சிறீலங்கா மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரசாரத்திற்கு, பிரித்தானியாவின் மூன்றாவது பெரும் கட்சியான லிபறல் டெமோகிறட்ஸ் என்றழைக்கப்படும் தாராண்மைவாத ஜனநாயகக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் உலகக் கிண்ணக் கிறிக்கட் போட்டியில் அனைத்துலக மன்னிப்புச் சபை பிரசாரம் செய்து வருகின்றது.
இந்த பிரசாரத்திற்கு எதிராக சிறீலங்கா அரசு கருத்து வெளியிட்டுவரும் நிலையில், பிரித்தானியாவின் மூன்றாவது பெரும் கட்சியான தாராண்மைவாத ஜனநாயகக் கட்சி அனைத்துலக மன்னிப்புச் சபைக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, தாராண்மைவாத ஜனநாயகக் கட்சியின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சஜாத் கறீம், சேறா லுட்பேட், மற்றும் லிஸ் லின்னி ஆகியோர் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் சமர்த்தித்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி தாராண்மைவாத ஜனநாயகக் கட்சியின் மனித உரிமை விடயங்களுக்குப் பொறுப்பானவரும், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினருமான சஜாத் கறீமை தொடர்பு கொண்டு கேட்டபோது, இணைத் தலைமை நாடுகளில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்காவின் இனப் பிரச்சினையில் தலையிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
நன்றி>பதிவு.
Thursday, April 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment