Thursday, May 03, 2007

சிறிலங்காவுக்கான பிரித்தானியாவின் நிதி உதவி நிறுத்தம்.

சிறிலங்கா அரசாங்கமானது மனித உரிமைகளை ஏற்றுக்கொண்டு, இராணுவச் செலவீனங்களைக் குறைக்கும் வரை பிரித்தானியாவின் நிதி உதவி நிறுத்தப்படும் என்று சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதரகம் அறிவித்துள்ளது.


கொழும்பில் சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதரக பேச்சாளர் கூறியதாவது:

அனைத்துலக சமூகம் பலமுறை விடுத்த வேண்டுகோள்களை தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் நிராகரித்த நிலையில் இந்தத் தடை நடைமுறைப்படுத்தபடுகிறது.

சிறிலங்காவுக்கு 2005 ஆம் ஆண்டு 41 மில்லியன் பவுண்ட்ஸ் (81.6 மில்லியன் டொலர்) கடன் உதவி வழங்க ஒப்புக் கொண்டது.

இதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான ஒதுக்கீடான 6 மில்லியன் பவுண்ட்சில் 3 மில்லியன் பவுண்ட்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதர தொகையானது எமது நிபந்தனைகளுக்கு முகம் கொடுக்கப்படும் நிலையில்தான் வழங்கப்படும் என்றார் அவர்.
நன்றி>புதினம்.

No comments: