இலங்கைக்கான பயணங்கள் குறித்து மீள்பரிசீலனை செய்து கொள்ளுமாறு தனது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ள பிரித்தானிய அரசாங்கம், வடக்கு கிழக்கு பகுதிக்கு செல்வதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளது.
இதுதொடர்பõக பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள பிரிட்டன் பிரஜைகள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
வடக்கே புத்தளத்திற்கும் அப்பாலுள்ள பகுதிகள், யாழ். குடாநாடு, கிழக்கே திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு செல்வதை முற்றாக தவிர்த்துக் கொள்ளவும்.
கொழும்பிலும், தென் இலங்கையிலும் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
உங்களை உறுதிப்படுத்திக்கொள்ளக்கூடிய ஆவணங்களை எப்போதும் உங்களுடன் வைத்திருக்குமாறு கேட்கப்படுகின்றீர்கள்.
உங்களது அடையாள த்தை நிரூபித்த பின்னரும் மேலதிக விசாரணைகள் தேவைப்படுமாயின் பிரிட்டன் உயர் ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொள்ளுமாறு பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவிக்கவும்.
எனினும் அரசாங்கத்துக்கும், பாதுகாப்பு நடைமுறைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இலங்கையில் வசிக்கும், பணிபுரியும் ஒரு மாத்திற்கு மேல் தற்காலிகமாக தங்கியுள்ள சகல பிரிட்டன் பிரஜைகளையும் கொழும்பிலுள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்துகின்றோம்.
விடுதலைப் புலிகளினால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குலையடுத்து எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையையடுத்து பிரிட்டன் அரசாங்கம் தனது பிரஜைகளுக்கு இப்பயண அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
நன்றி>தமிழ்வின்.
Tuesday, May 01, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment