Friday, July 13, 2007

ஜேர்மன் தூதுவரை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு சிறீலங்கா அரசு திட்டம்!

சிறீலங்காவிற்கான ஜேர்மன் தூதுவரை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாக, அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளேயை ஆதாரம் காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஹில்டன் தங்ககத்தில் அண்மையில் ஜேர்மன் தூதுவரைச் சந்தித்து, சிறீலங்காவிற்கான நிதியுதவிகளை நிறுத்துமாறு கோரியிருப்பதாகவும் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே கண்டனம் தெரிவித்திருக்கின்றார்.

அண்மைக் காலமாக சிறீலங்கா அரசாங்கத்திற்கான அழுத்தங்களை ஜேர்மனி அரசு பிரயோகிப்பதற்கு கொழும்பிற்கான ஜேர்மன் தூதுவரே காரணமாக இருந்திருப்பதாக, சிறீலங்கா அரசு நம்புகின்றது.

எனவே ஜேர்மன் தூதுவரை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு சிறீலங்கா அரசு முனைந்து வருவதை, தகவல் தொடர்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் வேண்டுகோளுக்கு அமைவாக ஜேர்மன் தூதுவர் பற்றிய விசாரணைகளை மேற்கொள்வதற்கு, சிறப்பு நாடாளுமன்றக் குழுவொன்று நியமிக்கப்பட இருப்பதாகவும் தெரிய வருகின்றது.

சிறீலங்கா அரசின் உள்ளக விடயங்களில் ஜேர்மன் தூதுவர் தலையிட்டு வருவதாக மறைமுகமாகக் குற்றம் சாட்டிய அமைச்சர் ஜெயராஜ், பிறேமதாஸ ஆட்சிக் காலத்தில் தேர்தல் பற்றி விமர்சித்த பிரித்தானியத் தூதுவர் நாடு கடத்தப்பட்டதையும் நினைவு கூர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி>பதிவு.

1 comment:

தேவன் said...

கோமானுக்கு கோவம் வரும் என்பதை கேட்டறிந்திருக்கிறேன், கோவணத்தானுக்கும் கோவம் வரும் என்பதை இப்பதான் பார்க்கிறேன்!