Sunday, November 19, 2006

உணவு பொருட்கள் அனுப்புங்கள்: ஜெயலலிதா கோரிக்கை.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:.....
இலங்கையில் தமிழகர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தி.மு.க. அரசிடம் அனுமதி கேட்டும், அதனை தராமல் மறுத்தது மிகுந்த கண்டனத்திற்கு உரியது.

இதுபோன்ற மக்கள் நலனுக்காக செய்யக்கூடிய போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் ஒரு முக்கிய ஜனநாயகக்கடமையாகும்.இம்மாதிரியான போராட்டங்களுக்கு எங்கள் ஆட்சிக் காலத்தில் முறையாக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இன்றைய தி.மு.க. அரசு தற்போது அனுமதி வழங்க மறுப்பது மக்கள் விரோதச் செயலாகும்.

தற்போது மத்திய அரசு, இலங்கையில் அவதிப்படும் தமிழர்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்புவதாக அறிவித்தள்ளது. இந்தச் சூழ்நிலையில், இலங்கை அரசின் மூலமாக இத்தகைய உதவிகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களைச் சென்றடையும் என்பது கேள்விக்குரியதாகும்.

எனவே இலங்கைத் தமிழர்களுக்குத் தேவைப்படக் கூடிய உணவு மற்றும் மருந்து உள்ளிட்டபொருட்களை இலங்கை அரசு மூலம் வழங் காமல், செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி>லங்காசிறீ.

1 comment:

மஞ்சூர் ராசா said...

இதில் எதுவும் அரசியல் இல்லாமல், மனிதாபிமானம் இருக்கிறது என்றால் நல்லது.