Sunday, November 05, 2006

சமாதான முயற்சியில் இந்தியாவும் இணையலாம் -நோர்வே இளவரசர்.

இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் சமாதான நடவடிக்கையில் நோர்வேயுடன் இந்தியாவும் இணைந்து செயற்படலாம் என்று நோர்வேயின் இளவரசர் ஹெக்கோன் தெரிவித்தார்.
நோர்வேயின் இளவரசர் ஹெக் கோன் ஆறு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா வந்துள்ளார். அவருடன் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் றேமன்ட் றொகான் சென்ட்டும் கூட வந்துள்ளார்.
இளவரசர் ஹெக்கோன் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங், வெளிநாட்டு அமைச் சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் உட்பட அரசுத் தலைவர்கள் பலரையும் சந்தித்து உரையாடினார்.
நோர்வேயுடன் இந்தியாவும் இணைந்து இலங்கை இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வு ஒன்றைக் காண்பதற்காக உழைக்க முடியும். சர்வதேச அமைப்பு களின் பங்களிப்பையும் பெற்றுக்கொண்டால் மேலும் பயன் அடையலாம் என்று நோர்வே இளவரசர் கருத்துத் தெரிவித்தார்.
நோர்வே வெளிவிவகார அமைச்சர் றேமன்ட் றொகான் சென்ட் கருத்துத் தெரிவிக்கையில்
பொறுமையை வெளிப்படுத்துவது சம்பந்தப்பட்ட தரப்புகளின் பொறுப்பாகும். சமாதான முயற்சிக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அடுத்தகட்ட நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு முன்னர் இலங்கையின் களநிலைவரம் குறித்து அறிந்து கொள்வது அவசியம் என்றார்.
நன்றி>புதினம்.

5 comments:

Anonymous said...

இந்தியாவின் அண்டைவீட்டு பிரச்சினையை தீர்த்துவைக்க எங்கேயோ இருந்து வந்தவர்கள் இந்தியாவுக்கு ஆலோசனை கூறுகிறார்கள். இது இந்திய வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த ஒரு சறுக்கல்தான்.

Anonymous said...

சறுக்கல் அல்ல சரியான வழியில்தான் செல்கிறது. எம்மால் ராஜிவ்காந்தியை மறக்க முடியாது.

Anonymous said...

சறுக்கல் அல்ல சரியான வழியில்தான் செல்கிறது. எம்மால் ராஜிவ்காந்தியை மறக்க முடியாது.

Anonymous said...

எங்களாலும்தான் யாழ்மருத்துவமனை,வல்வை படுகொலைகளை மறக்கமுடியவில்லை. மறக்கமுடியாமை ஒரு வருத்தம்தான், ஆயினும் முடியவில்லையே என்ன செய்வேன் என்ன செய்வேன்.

Anonymous said...

please send us food..medicine..
once we got the food then we will talk about how cheap india and srilanka are....