Thursday, November 02, 2006

பாரிய நிதிச்சிக்கலால் தாய்லாந்து நிலைமை ஏற்படும்.

சிறிலங்காவில் எதிர்வரும் ஆண்டில் பாரிய நிதிச்சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இந்நிலைமை நீடித்தால் தாய்லாந்து நிலைமைதான் உருவாகும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அக்கட்சியின் பொருளாதாரப் பிரிவு பேச்சாளர் பந்துல குணவர்த்தன இது தொடர்பில் கூறியதாவது:
மக்களின் வாழ்க்கைச் செலவினம் முன்னெப்போதையும் கடுமையாக அதிகரித்துள்ளது.
மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சில் உள்ள இரு முக்கிய அதிகாரிகள் நிதி அமைச்சராக உள்ள மகிந்த ராஜபக்சவுக்கு உண்மைகளைத் தெரிவிக்காமல் மறைக்கின்றனர். இந்த ஆண்டு மொத்தமாக 325 மில்லியன் டொலரை அரசாங்கம் விற்றுள்ளது. செப்ரெம்பரில் மட்டும் 121 மில்லியன் டொலர் விற்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் அடுத்த ஆண்டு பாரிய நிதிச் சிக்கல் ஏற்படும். இப்போதைய நிலைமையே நீடித்தால் தாய்லாந்தில் ஏற்பட்டது போன்ற சூழ்நிலையே உருவாகும் என்றார் அவர்.
நன்றி>புதினம்.

1 comment:

Anonymous said...

சிறிலங்காவின் தலை எழுத்தை மாற்ற யாரால் முடியும். "கேடு நினைப்பவன் கெடுவான்".