
பிரான்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பாரிஸ் தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த 17 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்க ஏற்பாடாகியுள்ளது.
இவ் எதிர்ப்புப் போராட்டத்திற்கு பாரிஸ் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இவ் போராட்டதிற்கு பிரான்ஸ் இளையோர் அமைப்பு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு, தமிழ் வர்த்தக சங்கம், விளையாட்டுக் கழகங்கள் என பல தமிழ் அமைப்புக்களின் ஏற்பாட்டு இவ் போராட்டம் இடம்பெறுகின்றது.
ரொக்கட்றரோ (Trocadero) சதுக்கத்தில் 3 மணி முதல் 5 மணி வரை எதிர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பிரான்ஸ் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அனைத்து தமிழ் அமைப்புக்களும் அழைப்பு விடுத்துள்ளன.
நன்றி>பதிவு.
No comments:
Post a Comment