அனைத்துலக நாடுகளில் தமது ஒளிபரப்புக்களை நடத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வர்த்தக செய்மதிகளை தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.
'நாம் சட்டபூர்வமாகவே அவற்றைப் பயன்படுத்துகின்றோம், திருட்டுத்தனமாக அல்ல' என இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் விடுதரலப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார்.
உலகின் பெரிய வர்த்தக செய்மதி நிறுவனமான இன்ரல்சற்றின் பேச்சாளர் விடுதலைப் புலிகள் தமது ஒரு செய்மதியை தவறாக பயன்படுத்துவதாக நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.
யூரோப் ஸ்ரார் - 1 என்னும் செய்மதியை பயன்படுத்தி சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு இரகசிய இடம் ஒன்றில் இருந்து ஆசியாவின் சில பகுதிகளுக்கு தமது தொலைக்காட்சி ஒளிபரப்புக்களை விரிவுபடுத்தியிருப்பதாக விடுதலைப் புலிகள் கடந்த 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவித்திருந்தனர். ஆனால் யூரோப் ஸ்ரார் -1 என்னும் செய்மதி பின்னர் இன்ரல்சற் -12 அல்லது ஐ.எஸ்-12 என பெயர் மாற்றப்பட்டிருந்தது.
எனினும் விடுதலைப் புலிகள் தமது செந்தப் பெயரில் செய்மதியூடான ஒளிபரப்புக்களை நடத்தி வருகின்றனரா அல்லது தமக்கு வேண்டியவர்களின் ஊடாக நடத்துகின்றனரா என்பது தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகள் தமது சேவை வழங்குனர் தொடர்பாக தகவல்களை வழங்க மறுப்பதுடன், தாம் சட்டத்திற்கு முரனாக எதுவும் செய்யவில்லை என தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தாம் அமெரிக்காவில் உள்ள சிறிலங்கா தூதரக அதிகாரியை தொடர்பு கொள்ளப்போவதாக இன்ரல்சற் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி>புதினம்.
Saturday, April 14, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment