Tuesday, November 07, 2006

வெளியே இருக்கும் படையினரும் தாக்குதலுக்கான இலக்கே.

-செஞ்சிலுவை சங்கம்.
போர்முனைக்கு வெளியே யுத்த சீருடையில் காணப்படும் படையினரை சட்ட ரீதியான இலக்காகக் கருதலாம் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி.) தெரிவித்துள்ளது.

கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற தேசிய சட்ட வார நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் சட்ட ஆலோசகர் லரி மேபி இதனைத் தெரிவித்தார்.

ஹபரணையில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சட்ட பூர்வமான இலக்கா எனக் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்க விரும்பாத அவர், ஒவ்வொரு சம்பவமாக இது பற்றி ஆராய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இராணுவச் சீருடையில் உள்ள இராணுவத்தினரை அவர்கள் களமுனைக்கு வெளியே இருந்தாலும் சட்ட ரீதியான இலக்காக கருத வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி>பதிவு.

2 comments:

Anonymous said...

அவலத்தை தந்தவருக்கே அவலத்தை திருப்பி கொடுக்கும் முறை இதுதானா?

Anonymous said...

அவலத்தை தந்தவருக்கே அவலத்தை திருப்பி கொடுக்கும் முறை இதுதானா?