Wednesday, April 18, 2007

புலிக்கொடியுடன் உலக்கிண்ண துடுப்பாட்டப் போட்டி மைதானத்தில் நுழைந்து பரபரப்பு ஏற்படுத்திய தமிழ் இளைஞர்!!!









சிறிலங்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியின் போது புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட தமிழீழ தேசியக்கொடியுடன் தமிழ் இளைஞர் ஒருவர் மைதானத்தில் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இலங்கையில் தமிழ் மக்கள் மீதான சிங்கள இன ஒடுக்குமுறையை அம்பலப்படுத்தும் ஒரு கவன ஈர்ப்பு நடவடிக்கையாக தமிழீழத் தேசியக் கொடியுடன் துணிச்சலாக வந்த உறவுக்கு தாயகத்தில் இருந்து தமிழீழத் தாயக மக்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழத் தாயக உறவுகளின் கூட்டமைப்பினர் விடுத்துள்ள அறிக்கை:

தாயகத்தில் தமிழினத்தை கொன்றொழித்து கொடூரமாக வதைத்துக்கொண்டு இருக்கும் சிங்கள அரசாங்கத்தின் முகத்தை அனைத்துலக மட்டத்தில் அம்பலப்படுத்தும் வகையில் உலகக்கிண்ண துடுப்பாட்டத்தில் சிறிலங்கா விளையாடும் தொடரும் போட்டிகளில் இத்தகைய ஒரு கவன ஈர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டமையானது முக்கியத்துவம் வாய்ந்ததாக நாங்கள் கருதுகின்றோம்.

தொடரும் துடுப்பாட்டப் போட்டிகளில் இன்னும் அதிகமாக எமது உறவுகள் எங்கள் தமிழீழ தேசியக்கொடியை மைதானத்திலும் அரங்கிலும் காட்டுவதோடு சிங்கள அரசாங்கத்தின் கொடூரத்தை சித்தரிக்கும் படங்களையும் காட்டி மகிந்த அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும்.

இதனை புலம்பெயர் மக்களால் செய்யமுடியும். இதுவே செய்வதற்கான சந்தர்ப்பம் என்று அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
படங்கள்: ஏபி, ஏ.எஃப்.பி, ரொய்ட்டர்ஸ்.
நன்றி>புதினம்.

No comments: