Sunday, April 22, 2007

கடன் அட்டை விவகாரம்: சிறிலங்கா தூதரக அதிகாரியின் பொய்க்கு சு.ப.தமிழ்ச்செல்வன் பதில்!

கடன் அட்டை முறைகேடுகள் நடைபெறுவதன் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருப்பதாக பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதரகத்தின் முதல்நிலைச் செயலாளர் தெரிவித்த குற்றச்சாட்டை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் நிராகரித்துள்ளார்.


இது தொடர்பில் தமிழ்நெட் இணையத்தளத்துக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்:

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சிறிலங்கா அரசாங்கமானது அதனைத் திசை திருப்பும் வகையில் இத்தகைய குற்றச்சாட்டைக் கூறுகிறது.

இத்தகைய பொய்யான பரப்புரைச் செய்திகள் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என்று பி.பி.சி. போன்ற பொறுப்பான ஊடகங்களை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

எமது தமிழர் தாயகத்தில் உயரிய நெறிகளோடு குற்றமற்ற சூழலை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம் என்பதை இராஜதந்திர சமூகத்தினர் நன்கு அறிவர்.

புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தாங்கள் வாழும் நாடுகளின் சட்டங்களைச் செயற்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்றும் நாம் கேஎட்டுக் கொள்கின்றோம் என்றார் தமிழ்ச்செல்வன்.

பி.பி.சி.யில் கடந்த சனிக்கிழமை பிரித்தானியாவில் கடன் அட்டை மோசடி உள்ளிட்டவைகளின் பின்னணியில் விடுதலைப் புலிகள் இருப்பதாக பிரித்தானியாவுக்கான சிறிலங்காவின் தூதரக அதிகாரி மேக்ஸ்வெல் பொய்யாக குற்றம் சாட்டியதனைத் தொடர்ந்து சு.ப.தமிழ்ச்செல்வன் இந்த விளக்கம் அளித்துள்ளார்.
நன்றி>புதினம்.

No comments: