Monday, May 07, 2007

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது!!!

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.


சிறிலங்கா பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளதாவது:

யுத்த நிறுத்த ஒப்பந்தமானது பலமுறை மீண்டும் மீண்டும் மீறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீள் பரிசீலனை செய்து அதனை துண்டித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தேசியப் பாதுகாப்பு சீர்குலைகின்ற நிலையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கைவிடுவதில் அரசாங்கத்துக்கு எதுவித தயக்கமும் இல்லை. தேசப் பாதுகாப்பு தொடர்பில் நாம் எதுவித சமரசமும் செய்து கொள்ளப் போவதில்லை என்றார் அவர்.

"எந்தத் தரப்பும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்காத நிலையில் அமைதிப் பேச்சுக்களை மீளத் தொடங்குவதில் அர்த்தம் ஏதுமில்லை" என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தோர்பினூர் ஓமர்சன் தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

No comments: