Tuesday, July 31, 2007

கடலின் மடியில் கந்தக வாசம்: மலபார் 07 - ஆய்வுக் கட்டுரை!



பாகிஸ்தானில் நிலை கொண்டுள்ள அல் கைடா போராளிகளை தாக்குவதற்கு இலங்கையை தளமாக பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற அமெரிக்கா தலைமையிலான கூட்டு படைகளின் தாக்குதல்களை அடுத்து அல் கைதாவின் முக்கிய தளபதிகள் மற்றும் போராளிகள் பாகிஸ்தானிற்கு சென்றுள்ளனர்.

பாகிஸ்தானில் அல் கைதா போராளிகள் தங்கியிருப்பதையும் அதன் தலைவரான ஒசாமா பின்லேடன் இன்னமும் உயிருடன் இருப்பதையும் அமெரிக்க புலனாய்வு துறை உறுதி செய்துள்ளது.

அமெரிக்காவிற்கும் அதன் நேச நாடுகளுக்கும் எதிராக தாக்குதல்கள் நடத்தப்படும் என ஒசாமா பின் லேடன் தொடர்ச்சியாக விடுத்து வரும் எச்சரிக்ககைளால் அமெரிக்காவின் அடுத்த தாக்குதல் பாகிஸ்தானிலேயே இடம்பெறும் என போரியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாகிஸ்தானில் தாக்குதலை ஆரம்பித்தால் அதற்கான தளமாக இலங்கையை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு அம்சமாக அமெரிக்க கடற்படையின் முக்கிய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவம் அவர்கள் திருகோணமலை துறைமுகம் தொடர்பாகவும் கிழக்கு மாகாண அமைவிடம் குறித்தும் ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிழக்கில் மிண்டும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்கு இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலையீட்டை கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கமும் விருப்பம் கொண்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் முக்கிய தாக்குதல் கப்பல் ஒன்று விரைவில் திருகோணமலை துறை முகத்திற்கு வருகை தரும் சாத்தியங்கள் காணப்படுவதாகவும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏற்கனவே இந்தியாவின் தமிழ் நாட்டிற்கு அமெரிக்காவின் மிகப் பெரும் போககப்லான யூ.எஸ்.எஸ் நமிட்ஸ் வந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
வளைகுடாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பலான நிமிட்ஸ் அல்லது அதே திறன்கள் மிக்க வேறொரு தாக்குதல் கப்பல் விரைவில் திருகோணமலை துறை முகத்திற்று அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் அமெரிக்கா அவுஸ்ரேலியா ஜப்பான் சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் 20 போர்க் கப்பல்கள் வங்காள விரிகுடாவில் போர் பயிற்ச்சிகளில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலபார் 07 என பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சிகளின் போது மூன்று விமானங்தாங்கி கப்பல்களும் ஈடுபடுத்தப்படவுள்ளன.

ஆமெரிக்காவின் யூ.எஸ்.எஸ் நிமிட்ஸ் மற்றும் யூ.எஸ்எஸ. ஹிட்டி ஹோக் ஆகிய போர் கப்பல்களும் இங்கிலாந்திடம் இருந்து இந்தியா கொள்வனவு செய்த ஐ.என்.எஸ் விராட் என்ற போர் கப்பலும் இவற்றில் முக்கியமானவை.

இந்த கடல் பயிற்சி நடவடிக்கையில் அமெரிகாவின் அணு சக்தியில் இயங்கும் நீர்மூழ்கி தாக்குதல் கலங்களும் ஈபடுத்தப்படவுள்ளன.

இந்த பயிற்சிகளின் நோக்கம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது தான் என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவின் நீண்டகால பிரச்சினையாக இருந்து வரும் பாகிஸ்தான் மீது அமெரிக்கா மேற்கொளளப் போக்கும் இராணுவ நடவடிக்கை இந்தியாவின் பாதுகாப்பு நலன் சார்ந்து சாதகமானதாகவே கருதப்படுகின்றது.

இதனால் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமெரிக்க படைகள் குவிக்கப்படுவதையோ இலங்கையில் அமெரிக்க கடற்படை தளம் அமைப்பதையோ இந்தியா எதிர்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த ஜூன் மாதம் இந்தியா அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து மேற்கொண்ட பயிற்ச்சி நடவடிக்கைள் ஆசியாவின் வல்லரசான சீனாவை கடுமையாக சீற்றம் கொள்ள வைத்துள்ளது.

தமது கடல் பிராந்தியத்திற்கு அருகில் இந்த பயிற்சிகளை மேற்கொண்டமைக்கான காரணத்தை வெளிப்படுத்துமாறு சீனா இந்த நாடுகளை கோரியிருந்தது.
இவ்வாறான பதற்றங்களின் நடுவில் மேலும் இரு நாடுகளையும் மெலதிகமாக இணைத்துக் கொண்டு வரலாற்றில் முதல் தடவையாக இந்து சமுத்திரத்தில் நடைபெறப் போக்கும் மிகப்பெரிய கடல் போர் ஒத்திகை பிராந்திய நாடுகள் மத்தியில் கடுமையாக குழப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

தற்போது சீனாவுடன் நெருக்கமான உறவுகளை பேணி வரும் ஸ்ரீலங்கா அரசாங்கம் அமெரிக்காவின் புதிய இராணுவ நகர்வுகளால் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கும் விதமான சர்வதேச நகர்வுகளை தடுத்து நிறுத்தி வரும் அமெரிக்கா மறுபுறம் தனது நேரடி தலையீட்டை ஏற்படுத்தும் விதமான நகர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றது.

பொருளாதார மற்றும் அனைத்துலக ஒத்துழைப்பு விடயங்களில் நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் அமெரிக்காவின் இலங்கையில் தளமமைக்கும் முயற்சியை தடுக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஏற்கனவே சீனாவிடம் இருந்தும் பாகிஸ்தானிடம் இருந்தும் ஆயுதங்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு இந்தியா விடுத்த எச்சரிக்கையின் பின்னணியில் அமெரிக்கா இருக்கலாம் என்றும் அவதானிகள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.
நன்றி>பதிவு.

No comments: