இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்துள்ளதைக் கண்டித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அபிவிருத்திக் குழு தீர்மானம் நிறைவேற்றக்கூடும் எனத் தெரிகிறது.
மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியோ அல்லது சிறிலங்கா அரசாங்கத்தை கண்டனம் செய்தோ ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அபிவிருத்திக் குழு தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை நிலைமைகள் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த மூன்று மணிநேரம் நடைபெற்றதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திலும் இத்தகைய விவாதம் நடைபெற உள்ளது.
ஐரோப்பிய அபிவிருத்திக் குழுவின் இலங்கை நிலைமைகள் தொடர்பான கூட்டம் எதிர்வரும் யூன் 5 ஆம் நாள் நடைபெற உள்ளது. இதில் இந்தோனேசியா மற்றும் இலங்கை நாடுகளில் ஆழிப்பேரலைக்குப் பின்னரான நிலைமைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
நன்றி>புதினம்.
Sunday, May 06, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment