எங்களுக்கு சட்டம், ஒழுங்கை கற்பிக்கமுடியாது சர்வதேச மன்னிப்புச் சபையைச் சாடுகிறார் வீரவன்ச
வெள்ளையர்கள் எங்களுக்கு சட்டம் ஒழங்கு பற்றிக் கற்பிக்க முடியாது. சட்டவரம்புக்கு உட்படாத நாடாக இலங்கையைக் காட்ட முயல்கிறது சர்வதேச மன்னிப்புச் சபை.
இலங்கை கிரிக்கெட் அணிமீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி விடுதலைப் புலிகளுக்கு உதவதேவ அவர்கள் முயற்சிக்கின்றனர். இவ்வாறு சர்வதேச மன்னிப்புச் சபையைக் கண்டித்தார் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச.
மேற்கிந்தியாவில் இடம்பெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கட் அணி சட்ட ஒழுங்கின்படி செயற் பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப் புச் சபை தெரிவித்திருந்தது.
ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ இது தொடர்பாக நேற்று நாடாளுமன்றில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றினார். அப்போதே அவர் மேற்கண்டவாறு சர்வதேச மன்னிப்புச் சபையைச் சாடினார்.
இலங்கை கிரிக்கட் அணி தற்போது இடம்பெற்று வருகின்ற உலக்கிண்ணக் கிரிக்கட் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிகளை ஈட்டியுள்ளது. உலகக் கிண்ணத்தை எமது அணி கைப்பற்றும் வாய்ப்பு நிறையவே உண்டு.
ஆனால், வெள்ளைக்காரர்கள் அந்த வெற்றிகளைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. சர்வதேச மன்னிப்புச்சபை பல சர்வதேச அமைப்புகளுடன் சேர்ந்து இலங்கை அணி வீரர்களின் மனநிலையைப் பாதிக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
வெள்ளையர்களின் இந்தச் செயற்பாடுகளுக்கு எதிராக இந்த நாட்டு மக்கள் பொங்கியெழ வேண்டும். சர்வதேச மன்னிப்புச் சபையை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து அரசின் சார்பில் அமைச்சர் ஜெராஜ் பெர்னாண்டோபுள்ளேயும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சர்வதேச மன்னிப்புச் சபைக்குக் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
நன்றி>உதயன்.
Thursday, April 05, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment