நெல்லியடி புலோலியைச் சேர்ந்த முத்தையா சந்திர பாலா (வயது 60) என்பவரே இவ்வாறு பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்தவராவார். நேற்று புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் இவர் பட்டினியால் மரணமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட இவரது சடலத்தின் பிரேத பரிசோதனையை மாவட்ட வைத்திய அதிகாரி மற்றும் மரண விசாரணை அதிகாரியும் பதில் நீதிவானுமாகிய ந.தங்கராசா ஆகியோர் நடத்தினர்.
யாழ். குடாநாட்டில் கடும் உணவுப் பஞ்சம் நிலவி வரும் நிலையில் ஒரு வேளை உணவுக்குக் கூட வழியின்றி இவர் வாடி வந்தார் எனவும், இந்நிலையில் இவர் நேற்று திடீரென உயிரிழந்ததாகவும் தெரிய வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில் இவ்வாறு பெருந்தொகையானோர் பட்டினியின் கோரப்பிடிக்குள் சிக்கி தினந்தோறும் பரிதவித்து வரும் நிலையில், இந்நிலை தொடர்ந்தால் மேலும் பல பட்டினிச் சாவுகள் நிகழலாம் என அஞ்சப்படுகிறது.
நன்றி>தினக்குரல்.
Thursday, November 16, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
யாரோ துணை யாரோ
எமது அன்பு யாழ் உறவுகளுக்கு?
மிகவும் கவலையாக இருக்கிறது.
அப்பாவி மக்களை
கெதியாகக் காப்பாற்றுங்கள்
ஆண்டவரே.
கொடுமையிலும் கொடுமை. இந்த தள்ளாத வயதிலுமா? அனைத்து ஆதிக்க வெறி பிடித்த நாய்களும் இதற்காக வெட்கப்படவேண்டும். இதைப்போன்ற கோறாமைகளை தடுத்து நிறுத்த சமுதாயம் என்ன செய்யப்போகிறது? இன்னும் எவ்வளவு காலம் இப்படி பலமிழந்த மக்கள் பூச்சிகளைப்போல் செத்துக்கொண்டிருப்பார்கள்? இக்கொடுமைகளுக்கு ஒரு எல்லையே கிடையாதா?
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Post a Comment