சிறிலங்கா இராணுவத்தில் சிறார் சேர்ப்புக்கு ஆதாரங்கள் உள்ளன என்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி அலென் றொக், துணை இராணுவக் குழுவினர் மூலமாக சிறிலங்கா இராணுவத்தில் சிறார்கள் சேர்க்கப்படுகின்றனர் என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களைக் கேட்க உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஆதாரங்களைக் கோரி எதுவித கடிதமும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 28 ஆம் நாள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட உள்ளது. இருப்பினும் இக்கூட்டத்தில் அலன் றொக்கின் அறிக்கை விவாதிக்கப்படக் கூடுமா? அல்லது ஜனவரியில் விவாதிக்கப்படக் கூடுமா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் செப்ரெம்பர் மாதத்தில் மட்டும் 128 சிறார்களை பலவந்தமாக சேர்த்துள்ளதாக ஐ.நா. அறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.
Wednesday, November 22, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment