வைகோவின் கைதை தொடர்ந்து
இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்ச இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் போராட்டமும் ஊர்வலமும் இடம்பெற்றது.
இலங்கையில் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள ராணுவத்தை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை து}தரகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ முன்னரே அறிவித்திருந்தார். இருப்பினும்,
இதற்கு சென்னை போலீசார் அனுமதி வழங்கவில்லை.
வைகோ அறிவிப்பையடுத்து, இலங்கை து}தரகம் அமைந்துள்ள ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் து}தரகத்துக்கு வரும் அனைத்து வீதிகளிலும் இன்று போலீசார் குவிக்கப்பட்டனர்.
மயிலாப்பூர் லஸ் சந்திப்பிற்கருகிலுள்ள நாகேசுவரராவ் பூங்கா அருகேயிருந்து ஊர்வலமாக செல்ல ம.தி.மு.க.வினர் திட்டமிட்டிருந்தனர்.
இதனால் இன்று காலை 9 மணி முதல் நாகேசுவர ராவ் பூங்கா முன்பும் நு}ற்றுக்கணக்கான போலீசார் நிறுத்தப்பட்டனர். அடிதடிப் பொலிசாரும், தண்ணீரை வீசியடித்து மக்களைக் கலைப்பதற்கான வஜ்ரா வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
நாகேசுவரராவ் பூங்கா அருகில் மக்கள் கூடினர். 10.30 மணியளவில், வைகோ அங்கு வந்ததும், அங்கு திரண்டிருந்த ம.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அவரது உரையில்:
தடையை மீறி போராட்டம் நடைபெறும். நாங்கள் து}தரகத்தினுள்ளே நுழையப் போவதில்லையே, து}தரகம் அருகே உள்ள வீதியில்தானே போராட்டம் நடத்த அனுமதி கேட்டோம். ஆனாலும் அரசு அனுமதி தரவில்லை என்றும் கூறினார்.
மத்திய அரசு இலங்கைக்கு அனுப்பும் உணவுப் பொருட்களை செஞ்சிலுவை சங்கம் மூலம் கொடுக்க வேண்டும். இலங்கை அரசிடம் கொடுத்தால் அது ராணுவத்தின் கைகளுக்கு சென்று விடும். தமிழர்களைக் கொன்று குவிக்கும் ரத்த கரங்களுடன் வரும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்குள் நுழையக்கூடாது, அவரை இந்தியாவுக்குள் அனுமதிக்கக்கூடாது.
அவர் வருவதை அறவழியில் நாங்கள் எதிர்ப்போம். அன்றைய தினம் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம். இலங்கை விமானப் படைக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது. இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.
காலம் ஒருநாள் மாறும்; தமிழ் ஈழம் நிச்சயம் மலரும் என்று வைகோ உரையாற்றினார்.
பின்னர் தொண்டர்களுடன் இணைந்து போராட்டம் நடத்த ஊர்வலமாகப் புறப்பட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்களை அங்கிருந்து செல்ல போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. அங்கு வைத்து, வைகோ கைது செய்யப்பட்டார். அவருடன் ம.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் ஆயிரம் பேர்வரை கைது செய்யப்பட்டனர்.
அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட அனைவரும், மயிலாப்பூர் சாய்பாபா கோவில் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
வைகோவுடன் அவைத் தலைவர் எல்.கணேசன் எம்.பி., செஞ்சி ராமச்சந்திரன் எம்.பி., பொருளாளர் கண்ணப்பன் எம்.எல்.ஏ. கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துணைப் பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, நாசரேத் துரை, மாவட்ட செயலாளர்கள் ஜீவன், வேளச்சேரி மணி மாறன், சோமு, உட்பட ஏராளமானோர் கைதாகியுள்ளனர்.
இதற்கிடையில், விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச்செயலாளர் திருமாவளவன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில்:
சிங்கள ஹிட்லர் மகிந்த ராஜபக்ஷவின் ஈவு இரக்கமற்ற இன ஒடுக்குமுறையால் யாழ்ப்பாணம் கொழும்பிற்கிடையிலான ஏ-9 வீதியை அடைத்து வைத்திருப்பதால் கடந்த 3 மாதமாக 6 லட்சம் தமிழர்கள் பட்டினி கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். அண்மையில் ஒருவர் பட்டினியால் பலியான செய்தியும் வந்துள்ளது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் முயற்சியால் ஈழத் தமிழர்களுக்கு அரிசி, சர்க்கரை, பால்பவுடர் போன்ற உணவுபொருட்களை இந்திய அரசு அனுப்பி வைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது சற்று ஆறுதல் அளிக்கிறது.
என்றாலும் இவற்றை சிங்கள அரசு மூலமாக அனுப்பினால் தமிழர்களுக்கு பயன்படாது. சிங்கள பகைவரே இதைக் கைப்பற்றி கொள்வார்கள்.
எனவே ஈழத்தமிழர்களின் பட்டினிச் சாவை தடுக்க மேலும் கூடுதலாக உணவு பொருட்களை அனுப்ப வேண்டும். செஞ்சிலுவை சங்கம் மூலம் தமிழ் மக்களுக்கு உணவு பொருட்களை நேரடியாக அனுப்ப வேண்டும் என்று இந்திய அரசையும், தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறேன்.
மனிதநேய அடிப்படையில் உணவுப்பொருட்களை அனுப்ப முன்வந்துள்ளதால் மத்திய அரசுக்கும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட தமிழக முதலமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துள்கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியா வருவதைக் கண்டித்து தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டொக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் அதிகரித்துவரும் ஈழத் தமிழர்களின் உயிரிழப்பு பற்றி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியிருக்கிறோம் என்றும் இது தொடர்பாக இலங்கை அரசுக்கு எங்களுடைய உணர்வுகளை மீண்டும் எடுத்துரைப்போம் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார். அவருடைய கரிசனை ஆறுதல் தருகிறது.
ஆனால் இலங்கைத் தமிழர்களின் சொல்லொணா துயரத்தை ஆற்றும் மருந்தாக அது அமையாது.
இலங்கையில் அண்மைக் காலமாக ஏற்படும் தமிழ் மக்களின் உயிரிழப்பு குறித்து இந்தியா ஆழ்ந்த கவலையடைந்திருப்பது உண்மையானால், அந்தப் படுகொலையை முன்னின்று நடத்திவரும் ஸ்ரீலங்கா விமானப் படையின் விமானிகளுக்கு இந்தியாவில் பயிற்சியளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இனி ராணுவம் தொடர்பாக ஸ்ரீலங்காவிற்கு எந்த உதவியும் செய்ய மாட்டோம் என்ற உத்தரவாதத்தை இந்திய அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு டொக்டர் ராமதாஸ் தனது அறிக்கiயில் கோரியுள்ளார்.
நன்றி>புதினம்.
Friday, November 17, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment