Wednesday, July 25, 2007

குறைந்தளவு அதிகாரங்களையே இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு வழங்குமாறு இந்தியா!!!

இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை விட குறைந்தளவு அதிகாரங்களையே இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு வழங்குமாறு இந்தியா ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் சகோதரரும் ஆலோசகருமான பசில் ராஜபக்ச இந்த விடயத்தை தமிழ் அரசில்வாதி ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்துமாறு இந்தியா தொடர்ந்து தமது அரசாங்கத்தை வலியுறுத்தி வருவதாகவும் எனினும் இந்தியாவில் உள்ள மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கை விட குறைவான அதிகாரங்களை கொண்ட அலகினை தமிழ் மக்களுக்கு வழங்குமாறு அது வலியுறுத்தியுள்ளதாகவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபை மூலம் முன்வைக்கப்படவுள்ள தீர்வு யோசனைகளுக்கு மக்கள் ஆணையை பெறுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பபை நடத்த வேண்டும் என்று இந்தியா விரும்புவதாகவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகம் என்ற நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து வலியுறுத்துவதாகவும் இதனை மாற்றியமைக்க வேண்டாம் என கடும் தொனியில் எச்சரித்துள்ளதாகவும் அரசியலமைப்பின் 13வது சரத்தில் காணப்படும் குறைபாடுகளை நீக்கி மாகாண மட்டத்தில் அதிகாரங்களை பகிருமாறு கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி>பதிவு

No comments: