Monday, April 16, 2007

இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பியது பாரிய தவறு - இந்திய எதிர்க்கட்சி!!!

இலங்கைக்கு இந்தியப் படைகளை அனுப்பியது காந்தி குடும்பத்தின் பாரிய தவறு என, இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் மாநிலத் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய முன்னாள் இந்திய தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி தமது குடும்பத்தவர் எதையாவது சாதிக்க நினைத்தால் அதை அடைந்தே தீருவார்கள் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

அது இந்திய தேசத்தின் சுதந்திரமாக இருந்தால் என்ன, பாகிஸ்தானை இரண்டாக பிரித்;து விடுவதாக இருந்தால் என்ன, இந்தியாவை 21ஆம் நூற்றாண்டுக்குள் இட்டுச் செல்வாதாக இருந்தால் என்ன, அனைத்திலுமே தமது உறதி மொழியை நிறைவேற்றுவதில் பின் நிற்கவில்லை என்றும் ராகுல் தெரிவித்தார்.

ராகுல் காந்தி தமது சொந்த குடுப்பப் பெருமை பற்றித் தெரிவித்த கருத்துக்கள் எதிர்க்கட்சி தரப்பில் கடும் விர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

லக்னோவில் ராகுல் காந்தியின் கருத்துக்களைக் கண்டனம் செய்த பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடு, ஜம்மு-கஷ்மீர் நெருக்கடி, அவசர கால நிலைமை சீக்கியர்களுக்கு எதிரான கலகம் சிறீலங்காவுக்கு இந்திய அமைதி காக்கும் படை அனுப்பப்பட்ட விவகாரம் இவை யாவும் காந்தி குடும்பத்தவரின் பாரிய தவுறுகள் என்று கூறினார்.
நன்றி>பதிவு.

No comments: