இந்தியஅரசு, தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதித்துள்ள தடையை உடனடி யாக நீக்க வேண்டும். இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளது இந்திய சமாதான சபை. விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப் படுவதானது இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைக்காண உந்துதலாக அமையும் என்றும் மேற்படி சபை தெரிவித்துள்ளது.
மூத்த ஊடக வியலாளர் குஈடிப் நாயர், தொழிற் சங்கத் சட்டத்தரணி காயத்திரிசிவ், சமாதான நடவடிக்கையாளர்களான இரு ஊடகவியலாளர்கள், மற்றும் சுதந்திர ஊடகவியலாளர்கள் ஆகியோர் அடங்கிய இந்திய சமாதான சபைகுழு ஒன்று கடந்த 29 ஆம் திகதி இலங்கைக்கு வந்து பல்வேறு பிரதேசங்களுக்கும் விஜயம் செய்ததுடன் பல்வேறு தரப்பினருடன் பேச்சுக்களையும் நடத்தியிருந்தது.
மேற்படி தமது விஜயம் குறித்து இந்திய சமாதான சபையின் உறுப்பினர்கள் நேற்று கொழும்பில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சபையின் உறுப்பினர்கள் பின்வரும் முடிவுகளை அறிவித்தனர்.
இலங்கையில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து நடத்திய பேச்சுகளின் போது இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வில் இந்தியாவின் தலையீடு அவசியம் என்று பலரும் வலியுறுத்தினர். எனவே இராணுவ ரீதியில் அல்லாமல் அரசியல் ரீதியாக இந்திய அரசு இலங்கையின் இனப்பிரச்சினையில் தலையிடவேண்டும்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் சமத்துவமான அழுத்தங்களை கொடுத்து பேச்சுக்களை முன்னெடுக்க வசதியாக விடுதலைப்புலிகளுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை அரசியல் ரீதியாக நீக்கவேண்டுமென நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இது தொடர்பான கோரிக்கைக்கு வலுச்சேர்க்கவும் நாம் தயாராக உள்ளோம்.
இந்தியாவுக்குத் திரும்பியதும் இது குறித்து ஓரிரு தினங்களில் இந்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் எண்ணில் அடங்காதவையாக அதிகரித்துள்ளன. தமிழ் சிங்கள இனங்களுக்கிடையிலான இடைவெளி அதிகரித்துச் செல்கின்றது. ஜனநாயகத்திற்கு விரோதமான ஆள் கடத்தல்கள் கப்பம் பெறுதல் என்பன அதிகரித்துள்ளன என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>பதிவு.
Friday, November 03, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இங்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம் TTN -ல் இன்றும் இந்திய
இராணுவத்தை குறை கூறுவதை நிறுத்த சொல்லுங்க
jv
அப்படி என்றால் இந்தியராணுவம் செய்ததெல்லாம் சரி என்கிறீர்களா? நடந்த உண்மைகளை கூறுவது தவறா? வரலாற்று திரிபை நாம் செய்யலாமா?
நான் இன்றும் என்று எழுதியிருக்கிறேன். இந்த தடை எப்பொழுதிலிருந்து ராஜிவ் கொலையுண்டபின் சில விசயங்கள் மறக்க படவேண்டும் ஆண்டன் பாலசிங்கம் சொல்வது போல
jv
Post a Comment