Monday, November 27, 2006
தமிழருக்காக கருணாநிதி, மகள் கனிமொழி உண்ணாவிரதம்.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு இன்று உண்ணாவிரதம் நடந்தது.
முதல்-அமைச்சர் கருணாநிதி மகளும், கவிஞருமான கனிமொழி தலைமை தாங்கினார். கவிஞர் வைரமுத்து உண்ணா விரதத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
எழுத்தாளர்கள், கவிஞர்கள் வெறும் கனவு காண்பவர்கள் மட்டுமல்ல தமிழர்கள் வேதனைபட்டால் அவர்களுக்காக நாங்களும் வேதனைபடுவோம். இந்த உண்ணாவிரத போராட்டத்தை நான் தொடங்கி வைப்பதாக அறிவித்தார்கள். உண்மையில் நான் தொடங்கி வைக்க வில்லை.
5-6-1956-ம் ஆண்டு இலங்கை பாராளுமன்றம் முன்பு ஈழத்தமிழர்கள் உண்ணா விரதம் தொடங்கினார்கள். இலங்கையில் சிங்களம் ஆட்சி மொழி என்பதை கண்டித்து அப்போது போராட்டத்தை தொடங்கினார்கள். ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் தாய்மொழியை முதலில் அழியுங்கள் என்பார்கள். அது போல்தான் தமிழின படுகொலையை கண்டித்து முதலில் தாய்மொழி தமிழ் மீது தொடங்கியது.
1956-ல் தொடங்கிய போராட்டம் அன்று முதல் இன்று வரை அரை நூற்றாண்டு காலமாக எண்ணற்ற போராட்டங்கள் சிங்கள அரசுக்கு எதிராக நடந்து இருந்தது. அதில் இந்த போராட்டமும் ஒன்று. இதை நான், தொடங்கி வைக்கவில்லை. யாழ்ப்பாணம் வாகரையில் தமிழர்கள் பட்டினியால் மடிகிறார்கள் என்று சிங்கள அரசே அறிவித்துள்ளது.
இலங்கையில் ரத்த கம்பளத்தில் நடக்கும் ராஜபக்சே இந்தியா வந்துள்ளார். அவருக்கு ரத்தின கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்திய அரசை கேட்கிறேன். இது நியாயமாப இலங்கை அரசின் தலைவர் என்ற முறையில் ராஜபக்சேக்கு மரியாதை தரலாம். ஆனால் அந்த பதவிக்குரிய வேலையை அவர் செய்கிறாரா? செய்யவில்லையே எனவேதான் கண்டிக்கிறோம்.
இதுவரை 18,412 மாவீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தமிழ் ஈழ போராட்டத்தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் மாவீரர்கள் கல்லறை மீது புல்டோசர்கள் வைத்து உழுகிறார்கள். கல்லறையில் புதைக்கப்படும் தமிழர்களின் சடலங்களை மீண்டும் தூக்கில் தொங்க விடுகிறார்கள். கல்லறையில் புதைக்கப்பட்டுள்ள மாவீரர் கள் விதைக்கப்பட்டுள்ளார்கள். தமிழினத்தை யாராலும் அழிக்க முடியாது.
இந்த போராட்டத்தை தொடங்கி வைத்ததற்காக ரத்த கண்ணீர் வடிக்கிறேன். ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். யாழ்ப்பாண நெடுஞ்சாலையை திறந்துவிடவேண்டும். இலங்கை அரசிடம் கேள்வி கேட்கிறேன். அங்கு நடப்பது யுத்தமா? அல்லது இன படுகொலையா? எம்.பி.க்கள், எழுத்தாளர்கள், அப்பாவிகள் சுட்டுக்கொல்லப்படு கிறார்கள். இந்த சம்பவங்களுக்கு எந்த எப்.ஐ.ஆரும் இல்லை. அதுபற்றி கேட்டால் அடையாளம் தெரியாத துப்பாக்கியாளர்கள் கொல்லப்பட்டதாக அரசு சொல்கிறது. அந்த துப்பாக்கியாளர்கள் யார்? அவர்களுக்கு துப்பாகி கொடுத்தது யார்? இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.
வாடுகின்ற தமிழர்களில் ஈழத்தமிழர்களுக்காக முதல் குரல் கொடுத்தவர் கலைஞர்தான். அவர் அரசின் இறையாண்மைக்கு கட்டுப்பட்டு செயல்பட்டு வருகிறார். பூனை வாயில் சிக்கிய மீன் குழம்பாகாது. அது போல் இந்தியா வழங்கும் நிவாரண பொருட்களை சிங்கள அரசிடம் கொடுத்தால் தமிழர்களிடம் செல்லாது. ராஜபக்சேவின் பசப்பு வார்த்தைகளை நம்பி இந்தியா ஏமாந்துவிட வேண்டாம். தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ உடனடி நடவடிக்கை தேவை. மடிந்து வரும் தமிழர்களை காக்க தனி தமிழ், ஈழம் கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கவிஞர் கனிமொழி பேசியதாவது:-
அரசியல் கட்சிகள்தான் சமுதாய பிரச்சினைக்கு போராட வேண்டும் என்பதல்ல சமுதாயத்தின் மனசாட்சிகளாக விளங்கும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள், சிந்தனையாளர்கள், கவிஞர்களும் போராட வேண்டும்.
எனது இனம், எனது சமுதாயம் ஒதுக்கப்படும்போது நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. அப்படிப்பட்ட வாழ்க்கை தேவையில்லை. இலங்கையில் அரை நூற்றாண்டாக தமிழினம் அழிக்கப்பட்டு வருகிறது. அதை பார்த்து நாம் ஏன் பயந்து கொண்டிருக்க வேண்டும்.
ஜனநாயக நாட்டில் மக்களை பாதுகாப்பது அரசின் கடமை. ஆனால் அந்த அரசே கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறையை கண்டித்துதான் இந்த போராட்டம் நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
உண்ணாவிரத போராட்டத்தில் ரவிக்குமார் எம்.எல்.ஏ., கவிஞர் அறிவுமதி, ஞானக் கூத்தன், தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமநாராயணன், விஜயா தாயன்பன், முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, நடிகை ஸ்ரீபிரியா, சேப் பாக்கம் வி.சி.மணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நடிகர் சத்யராஜ் போராட்டத்திற்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். மாலையில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி உண்ணாவிரதத்தை முடித்து வைக்கிறார்.
உண்ணாவிரத போராட்டத்தில் வெளியிடப்பட்ட கோரிக்கை வருமாறு:-
* யாழ்ப்பாண நெடுஞ்சாலையை உடனே திறக்க வேண்டும்.
* தமிழர்கள் மீதான பொருளாதார தடையை நீக்க வேண்டும்
* இந்தியா வழங்கும் உணவு பொருட்களை யாழ்ப்பாண தமிழர்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும்.
* தமிழர்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்த இலங்கை அதிகாரியிடம் பிரதமர் வலியுறுத்த வேண்டும்.
* இலங்கை அரசோடு எந்த ராணுவஒப்பந்தமும் செய்யக்கூடாது.
நன்றி>லங்காசிறீ.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
இதைப் பதிவிலிட்டதற்கு ந்ன்றி.
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது இதுதான் வாழ்க கனிமொழி வாழ்க வைரமுத்து வாழ்க அண்ணன் சத்ய்ராஜ்.
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது இதுதான் வாழ்க கனிமொழி வாழ்க வைரமுத்து வாழ்க அண்ணன் சத்ய்ராஜ்.
கனிமொழி அவர்கள் தமிழகத்தில் ஆரம்பித்துள்ள உண்ணாநோன்பு பஞ்சில் பட்ட நெருப்பு பொறியாக மாறவேண்டும். பழ.நெடுமாறன் போன்ற பெரியவர்கள் எத்தனை காலம்தான் முன்னின்று நடத்தமுடியும் ஈழமக்கள் ஆதரவு போராட்டங்களை.. ? ஈழத்தமிழர் துயர் துடைக்கும் முயற்சிகளில் ஈடுபடும் உணர்வுள்ள ஆயினும் கருமமே கண்ணாயின தமிழகத்தமிழர்கள், துளியேனும் உணர்ச்சி வசப்படாமல் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும். உன்னிப்பாக கவனித்திருக்கும் - தன்னேர்ச்சியாகப் பிறந்துவிட்ட தமிழ் பேசும் ' தமிழர் எதிரிகள் ' எதையும் திசை திருப்ப இடம் கொடுக்கலாகாது.
தகவலுக்கு மிக்க நன்றி.
அமேரிக்க மற்றும் இந்திய இறையாண்மைகளுக்கு களங்கம் விளைவிக்காமல் ஈழத்தமிழர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய கூடிய வகையில் என்னென்ன (முழுதும்) நம்பதகுந்த வழிகள் உள்ளன என்பதை சொல்லுங்கள். குடும்ப பொறுப்புகளுள்ள ஒரு சாமான்யத்தமிழனான என்னால் எச்சரிக்கையாகத்தான் உதவ நினைக்க முடிகிறது ;( என்ன செய்வது
வாசன்
vaasus அட் ஜீமெய்ல் டாட் காம்
Instead, she can ask his dad to concentrate on this...
She is doing a Jimmick.
Can she give away 10 crore to tamils from her property?
Please donot iritate/hurt who are helping the real tamil people.
ஈழ தமிழர்களுக்கான உண்ணாவிரத போராட்டம் நடத்திய "புதிய" அமைப்புக்கு நன்றி.
ஆனால், கருணாநிதிக்கு சில கேள்விகள், மகள் கனிமொழியை வைத்து அவசர அவசரமாக உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏன்?
இனம் தான் பெரிதென்றால் பதவி பற்றி கவலைப்படாமல் அவரே போராட்டம் நடத்தி இருக்கலாமே?
இல்லையென்றால்,ஸ்டாலினை வைத்து நடத்தி இருக்கலாமே?
வைரமுத்து சொல்கிறார் "கலைஞர் இறையாண்மைக்கு கட்டுப்பட்டு இருக்கிறார்" என்று. ஆட்சியில் இருந்தால் இறையாண்மை தெரியும் இல்லாவிட்டால் தெரியாதா?
டெல்லியில் வைகோ நடத்தும் போராட்டத்திற்க்கு எதிராக நீங்கள் ஏற்பாடு செய்த போராட்டம் தான் இது என்பது அனைவருக்கும் தெரியும். அதை நீங்களே நடத்தி இருந்தால் கொஞ்சம் களை கட்டியிருக்கும். எல்லா பத்திரிக்கைகளும் வைகோ நடத்திய போராட்டத்தை வெளியிட்ட போதும் உங்கள் "குடும்ப TV,பத்திரிக்கைக்ளில் இடம் தராத உங்கள் இன பற்று வேறு யாருக்கு வரும்?
எப்படியாயினும் ஈழ தமிழருக்கான போராட்டம் என்பதால் நன்றி
Suresh
WWW.eelamevellum.blogspot.com
வைகோ வை காட்டவே கூடாது என்று உறுதியாக இருக்கும் சன்டீவி
கனிமொழி, வைரமுத்து மற்றும் பலர் கலந்து கொண்ட இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கூட இருட்டடிப்பு செய்தது என்பது கூடுதல் தகவல்
Post a Comment