நாட்டில் வாழ்கின்றவர்களை இனம், மொழி, மத பேதங்களை மறந்து தகுதிக்கேற்ப வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுத்துள்ளோம். வடகிழக்கில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்பது முற்றிலும் தவறானது. பிரபாகரன், தமிழ்ச்செல்வன் விரும்பினால் இந்த கிழமைக்குள் அவர்களை கொரியா நாட்டிற்கு அனுப்பிவைப்பேன் என்று தொழில் உறவுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவுசெலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொழில் உறவுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பாக பதிலளித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
சிங்களவர் மத்தியில் என்றுமே வைராக்கியம் இல்லை. தமிழ், சிங்கள மக்களிடையே இருந்த உறவுகள் இன்று விரிந்துசென்றுள்ளன. நாம் வரலாற்றை தெரிந்து வைத்திருக்கவில்லை. துட்டகைமுனு என்ன செய்தார் என்பதைகூட நாம் கற்றுக்கொள்ளவில்லை. கடந்த ஒருவருட காலத்திற்குள் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் சபையில் தெரிவிக்கின்றார். ஆனால், பிரேமதாச முதல் எத்தனை பேர் பலியெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாவரும் கிளிநொச்சியிலோ அல்லது யாழ்ப்பாணத்திலோ வைத்து கொலை செய்யப்படவில்லை. மஹிந்த சிந்தனையில் இனபேதத்திற்கு இடமில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். தொழில் உறவு அமைச்சில் மேற்கொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது. பிள்ளை கிடைக்கும் முன்னர் சோமாவதியா, ஞானப்பாலவா என பெயர் சூட்ட முடியாது.
நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் பொறுமை காக்கவேண்டும். வேலை நிறுத்தம் அல்லது ஆர்ப்பாட்டம் என்ற சொல்லை நிறுத்திவிட்டு பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண வேண்டும். எமது அமைச்சில் ஊழல் இடம்பெற்றதாக கூறுகின்றனர். அவ்வாறு இடம்பெற்றிருந்தால் அமைச்சரும் நானும் வீட்டுக்கு போவதற்கு தயாராக இருக்கின்றோம். அது குறித்து விசாரணை செய்வதற்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு இருக்கின்றது என்பதனை நினைவுபடுத்த இருக்கின்றேன்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்றிரவு பிறந்த குழந்தைபோல பேசுகின்றார். ஆயுதம் எடுத்தது யார்? துவக்குச்சூட்டுக்கு ஆட்லறி மூலமே பதில் வழங்குவோம். அடித்தால் திருப்பி அடிக்காத சிங்களவன் தன் இனத்தின் பெயரை மாற்றிக்கொள்ளவேண்டும். சிங்களவனுக்கு என்றுமே முதுகில் காயமிருக்காது. அவனுக்கு நெஞ்சிலேயே காயம் இருக்கும். நான் அடிக்கமாட்டேன். அடித்தால் அவர் பூதவுடல் வைக்கும் மலர்ச்சாலையிலேயே இருக்கவேண்டிவரும்.
நன்றி>லங்கசிறீ.
Monday, November 27, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
50 வருடமாக நடக்கும் இனப்பிரச்சினையின் தாக்கம் தெரியாத இவர் பிரதி அமைச்சராம் ,சிங்களம் உருப்பட்டமாதிரிதான். தலைவர் சரியாகத்தான் முடிவெடுத்து இருக்கிறார். இவர்கள் பாதையை திறந்து உணவு அனுப்புவார்கள் என, எதிபார்ப்பது பகற்கனவே.
அந்தாள் சரியான ஒரு கோமளியா.... கொழும்பில் சுதந்திர கட்சி சார்பா போட்டியிட்டு கடைசி வோட்டு வாங்கியவர்.ஆனா மனிசன் எப்படியோ பூந்து புறப்பட்டு அமைச்சராகிட்டார். கிட்டத்திலதான் இந்திய தமிழர்ரை பற்றி பொது இடத்தில மட்டமா பேசி எல்லாற்றையும் எச்சு வாங்கினவர்..
Post a Comment