Tuesday, May 01, 2007

இறுமாப்புடன் இருந்த சிங்கள இராணுவத்துக்கு புலிகளின் அடி பேரிடி: வானூர்தியை சுட்டு வீழ்த்தியது குறித்து "மாலைமலர்" புகழாரம்.

மாதிரி படம்.தானியங்கி விமான எதிர்ப்புதுப்பாக்கி இயங்கும் முறை.

சிறிலங்கா வான்படையின் மிக்-27 வானூர்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தியமையானது இறுமாப்புடன் இருந்த சிங்கள இராணுவத்துக்கு விழுந்த பேரிடியாகும் என்று தமிழகத்திலிருந்து வெளியாகும் "மாலைமலர் நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது.

"மாலைமலர்" ஏட்டில் இது தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி விவரம்:

விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்திய போர் வானூர்தி இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டது. அதிவேகத்தில் சென்று குண்டு வீசும் திறன் கொண்டது.

சிறிலங்கா இராணுவத்திடம் 12 கிபீர் வானூர்திகள் உள்ளன. கிபீர் என்றால் சிங்கக்குட்டி என்று அர்த்தம். அந்த சிங்கக்குட்டியை புலிக்குட்டிகள் வீழ்த்திவிட்டன.

மிராஜ்- 5 ரக வானூர்திகளை மாற்றி வேறு என்ஜின்களை பொருத்தி இந்த போர் வானுர்திகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மழை, புயல் போன்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாக்குப் பிடித்து இந்த ஒற்றை இருக்கை வானூர்தி பறந்து சென்று குண்டு வீசும் ஆற்றல் உள்ளது.

இதனை வீழ்த்த விடுதலைப் புலிகளிடம் நவீன பீரங்கிகள் இல்லை என்று இறுமாப்புடன் இருந்த இராணுவத்துக்கு விடுதலைப் புலிகளின் இந்த அடி பேரிடியாக அமைந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: