankan security establishment and the Indian High Commission in Colombo, the Sri Lankan navy chief had shown maps to prove that his ships were nowhere in the vicinity when incidents of firing on Indian fishermen took place.

"It could be a tactic by the LTTE to create a rift," he observed.

The navy chief also regretted that the State Government was not doing enough to warn fishermen about the perils of entering Sri Lankan waters at a time when conflict was raging in and around the Island nation. "There are some systems that should have been put in place."

With about 3,000 boats crossing over into the international waters everyday, Admiral Mehta wanted the boats to carry some kind of locational indication instrument so that the Indian authorities were aware of their whereabouts and could alert the forces of the other side in case they inadvertently crossed over in the waters controlled by Sri Lanka

1 ஏப்ரல் 2007: கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலை: புலிகள் மீது பழிபோட இந்திய உளவுத்துறை சதி

1 ஏப்ரல் 2007: கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலையில் தொடர்புபடுத்துவது விசமப் பிரச்சாரம்: இளந்திரையன் கடும் கண்டனம்

தாயகத் தமிழ் உறவுகளும் ஈழத் தமிழர்களும் இணைந்து நல் உறவைப் பேணுவதையும் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள் மீதான அனுதாப அலைகள் உருவாவதையும் விரும்பாத மற்றும் கொச்சைப்படுத்த வேண்டும் என்கிற தீய சக்திகளுடன் இப்படுகொலைகளை மூடிமறைக்க வேண்டும் என்று கருதுகிற சிறிலங்கா அரசும் இணைந்து இச்சம்பவத்தில் எங்களை தொடர்புபடுத்தி மிக மோசமான விசமப் பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர்.

தாய்த் தமிழக உறவுகளும் ஈழத் தமிழ் உறவுகளும் ஒரே இரத்தமாக இருப்பதால் ஒன்றாக இணைந்து நம்முடைய உறவைப் பேணுவதன் மூலம் இத்தகைய தீய சக்திகளுக்கும், நாடு இன பேதமின்றி தமிழ் மக்களை குறிவைத்துப் படுகொலை செய்கின்ற சிறிலங்கா அரசுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என்றார் இளந்திரையன்.

12 ஏப்ரல் 2007: தூத்துக்குடி அருகே 6 சிங்களர்கள் கைது: குமரி மீனவர்களை சுட்டுக்கொன்றவர்களா?

தூத்துக்குடி அருகே இந்தியக் கடல் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் படகில் வந்த 6 சிங்களர்களை கடலோரக் காவல் படையினர் புதன்கிழமை கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் இவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

12 ஏப்ரல் 2007:

URL: http://www.thehindu.com/2007/03/12/stories/2007031205801200.htm



Sri Lanka refutes allegations



The Sri Lanka Government said on Sunday that reports of the death of an Indian fisherman in firing by its Navy were "instigated by the LTTE with a vested interest." It reiterated the proposal for joint monitoring of the International Maritime Boundary Line (IMBL) by the Indian and Sri Lanka Navies.



The statement said that it was reasonable to assume that the reports were being instigated by the LTTE in an attempt to damage the strong bilateral relationship between India and Sri Lanka.

13 ஏப்ரல் 2007: கைது செய்யப்பட்ட 6 இலங்கை மீனவர்களுக்கு 5 மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதில் தொடர்பு இல்லை (தினமணி)

கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 6 இலங்கை மீனவர்களுக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது.

இந்திய கடலோர காவல் படையினர் புதன்கிழமை காலையில் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கன்னியாகுமரியில் இருந்து தென்கிழக்கே 28 கடல் மைல் தொலைவில் இரண்டு வள்ளங்களில் கன்னியாகுமரி மாவட்டம், மேல முட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

இரண்டு வள்ளங்களிலும் தலா 6 பேர் வீதம் 12 பேர் இருந்தனர். இந்த வள்ளங்களுக்கு அருகே ஒரு விசைப்படகு கேட்பாரின்றி நின்றது. அந்தப் படகு இலங்கையைச் சேர்ந்தது. அதில் "மரியா' என பெயர் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து 12 பேரையும் கடலோரக் காவல் படையினர் சிறை பிடித்தனர். பின்னர், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

தீவிர விசாரணை: கடந்த 29 ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 5 பேரை சுட்டுகொன்ற நபர்கள் வந்த படகில் மரியா என எழுதப்பட்டிருந்ததாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. தற்போது இலங்கை மீனவர்கள் வந்த படகிலும் மரியா என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், கடந்த 29 ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட படகில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம், நீரோடிதுறையைச் சேர்ந்த கி. ஜெரின் (18), ரீ.அருளாந்ததூஸ் (31), மரியஜான் லூயிஸ் (41) ஆகியோரை காவல்துறையினர் தூத்துக்குடிக்கு இரவோடு இரவாக அழைத்து வந்தனர். பிடிபட்ட இலங்கை படகு "மரியா' மற்றும் கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர் அவர்களிடம் காட்டினர். இந்த விசாரணையில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளதாக எஸ்.பி.ஜான் நிக்கல்சன் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் விபரம்:

இலங்கை யாழ்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த அந்தோனி பிள்ளை மகன் அருள்ஞானதாசன் (20), மன்னார் முள்ளிக்குளத்தைச் சேர்ந்த கிறிஸ்டி மகன் ராபின் (23), வன்னி புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சுப்பையா செல்வராசா மகன் செல்வகுமார் (19), யாழ்ப்பானம் குறுநகர் முதலாம் குறுக்கு தெருவைச் சேர்ந்த மரியான்பிள்ளை மகன் பொனிபாஸ் (28), மன்னார் முள்ளிக்குளத்தை சேர்ந்த தவராசா மகன் அருண் (19), முத்தையா மகன் ரவிக்குமார் என்ற ரவி (24) ஆகிய 6 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கை தமிழ் மீனவர்கள் ஆவர்.

இவர்கள் கடந்த மாதம் 14 ஆம் நாள் தேதி மன்னார் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க வந்துள்ளனர். நடுக்கடலில் மீன்பிடித்து விட்டு திரும்பும் வேளையில் 5 ஆம் நாள் படகு இயந்திரத்தில் கோளாறாகி நின்று விட்டதாம்.

கன்னியாகுமரி மீனவர்கள் மனிதாபிமான அடிப்படையில் தான் இலங்கை மீனவர்களுக்கு உதவியுள்ளனர். எனவே இரண்டு வள்ளங்களிலும் சென்ற மேல முட்டத்தைச் சேர்ந்த செ.சகாயவின்ஸ் (25), தீ.நெல்சன் (34), ம.அந்தோனி (38), ஆ.முத்தப்பன் (36), ஜெ.சபின் சுதாகர் (18), அ.ஸ்டார்லின் (25) ஆகிய 6 பேரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தொடர்புள்ளது என்று சிறிலங்கா அரசாங்கம் உறுதியாகக் குற்றம்சாட்டிய நாளில்தான் தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொன்றதாக சந்தேகிக்கப்படும் சிங்களவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன.

சிறிலங்காவின் அறிக்கையும் சிறிலங்காவில் மட்டும் வெளிவரவில்லை. தமிழகத்தில் உள்ள இந்து நாளேட்டிலும் வெளிவந்துள்ளது.

ஓரு பதற்றமான நிலையில் இப்படி ஒரு செய்தி வந்திருக்கும் சூழலில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விசாரித்தவர் பொறுப்புள்ள காவல்துறை அதிகாரியான தூத்துக்குடி கண்காணிப்பாளர் நிக்கல்சன்.

அவர் நடத்திய விசாரணையில்தான் கைது செய்யப்பட்டவர்கள் இலங்கைத் தமிழ் மீனவர்கள் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து.

17 ஏப்ரல் (தினமணி) "மீனவர் சுடப்பட்டதில் சிறிலங்கா கடற்படைக்கு தொடர்பில்லை. அண்மையில் கடலில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கும் இலங்கைக் கடற்படைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் மறுத்துள்ளது.

தினமணியில் (15.4.2007) வெளியான "சிறிலங்கா கடற்படை சுட்டதில் பலியான 5 மீனவர்கள் குடும்பத்தாருக்கு அரசுப் பணி நியமன உத்தரவு" என்ற தலைப்பில் வெளியான செய்திக்கு துணைத் தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அண்மையில் துப்பாக்கிச் சூட்டில் பலியான கன்னியாகுமரி மீனவர்கள் சிறிலங்கா கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில்தான் மரணம் அடைந்தனர் என்ற தொனியில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கும் சிறிலங்கா கடற்படைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ள வேளையில் அக்கடற்படை மீது குற்றம் சுமத்தியிருப்பது உகந்ததல்ல என அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றது யார் என்று தெரியாத நிலையிலேயே "நிரூபிக்கப்பட்டு விட்டதாக"க் கூறுவது என்பது கண்ணை மூடிக்கொண்டு அல்லது ஒரு திட்டமிட்ட பொய் கூற வேண்டும் என்ற நோக்கத்தோடு சொல்லப்பட்டிருப்பது அல்லாமல் வேறு எதுவுமே இல்லை.

ஏப்ரல் 17 ஆம் நாளுக்குப் பின்னர் ஏப்ரல் 28 ஆம் நாள்தான் தமிழக காவல்துறைத் தலவைர் முகர்ஜியின் அறிக்கை வெளியாகிறது.

அதில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்டி அறிக்கை வெளியாகிறது.

அதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் எனப்படுவோரின் வாக்குமூலம் ஒன்றும் வெளியாகிறது.

27 ஏப்ரல் 2007 : விடுதலைப் புலிகள்தான் சுட்டனர்: தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி அறிக்கை

அந்த அறிக்கையில்

- கைது செய்யப்பட்ட மீனவர்களை காவல்துறையினர் கஸ்டடி எடுத்த நாள்: ஏப்ரல் 20

- கியூ பிரிவுக்கு மாற்றப்பட்ட நாள்: ஏப்ரல் 23

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் சிறிலங்கா அரசாங்கம், இந்து நாளேடு போன்ற தமிழின எதிரிகளும் சம்பவம் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்த நாளிலிருந்து தொடர்ந்து விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்டி வந்தனர்.

இந்தியக் கடற்படைத் தளபதியோ சம்பவம் நடந்த மறுநாளே பகிரங்கமாக தமிழ்நாடு அரசு மீது கண்மூடித்தனமாக குற்றம் சாட்டுகிறார்.

தமிழக அரசும் வாய்மூடி மௌனமாகக் கிடக்கிறது.

சிறிலங்கா கடற்படையும் அதே போன்ற அறிக்கை விடுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஏற்கெனவே விசாரிக்கப்பட்டனர். அவர்கள் விசாரிக்கப்பட்ட சூழலும் பதற்றமான ஒரு காலட்டத்தில்தான். விசாரித்ததும் தமிழகக் காவல்துறையின் பொறுப்புள்ள அதிகாரிதான்.

பிறகு ஏன் தமிழகக் காவல்துறை மீண்டும் விசாரிக்க வேண்டும்?

300-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ்நாட்டு மீனவர்களைப் படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கம், விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று கூறிவிட்டதே என்பதற்காகவா?

அல்லது

இந்தியத் தளபதி கூறிவிட்டாரே என்பதற்காகவா?(May 31 Hindu)

அல்லது

விடுதலைப் புலிகளை எப்படியும் தமிழகத்தின் உறவிலிருந்து பிரித்தே ஆக வேண்டும் என்ற சிறிலங்கா அரசாங்கம - இந்திய உளவுத்துறையினர் கூட்டுச்சதியினை நிறைவேற்றவா?

அல்லது

சிறிலங்காவில் இந்தியாவும் கடலில் கூட்டு சுற்றுக்காவல் மேற்கொள்ள வேண்டும் என்று கனவு காணும் இந்த சகுனிகளின் சதித்திட்டத்தை நிறைவேற்றவா?

சரி

வாக்குமூலம் கொடுத்தவர் கடல் புலிகள் எனில்

ஏன் நாங்கள் கடல்புலிகள்தான் என்பதற்கான ஆதாரங்களைச் சொல்லவில்லை. அவர்களுக்கென அடையாள அட்டை இருக்குமே? அதனைத்தான் கடலில் தூக்கி எறிந்திருந்தாலும் தங்களுக்கான இயக்கப் பெயர், எண்கள் இருக்குமே? அதனையும் "கஸ்டடியில்" மறந்து விட்டார்களா? சொல்லிக் கொடுத்த வாத்திமார் மறந்துவிட்டாரா?

சரி

ஏப்ரல் 12 ஆம் நாள் வாக்குமூலம் கொடுத்தோர் கைது செய்யப்பட்ட செய்தி தமிழக ஏடுகளில் வெளிவருகிறது

ஏப்ரல் 13 ஆம் நாள் அவர்கள் தமிழர்கள் என்றும் மீனவர்கள் என்றும் புகைப்படங்களுடன் வெளிவருகிறது.

இவர்கள் விடுதலைப் புலிகள் எனில் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு இது தெரியாமல் இருக்குமா?

அல்லது

இவர்கள் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டதனைத் தெரிந்து கொண்டும்

ஆமாம், கடத்தப்பட்ட மீனவர்கள் எங்களது கஸ்டடியில்தான் இருக்கிறார்கள் என்று "போன் மூலம்" தமிழக காவல்துறை கஸ்டடியில் இருந்தவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்களா? கஸ்டடியில் இருந்தவர் போன்மூலம்தான் முகாமில் இருந்தோரைத் தொடர்பு கொண்டதாக தமிழகக் காவல்துறை தலைவர் முகர்ஜியின் அறிக்கைதான் கூறுகிறது.

தற்போது திரும்பி வந்துள்ள மீனவர்கள் கூறுகிறார்கள், தாங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில்- சாப்பாடு கூட எடுத்து வர முடியாத ஒரு பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தோம் என்றும் சிறை போன்ற முகாம் என்றும் வீடு போன்ற பகுதி என்றும் கூறுகின்றனர்.

தமிழகக் காவல்துறை வலுவான நெட்வேர்க்கில்தான் உள்ளது போல்....

இப்படியான இடங்களுக்கு சிறிலங்கா அரசாங்கமும் தொலைபேசி வசதி செய்தி கொடுக்கிறது போல்-

தற்போது மீனவர்கள் திரும்பிவிட்டனர்.

பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே திரும்பிய மீனவர்கள் சொல்ல வேண்டும் என்பதற்காக கரை சேர்ந்த உடனேயே ஊடகத்தாரைக் கூட்டி அங்கேயே புலிகளை அம்பலப்படுத்தாமல் சென்னைக்கு வரவழைத்து சென்னையிலும் கரையிலும் யாரிடமும் பேசவிடாமல் கடைசியாக மீண்டும் ஒரு வாக்குமூலத்தை சொல்ல வைத்திருக்கிறார்கள்.

சிங்களக் கைதிகள் சொல்லாத ஒரு அபாண்டத்தை தமிழக மீனவர்கள் மூலம் காவல்துறை சொல்ல வைத்திருக்கிறது.

புலிகளின் பிடியில் சிக்கிக் கொண்ட கைதிகள் எவரேனும் ஒருவராவது புலிகள் மீது குற்றம் சுமத்தியது உண்டா?

தங்களை நடத்திய விதம் குறித்து குறை கூறியது உண்டா?

பிரிந்து செல்லும்போது கொடுத்த பேட்டிகள் எத்தனை எத்தனையோ வெளியாகி உள்ளன. ஒன்றிலாவது ஒரு குறையாவது சொல்லப்பட்டது உண்டா?

திரும்பிய தமிழக மீனவர்கள் சொல்லியிருப்பதாக இன்று வெளியான செய்தியில் சிரிக்காமல் சிந்திப்பதற்காக நீங்கள் படிக்க வேண்டிய வரிகள்:

"ஹெல்மட் அணிந்து முகத்தை முற்றும் மறைத்துக் கொண்டு ஒருவர் எங்களை சந்தித்து உங்களை விரைவில் கேரள கடற்பகுதியில் கொண்டு போய் விடுகிறோம் என்று கூறினார். வானூர்தியில் சென்று பார்வையிட்டு வருவதாக கூறி சென்றார்."

என்னது கேரள கடற்பகுதியை விடுதலைப் புலிகள் வானூர்தியில் சென்று பார்வையிட்டனர்.

கேரள கடற்கரை பகுதி இருப்பது அரபிக் கடல் என அறிந்திருக்கிறோம்.

விடுதலைப் புலிகள் இருப்பது வங்கக் கடல் என அறிந்திருக்கிறோம்.

வங்கக் கடலுக்கும் அரபிக் கடலுக்கும் இடையே மன்னார் கடலில் "பாரிய" படைபலம் பொருந்திய இந்தியப் பேரரசின் கடற்படை உள்ளது.

அன்னியக் கொள்வனவுகளால் கொழுத்துக் கிடக்கும் சிங்களக் கடற்படை உள்ளது.

இரு நாட்டு கடற்படைகளின் கண்ணில் மட்டுமல்ல- வான்படையின் கண்ணிலும் மண்ணைத் தூவி அரபிக் கடலில் உள்ள கேரள கடற்கரைப் பகுதியை புலிகள் பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் நிற்கவில்லை விடுதலைப் புலிகள்

வங்கக் கடல் தாண்டி

அரபிக் கடலை தொட்ட விடுதலைப் புலிகள்

இந்துமா சமுத்திரத்தையும் விட்டுவைக்கவில்லை.

ஆம்.

"மீண்டும் வந்த போது தமிழக கடல் பகுதியிலேயே உங்களை விட்டுவிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள். எங்களுடைய டிரைவர் (மலையாளி சைமன்) எங்கே என்று கேட்டோம். அவரை ஏற்கனவே படகில் அனுப்பி வைத்து விட்டோம். நீங்கள் கரைக்கு சென்ற பிறகு உங்களை அவர் சந்திப்பார் என்று கூறினார்கள். ஆனால் அவர் மாலைதீவு கடற்படையினரிடம் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு இராமேஸ்வரம் நடுக்கடலில் எங்களை மீனவர்களிடம் ஒப்படைத்தார்கள்"

இதில் எங்கே மாலைதீவு வந்தது?

புலிகள் எப்படி மாலைதீவில் இயங்குகிறார்கள்?

மாலைதீவானது

வங்கக் கடலிலும் இல்லை

அரபிக் கடலிலும் இல்லை

இந்துமா சமுத்திரத்தில்

அமெரிக்கா- இந்தியா- பிரித்தானியா- சிறிலங்காவின் கூட்டுக் கண்காணிப்பு வலயத்தில் உள்ள பிரதேசம்.

அமெரிக்காவுக்கு அங்கே என்ன வேலை என்று கேட்காதீர்கள்

தெற்காசியாவில் காலூன்றுவதற்காக பிரித்தானியாவிடமிருந்து பெற்ற டிகாகோ கார்சிகோ தீவு மாலைதீவுக்கு கீழேதான் உள்ளது.

புளொட் அமைப்பைக் கொண்டு 1989-களில் அங்கு சதி நடத்திய இந்தியாவின் றோவுக்கு எப்போதும் மாலைதீவு மீது "காதல்" உண்டு.

அதற்கும் அப்பால்

மாலைதீவு அருகே மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்தோர் பேசியது தமிழ் அல்ல- மலையாளம் என்று அந்நாட்டு அரசாங்கமே அறிவித்துவிட்ட நிலையில்

மாலைதீவு பகுதியில் எமது இயக்கத்தின் செயற்பாடு இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துவிட்ட நிலையில்

தமிழக முகர்ஜிவாலாக்களுக்குத்தான் என்னே அறிவு! அடம்பிடிக்கிறார்களே!

தெளிவாகச் சொல்கிறோம்

இந்தக் கடத்தலின் பிதாமகனே இந்திய றோதான்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அனைத்துலகத்தின் அனுசரணையைப் பெறுவதற்கான ஒருநிலைப்பாட்டை இந்திய அரசு எடுக்க விடாமல் தமிழகத்தின் புலிகள் ஆதரவு நீடித்து நிற்கிறது. தமிழக அரசும் அதற்கேற்ப ஈழத் தமிழர் ஆதரவு நிலையிலேயே உள்ளது. அத்துடன் ஒட்டுமொத்தமாக மத்திய ஆளும் அரசை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கருணாநிதிக்கு வேட்டு வைக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசியல்- காவல்துறை நாடகம்தான் இது.

தமிழக காவல்துறை கருணாநிதியின் கையில் இருந்தாலும்

தமிழகத்தில் பால்ரசு குண்டு கைதுகள் முதல் கஸ்பாரின் சங்கமம் வரையான அனைத்து புலிகள் தொடர்பான பிரச்சனையில் எம்.கே.நாராயணன் தலையிட்டுக் கொண்டிருப்பதையும் அதனை தடுக்க முடியாமல் தமிழகக் காவல்துறை பணிந்தாக வேண்டிய "இந்திய அரசியல் கட்டமைப்பு" இருக்கிறது. இது இந்திய அரசியல் அவதானிகளுக்கும் ஊடகத்தாருக்கும் அறிந்த விடயம்தான்.

அந்த எம்கே.நாராயணன் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதால் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் தமிழகத்துக்குத் துரோகம் இழைப்பவர்தான் என்பதை தமிழகம் நன்கறியும். இப்போது நடந்துள்ள கடத்தல் நாடகத்தில் "கப்டன்" பாத்திரம் வகித்தவர் கேரளத்தைச் சேர்ந்த சைமன் என்பதை நினைவில் கொள்வோம்.

தமிழக மீனவர்களை புலிகள் கடத்திச் சென்றதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு

அரசியல் ரீதியாக

தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் ஞானசேகரனைக் கொண்டு கடத்தியது புலிகள்தான்- சுட்டது புலிகள் என்று தொடர்ச்சியாக கேட்க வைத்துவிட்டு

அதன் மூலம் கருணாநிதிக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியது இந்திய உளவுத்துறை.

(ஞானசேகரனுக்கு நெருங்கிய நண்பர் யார் தெரியுமா? இராமநாதபுரம் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஹசன் அலி. ஹசன் அலியைப் பற்றி நக்கீரன் வாரமிருமுறை இதழ் வெளியிட்ட விவரம் என்னவெனில் "மகிந்தவுக்கு நெருக்கமானவர்- ஈழத் தமிழ் அகதிகளை மிகக் கேவலமாக நடத்தியவர் என்பதுதான்)

இந்திய உளவுத்துறைக்கு பணிந்தாக வேண்டிய தமிழகக் காவல்துறையும் வாக்குமூல வசனங்களை விட்டுக் கொண்டிருக்கிறது.

எத்தனை பொய்யை அவிழ்த்து

எத்தனை அவதூறுகளை அள்ளி வீசினாலும்

"தானாடாவிட்டாலும் தசையாடும்" எங்களின் தொப்புள் கொடி உறவைத் துண்டிக்க எந்த வல்லூறாலும் முடியவே முடியாது.
நன்றி>புதினம்.

Thursday, May 17, 2007

போர்விமானம் மிக் 27 புலிகளால் சுடப்படும் காட்சி!

போர்விமானம் மிக் 27 சுடப்படும் காட்சியை பார்க்க இங்கே அழுத்தவும்.
http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai&file=130507

சிங்கக்கொடியை ஏற்றிவாறு சென்ற இழுவைப் படகு மாலைதீவுக் கடற்பரப்பில் மூழ்கடிப்பு!

மாலைதீவு தென்கடற் பிரதேசத்தில் பயணித்த இழுவைப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை சிறீலங்கா கடற்படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மாலைதீவு தென் கடற்கரை ஓரத்தில் சென்றுகொண்டிருந்த இழுவைப் படகை வழிமறித்த மாலைதீவு கரையோரக் காவல் கடற்படையினர் 12 மணி நேரம் இழுவைப் படகை முற்றுகைக்குள் வைத்துள்ளனர்.

இதன்பின்னர் இழுவைப் படகை மாலைதீவின் கடலோரக் காவல்படையினர் பீரங்கிவேட்டுக்களைத் தீர்த்து மூழ்கடித்ததோடு படகில் இருந்து ஜவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தென்னிந்தியாவைச் சேர்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் மலையாள மொழி பேசுகின்றார் எனவும் மலைத்தீவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட ஐவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட மாலைதீவு வெளியுறவு அமைச்சர் அகமட் அகமட் ஹெசின் தனது கூற்றை வாபஸ் பெற்றுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரின் உரை தமிழ் மொழி போன்று இருந்ததால் முதல் விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்பட நேர்ந்ததாகவும் மாலைதீவு தலைமைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தமது அமைப்பு எதுவித தொடர்பும் கொண்டிருக்கவில்லை என விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
நன்றி>பதிவு.

Wednesday, May 16, 2007

உலக நாடுகளின் தயவில் நாம் தங்கவில்லை – மகிந்த எள்ளிநகையாடியுள்ளார்!!!

சிறீலங்காவின் ஜகாதிபதி மகிந்தராஜபக்ஸ உலகநாடுகள் சில சிறீலங்காவிற்கான தமது உதவியை இடைநிறுத்தி மற்றும் குறைத்தது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் ‘தாம் உலகநாடுகளின் தயவில் ஆட்சி செலுத்த தேவையில்லை எனவும் அவர்கள் உண்மையாக உதவி வழங்கின் ஏற்றுக் கொள்வதாகவும் அவ்வாறு இல்லை எனின் தாம் தமது வேலையை செய்வோம் என தெரிவித்துள்ளார்.

உலகநாடுகள் நிபந்தனையுடன் நிதியுதவ முன்வருமாயின் அதனை தாம் ஏற்க தயாராக இல்லை எனவும் தமது சொந்த காலில் இருந்து தமது நாட்டை அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்வோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் காரணமாக சிறீலங்காவிற்கான நிதியுதவிகளின் ஒரு தொகுதியை பிரிட்டனும், அமெரிக்காவும் இடைநிறுத்தியுள்ளன. இதேவேளை சுவீடனும், ஜப்பானும் இதனை பின்பற்ற தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
நன்றி>பதிவு.

கருணா குழு முகாம்களை உடனே மூட மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்.

சிறிலங்கா அரசாங்கப் பகுதிகளில் உள்ள இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் முகாம்களை உடனே மூட வேண்டும் என்று அமெரிக்காவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.


படையணிகளில் சிறார் சேர்ப்பு குறித்து அண்மையில் ஐக்கிய நாடுகள் அவையத்தின் பாதுகாப்பு சபைக்கான செயற்பாட்டுக் குழு வெளியிட்ட அறிக்கையில் சிறிலங்கா துணை இராணுவக் குழுவினரின் செயற்பாடுகள் குறித்து விமர்சிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதி ஜோ பெக்கர் தெரிவித்துள்ள கருத்து:

இலங்கையின் கிழக்குப் பகுதியில் சிறார்களை படையணிகளில் சேர்த்து வரும் கருனா குழுவின் அனைத்து முகாம்களையும் சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக மூடவேண்டும்.

ஆயுதம் தாங்கிய கருணா குழுவினர் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சுதந்திரமாக நடமாடுவதைத் தடுக்க வேண்டும்.

ஆட்கடத்தல்கள் மற்றும் சிறார் சேர்ப்பு தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நன்றி>புதினம்.

Tuesday, May 15, 2007

சிங்களவர்களுக்குத்தான் சிறிலங்கா: அமைச்சர் சம்பிக்க ரணவக்க!

சிறிலங்காவில் சிங்களவர்கள்தான் வாழ வேண்டும் என்று சிறிலங்காவின் சுற்றுச் சூழல் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.


மகரகமவில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வில் சம்பிக்க ரணவக்க பேசியதாவது:

சிறிலங்காவில் சிங்களவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். சிங்களவர்கள் வரலாற்று இனம். சிங்களவர்களால்தான் இந்த சமூகம் கட்டமைக்கப்பட்டது. இங்கே இனப்பிரச்சனை ஏதும் இல்லை.

இனப்பிரச்சனை என்பதற்கான தீர்வுத் திட்டம் ஒன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தினால் சிங்களவர்களின் அபிலாசைகளைப் புறக்கணிக்கக் கூடாது. அது சிங்களவர்களின் மனநிலையைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும்.

தற்போதைய அரசமைப்பு முறையானது கிராம சபை நிலைக்கு மாற்றப்பட வேண்டும். சிறிலங்கா எப்போதும் ஒற்றையாட்சித் தன்மை கொண்ட அரசாங்கமாகத்தான் இருக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 270 ஆக இருக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய பரிந்துரைத்துள்ளது.

தேர்தல்களானது ஒவ்வொரு 6 ஆண்டுக்கும் ஒருமுறை நடத்தப்பட வேண்டும். நிறைவேற்று அதிகார முறை கொண்ட அரச தலைவர் அமைப்பை மாற்றியமைக்க கூடாது. அதே நேரத்தில் நீதித்துறைக்கு பதிலளிக்கக் கூடிய அரச தலைவர் பதவி அமைய வேண்டும் என்றார் அவர்.
நன்றி>புதினம்.

புலிகளா? சர்வதேசமா? மக்களே தீர்மானிப்பர்.

-சி.இதயச்சந்திரன்-

இலங்கையின் வான் பாதுகாப்பிற்கு இந்தியாவின் உதவி கோரப்பட்டுள்ளதாக செய்திகள் கசிகின்றன. விசேட தூதுவர்களின் இந்தியப் பயணம் சொல்லப்படாத செய்திகள் பலவற்றை இருபுறமும் காவிய வண்ணமுள்ளன. மீனவர் கடத்தல் தொடர்பான பிரச்சினையோடு, தமிழக எழுச்சியை மௌனமாக்கும் காரியங்கள் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன.

புலிகளால் கடத்தப்பட்டதாக கூறப்படும் மீனவர்களை விடுவிக்கும் வரை, இராணுவ தளபாட உதவிகளை இலங்கைக்கு வழங்க வேண்டுமென 'தினமணி" செய்தி கூறுகின்றது.

இந்தியாவின் புதிய நிகழ்ச்சி நிரல் சீராகச் செல்லும் இவ்வேளையில், நேரடிப் பிரசன்னத்திற்கான தடையாகவிருப்பது போர் நிறுத்த ஒப்பந்தம். அவ்வொப்பந்தம் உடைவதற்கு தானொரு மூல காரணியாக இருப்பதையிட்டு சில சங்கடங்களும் இந்தியாவிற்கு உண்டு.

வான் பாதுகாப்பு என்ற போர்வையில், இலங்கையின் அழைப்பை ஏற்று உள்நுழைந்தால், விடுதலைப் புலிகளோடு மோத வேண்டுமென்கிற சூழ்நிலைக்குள் தள்ளப்படுவதோடு, சர்வதேச மத்தியஸ்தத்தால் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தை தானே மறுதலித்தது போலாகி விடுமென்கிற தர்மசங்கடமான நிலைக்குள் ஆட்படுவதும் தவிர்க்க முடியாததாகிவிடும்.

நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்ய வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், தேசியப் பாதுகாப்பிற்காக ஒப்பந்தத்தை மீள் பரிசீலனை செய்ய அரசு தயங்காதென்பதையும் அரச பாதுகாப்புத்துறை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல கூறிவிட்டார்.

இந்நகர்வுகள் சகலவற்றிற்கும் பெருந்தடங்காலக விருப்பது போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவாகும். அவர்களையும் ஏதோவொரு வகையில் வெளியேற்றுவதற்கான சூழலை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தமும் அரசிற்குண்டு.

மேற்குலக உத்தரவாதம், இந்தியாவிற்கு வழங்கப்பட்டால், அதன் உள்நுழைவு தடங்கலற்ற பாதைக்கு வழிவகுக்கும்.
அதேவேளை, மேற்குலகில் விடுதலைப் புலிகளின் மீது கொடுக்கப்படும் அழுத்தங்களும், பயங்கரவாத முத்திரை பதித்த பிரசாரங்களும் முன்னெடுக்கப்படும்போது இறுதிப் போரிற்கான ஆதரவுத் தளத்தினை உருவாக்கும் முயற்சிக்கு உந்துதலை அளிக்கின்றது.

இந்தியாவிலும், மேற்குலகிலும் விடுதலைப் புலிகளுக்கெதிரான பரப்புரைகள் அதிகரித்து, தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மையை மலினப்படுத்தும் நிலைப்பாடு விரிவடைவதால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் செயலிழக்கச் செய்தாலும், அது பற்றிக் கண்டும் காணாதது போன்ற போக்கினை இவ்விரு சக்திகளும் கடைப்பிடிக்கலாம்.
அதை நியாயப்படுத்தும் கருத்துருவாக்கத்தை தமது திட்டமிட்ட பரப்புரை ஊடாக இருவரும் உருவாக்குகிறார்கள்.

மேற்குலகின் நிகழ்ச்சி நிரலும், விடுதலைப் புலிகளைப் பலவீனமாக்கி, படைவலுச் சமநிலை சீர்குலைக்கப்பட வேண்டுமென்பதை மையமாகக் கொண்டே வகுக்கப்பட்டுள்ளதை சமகால நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன.

போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள காலத்தில், அரசு கிழக்கில் மேற்கொள்ளும் படை நகர்வுகளையிட்டு மேற்குலகமானது அசமந்தப் போக்கை கடைப்பிடிப்பதை சகலரும் உணர்வர்.

அதேவேளை பேச்சுவார்த்தை மேசைக்கு விடுதலைப் புலிகள் வர மறுக்கிறார்களென்கிற அரசின் பரப்புரையை, தமது கருத்தாக, எதிரொலிக்கும் காரியத்தையும் மேற்குலகம் செய்கிறது. அரசின் இராணுவ அத்துமீறல்களைப் பற்றி விமர்சிக்காமல், ஆயுதக்குழுக்கள் மீது கண்டனங்களைத் தொகுப்பதோடு தமது கடமை முடிந்துவிட்டதென ஒதுங்கிக்கொள்வதையும் இவர்கள் விரும்புகிறார்கள்.

ஆகவே, புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் தமது அடுத்த நகர்வுகளை மேற்குலகம் மேற்கொள்ளும் வேளையில், இலங்கையில் ஏற்படும் மாற்றங்களூடாகத் தனது பிரசன்னத்தை வெளிப்படுத்த இந்தியா முயற்சிக்கிறது.

வான்புலிப் பிரவேசத்தால், இலங்கையின் அரசியல் பொருளாதார ஸ்திரத்தன்மை அதீத கலங்கல் நிலைக்குள்ளாவதால், பொருள் வளமீட்டும் கேந்திர நிலையங்களுக்கு சமீபமாகவுள்ள இராணுவ நிலைகளை இடம்மாற்றும் நிர்ப்பந்தத்திற்குள்ளாகி சில அதிரடி நகர்வுகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் பௌச்சர் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு யாழ். குடாவிற்கும் சென்று திரும்பியுள்ளார்.

இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் கொழும்பில் கூடுவதற்குமுன், இந்தியப் பிரதமரைச் சந்திக்க ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க டெல்லிக்கு விரைந்துள்ளார்.

இதேவேளை மோசமடையும் இலங்கை நிலைவரம் குறித்து கடந்த திங்களன்று, மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் உரையாடலை நிகழ்த்தியுள்ளார் அமெரிக்கா அதிபர் ஜோர்ஜ் புஷ். ஜனாதிபதி மஹிந்தவின் விசேட செய்தி குறித்தே இவ்விருவருக்குமிடையே உரையாடல் அமைந்திருக்க வாய்ப்புண்டு.

அச்செய்தி குறித்து இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்பதை அறிய வேண்டிய தேவையும் அமெரிக்காவிற்கு உண்டு. நிலைமை மோசமடைவதால் தனது உள்நுழைவிற்கான நகர்விற்கு தடையாகவுள்ள ஒப்பந்தம் மற்றும் கண்காணிப்புக்குழு பற்றிய வெளிப்படுத்தலையும் மிகவும் சாதூரியமாகவும் இந்தியா புரிய வைத்திருக்கும்.

போரின் உக்கிரத்தை தணிப்பதற்கு பேச்சுவார்த்தை மேடையைத் தயார்படுத்த வேண்டுமென்று இணைத்தலைமைகள் விரும்பினாலும், 'மாவட்ட சபை"ப் பேச்சு அதற்கான சிறிதளவு நம்பிக்கையையும் தகர்த்து விட்டதென்பதே பெருங்கவலையாக மாறிவிட்டது.

ரிச்சர்ட் பௌச்சரின் குடாநாடுப் பயணத்தின் போதும், வன்னியின் மீது விமானத்தாக்குதல் தொடர்ந்துள்ளது. யாழ். மக்களின் மனநிலையை முகர்ந்து பார்த்து, புலி ஆதரவு தளத்தின் வீரியத்தை புரிந்து கொள்ள முயற்சித்த பௌச்சரின் எதிர்பார்ப்பிற்கு, ஒருங்கிணைந்த சக்தியாகத் திரண்டுள்ள மக்களின் உள உரண், தடுமாற்றத்தை அளித்திருக்கும்.

விடுதலைப் புலிகளின் ஆளணி, படைவலு வினை பூரணமாக அறியமுடியாமலிருப்பது போன்றே, தாயக மக்களின் ஆழ்மனதில் இறுக்கப்பட்டள்ள விடுதலை உணர்வினையும் இவர்களால் இலகுவில் அளக்க முடியாதுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையில் வாழும் எந்த இனக் குழுவிற்கும் நம்பிக்கையும் இல்லை. எதிர்பார்ப்பும் கிடையாது. கண்காணிப்புக் குழுவின் மௌனத்தோடு, ஒப்பந்தமும் மரணித்துவிட்டது. வெற்றுக் காகிதங்களைக் காவித்திருந்து குடாநாட்டினுள்ளும் வியாபாரம் செய்ய முடியவில்லை. இந்தியாவின் அடுத்தகட்ட தீர்மானகரமான நகர்விற்கு முன்பாக, அமெரிக்க குழுவினர் தமது காய் நகர்த்தலை சடுதியாக ஆரம்பித்துள்ளனர்.

பேசியே தீர்க்க முடியுமென்கிற மந்திரப் போர்வையின் பின்னால் ஒளிந்த படி, தமக்குள் வெட்டி ஓடும் தந்திரநகர்வுகளை மேற்குலகமும் இந்தியாவும் அரங்கேற்றுகின்றன. ஆனாலும், தமிழ்த்தேசிய இனத்தின் பிறப்புரிமையான தாயகம், தன்னாட்சி போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை பெருந்தேசிய இனம் அங்கீகரிக்கப் போவதில்லையென்பதே யதார்த்தம்.

மாவட்ட சபைதான் தீர்வென்றால், பிரிந்து செல்வதே மாற்று வழியாக இருக்கும். தமிழ்மக்களின் எதிர்கால வரலாற்றை புலிகள் இயக்கமா, சர்வதேசமா தீர்மானிக்கு மென்பது குறித்து அம்மக்களே முடிவெடுப்பர்.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (13.05.07)

Monday, May 14, 2007

யாழ் பல்கலைக்கழகத்தில் 270 பேருக்கு மரண தண்டணை வழங்கப்படும்!!!


- நாட்டைக் காக்கும் தேசிய அமைப்பு-

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஊழியர்களுக்கு உயிர் அச்சுறுறுத்தல் விடுத்து துண்டுப் பிரசுரம் ஒன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றிரவு ஒட்டப்ட்டுள்ளது.

நாட்டைக்காக்கும் தேசிய அமைப்பு என்ற பெயரில் வெளியிடப்பட்டள்ள இந்த துண்டுப் பிரசுரத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துறைசார்ந்த முறையில் எண்ணிக்கை ரீதீயாக கொலை செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டள்ளது.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் பெரும் பதட்டத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் வகுப்புக்களையும் இன்று பகிஸ்கரித்துள்ளார்கள்.
நன்றி>பதிவு.

சிறிலங்காவுக்கான உதவிகளை வேறு நாடுகளும் நிறுத்தலாம்?

சிறிலங்கா அரசாங்கம் சிறுபான்மைத் தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளத் தவறியமை மற்றும் சட்டவிரோதப் படுகொலைகளை நிறுத்துவதற்குத் தவறியதன் காரணமாக அந்த நாட்டுககான நிதி உதவியை மேலும் பல நாடுகள் இடைநிறுத்திக்கொள்ளலாம் என இராஜதந்திர வட்டாரங்களும், அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவும், பிரித்தானியாவும் சிறிலங்காவுக்கான தமது நிதி உதவியில் ஒரு பகுதியைத் தடுத்து வைத்திருக்கும் அதேவேளையில் மேலும் பல நாடுகள் இதனைப் பின்பற்றலாம் என அனைத்துலக செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பி. தெரிவித்திருக்கின்றது.

இது தொடர்பில் அந்த செய்தி நிறுவனத்தின் அறிக்கையில் மேலும் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

சிறிலங்காவுக்கான நிதி உதவியை மனித உரிமை விவகாரத்துடன் தொடர்புபடுத்துமாறு கோரும் மனித உரிமை ஆர்வலர்களுடன் ஜப்பான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.

சிறிலங்காவுக்கு ஜப்பானே அதிகளவு நிதி உதவிகளை வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. சிறிலங்கா விவகாரத்தில் மேலும் அதிகளவு பங்களிப்பை வழங்குமாறு அனைத்துலக மனித உரிமை அமைப்பு ஜப்பானைக் கேட்டிருக்கின்றது.

சிறிலங்கா அரசு மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை கொடுக்கும் முன்னணிப் பங்களிப்பை ஜப்பான் மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருக்கின்றது.

சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் சமூகத்தின் கவலையை அமெரிக்கப் பிரதி வெளிவிவகார அமைச்சர் ரிச்சர்ட் பெளச்சரும் தன்னுடைய கொழும்புப் பயணத்தின் போது வெளிப்படுத்தியிருந்தார்.

மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். அதிகளவு நெருக்கடிகளை அவர்கள் எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார். சிறிலங்காவின் மனித உரிமை நிலைமையில் ஒட்டுமொத்தமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். 700-க்கும் அதிகமானவர்கள் காணாமல் போன யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கும் பெளச்சர் பயணம் செய்திருந்தார்.

அதேவேளையில், சிறிலங்காவின் தற்போதைய நிலைமை தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதுடன், அனைத்துலக மனித உரிமை கண்காணிப்பு குறித்து வேண்டுகோள்களும் விடுக்கப்பட்டன. ஜேர்மனியைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவும், சிறிலங்காவுக்கான தனது உதவிகளைக் குறைத்துக்கொண்டிருக்கின்றது.
நன்றி<புதினம்.

Sunday, May 13, 2007

விடுதலைப் புலிகளிடம் 17 வானூர்திகள்: கொழும்பு ஊடகம்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 17 வான் தாக்குதல் வானூர்திகள் உள்ளதாகவும் அவற்றில் சில மிகவும் சக்தி வாய்ந்தவை எனவும் கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.


ஜீனியர் விகடன் வெளியிட்ட விமானங்களின் படம்http://kalamm.blogspot.com/2007/05/blog-post_4170.html



கொழும்பு ஊடகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விடுதலைப் புலிகள் வசம் பல்வேறு வகையான 17 வானூர்திகள் உள்ளன அவற்றில் சில வானூர்திகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவர்கள் இலகு ரக வானூர்திகளின் புகைப்படங்களையே வெளியிட்டுள்ளனர். தங்கள் வசமுள்ள வலுவான வானூர்திகளின் புகைப்படங்களை வெளியிடவில்லை. இந்த வலிமை மிக்க வானூர்திகளை பெரும் சமர்களின் போது பயன்படுத்துவதற்காக பின்னிருப்பாக பேணி வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் சிறிலங்காவின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும் சில வான் தாக்குதல்களை அவர்கள் நடத்தும் பட்சத்தில் பொருளாதாரம் அதாள பாதாளத்திற்கு சென்றுவிடும். இது போரை நடத்துவதற்கு அரசு பணத்தை அச்சிடும் நிலையை ஏற்படுத்தும்.

கிழக்கில் படையினரின் வெற்றி தொடர்பாக அரசு கலர் கலரான பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்த வேளை. போரை 2 அல்லது 3 வருடங்களுக்குள் முடித்துவிடலாம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச கூறியிருந்தார்.

ஆனால் அவரது கூற்றை வான்புலிகள் தலைகீழாக்கி விட்டனர். அரசு போரின் செலவை தாங்குமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

பொங்குதமிழ் நிகழ்வில் கலந்துகொண்ட புத்தபிக்கு சுட்டுக்கொலை!



இன்று காலை 9.15 மணியளவில் திருகோணமலை மொறவாவி மாகவிதுலவாவிப் பகுதியில் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக குரலெழுப்பிய புத்தபிக்கு ஒருவர் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறீலங்காப் படைப்புலனாய்வாளர் பிரார்த்தனையில் ஈடுபட்ட பெளத்த துறவி மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட புத்தபிக்கு நந்தரத்னதேரோ ( NANDARATHNA THERO ) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட புத்தபிக்கு திருமலையில் 2005ம் ஆண்டு நடைபெற்ற பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் கலந்துகொண்டு தமிழ் தேசியத்திற்கு ஆதரவாரக தமிழில் உரையாற்றியதோடு, பொங்குதமிழ் பிரகடனத்திற்கும் ஆசி வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு சிறீலங்கா படைப்புலனாய்வாளர்ளாலும் சிங்களக் காடையர்களாலும் கொலை அச்சுறுத்தல்கள் ஏற்கனவே விடுதிருந்த நிலையில் இவர் இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நன்றி>பதிவு.

புலிகளிடமிருந்து 32 ஆயிரம் இராணுவத்தினரை காப்பாற்றியது இந்தியாதான்!!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த ஆனையிறவுச் சமரின் போது யாழ். குடாநாட்டுக்குள் சிக்கிக் கொண்ட 32 ஆயிரம் சிறிலங்கா இராணுவத்தினரை இந்தியாதான் காப்பாற்றியது என்று யாழ். தளபதிகளில் ஒருவராக இருந்த மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா தெரிவித்துள்ளார்.


கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ள அவர் கூறியுள்ளதாவது:

யாழ்ப்பாணமும் விடுதலைப் புலிகளும்

சூரியக்கதிர் நடவடிக்கைக்கு முன்னர் 1995 ஆம் ஆண்டு ஜுன் 7 ஆம் நாள் படையினர் முன்நோக்கி பாய்தல் நடவடிக்கையை ஜெனரல் தளுவத்தை, ஜெனரல் வீரசூரியா ஆகியோர் மேற்கொண்டிருந்தனர். அதனை விடுதலைப் புலிகள் முறியடித்திருந்தனர். இது விடுதலைப் புலிகளின் உளவுறுதியை அதிகரித்திருந்தது.

1995 ஆம் ஆண்டு மணலாறு மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தப் போவதாக எமக்கு கிடைத்த தகவல்களை தொடர்ந்து சிறப்பு படையினரை அனுப்பி வைக்குமாறு பாதுகாப்புத் தரப்பை கேட்டிருந்தேன். ஆனால் விடுதலைப் புலிகளின் இலக்கு பூநகரி அல்லது ஆனையிறவு தான் என கூறியதுடன் படையினரை அனுப்ப மறுத்துவிட்டனர்.

விடுதலைப் புலிகள் தாக்கினால் படையினரை அனுப்புவதாக ஜெனரல் தளுவத்தை தெரிவித்திருந்தார். விடுதலைப்புலிகள் தாக்குதலை தொடுப்பதற்கு முன்னரே எனக்கு படையினர் தேவை அதற்கு பின்னர் அல்ல என நான் தெரிவித்திருந்தேன்.

சூரியக்கதிர் நடவடிக்கை ஜெனரல் நீல் டயஸ், கருணாதிலக ஆகியோரின் தலைமையில் தொடங்கி கோப்பாய் வரை சென்ற நிலையில் இருந்தது. விடுதலைப் புலிகளின் தாக்குதலை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. விடுதலைப் புலிகளின் ஏவுகணையினால் எமது 3 வானூர்திகள் அழிக்கப்பட்டிருந்தன. அந்த சமயத்தில் காயப்பட்ட படையினரை அகற்றுவது, ஆயுதங்களை நகர்த்துவது என்பன மிகவும் கடினமாக இருந்தது. எனவே நடவடிக்கையை நிறுத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது. இந்த சமயத்தில் தளுவத்தை எனது கருத்துக்களை கேட்டார்.

நான் எனது பிரிக்கேட் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு தெரிவிப்பதாக கூறினேன். பின்னர் நடவடிக்கையை மேற்கொள்ள சம்மதித்தேன். தளுவத்தை அதற்கு அனுமதி அளித்தார். விடுதலைப் புலிகளால் பொறிவெடிகள், கண்ணிவெடிகள் வீதிகள், வீடுகள் என்பவற்றில் புதைக்கப்பட்டிருந்தன. அதுவே எமக்கு பெரும்சவாலாக இருந்தது. நாம் கொழும்புத்துறையை கைப்பற்றுவததை நாம் முதன்மையாக கொண்டிருந்தோம்.

விடுதலைப் புலிகளின் தாக்குதலினால் எமது நடவடிக்கை தடைப்பட்டது, அவர்களுக்கு எமது திட்டம் ஏற்கனவே தெரிந்து விட்டது. எனவே எமது திட்டத்திற்கு மேலதிக நேரம் தேவைப்படுவதாக நான் எனது மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தேன். அவர்கள் நான் நடவடிக்கையை தொடர விரும்பவில்லை என சந்திரிகாவிடம் தெரிவித்திருந்தனர்.

என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரிகா அது தொடர்பாக விசாரித்தார். நவம்பர் 26 ஆம் நாள் பிரபாகரனின் பிறந்த தினத்திற்கு முன்னர் யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட வேண்டும் என அவர் என்னிடம் தெரிவித்தார். நாம் அவசரமான நடவடிக்கைகளில் இறங்கினால் பெரும் சிக்கலை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என நான் அவருக்கு விளக்கினேன். நான் நன்றாக திட்டமிட்ட நடவடிக்கை மூலம் யாழ்பாணத்தை கைப்பற்றுவேன் என அவரிடம் தெரிவித்தேன்.

இரண்டு நாட்களின் பின்னர் என்னை தொடர்பு கொண்ட சந்திரிகா நடவடிக்கைகள் தொடர்பாக விசாரித்தார். நடவடிக்கை தொடர்வதாகவும் வெற்றியின் பின்னர் தெரிவிப்பதாகவும் நான் அவரிடம் தெரிவித்தேன்.

முன்னாள் பாதுகாப்புத்துறை மேலதிகாரிக்கு அதில் நம்பிக்கை ஏற்படவில்லை. நவம்பர் 30 ஆம் நாள் எனக்கு தூக்கம் வரவில்லை. எனக்கு ஏதும் நடந்துவிட்டால் எனது பிள்ளைகளின் நிலை குறித்து கவலை அடைந்தேன். பின்னர் டிசம்பர் 1 ஆம் நாள் யாழ். நகரம் மீதான தாக்குததலை தொடங்கினோம்.

விடுதலைப் புலிகள் சுற்றிவளைத்து தாக்கினார்கள். மோட்டார் தாக்குதலில் கேணல் ஜுவ் காயமடைந்தார். கட்டளை அதிகாரி காயமடைந்ததாக மேஜர் சன்னா வெடுகே எனக்கு தெரிவித்தார். அவரை நான் பார்த்துக் கொள்வதாகவும் நடவடிக்கையை தொடரும்படியும் நான் அவருக்கு கூறினேன். பின்னர் நாம் யாழ். நகரத்தை கைப்பற்றினோம்.

நான் உடனடியாக சந்திரிகாவை தொடர்பு கொண்டு செய்தியை தெரிவித்தேன். எனக்கு பதவி உயர்வும் பல சலுகைகளும் தருவதாக அரச தலைவர் கூறினார். இரு தினங்களின் பின்னர் என்னை தொடர்பு கொண்ட சந்திரிகா யாழ். நகரத்தில் சிங்க கொடியேற்றும் வைபவத்தை நடத்தச் சொல்லி சிலர் தனக்கு ஆலோசனைகளை தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.

எனினும் யாழ். நகரம் சிறிலங்காவின் ஒரு பகுதி அதில் கொடியேற்றுவது உங்களுக்கு அவமானமானது என நான் தெரிவித்தேன். இராணுவ அதிகாரிகளும் வீரர்களும் கொடியேற்றுவதே வழக்கமானது. ஆனால் பல நபர்கள் கொழும்பில் இருந்து வந்தனர் கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது.

179 தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகள் கொல்லப்பட்ட நிலையில் நாம் 19 இராணுவத்தினரை இழந்தோம். வலிகாமத்துக்குப் பின்னர், தென்மராட்சி பகுதி சமருக்காக 53 ஆம் படையணி நிறுத்தப்பட்டது. அதில் 131 விடுதலைப் புலிகள் உயிரிழந்தனர். பருத்தித்துறை நோக்கி நாங்கள் முன் நகர்ந்தபோது விடுதலைப் புலிகள் காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டனர். மே 12 ஆம் நாளன்று யாழ். குடாநாடு இராணுவத்தினர் வசம் வந்தது.

2000 இல் யாழ். குடாவை கைப்பற்றுவதற்கு விடுதலைப் புலிகள் மற்றுமொரு நடவடிக்கையை மேற்கொண்டனர். 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் என்னை தொடர்பு கொண்ட வீரசூரிய யாழ். குடாநாட்டில் உள்ள அதிகாரிகள் போரை நடத்தமுடியாதவர்களாக உள்ளதாக தெரிவித்தார். ஜெனரல் பலேகல்ல, ஜெனரல் செனிவிரட்ன ஆகியோர் கட்டளை அதிகாரிகளாக இருந்தனர். நான் அங்கு செல்ல தயாராக இருப்பதாக கூறினேன். ஜெனரல் ரத்வத்தை அதை அனுமதிக்க மாட்டார் என வீரசூரிய தெரிவித்தார்.

பெப்ரவரி மாதம் மறுபடியும் நான் யாழ். குடாவுக்கு செல்வதற்கு அனுமதியை கோரினேன். அமைச்சர் அதற்கு சம்மதிக்க மாட்டார் என அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். ஏப்ரல் 20 ஆம் நாள், சந்திரிகா சிகிச்சைக்காக பிரித்தானியாவில் தங்கியிருந்தார், ரத்வத்தை நுவரேலியாவில் இருந்தார். அப்போது என்னை இணைந்த நடவடிக்கை தளபதியாக யாழ். குடாவுக்கு அனுப்புவதற்கான முடிவு பாதுகாப்புச் சபைக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி என்னிடம் தெரிவித்தார்.

ஆனையிறவு வீழ்ச்சி கண்டு விட்டது, யாழ். குடாநாடும் சில தினங்களில் வீழ்ச்சி கண்டுவிடும் என அவர் என்னிடம் தெரிவித்தார். இதனை தடுப்பதற்கு தற்கொலைக்கு ஒப்பான நடவடிக்கையை நான் எடுப்பேன் என அவரிடம் தெரிவித்தேன். எனக்கு உதவியாக ஜெனரல் சரத் பொன்சேகாவும் அனுப்பப்பட்டார்.

இது எனது கடைசிப்பயணமாக இருக்கலாம். எனவே நான் எனது மனைவி பிள்ளைகளுடன் சமய வழிபாடுகளில் கலந்து கொள்வதற்கு இரு தினங்கள் தேவை என அவரிடம் நான் தெரிவித்தேன். அவர் எனக்கு ஒரு நாள் அவகாசம் தந்தார். நான் யாழ். குடாவிற்கு செல்வது இலத்திரனியல் ஊடகங்களில் உடனடியாக வெளிவந்து விட்டது. நான் எனது வீட்டை அடைந்த போது நண்பர்களும், உறவினர்களும் என்னை சூழ்ந்து கொண்டு செல்ல வேண்டாம் என தடுத்தனர். அதிகாரிகள் என் மீது பழியை சுமத்தி தமது கைகளை கழுவுவதற்கு முயற்சிப்பதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

16 வயது நிரம்பிய எனது மகள் கண்ணீர் மல்க யாழ். குடாவுக்கு செல்ல வேண்டாம் என என்னிடம் மன்றாடினார். நான் அங்கு செல்லா விட்டால் அங்குள்ள 32,000 படையினரும் மாண்டு விடுவார்கள் என நான் எனது மகளிடம் கூறினேன்.

நான் யாழை அடைந்த போது அங்கு எல்லாம் கைவிட்டு பேயிருந்தது. மிகவும் முக்கியமான பகுதிகளுக்கு மேலதிக படையினரை அனுப்பினேன். படையினரின் உளவியல் உறுதியை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் இறங்கினேன். மே 4ஆம் நாளன்று என்னை கொழும்புக்கு வரும்படி சந்திரி;கா அழைத்திருந்தார். நான் கொழும்புக்குச் சென்றால் இராணுவத்தினரின் மன உறுதி பாதிக்கும் என்று ஜெனரல் வீரசூரியவிடம் கூறினேன். கடைசி வானூர்தி இரவு 7.30 மணிக்கு புறப்படும். அதில் சென்றுவிட்டு காலையில் திரும்பிவிடுங்கள் என்று அவர் எனக்கு அறிவுறுத்தினார்.

நான் கொழும்பு அலரி மாளிகை சென்ற போது பாதுகாப்புச் சபைக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. இந்தியாவில் இருந்து கப்பல்களின் உதவிகளை பெற்று படையினரை வெளியேற்ற உதவுமாறு கோரி கதிர்காமரை தான் இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாக சந்திரிகா என்னிடம் தெரிவித்தார். அந்த கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரும் இருந்தனர் ஆனால் யாரும் பதில் கூறவில்லை.

இந்த நடவடிக்கை மூலம் 10,000 படையினரை கூட காப்பாற்ற முடியாது. ஒரே வழி எம்மை போரிட அனுமதியுங்கள் என நான் கூறினேன். பல்குழல் உந்துகணை செலுத்திகளை கொள்வனவு செய்து தரும்படி கோரினேன். பின்னர் உடனடியாக யாழ். குடாவுக்கு திரும்பினேன். அதன் பின்னர் எமக்கு சாப்பிட நேரம் இருக்கவில்லை. உணவை விட ஆயுதங்களும், வெடி பொருட்களும் முக்கியமாகின. எனவே உணவு கொண்டுவரும் வானூர்திகளை நிறுத்தி ஆயுதங்களை வரவழைத்தோம். பின்னர் பல்குழல் உந்துகணை செலுத்திகள் எமக்கு கிடைத்தன. இறுதியில் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினோம்.

றோகண விஜயவீர கைது

1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் நாள் ஜே.வி.பி தலைவர் றோகண விஜயவீராவை கைது செய்த குழுவுக்கு நான் தலைமை தாங்கினேன். அவரை கைது செய்வதே எனது கடமை நான் அவரை துன்புறுத்தவில்லை. அவரின் மனைவியையும் பிள்ளைகளையும் பாதுகாப்பாக கொழும்புக்கு அனுப்புவதற்கு நான் உதவினேன். விஜயவீர என்னுடன் வந்தார். அவர்களை கொழும்புக்கு அனுப்புவதற்கு ஒரு வர்த்தகரின் வானை ஒழுங்கு செய்தோம்.

விஜயவீரவின் மகள் தனது வளர்ப்பு நாய் குட்டியையும் கொண்டு செல்ல வேண்டும் என கூறினார். நாயை கொண்டு சென்றால் அது குரைத்து அயலவர்களை எழுப்புவதுடன், சோதனை நிலையங்களையும் உசார் படுத்திவிடும் என பக்குவமாக அவருக்கு விளங்கப்படுத்தினேன். அவரை கைது செய்து கொடுத்தது தான் எனது பணி அதன் பின்னர் நடந்த சம்பவங்களுக்கும் எனக்கும் தொடர்பில்லை.

யாழ். குடாவை 2000 ஆம் ஆண்டு தக்கவைத்த பின்னர் எனக்கு இராணுவத் தலைமையகத்ததில் இருந்து கடிதம் ஒன்று வந்தது. அதில் என்னை பதவியில் இருந்து நீக்கி பிரதம அதிகாரியாக நியமித்திருந்தனர். நான் எனது பதவியை மட்டும் இழந்தேன் ஆனால் நாடு பலவற்றை இழந்தது.

புலிகளுக்கு எதிராக இந்தோனேசியாவில் நடவடிக்கை

அவுஸ்திரேலியாவில் தூதுவராக கடமையாற்றிய போது இந்தோனேசிய தூதுவருடன் உறவுகளை பேணி இந்தோனேசியாவில் இருந்து விடுதலைப் புலிகள், ஆயுதங்கள் கடத்துவதை தடுத்ததுடன், அவுஸ்திரேலியாவில் நிதி திரட்டுவதையும் தடுத்தேன். என்னை இந்தோனேசியாவுக்கு தூதுவராக நியமித்த போது அதனை நான் மறுத்திருக்க முடியும்.

எனினும் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தல்களை தடுப்பதற்காக அங்கு சென்றேன். அங்கு இந்தோனேசியா அதிகாரிகளின் உதவியுடன் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தலுடன் தொடர்புபட்ட இரண்டாவது தலைவரை கைது செய்தோம்.

தற்போது என்னை தூதுவர் பதவியில் இருந்து நீக்கியதனைத் தொடர்ந்து நான் கவலை அடைந்துள்ளேன். ஏனெனில் விடுதலைப் புலிகள் மீண்டும் பெருமளவில் ஆயுதங்களை கடத்த முயற்சிக்கலாம். அவர்கள் இந்தோனேசியாவில் உள்ள சிறிலங்காவின் இராஜதந்திரிகள் மட்டத்தில் உறவுகளை ஏற்படுத்தினால் அது எமக்கு நல்லதல்ல.

தேர்தலில் போட்டியிட அழைப்பு

2001 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க, தேர்தலில் பங்குகொள்ளுமாறு எனக்கு தொலைபேசி அழைப்பை விடுத்திருந்தார். எனது நண்பர் மங்கள சமரவீரவும் அதே போன்றதொரு கோரிக்கையை விடுத்திருந்தார். ஆனால் நான் நிராகரித்து விட்டேன். எனக்கு பிரதி பாதுகாப்பு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் நான் அவுஸ்திரேலியாவுக்கான தூதுவர் பதவியையே ஏற்றுக்கொண்டேன்.

2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற தாக்குதலின் பின்னர் நான் அமெரிக்கா அதிகாரிகளுடன் பேசி விடுதலைப் புலிகளை தடை செய்தேன். பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எனது தனிப்பட்ட நண்பர். 1980 களில் கிழக்கு மற்றும் வவுனியா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பல இராணுவ நடவடிக்கைகளில் அவர் என்னுடன் பணியாற்றி உள்ளார்.

அவர் ஒரு றெஜிமென்ற் அதிகாரி, முதலாவது கஜபாகு படைப்பிரிவில் இருந்தார். 1990 களில் யாழ். கோட்டையை காப்பாற்றும் நடவடிக்கையில் அந்த படைப்பிரிவு பங்குபற்றி இருந்தது. பல்வேறு வழிகளில் பலர் பிரிந்திருப்பது கவலையானது. நான் ஒரு அரசியல்வாதி அல்ல. நான் ஒரு இராணுவத்தில் 34 வருடங்களும், இராஜதந்திர மட்டங்களில் 6 வருடங்களும் சேவையாற்றி உள்ளேன்.

பாதுகாப்புச் செயலாளர்

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்னை பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கும் படி கோரியது எனக்கு தெரியாது. அந்த பதவியை நான் எதிர்பார்க்கவில்லை. 1995 ரத்வத்தையும், ஜெரி டீ சில்வாவும் போர் 6 மாதங்களில் முடிந்துவிடும் என கூறினார்கள். ஆனால் அது முடிவடைய குறைந்தது 3 வருடங்கள் எடுக்கும் என நான் தெரிவித்தேன். அந்த அறிக்கையால் எனது பதவி பறிக்கப்பட்டு நான் மணலாற்றுப் பகுதிக்கு பிரிக்கேட் கொமாண்டராக நியமிக்கப்பட்டேன் என்றார் ஜனக பெரேரா.
நன்றி>புதினம்.

சிறிலங்காவிலிருந்து கருணா தப்பி ஓட்டம்!!!

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றின் பொறுப்பாளரான கருணா, சிறிலங்காவிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


கருணாவின் குழுவுக்குள் உள்மோதல்களானவை படுகொலைகளாக வெடித்துள்ளன. இதனையடுத்து கருணாவை சிறிலங்காவை விட்டு தப்பி ஓடுமாறு சிறிலங்கா புலனாய்வுத்துறை அறிவுறுத்தியிருக்கிறது.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தி விவரம்:

கிழக்கில் வலுத்துள்ள கருணா மற்றும் பிள்ளையான தரப்புக்களுக்கு இடையிலான மோதல் வெளிப்படையான மோதல்களாக வெடித்துள்ளதுடன் கடந்த இரு வாரங்களில் பலர் பலியாகியும் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அதன் தலைவர் கருணாவை அவரது சகாக்களுடன் நாட்டை விட்டு தப்பி ஓடும்படி சிறிலங்கா புலனாய்வுத்துறை வழங்கிய ஆலோசனையை தொடர்ந்து அவர் தனது நெருங்கிய சகாக்களுடன் வெளிநாடு ஒன்றிற்கு இந்த வாரம் தப்பிச் சென்றுள்ளார்.

கிழக்கில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கம் எண்ணியுள்ள வேளையில் கருணாவின் பிரசன்னம் இடைஞ்சலாக இருக்கலாம் என்ற கருத்தும் அரசிடம் உண்டு. கருணா குழுவுடன் அரசுக்கு உள்ள தொடர்புகளை பல அனைத்துலக நிறுவனங்கள், மற்றும் இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டி இருந்தனர். அண்மையில் பயணம் செய்த அமெரிக்காவின் பிரதி வெளியுறவுச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர், பிரித்தானிய பிரதிநிதி ஹிம் ஹாவல் ஆகியோரும் சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு கருணா குழுவினரே காரணம் என தெரிவித்திருந்தனர்.

கிழக்கில் ஒரு இடைக்கால அரசை அமைத்து அதற்கு தன்னை தலைவராக்க வேண்டும் என கருணா விரும்பியிருந்தார். கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகவும் தன்னை கற்பனை செய்திருந்தார்.

கருணா குழுவிற்குள் ஏற்பட்டுள்ள இந்த பிளவு சிறிலங்கா இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. கருணாவின் புதிய கட்சியின் பெயரில் இருந்து ஈழம் என்னும் சொல்லை அகற்றிவிடுமாறு அரசு முன்னர் பணித்திருந்தது. இப்படியான பணிப்புரை ஈ.பி.டி.பிக்குக் கூட விடுக்கப்படவில்லை.

கருணாவை விட பிள்ளையானுடன் இராணுவத் தரப்பிற்கு உறவுகள் அதிகம். மேலும் பிள்ளையானின் அரசியல் ஆசைகளும் குறைவு என்பதுடன் அனைத்துலக ரீதியிலும் பிரபலமற்றவர் என்பது அரசின் கருத்து. எனவே தான் கருணாவை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

கருணா குழுவின் பேச்சாளரான அசாத் மௌலானாவும் காணாமல் போயுள்ளார். அவரது செல்லிடப்பேசி வேலை செய்யவில்லை. அவரும் மங்களன் மாஸ்ரரும் நடுநிலைமையில் இருந்தவர்கள். பின்னர் அவர்கள் பிள்ளையான தரப்புடன் கட்டாயமாக இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கருணா தரப்பில் உள்ள இனியபாரதி, றியாசீலன், சின்னத்தம்பி, ஜெயதான், சந்திவெளி மாமா, மகிலன், திலீபன் ஆகியோர் உள்ளனர். பிரான்சில் இருந்து வழங்கப்பட்ட பணத்தின் மூலம் அவர்கள் கருணா குழுவுக்குள் பிளவை உண்டு பண்ணியதாக இராணுவம் கூறுகின்றது.

ஆனால் இராணுவப் புலனாய்வுத்துறையால் பிரித்தானியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட கிருஸ்ணன் என்னும் முன்னைய ஈ.என்.டி.எல்.எஃப் நபர் மூலம் கருணா குழு உடைக்கப்பட்டதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

கூட்டம் ஒன்றிற்காக அழைக்கப்பட்டிருந்த சிந்துஜனும் அவரது நான்கு சகாக்களும் இனியபாரதியினால் படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து கருணாவுடன் சந்திப்புக்காக கொழும்பு சென்று கொண்டிருந்த பிள்ளையான் இடைநடுவில் தனது பயணத்தை கைவிட்டு கிழக்குக்கு திரும்பியிருந்தார். இதில் காயமடைந்த சீலன் மருத்துவமனையில் உள்ளார்.

சிந்துஜனின் கொலையை பாரதியே செய்தது என்பதற்கு சாட்சியாக இருந்த சிந்துஜனின் தந்தையாரும் இந்த வாரம் கல்லாறில் கருணா தரப்பினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிள்ளையான் தரப்பு பொலநறுவை, திருமலைப் பகுதிகளிலும், கருணா குழு மட்டக்களப்பிலும் தங்கியுள்ளது. இரு குழுக்களும் இராணுவ பாதுகாப்பில் உள்ளனர்.

கருணா குழுவில் உள்ள முக்கால் பங்கு உறுப்பினர்கள் பிள்ளையானுடன் உள்ளனர். பிரதீப் மாஸ்ரர், ஜெயத்தான் ஆகியோரும் பிள்ளையானின் ஆதரவை நாடியுள்ளனர். கருணா தனது பிடியை முற்றாக இழந்துள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி>புதினம்.

Saturday, May 12, 2007

தமிழக மீனவர்களின் ஊடுருவலானது புலிகளின் தாக்குதலுக்கு உதவி செய்கிறது: சிறிலங்கா குற்றச்சாட்டு!

சிறிலங்கா கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் ஊடுருவுவதானது எமது இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உதவியாக இருக்கிறது என்று சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.


தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை சுட்டுக்கொல்வதாக இந்திய நாடாளுமன்றத்தில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.எகே.அந்தோணி கடந்த புதன்கிழமை பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதனை மறுத்து இன்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இரு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை சுட்டுக் கொல்வதற்கு துல்லியமான எதுவித சாட்சியமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறிலங்கா கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அதிகமாக ஊடுருவுவதானது எமது இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவியாக இருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி>புதினம்.

மேலோங்கும் பிள்ளையானின் கரங்கள்: நாட்டை விட்டுத் தப்ப கருணா திட்டம்?

பிள்ளையானுடன் ஏற்பட்ட உட்கட்சி மோதலைத் தொடர்ந்து பலவீனமடைந்துள்ள கருணாவும் அவருக்கு நெருக்கமான சிலரும் தமது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்குத் திட்டமிட்டிருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.


விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது யுத்தம் தொடரும் அதேவேளையில், கருணாவுடன் எதிர்காலத்தில் சமரசரத்துக்கான சாத்தியக்கூறுகள் இல்லையென பிள்ளையான் அறிவித்திருக்கும் நிலையிலேயே கருணா தனக்கு நம்பிக்கையான சகாக்கள் சிலருடன் நாட்டைவிட்டு வெளியேறுவதற்குத் திட்டமிடடுவருவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இது கருணா குழுவுக்குள் ஏற்பட்ட உட்கட்சி மோதலில் பிள்ளையானின் கைகள் மேலோங்கியிருப்பதைப் புலப்படுத்துவதாக இருக்கின்றது. கருணா குழுவின் இராணுவப் பொறுப்பாளராகச் செயற்பட்ட பிள்ளையான், அக்குழுவுக்குள் எற்பட்ட உள்மோதலையடுத்து பெரும்பாலானவர்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

"கருணாவுடன் நாம் மீண்டும் இணையந்து செயற்படும் சாத்தியக்கூறுகள் இல்லை" எனத் தெரிவித்திருக்கும் பிள்ளையான் குழுவின் பேச்சாளர் ஒருவர், "கருணா குழுவில் இருந்த பெரும்பாலான உறுப்பினர்கள் எம்முடன் உள்ளனர். கருணாவுடன் அவருக்கு விசுவாசமான ஒரு சிலர் மட்டும்தான் இருக்கின்றனர். கருணா குழுவின் இராணுவத்தரப்பு எமது முழுக்கட்டுப்பாட்டில் உள்ளது. எமது குழுவின் தலைவர் கருணா என்ற நிலை தற்போது மாறியுள்ளது" எனவும் தெரிவித்திருக்கின்றார்.

கருணா குழுவிலிருந்த சிரேஷ்ட இராணுவ மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் பிள்ளையானுடனேயே இருப்பதாகவும் தெரிவித்த அவர், திருமலையில் உள்ள தமது முகாமில் 350 போராளிகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

கருணா குழுவில் முக்கிய இராணுவ மற்றும் அரசியல் தலைவர்களாகவிருந்த ஜெயம், மாக்கன், தூயவன், ஈழமாறன், பிரதிப் மாஸ்ரர், சுரங்கா ஆகியோர் பிள்ளையான் தரப்பில் இணைந்து செயற்படும் அதேவேளையில், சின்னத்தம்பி, பாரதி, திலீபன், ஜீவேந்திரன் ஆகியோர் தொடர்ந்தும் கருணாவுடனேயே இருந்து செயற்படுகின்றார்கள். அத்துடன், பிள்ளையான் தரப்பு திருமலையில் உள்ள இராணுவக் கட்டுப்பாட்டு பகுதியிலும், கருணா தரப்பு மட்டக்களப்பில் உள்ள இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியிலும் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் நிலைகொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமது குழுவுக்குள் தோன்றியுள்ள மோதல்களைத் தொடாந்து கருணா தனக்கு நெருக்கமான சிலருடன் நாட்டை விட்டு தப்பியோட முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருணா குழுவின் பிரதித் தலைவராகவும், இராணுவப் பொறுப்பாளராகவும் இருந்த பிள்ளையான் குழுவின் பெரும்பாலானவர்களை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதால் தன்னுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலிருப்பதாக கருணா கருதுவதாகத் தெரிகின்றது.

இருந்த போதிலும் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் கருணாவை முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்திய படைத்தரப்பினர் கருணா நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு அனுமதிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இரு தரப்பினருக்குமிடையில் சமரசத்தை ஏற்படுத்துவதற்காக படையினர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், உட்கட்சி மோதல்களால் இதுவரையில் கருணா குழுவின் முக்கியஸ்தர்கள் சிலர் உட்பட சுமார் எட்டுப் பேர் இருதரப்பிலும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
நன்றி>புதினம்.

Friday, May 11, 2007

கருணா குழுவின் பேச்சாளர் அசாத் மௌலானா வெளிநாட்டுக்குத் தப்பியோட்டம்!!!

சிறீலங்கா துணை இராணுவக் குழுவான கருணா குழுவில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள உட்பூசல் காரணமாக கருணா, பிள்ளையான் முரண்பாடு மிகவும் உக்கிரமடைந்துள்ள நிலையில் கருணா அணியைச் சேர்ந்த கருணா குழுவின் பேச்சாளர் அசாத் மௌலானா உட்பட மேலும் சிலர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி>பதிவு

Thursday, May 10, 2007

அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு - மனித உரிமைகள் கண்காணிப்பு மையம்!

சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு அமைத்தல் அவசியம் என, நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சிறீலங்கா அரசுத் தலைவருடனான சந்திப்பில், அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு அவசியத்தை வலியுறுத்துமாறும், றிச்சட் பௌச்சரிடம் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் ஏற்கனவே கேட்டிருந்தது.

அமெரிக்காவின் மத்திய-தெற்காசிய இராஜாங்க அமைச்சின் உதவிச் செயலாளர் றிச்சட் பௌச்சரின் சிறீலங்காவிற்கான பயணத்தின் ஊடாக மனித உரிமை விடயம் தொடர்பாக அமெரிக்க அரசு சிறீலங்கா அரசு மீது பிரயோகித்த அழுத்தத்தையும் மனித உரிமைகள் கண்காணிப்பு மையத்தின் மூத்த சட்ட ஆலோசகர் ஜேம்ஸ் றோஸ் வரவேற்றுள்ளார்.

இதேவேளை, அமெரிக்க வெள்ளைமாளிகைப் பேச்சாளர் சோன் மைக்-கோமக், சிறீலங்கா அரசையும், விடுதலைப் புலிகளையும் பேச்சு மேசைக்கு மீண்டும் அழைத்துவர அமெரிக்கா முயற்சி செய்வதாக கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தார்.

இலங்கை இனப்பிரச்சினை பல வருடங்களாக நீடித்து வருவதாகவும், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது மிகவும் கடினமான காரியம் என்றும் கூறிய வெள்ளைமாளிகைப் பேச்சாளர் சோன் மைக்-கோமக், பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
நன்றி>புதினம்.

தோல்வியுற்ற நாடுகளின் பட்டியலில் முதன்மை இடம் இலங்கைக்கே!


போரழிவுகளினாலும், ஆழிப்பேரலை, மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றத்தின் பேரழிவுகளினாலும் அல்லாடும் இலங்கைத் தீவை, பொருளாதாரச் சீரழிவு என்ற மற்று மொரு நெருக்கடி மோசமாகத் தாக்கி முடக்கும் ஏதுநிலைகள் தென்படுகின்றன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்திருப்பதாக அரசியல் தலைவர்களும், அவர்களுக் குச் சார்பான புள்ளி விவரங்களை அள்ளி வெளியிடும் மேல் மட்ட அதிகார வர்க்கத்தினரும் வாய்வீச்சாக அறிவித்தாலும் கூட, களத்தில் என்னவோ மக்களின் பாடு திண்டாட்டமாகத் தான் இருக்கின்றது.

வடக்கு , கிழக்கை தமிழர் தாயகத்தை பொறுத்தவரை போரழிவு மற்றும் ஆழிப்பேரலைப் பேரழிவுகளிலிருந்து அப் பகுதி மக்கள் இன்னும் மீளவேயில்லை. இராணுவ முனைப் பில் போரியல் போக்கில் தீவிரம் காட்டும் அரசுப் படை களினால் நாட்டுக்குள் இடம்பெயரும் அகதிகளின் எண் ணிக்கை பல லட்சங்களை எகிறித் தாண்டுகின்றது. வீடு, வாசல்களை நிலபுலன்களை உடைமைகளை உறவுகளை துறந்து, சரித்திரபூர்வ வாழிடங்களை விட்டு வேரோடும், வேரடி மண்ணோடும் தூக்கி வீசப்பட்டு, அன்றாட ஜீவ னோபாயத்துக்கான தொழில்களையும் பறிகொடுத்து, அகதி முகாம்களில் அல்லலுறும் தமிழர்களின் அவலம் சொல்லுந்தர மன்று.

தங்களின் பொருள்களையும் பொருண்மியத்தையும் இழந்து வடக்கு, கிழக்குத் தமிழர்கள் பெருந்துன்பம் அனுப விக்கின்றார்கள் என்றால், மறுபுறத்தில் கொழும்பு அரசின் கொள்கைப் போக்கால் முழு இல்ங்கைத் தீவினதும் பொருளா தாரமே படுத்து, முடங்கிவிடும் சீரழிவு நிலையை நோக்கிப் படு மோசமாக வீழ்ந்துகொண்டிருக்கின்றது.

நாளொரு விலையும் பொழுதொரு பாய்ச்சலுமாக எரி பொருளின் விலை உயர்ந்துகொண்டிருக்கின்றது. கோதுமை மா விலையேற்றம், எரிவாயு விலை அதிகரிப்பு, பஸ் மற்றும் ரயில் கட்டணங்கள் உயர்வு என்று வரிசையாகப் பொருள் களின் குறிப்பாக அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் அவசிய சேவைகளின் கட்டணங்களும் விலைகளும் உய ரப் பறந்து வானைத் தொட்டு நிற்கின்றன.

வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிரான ரூபாவின் பெறு மதி அதலபாதாளத்துக்குள் வீழ்ந்துகொண்டிருக்கின்றது. சுருங்கக் கூறுவதானால் ரூபாவின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாதவாறு மோசமாகச் சரிந்து செல்கின்றது.

போரியல் போக்கில் மூர்க்கப் பிடிவாதம் கொண்டுள்ள அரசுத் தலைமை, அதனால் பொருளாதாரத்தைக் கோட்டை விட்டு விட்டு விழி பிதுங்கித் தவிக்கிறது.

ஈழத் தமிழர்களுக்கு, அவர்களின் நியாயமான அபிலாஷை களை நிறைவுசெய்யும் நீதியான தீர்வு ஒன்றை விட்டுக்கொடுப்போடு வழங்கி, நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு அதன்மூலம் அமைதித் தீர்வுகண்டு, அதன் வாயிலாக முழு இலங்கைத் தீவையுமே அபிவிருத்தி செய்து, உயர்த்துவதற் குக் கிடைத்த வாய்ப்பை தனது பௌத்த சிங்களப் பேரின வாத மேலாண்மைப் போக்கினால் தொலைத்துவிட்டுத் தடு மாறுகின்றது மஹிந்த அரசு.
தமிழர்களுக்கு உரிமைகள் எதையும் வழங்கிவிடக் கூடாது, அவர்களை அவர்களின் சுயநிர்ணய உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தை அடக்கி, ஒடுக்கி, நசுக்கி, அடி மைப்படுத்தி ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கங் கணம் கட்டி நிற்கும் கொழும்பு, அதற்காக யுத்த வெறித் திட் டத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது.

இதற்காகத் தனது பாதுகாப்புச் செலவினத்தை சுமார் நாற் பது வீதத்துக்கும் அதிகமாக உயர்த்தி, நாட்டின் பொருளா தாரத்தைப் படுக்கவைத்துவிட்டது அரசுத் தலைமை.
ஏற்கனவே முன்னைய கொழும்பு அரசுகள் யுத்தப் பேர ரக்கனுக்காக சர்வதேசத்திடம் பட்ட பெருந்தொகைக் கடன் நிலுவையில் நின்று, இலங்கையின் நிகர வருமானத்தை ஏப்பம் விட்டுக்கொண்டிருக்க, அது போதாது என்று பரிதவிக்க, பற்றாக்குறைக்கு இன்னும் கடன் வாங்கிப் போர் நடத்தத் துடி யாய்த் துடிக்கிறது மஹிந்தரின் தலைமை.

பேச்சு மேசையைப் புறக்கணித்து, யுத்தக் களத்தைத் தேர்ந்தெடுத்ததால் இப்போது விடுதலைப் புலிகளின் வான் வழி அச்சுறுத்தலைப் புதிதாக எதிர்நோக்கும் பெரும் இக் கட்டு நெருக்கடி அரசுத் தலைமைக்கு.

அந்தச்சிக்கலைத் தவிர்ப்பதற்காக மேலும் அவசர அவ சரமாக வான்வழிச் சவாலுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக் கைகளுக்கான செலவினம் என்ற பெயரில், பெரும் தொகைப் பணத்தை கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கத் தயாராகி விட்டது கொழும்பு.
ஏற்கனவே நொந்து, நொடிந்து போயிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கப் போகின்றது இந் தப் பொறுப்பற்ற யுத்தவெறித் தீவிரம்.

தேசியப் பிரச்சினையை அமைதி வழியில் தீர்த்துவைப்பதற்கு சர்வதேசம் நீட்டும் நட்புறவுக் கரங்களை தென்னிலங் கைப் பேரின வாதம், கர்ச்சித்துக்கொண்டு கிளம்பி எதிர்த்துப் புறமொதுக்குகின்றது. அமைதித் தீர்வு காண்பதற்கான முயற் சிகளில் உதவிப் பங்களிப்புச் செய்ய முன்வரும் நாடுகளுக்கு எதிராகக் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின் றன.
போரியல் முனைப்பில் தீவிரமாக அரசுத் தலைமை இருப்பதால் நாட்டுக்கான உதவித் திட்டங்களை சர்வதேச நாடுகள் முடக்க ஆரம்பித்துவிட்டன. பிரிட்டன், ஜேர்மன் போன்றவற்றைத் தொடர்ந்து பல நாடுகள் இந்த மார்க்கத் தைக் கடைப்பிடிக்கத் தயாராகி வருகின்றன.

யுத்த நெருக்கடியால் வெளிநாட்டு முதலீடுகள் கணிச மாகக் குறைந்து வருகின்றன. பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தும் உள்ளூர் உற்பத்தித் தொழில்கள் படுத்துவிட்டன.
போதாக்குறைக்கு அளவுகணக்கின்றி நூற்றுக்கும் அதிகமாக அமைச்சுக்கள், பிரதி அமைச்சுகள் போன்ற வற்றை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை, தனது அர சியல் வங்குரோத்து நிலைமையைச் சமாளிப்பதற்காக அர சுத் தலைமையே சீர்கெடுத்து வருகின்றது.

இந்தப் பின்னணிகளையும், பொருளாதாரம் போகும் போக்கையும், அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டு பேயாட்டம் போடுவதையும் நோக்குபவர்கள் தோல்வி யடைந்த நாடுகளின் பட்டியலில் முதல் நிலைமை இலங் கைக்கு விரைவில் கிடைக்கும் என்பது திண்ணம் என்பதை உணர்கிறார்கள்.
நன்றி>உதயன்.

Wednesday, May 09, 2007

தமிழக மீனவர்களை படுகொலை செய்தது சிறிலங்கா கடற்படைதான்: இந்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி குற்றச்சாட்டு!!!

தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை தொடர்ந்து படுகொலை செய்கிறது என்றும் 1991 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதி வரை 77 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி குற்றம்சாட்டியுள்ளார்.


இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் உறுப்பினர் சி.பெருமாள் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக ஏ.கே. அந்தோணி அளித்துள்ள பதில்:

அண்மைக்காலமாக சிறிலங்கா கடற்படையால் பெருந்தொகையாக தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு வருவதனை மத்திய அரசாங்கம் அவதானித்து வருகிறது. பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் அண்மைக்காலமாக இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்திய மீனவர்களைப் பாதுகாக்க இந்திய கடற்பரப்பான பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் இந்திய கற்படை தொடர்ச்சியான சுற்றுக்காவல் மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. வானிலிருந்தும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது குறித்து சிறிலங்கா அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.

இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரையிலான காலப் பகுதியில் 77 தமிழ்நாடு மீனவர்கள் இத்தகைய சம்பவங்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் குடும்பங்களுக்கான நிதி உதவியை தமிழ்நாடு அரசாங்கம் வழங்கி வருகிறது. மீனளத்துறை அமைப்புகளின் உதவியும் மீனவர் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது என்றார் அந்தோணி.
நன்றி>புதினம்.

Tuesday, May 08, 2007

'தமிழக அரசோடு முழு மனதுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்': சு.ப.தமிழ்ச்செல்வன்.

-ஜூனியர் விகடன்-

"எத்தனை முறை தேவைப்பட்டாலும் தமிழக அரசோடு நாங்கள் முழு மனதோடு ஒத்ழைக்கத் தயாராக இருக்கிறோம். சம்பந்தப்படாதவர்கள் மீது வீணாகப் பழிசுமத்தி தப்பித்துப்போக வாய்பளித்து விடக்கூடாது."


தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியின் முழு விபரம் வருமாறு:

"குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரை புலிகளுக்குச் சொந்தமான 'மரியா' என்ற படகில் வந்து சுட்டுக் கொன்றதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை கடத்திச் சென்று தங்கள் முகாமில் அடைத்து வைத்திருக்கிறார்கள் விடுதலப் புலிகள் என்று ஆதாரத்துடன் தமிழக காவல்துறை இயக்குநர் முகர்ஜி கூறியிருக்கிறார். அதற்கு உங்கள் பதில் என்ன?"

"இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். ஐந்து மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திலும், 12 மீனவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்திலும் இலங்கை கடற்படைதான் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதுதான் எங்கள் விசாரணையில் கிடைத்திருக்கும் தகவல். புலிகள் மீது திட்டமிட்டு பழி சுமத்துவதற்காகவே இலங்கை கடற்படை இப்படியொரு காரியத்தை செய்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது, நடக்கிறது என்பதெல்லாம் விரைவில் அப்பட்டமாக வெளிஉலகுக்கு வரும்போது, புலிகள் மீது பொய்யை வாரி இறைத்திருப்பதை உலகம் உணரும். இலங்கைக் கடற்படையின் மோசமான எண்ணத்துக்கு ஈடுகொடுப்பது போல தமிழகக் காவல்துறையும் ஏன் இப்படியெல்லாம் அவதூறு சொல்கிறது என்பதுதான் எங்களுக்குப் புரியவில்லை. தமிழக மக்கள் மீதும் மீனவர்கள் மீதும் மிகுந்த பாசம் கொண்டவர்கள்தான் எமது போராளிகள். இதில் எள்ளளவும் சந்தேகம் தேவையில்லை. இலங்கைக் கடற்படையினர் மீனவர்களுக்கு எதிராக நடத்தும் பல்வேறு கொடுமைகளில் இருந்து மீனவர்களை நாங்கள் காப்பாற்றி இருக்கிறோம். அப்படி இருக்கும்போது, காவல்துறைத் தலைவர் முகர்ஜி சொல்லியிருக்கும் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ள முடியாதது!"

"கடத்தப்பட்டு உங்கள் முகாமில் இருப்பதாகச் சொல்லப்படும் மீனவர்களை மீட்க தமிழக அரசு தரப்பிலிருந்து, உங்கள் தரப்பிடம் மூன்று நாட்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாகவும் இறுதிவரையில் நீங்கள் அவர்களை விடுவிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஒரு தகவல். அதுமட்டுமல்ல, தமிழகத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் ஐந்து கடற்புலிகள் ஈழத்தில் அடைத்து வைத்திருப்பதாகச் சொல்லப்படும் மீனவர்களுக்காக அங்கிருக்கும் புலி தளபதி ஒருவரிடம் தமிழகத்தில் இருந்து வாக்கி-டாக்கி மூலமாக பேசியதாக வரும் தகவல் குறித்தெல்லாம் என்ன சொல்கிறீர்கள்?"

"இதுவும்கூட தவறான தகவல்தான். இலங்கைக் கடற்படையாலும் அதனோடு சேர்ந்து இயங்கும் கூலிப்படையாலும் மிகவும் தெளிவாக திட்டமிட்டு நடத்தப்படுகின்ற நாடகமாகவேத்தான் நாங்கள் இதனைப் பார்க்கிறோம். இதில் எங்களுக்கு இன்னொரு பெருத்த சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது. தமிழக காவல்துறையோடும் உளவுத்துறையோடும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அவர்கள், புலிகளின் பெயரால் இப்படியான உரையாடல்கள நடத்கிறார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது. ஏனென்றால், இதுநாள் வரையில் அதிகாரப்பூர்வமாக தமிழகக் காவல்துறையோடு எமது அமைப்பின் உறுப்பினர்களோ தளபதிகளோ நேரடித் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதில்லை. அப்படி இருக்கும்போது, அவர்கள் எங்களோடு ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்றால் எப்படி? குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், மீனவர்களை நாங்கள் கடத்தி வைத்திருக்கவில்லை என்கிறபோது, அவர்கள் ஏன் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்? அப்படிப் பேசினால் அது அபத்தமாக இருக்காதா? தமிழக மக்களுக்கும் புலிகள் இயக்கத்துக்குமான அன்பை, பாசத்தை, உறவை கெடுக்கும் விதமாகவே இதெல்லாம் நடக்கிறது என்ற எங்கள் சந்தேகத்தில் நியாயம் இருக்கிறது."

"எல்லாவற்றையும் நீங்கள் தெளிவாக மறுக்கிறீர்கள். ஆனால், உங்கள் 'மரியா' படகில் வந்த கடற்புலிகளோ மீனவர்களை சுட்டுக் கொன்றது புலிகள்தான் என்று தெளிவுபடச் சொல்கிறார்களே...?"

"ஒரு விஷயத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதுநாள் வரையில் 'மரியா' படகில் பிடிபட்டது கடற்புலிகள் என்று எங்கள் தரப்பிலிருந்து யாராவது ஒப்புக் கொண்டிருக்கிறார்களா? அப்படி இருக்கும்போது, அவர்கள் வாக்குமூலம் கொடுத்தார்கள் என்று சொல்லி, எதையாவது தமிழகக் காவல்துறை சொல்லிக் கொண்டிருக்குமானால், அதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்? அப்படியே அவர்களிடம் வாக்குமூலம் பெற்றதாகச் சொன்னாலும், அந்த வாக்குமூலத்தின் உண்மைத் தன்மையை யார் சோதித்தறிவது? எமது அமைப்புக்கு எதிரானவர்கள் மூலமாக திட்டமிட்டு ஏன் இப்படியொரு நாடகம் நடத்தப்படக் கூடாது? கொஞ்சம் பொறுங்கள்... எல்லா உண்மைகளும் விரைவில் வெளியே வந்துவிடும்!"

"தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக புலிகள் தரப்பில் அறிக்கை ஒன்று விடப்பட்டிருக்கிறது. அதில், 'காணாமல் போன மீனவர்கள் பற்றி அறிவதற்கு எமது கடற்படையினர் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள் என்றும் மீனவர்கள் பற்றி தகவல்கள் கிடத்தால் அவர்களை மீட்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைக்கு நாங்கள் ஒத்துழைப்போம்...' என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே?"

"ஆமாம், பாதிக்கப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள். அவர்களுக்காக நாங்கள் உதவுவோம். இந்த விஷயத்தில் எமது தலைமை கரிசனத்தோடும் அக்கறையோடும் இருக்கிறது. மீனவர்கள் கடத்தல் நாடகத்திலும் மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் என்ன நடந்தது என்பதை உலகுக்குச் சொல்ல நாங்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறோம்."

"ஒருவேளை மீனவர்களை மீட்கும் முயற்சிக்கு உங்கள் ஒத்துழைப்பு தேவைப்பட்டு, நீங்கள் தமிழக அரசோடு பேச வேண்டியிருந்தால் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா?"

"மீனவர்களை மீட்பதற்கும் அவர்களின் பாதுகாப்பு நிலைமைகளை உறுதிப்படுத்வதற்கும் தமிழக அரசு எடுத்து வருகிற அனைத்து முயற்சிகளுக்கும் நாங்கள் உறுதுணயாக இருப்போம். சிங்கள கடற்படையாலோ கூலிப்படையாலோ நிகழ்த்தப்பட்ட இந்தச் செயலை முடிவுக்குக் கொண்டு வந்து, தமிழக மீனவர்கள் சிறுபாதிப்பும் இல்லாமல் மீட்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். இது தொடர்பாக எத்தனைமுறை தேவைப்பட்டாலும் தமிழக அரசோடு நாங்கள் முழு மனதோடு ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம். சம்பந்தப்படாதவர்கள் மீது வீணாகப் பழிசுமத்தி தப்பித்துப்போக வாய்ப்பளித்து விடக்கூடாது."

"அண்டை நாட்டுப் பிரச்சினைதான் என்றாலும், ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான தமிழர்கள் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருந்து வந்திருக்கிறார்கள். சமீபத்திய நிகழ்வுகளுக்குப் பிறகு இந்த நிலைப்பாட்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணருகிறீர்களா?"

"நடப்பது என்னவென்று தமிழக மக்களுக்கு மிகத் தெளிவாகத் தெரிந்திருக்கும் சூழ்நிலையில் அவர்கள் எங்கள் மீது கொண்டிருக்கும் பரிவும் பாசமும் எப்படிக் குறையும்? அதற்கு வாய்ப்பே இல்லை! இப்படி தமிழக மக்கள் மனங்களில் இருந்து எங்களை பிரித்தெடுக்க சிங்கள அரசு போடும் நரித் திட்டங்கள் பலிக்காது. எங்களுக்கு எதிராக இந்திய அரசையும் திருப்பிவிடும் முயற்சிகளையும் சிங்கள அரசு செய்து வருகிறது. எங்களைப் பொறுத்த வரையில் பொய்கள் வேகமாகத்தான் பரவும். ஆனால், இறுதியில் அதை பரப்புகிறவர்கள் மீதே அசிங்கத்தைப் பூசும். உண்மைக்கு சோதனை வந்தால், அதனை பொறுமையாக எதிர்கொள்வதுதான் சரியான அணுகுமுறை. அதைத்தான் புலிகள் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள்."

"சமீபத்தில் மூன்றாவது முறையாக நீங்கள் கொழும்பில் வான்வழித் தாக்குதல் நடத்தினீர்கள். அதில் இந்தியாவுக்குச் சொந்தமான எண்ணெய் கிடங்குகள் பலவும் பாதிக்கப்பட்டதாகச் செய்திகள் வருகிறதே..."

"சமாதான காலத்தில் நாங்கள் யுத்த தர்மப்படி எவ்வித தாக்குதலிலும் ஈடுபடாமல் இருந்தபோது, தொடர்ந்து தமிழ் மக்கள் மீது விமானத்தாக்குதல நடத்தியது சிங்கள விமானப்படை! பலமுறை எச்சரித்தோம்... உரியவர்களிடம் முறையிட்டோம். ஆனால், சிங்கள ராணுவம் வான்வழித் தாக்குதலை நிறுத்தவில்லை. அதன்பிறகுதான் புலிகள் தரப்பில் வான்வழித் தாக்குதலுக்கு ஆயத்தமானோம். சிங்கள ராணுவத்துகுத் தேவையான எரிபொருளைக் கொடுக்கும் கட்டுமானங்களை அழிப்பதுதான் எங்கள் விமானப்படையின் நோக்கம். வான் வழியாக நாங்கள் வீசுகிற ஒவ்வொரு குண்டும் இலங்கை ராணுவத்தின் விமானக் கட்டுமானங்களுக்கு எதிரானதுதானே தவிர, சிங்கள அப்பாவி மக்கள் மீது அல்ல. அப்படி இருக்கும் போது, நாங்கள் நல்லுறவைப் பேண விரும்பும் இந்திய அரசுக்கு எதிராக எங்களின் விமானப்படையை ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம்!"

"கிட்டத்தட்ட சிங்கள அரசு-புலிகள் என இரண்டு தரப்பும் முழுமையான போரில் குதித்துவிட்ட இந்த சூழ்நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பிருக்கிறதா?"

"இலங்கை அரசைப் பொறுத்தவரையில் இன அழிப்புப் போரை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். பல லட்சம் மக்களை அகதிகளாக்கி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து தொடர்ந்து போரை முன்னெடுத்து வருகிறார்கள். நாங்கள் நடத்துவது எமது மக்களை காக்கும் தற்காப்புப் போர்தான். மீண்டும் ஒரு சமாதானச் சூழலைக் கொண்டு வர நார்வே, பிரிட்டன் போன்ற நாடுகள் முயன்று வருகின்றன. என்றாலும், சிங்கள ராணுவத்தின் ஆக்கிரமிப்பு போர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமைதி பேச்சுக்காக நார்வே மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த அமைதித் தூதுவர்கள் எம்மைச் சந்திக்க எடுத்த முயற்சிகளையும் இலங்கை அரசுதான் தடுத்துவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தையெல்லாம் நடக்குமா என்பது தெரியவில்லை. அப்படி இருக்கும்போது எங்கள் மக்களை காக்க நாங்களும் ஆயுதப்போர் நடத்தத்தானே வேண்டும்?"

நன்றி>புதினம்.