Saturday, November 04, 2006

ரொய்ட்டர்ஸ் செய்தியாளருக்கு சிறிலங்கா அச்சுறுத்தல்!!!

சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் மற்றும் சிரச ஊடகத்தின் செய்தியாளர் ஜோர்ஜ் டேவிட்டுக்கு சிறிலங்கா இராணுவத்தினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
தனது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பத் தயார் செய்து கொண்டிருந்தமையால் வழமையான சோதனை நடவடிக்கைக்கு இராணுவத்தினரை காத்திருக்குமாறு ஜோர்ஜ் கூறியதையடுத்து இராணுவத்தினர் அவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக திருகோணமலை சிறிலங்கா காவல்துறை அதிகாரி நிமல் சமரக்கோனிடம் ஜோர்ஜ் டேவிட் முறைப்பாடு செய்துள்ளார்.
"நீ ஒரு சந்தேக நபர். எமக்கு அதிகாரம் உள்ளது. நாங்கள் எதனையும் செய்ய முடியும்" என்று சுற்றுக்காவல் பணியில் இருந்த இராணுவத்தினர் அச்சுறுத்தியதாகவும் ஜோர்ஜ் டேவிட் கூறியுள்ளார்.
அதன் பின்னர் ஜோர்ஜை கைது செய்ய வாகனத்தில் மீண்டும் வருவோம் என்றும் சிறிலங்கா இராணுவத்தினர் கூறியுள்ளனர்.
நன்றி>புதினம்.

No comments: