Sunday, April 15, 2007

சிறீலங்கா - அமெரிக்கா இரகசிய ஆய்வின் அடிப்படையில் இராணுவ நடவடிக்கைகள்!

சிறீலங்கா அரசாங்கமும், அமெரிக்க அரசாங்கமும் இணைந்து 2002 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் அடிப்படையிலேயே தற்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு பெப்ரவரியில் விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட பின்னர், அதே ஆண்டு ஒக்டோபரில் சிறீலங்கா அரசாங்கமும், அமெரிக்க அரசாங்கமும் இணைந்து விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாக ஆழமான ஆய்வொன்றை மேற்கொண்டதாக அந்த ஊடகம் தெரிவிக்கின்றது.

விடுதலைப் புலிகளால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் ஆபத்துக்கள் குறித்து இந்த ஆய்வில் முறையாக இனங்கண்டிருந்ததாகவும், இத்தகைய ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கான தந்திரோபாயங்களை சிறீலங்கா அரசாங்கம் வகுத்துக் கொள்வதற்கு உதவும் வகையிலேயே அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்தச் செய்தி தெரிவித்துள்ளது.

2002 ஜுலை மாதம் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஸ்ஸ{ம் செய்துகொண்ட உடன்படிக்கை ஒன்றின் பிரகாரமே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், போர் நிறுத்த உடன்படிக்கையின் பின்புலத்தில் சிறீலங்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே ரணிலின் நோக்கமாக இருந்தது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பதவி வகித்த, போர் நிறுத்த காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பாரிய சதி வலைப் பின்னல்கள் இடம்பெற்றதாக, விடுதலைப் புலிகள் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.
நன்றி>பதிவு.

2 comments:

Anonymous said...

Hi Eazha bharathi, i read ur news. But the music is really annoying. I request you to either remove or add a button, so that user can switch it on.

ஈழபாரதி said...

உங்கள் கருத்து, கருத்தில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.