




இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி அதனைக் கண்டித்து இங்கே லண்டனில் டிராவால்கர் சதுக்கம் பகுதியில் இலங்கை தமிழ் அமைப்புக்களால் ஒரு பெரும் எதிர்ப்பு நிகழ்வு இன்று அனுட்டிக்கப்பட்டது.
இங்குள்ள தமிழ் நகராட்சி மன்ற உறுப்பினர்களின் அமைப்புடன் பல தமிழ் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததற்கான நோக்கம் குறித்து அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான, ஹரோ கவுன்ஸிலின் உறுப்பினர் தயா இடைக்காடர் அவர்கள் விளக்குகையில், இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவதாகவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அனைவரும் அவற்றைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காகவே தாம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததாகக் கூறினார்.
இலங்கை மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியாக தானும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொண்டதாகக் கூறினார் அங்கு சமூகமளித்திருந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம்.
அதேவேளை இங்கு பிரிட்டனிலும் தமிழர்களின் சில உரிமைகள் போலி காரணங்களைக் காட்டி மீறப்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார் வெண்புறா அமைப்பைச் சேர்ந்த டாக்டர் மூர்த்தி.
இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழர்கள் மாத்திரமல்லாமல் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த சில பிரமுகர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
http://www.bbc.co.uk/tamil/news/story/2004/05/040528_tamil_currentaffairs.shtml
1 comment:
ஒற்றுமையே பலம்
Post a Comment