லண்டன், மே 5
இலங்கைத் தமிழர்கள் தாம் நடத்தும் உரிமைப் போராட்டத்தின் நியாயத்தை, பிரிட்டிஷ் நாடாளு மன்றத்தில் (ஹவுஸ் ஒவ் கொமன்ஸ் சபையில்) எடுத்து விளக்குவதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை இனப்பிரச்சினை சம்பந்தமாக கடந்த புதன்கிழமை மே மாதம் இரண்டாம் திகதி நான்கரை மணி நேரம் இங்கு நடை பெற்ற விவாதத்தின் போது இது தொடர்பாகக் கோடி காட்டப்பட்டுள்ளது.
அன்றைய விவாதத்தின் போது, அனைத் துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலை வரும் முன்னாள் வெளிவிவகார அமைச் ச ரும், தொழிற்கட்சி எம்.பியுமான கெய்த் வாஸ் தமது குழுவின் மூன்றம்சத் திட்டத்தை எடுத்து விளக்கினார்.
அவர் வெளியிட்ட மூன்றம்சத் திட்டம் வருமாறு:
* இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் நோர்வே அரசு ஆகிய முத்தரப்பினரும் கலந்துகொள்ளும் உச்சி மாநாட்டை எதிர்வரும் ஜூலை மாதத்தில் லண்டனில் நடத்து வது.
* பிரிட்டனின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் களைக் கொண்ட தூதுக்குழு ஒன்று எதிர்வரும் செப்ரெம்பர் மாதத் தில் இலங்கைக்குச் சென்று பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சு நடத்துவது.
விடுதலைப் புலிகளின் பிரதேசங்களுக்கும் சென்று பேச்சு நடத் துவது.
* விடுதலைப் புலிகளின் பிரதம பேச்சாளர் (அனேகமாக அவர் களின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன்) தமிழர் தரப்பு நியாயங்களை நாடாளுமன்றத்தில் எடுத்து விளக்க வாய்ப்பு வழங்குவது இம்மாதம் இரண்டாம் திகதி கொமன்ஸ் சபையில் நடைபெற்ற இலங்கைப் பிரச்சினை சம்பந்தமான விவா தத்தில் மொத்தம் அறுபது எம்.பிக்கள் கலந்து கொண்டு உரை யாற்றினர்.
அங்கு பேசுகையில் கெய்த் வாஸ் குறிப்பிட்டதாவது:
விடுதலைப் புலிகள் மீது பிரிட்டன் தடைவிதித்து ஆறு வரு டங்கள் கழிந்துவிட்டன. தடை குறித்து மறுபரிசீலணை செய் வதற்கான காலம் வந்துவிட்டது. அவ்வாறு செய்வதன் மூலமே தீர்வுக்கான பேச்சுவார்த்தையை நிச்சயப்படுத்திக் கொள்ள முடி யும் என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெரிம கோர்பயின், சைமன் ஹியு ஆகியோரும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு வதே பேச்சுமூலமான தீர்வுக்கு உதவும் என்று தெரிவித்தனர்.
அமைப்பு ஒன்று சட்டரீதியற்றது என்று பிரகடனப்படுத்துவது சமாதானப் பேச்சுக்கு உதவமாட்டாது.
""மோசமான சரித்திரத்தை'' அழுத்திப்பிடித்துக் கொண்டிருப் பதன் மூலம் ஒரு தரப்புடன் பேச்சு நடத்தாமல் பின்னடிப்பதால், எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. ஐ.ஆர்.ஏ. அமைப்பை தடைசெய்ததன் மூலம் வட அயர்லாந்துப் பிரச்சினை கூர்மையாக்கப் பட்டதை நாமே அனுபவத்தில் கண்டிருக்கிறோம் என்று அவர் கள் இருவரும் எடுத்துக் காட்டினர்.
ஆனால் கொன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த கிளேய்ரன் பிறவுண் என்ற எம்.பியைத் தவிர அக்கட்சியின் ஏனைய பல உறுப்பினர்களும் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படக் கூடாது என்று அடித்துக் கூறினார்கள்.
வெளிவிவகார அமைச்சர் மறுப்பு
வெளிவிவகார அமைச்சர் கிம் ஹவெல்ஸ் பேசுகையில், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க முடியாது என்று வலியுறுத்தினார்.
பயங்கரவாதம் சொல்லிலும் செயலிலும் துறக்கப்படும் வரைக்கும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை.
தற்கொலைக் குண்டுத்தாரிகளுக்கும் கொலைகாரர்களுக்கும் சித்திரவதைக் காரருக்கும் சட்ட அங்கீகாரம் வழங்குவது என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
விடுதலைப் புலிகளுடன் உத்தியோக பூர்வமற்ற பேச்சுகள் நடைபெற்ற போதிலும் உத்தியோக ரீதியாக பேச்சுகளைப் போன்று பயன்தரமாட்டா. ஆகவே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது அவசியம் என்று ஜோன் மக்டொனால்ட் (தொழிற்கட்சி) எம்.பி. எடுத்துரைத்தார். இந்தத் தடை இலங்கை இனப்பிரச்சினையை மேலும் பூதாகாரமாக்கியது என்பதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய வெளிவிவகார அமைச்சர், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதனால் இனப்பிரச்சினைக்கான சமாதானப் பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்ல முடியுமாயின் அது குறித்து அக்கறையுடன் ஆராயலாம் என்று கூறினார்.
உள்நாட்டு அமைச்சரின் நிலைப்பாடு உள்நாட்டு அமைச்சர் பேசுகையில்,
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து அரசுக்கு வெறுப்பு எதுவும் இல்லை. வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள சரத்துக்களைப் பயன்படுத்தி அவர்கள் தம் மீதான தடையை நீக்குவதற்குப் பயன்படுத்த முடியும். அதற்கான சாத்திய நிலை ஒன்று அண்மையில் உருவாகியுள்ளது. சட்டத்துக்கான எதிராக ஏற்கனவே எழுந்த ஒரு சவால் விடுதலைப் புலிகளை "புதிய எல்லைக்குள்' கொண்டு வந்துவிட்டுள்ளது என்றார். (அ)
நன்றி>உதயன்
Saturday, May 05, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment