Monday, April 02, 2007

'விதிகளின் அடிப்படையில் விளையாடுங்கள்'

அனைத்துலக மன்னிப்புச் சபை மீது சிறிலங்கா அரசு கடும் கண்டனம்!!!

அனைத்துலக மன்னிப்புச் சபையின் 'விதிகளின் அடிப்படையில் விளையாடுங்கள்' என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பிரச்சாரத்தை சிறிலங்கா அரசாங்கம் கடுமையாக சாடியுள்ளதுடன் மன்னிப்புச்சபையின் இந்த முயற்சி, சிறிலங்காவின் துடுப்பாட்டக் குழுவின் மனநிலையை பாதிக்கும் செயல் என அது தெரிவித்தள்ளது.


கரீபியன், ஐரோப்பா, தெற்கு ஆசியா போன்ற நாடுகளில் இந்த விழிப்புணர்வு போராட்டத்தை நடத்துவதற்கு மன்னிப்புச் சபை தீர்மானித்திருந்தது. இந்த நிகழ்வின் போது பொதுமக்களிடம் இருந்து துடுப்பாட்ட பந்துகளில் கையொப்பங்களும் சேகரிக்கப்பட உள்ளன.

இந்த போராட்டத்தின் நோக்கம் மனித உரிமைகளில் சிறிலங்கா அரசாங்கம், விடுதலைப் புலிகள், ஏனைய குழுக்கள் என்பன அதிக அக்கறை எடுக்கச் செய்வதாகும் என மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஆனால் மன்னிப்புச் சபையின் இந்த நடவடிக்கை தொடர்பாக சிறிலங்காவின் துடுப்பாட்ட அணி அனைத்துலக துடுப்பாட்ட சபையிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன், மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, ஐக்கிய நாடுகள் சபையிலும் அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்களிடமும் மன்னிப்புச் சபையின் இந்த நடவடிக்கைகள் தொடர்பாக முறையிட உள்ளதாகவும் அரசாங்க உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசாங்க வட்டாரங்கள் மேலும் தெரிவித்ததாவது:

மன்னிப்புச் சபைக்கு எதிராக ஒரு மில்லியன் கையொப்பங்களை சேகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. மன்னிப்புச் சபையின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், மற்றும் 9 குழுக்களையும் அமைத்து அரசாங்கம் பிரச்சாரங்களை மேற்கொள்ள உள்ளது.

வெளிநாட்டுத் தூதுவர்கள் மூலம் அந்தந்த நாடுகளில் உள்ள தலைவர்களுக்கு மன்னிப்புச் சபையின் நடவடிக்கைகளை விளக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

மன்னிப்புச்சபை சிறிலங்காவில் அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைப்பதற்கு ஆதரவு தேடும் முகமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது. ஆனால் அதன் நடவடிக்கைக்கான நேரம் சிறிலங்கா துடுப்பாட்ட வீரர்களின் திறமைகளை குறைப்பதற்கு எடுக்கும் முயற்சி ஆகும்.

உலகக் கோப்பைக்கான துடுப்பாட்ட போட்டிகள் நடைபெறும் கரிபியனில் மன்னிப்புச் சபை தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பது அதற்கான ஆதாரமாகும் என அவை மேலும் தெரிவித்துள்ளன.
நன்றி>புதினம்.

No comments: