Friday, July 06, 2007

சிறிலங்காவின் ரூபாய் கடுமையான வீழ்ச்சி!!!

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை அடுத்து நாணயமான ரூபாய் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.


நேற்று வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த சரிவு இறக்குமதியாளர்கள் தமது நிலுவைகளை டொலரில் செலுத்த வேண்டி வற்புறுத்தியதனால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய பல மாதங்களாக ரூபாயில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சியில் இது கடுமையான சரிவாகும். தற்போது ஒரு டொலரின் பெறுமதி 111.53 - 111.60 ரூபாய்களாகும்.

கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட சரிவின் போது ஒரு டொலரின் பெறுமதி 111.46 - 111.53 ரூபாய்களாக இருந்தது. எனினும் இது 118 - 120 ரூபாய்களாக இந்த ஆண்டின் இறுதியில் மேலும் வீழ்ச்சி அடையலாம் என சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாயின் இந்த வீழ்ச்சிக்கு எரிபொருட்களின் விலையேற்றம், நாட்டில் ஏற்பட்ட பணவீக்கம் என்பனவே காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் 5 வீத வீழ்ச்சியை சந்தித்த நாணயம் இந்த வருடம் மேலும் 4 வீத வீழ்ச்சியை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

No comments: