கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து-கருணாநிதி
குமரி கடலில் 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது சிங்கள ராணுவ வெறியர் களால் சுட்டு வீழ்த்தப்பட்ட கொடுமை பற்றியும்உயிரிழந்த குடும்பங்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றியும் உறுப்பினர்கள் விளக்கமாக பேசினார்கள் இவர்கள் பேசியது அவையில் இருக்கிற அத்தனை உறுப்பினர்களின் குரல்களாக ஒலித்ததாக நான் கருதுகிறேன்.
இந்த அவையில் மட்டுமல்ல தமிழக மக்களின் குரல் ஒலித்ததாக நம்புகிறேன். தமிழகத்தில் மட்டுமல்ல உலகத்தில் வாழ்கிற பல்வேறு உள்ளங்களின் பிரதி பலிப்பாக ஒலித்ததாக நான் கருதுகிறேன்.
ஏனென்றால் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. இங்கே உள்ள தமிழர்கள் இலங்கைக்கு சென்றாலும் ஆபத்து ஏற்படுகிறது. இந்த சூழ்நிலை 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இதற்கு விடிவே கிடை யாதா என்று ஏங்கியபோது இதற்கு ஒரு நல்ல தீர்வு நார்வே காணக்கூடும் என எதிர்பார்த் தோம். அவர்களும் பேச்சு வார்த்தை நடத்தியும் பயன் அளிக்கவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தை எப்போது என்ற வினா விசுவரூபம் எடுத்து இருக்கிறது.
இந்த நிலையில் இலங்கை ராணுவத்தால் இந்திய மீனவர் களுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்தும், மரணம் பற்றியும் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து ஏற்படும் சம்பவத்தை தடுத்து நிறுத்த ஒரு அறை கூவலாக ஏற்று மேற் கொள்ளவேண்டிய பணி பற்றி உறுப்பினர்கள் பேசினார்கள். ஏற்கனவே 5, 6 தடவை நம் மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். படகு கவிழ்க்கப்பட்டுள்ளது. ஒரு சில மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இனி இதுபோன்ற சம்பவங் கள் தொடரக்கூடாது என்பதற்காக பிரதமர், சோனியா உள்பட உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதி எடுத்து சொன்ன போ தெல்லாம் அதற்கு அவர்கள் அனுப்பிய பதில்களை பத்திரி கைகளில் பார்த்து இருப்பீர் கள். இப்போது உச்ச கட்டமாக 5 மீனவர்கள் சுட்டுக்கொல்லப் பட்ட சம்பவம் பற்றி அறிந்ததும் உடனே அமைச்சர் சுரேஷ் ராஜனை அனுப்பி வைத்து தேவையான உதவிகளையும் நடவடிக்கைகளையும் செய்யும் படி கேட்டுக் கொண்டேன்.
அவரும் அங்கு முழுமையாக விசாரித்து அங்குள்ள பாதிரி யார்கள், கிறிஸ்தவர்கள், மீனவ பெருமக்களின் கோரிக்கை களையும் குறிப்டெடுத்து தந்துள்ளார். அந்த கோரிக்கை கள் என்ன என்பதையும் இந்த அவையில் எடுத்து காட்ட விரும்புகிறேன்.
1. காணாமல் போன மீனவர் களை கண்டுபிடிப்பதற்காக அதிவேக விசைப்படகு ஒன்று வேண்டும் என்று கேட்டுள்ள னர். அது கிடைக்க மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு உடனே ஆவண செய்யப்படும். மத்திய அரசிடம் இல்லாத பட்சத்தில் மாநில அரசே அத்தகைய படகை தயாரித்து வழங்கும்.
2. கடலில் காணாமல் போகும் மீனவர்களை தேடுவ தற்கு வசதியாக அதிநவீன தகவல் தொடர்பு கருவியும், மானிய விலையில் உயிர் காக்கும் லைப் ஜாக்கெட்வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். இவைகளும் வழங்கப்படும்.
3. மீனவர்களை தேடுவதற்கு ஹெலிகாப்டர் வசதி வேண்டும் என்றும் அதற்கான தளமும் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். அதுவும் உடனடியாக செய்து தரவேண்டும்.
4. இறந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். இது குறித்து தலைமை செயலாளருடன் கலந்து பேசினோம். அவரும் யார்-யாருக்கு குடும்பத்தில் வேலை கொடுக்கலாம் என்று கூறியுள்ளார். எனவே நாளையே வந்தால் அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
5. கடற்படை ரோந்து வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதை நான் தனியாக செய்ய முடியாது. மத்திய அரசை கேட்க வேண்டும். இதற்கும் ஆவண செய்யப்படும்.
ரோந்து பணி என்றதும் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். சிங்கள ராணுவமும், இந்திய ராணுவமும் கூட்டாக ரோந்து செல்ல ஒத்து கொண்டதாக சிலர் பேசினார்கள். நாம் அதற்கு சம்மதிக்கவில்லை. சிங்கள தூதரகம் முன்பு தோழமை கட்சியுடன் நாம் ஆர்ப்பாட்டம் செய்தபோது அங்கிருந்த அதிகாரிகள் தான் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை உள்ளே அழைத்து சொன்ன வார்த்தை இது.
கூட்டு ரோந்துக்கு இந்திய அரசும் சம்மதம் தரவில்லை. நாங்களும் கூட்டு ரோந்துக்கு சம்மதிக்கவில்லை. இதைத்தான் நான் எலியும் தவளையும் கூட்டு ரோந்து என்பது போல ஆகி விடும் என்றேன். எனவே ரோந்து பணி பற்றி மத்திய அரசு தான் தீர்மானிக்க வேண்டும். கூட்டு ரோந்து பற்றி நான் சொன்னதாக வெளியில் கற்பனையாக சொல்லப்பட்டு வருகிறது.
தமிழக மீனவர்களின் உயிரை காக்க எடுக்கப்படும் நடவடிக்கையில் அதன் குறுக்கே யார் வந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் பணியாற்று வேன்.
துப்பாக்கி சூட்டில் இறந்த மீனவர்கள் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி கொடுக்க வேண்டும் என்று ஜெயக்குமார் உள்பட உறுப்பினர்கள் பேசினார்கள். பொதுவாக ரூ.1 லட்சம் தான் கொடுப்பது உண்டு. விபத்து என்பதற்காக ரூ.2 லட்சம் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த சம்பவத்தை பொறுத்தவரை இது வேண்டும் என்றே சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்ச்சியாக உள்ளது. எனவே உங்கள் வேண்டுகோளை ஏற்று உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
காங்கிரஸ் உறுப்பினர் பேசும்போது, ஒரு சிறு குழப்பம் ஏற்பட்டது. சிங்கள ராணுவத் துக்கு இந்திய ராணுவம் கைக் கூலியாக செயல்படுவதாக சிலர் சொன்னதை கூறினார். இதை விட என்னையுமே சொல்லி இருக்கிறார்கள். சிங்கள அதிபர் ராஜபக்சேவுக்கு ஊதுகுழல் ஆகி விட்டார் என்று கூட சிலர் கூறியிருக்கிறார்கள். சொன்னவர் எனது பழைய நண்பர்தான், தம்பி தான் ஆனால் ஒன்றை மறந்து விடக் கூடாது. எல்லோரும் ஒன்று பட்டு செய்ய வேண்டிய சில காரியம் உள்ளது.
நன்றி>லங்காசிறீ.
Monday, April 02, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கலைஞருக்கு நெஞ்சார்ந்த நன்றி!
இந்தக் காசை இலங்கை அரசுக்கு இந்தியா கொடுத்த $100 மில்லியன் இனாமிலிருந்து கழிக்க வேண்டும். $100 மில்லியனும் கொடுத்து முடிஞ்சா?
Post a Comment