ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இராணுவ துணை படையான கருணா குழுவை தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சியாக அங்கீகரிக்க மறுத்தமைக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு துணை ஆயுதக் குழுவான கருண குழுவே காரணம் என தெரியவந்துள்ளது.
அரசியல் கட்சியாக தோற்றம் பெற்ற காலம் முதலே சிங்கள அரசாங்கங்களுக்கு விசுவாசமான துணைப் படையாக செயல்பட்டு வரும் ஈ.பி.டி.பியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் முன்வைத்த வேண்டுகோளின் பேரிலேயே கருணா குழுவை அரசியல் கட்சியாக அங்கீகரிக்காத நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணம் படையினரின் ஆக்கரமிப்பிற்குட்பட்டுள்ள நிலையில் அங்கு நடத்தப்படும் தேர்தல்களின் போது அரசாங்கத்தின் ஆதரவுடனான அரசியல் கட்சிகள் வெற்றியீட்டுவது தவிர்க்க முடியாதது.
எனினும் கிழக்கின் ஏகபோக உரிமையும் தமக்கே என அறிவித்துள்ள கருணா குழு அமைச்சர் டக்களஸ் தேவானந்தாவின் கிழக்கை அரசியல் ரீதியில் அபகரிக்கும் திட்டத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தனது அரசியல் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்தி கருணா குழுவினர் நேரடியாக தேர்தல்களில் பங்கேற்பதை டக்ளஸ் தேவானந்தா தடை செய்துள்ளார்.
இரு துணை ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட முரண்பாடுகள் துப்பாக்கிச் சமராக விரிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் ஸ்ரீலங்கா படைத் தரப்பின் கடுமையான அமுத்தங்கள் காரணமாக இரு தரப்பினரும் இணைந்து செயல்படுவதற்கு இணங்கியதான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையின் பின்னர் நேரடி மோதல்களில் இரு தரப்பும் ஈடுபடாத போதிலும் ஊடகங்கள் மூலமான பிரசார போரில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது கருணாவின் கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்லது கிழக்கு அபிவிருத்திக்கான அமைச்சர் என்ற நீண்டகால கனவை டக்ளஸ் தேவானந்தா கலைத்து விட்டுள்ளதால் கருணா தரப்பு கடுமையாக விசனமடைந்துள்ளதாகவும் கிழக்கில் தேர்தல் ஒன்று நடத்தப்படுமானால் அது இரு தரப்பிற்கும் இடையிலான முழு அளிவிலான யுத்தமாக மாற்றம் பெறும் என்றும் கிழக்கு மாகாண செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நன்றி>பதிவு.
Monday, July 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment