Wednesday, November 22, 2006

இணைத்தலைமை நாடுகளின் முடிவால் சிறீலங்கா குழப்பம்.

போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரும் ஐ.நா தூதுவரும் இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் நாடுகளை தவறான வழியில் வழிநடத்தியுள்ளதாக ஸ்ரீ லங்கா அரசு இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சற்று நேரத்திற்கு முன் இணை தலைமை நாடுகளான நோர்வே,ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஜப்பான் இணை தலைமை நாடுகளின் மாநாடு முடிவடைந்ததையடுத்து வெளியிட்ட அறிக்கையில் ஸ்ரீ லங்கா அரசும் விடுதலை புலிகளும் திட்டமிட்டு மோதல்களை தொடர்கின்றது என தெரிவித்து அவற்றை கண்டித்திருந்தன.

போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினதும் ஐ.நா தூதுவர் அலன் ரொக்கினதும் கருத்துக்களால் இணை தலைமை நாடுகள் தவறான விதத்தில் வழிநடத்தப்பட்டுள்ளதாக அமைச்சரும் பாதுகாப்பு விடயம் தொடர்பான பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல ரொய்டர்ஸுக்கு தெரிவித்துள்ளார். அரசாங்கம் இவ் விடயம் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தவுள்ளது,அதாவது இவை திட்டமிட்ட மோதல்களா அல்லது யுத்த நிறுத்த மீறலா என.எனினும் விடுதலை புலிகள் தமது பயங்கரவாத நிலைப்பாட்டில் மாற்றம் செய்யாவிடின் இவை அனைத்தும் தவிர்க்க முடியாதவை என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .
நன்றி>லங்காசிறீ.

No comments: