Monday, November 20, 2006

இணைத்தலமை நாடுகளுக்குள் பிரிவா?

வடக்கு கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலை குறித்து வாசிங்டனில் நடைபெறும் இணைத்தலமை நாடுகளுக்கிடையேயான கூட்டத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவும் யப்பானும் ஒரு கருத்தையும் ஐரோப்பிய யூனியனும் நோர்வேயும் அதற்கெதிரான கருத்ததையும் கொண்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியமும் நோர்வேயும் தற்போதய தாக்குதல்களை இருதரப்பினரும் நிறுத்த வேண்டும் என்றும், அதேவேளை அமெரிக்காவும் யப்பானும் அரசால் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கை குறித்து சார்பான நிலைப்பாட்டையும் கொண்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பிரி்த்தானியாவும் ஜேர்மனியும் தேவையான அளவு உணவுப் பொருட்கள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என தமது ராஜதந்திர வழிகள் ஊடாக தெரிவித்துள்ளன.

A9 ஊடாக பொருட்கள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பும் தீர்மானமானது இந்த இராஜதந்திர வழிகளூடாக வழங்கப்பட்ட அழுத்தத்தின் நேரடி விளைவாகும்.

http://www.lankaenews.com/English/news.php?id=3367

1 comment:

Jeyapalan said...

இணைத் தலைமை??
யாருக்கு யார் தலைமை?
ஒரு 4 பில்லியன் டொலர் என்னும் கரட் கிழங்கைக் கட்டிக் கொண்டு முயல் சவாரி தான் இது.

இந்த 4 பில்லியனில் 1 பில்லியனாவது இப்ப முடிந்திருக்கும் இந்தக் கண்துடைப்புக் கூட்டங்களில்.

அதிலும் நடுநிலை!!!!!!!
கேலிக் கூத்து.

கனடாவின் சி.பி.சி. இந்தப் பித்தலாட்ட அரசாங்கத்தின் வேலைகளை அடையாளம் காட்டுகிறது.

Allan Rock and the SL govt.