Monday, April 02, 2007
இலங்கை படகை தேடும் இந்திய ஹெலிகளும் கடற்படை கப்பல்களும்!!!
பாக்கு நீரிணைக் கடற் பரப்பில் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய மீனவர்கள் ஐவரை சுட்டுக் கொன்ற இலங்கைப் படகுகளை தேடும் நடவடிக்கையில் இந்திய கடற்படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை பாக்குநீரிணைக் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டனர்.
எனினும், இலங்கை கடற்படையினர் இந்தத் தாக்குதலை நடத்தவில்லையென இலங்கை அரசும் கடற்படையினரும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பாக்கு நீரிணையில் இலங்கை இந்திய கடல் எல்லையில் இந்திய கடற்படையினர் அண்மைக்காலமாக தங்கள் கண்காணிப்புப் பணிகளையும் ரோந்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்திய நிலையில் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டமை இந்திய மத்திய அரசை கடும் விசனமடையச் செய்துள்ளது.
இதையடுத்து பாக்கு நீரிணையில் தமிழக மீனவர்களைக் கொன்றவர்களையும் அவர்களது படகுகளையும் தேடிக் கண்டு பிடிக்கும் தீவிர முயற்சியில் இந்திய கடற்படையினரும் கடலோர காவல் படையினரும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய கடற்படை ஹெலிகொப்டர்களும் படகுகளும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்தத் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாகவும் நேற்றுக் காலையும் தேடுதல் நடைபெற்றதாகவும் இந்திய கடற்படை அதிகாரியான கொமாண்டர் எச்.சக்சேனா தெரிவித்தார்.
இதேநேரம் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட இரு மீனவர்களின் சடலங்களும் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லையெனவ
ம் தெரிவிக்கப்படுகிறது.
இன்னும் ஓரு இரண்டு வாரம் போனதின் பின் தேடலாமே. ஏன் இந்த அவசரம்!!!
நன்றி : தமிழ்வின்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment