தமிழகம் இந்தியா சூளுர் பகுதியில் அமைந்திருக்கும் இந்திய வான்படைத்தளத்தில் சிறிலங்கா விமானப்படையினருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியதையடுத்து இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் இதனைகண்டித்து பெரியார் திராவிட கழகத்தின் ஏற்பாட்டில் பாரரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளது
இதேவேளை இவ்வாரம் இந்தியாவின் பஞ்சாப் தலைநகர் சண்டிகாரில், கடந்த சிலநாட்களாக சிறிலங்கா விமானப்படையினருக்கு இந்தியாவால் இரகசியமாக விமானப்பயிற்சிகள் வழங்கப்படுவது குறித்து செய்திகள் வெளியாகியுள்ளது.
நன்றி>பதிவு.
2வது இணைப்பு:-
சிறிலங்கா வான் படையினருக்கு இந்தியா பயிற்சி வழங்குவதை எதிர்த்து போராட்டத்தில்
கடந்த வாரம் இந்தியா பஞ்சாப் தலைநகர் சண்டிகாரில் இலங்கை விமானப்படைக்கு பயிற்சிகள் வழங்கப்ட்டது விடயமாக சர்வதேச மற்றும் இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியானதும் அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பட்ட எதிர்ப்புக் குரல்கள் இந்திய அரசுக்கெதிராக எழுந்துவரும் நிலையில், இன்று தமிழகம் கோயம்புத்தூர் சூளுரில் உள்ள இந்திய வான்படைத்தளத்தில் மற்றுமொரு வான்படைப்பயிற்சி இலங்கை வான்படைக்கு ஏற்பாடகியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கோவை கே.யூ.இராமக்கிருஸ்ணன் மற்றும் வீ.ஈ.ஆறுச்சாமி தலைமையில் கோவை பெரியார் திராவிடர்கழகத்தினர் எதிர்புத் தெரிவிக்கும் முகமாக, மாலை 4.00மணியளவில் சூளுர் சீரணி அரங்கிலிருந்து, விமானப்படை தளத்தினை நோக்கி 100க்கு மேற்பட்டோர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பேரணியாகச் சென்ற வேளையில், மாலை 5.00மணியளவில் பொலிசாரால் அவர்கள் கைது செய்யப்பட்டு சூளுர் மண்டபத்தடி பொலிசில் தடுத்து வைக்கப்ட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி : சங்கதி.கொம்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
சூலூர் விமானப்படை தளம் என் வீட்டில் இருந்து ஒரு பதினைந்து கீ.மீ தூரம் தான் இருக்கும்.
இது ஒரு repair base. பெரிய ஆயுத பயிற்ச்சிகள் எல்லாம் வழங்கபடுவதில்லை என்று உறுதியாக நம்பலாம்.
செய்தித்தாள்களில் நானும் இதுபற்றி பார்த்தேன்.
உடனடியாக உளவுத் துறை இதுபற்றி விசாரித்து வருவதோடு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதாகவும் சொல்லியுள்ளனர்
மத்திய அரசு சம்மதித்து இருந்தால், உளவுத்துறைதான் என்ன செய்யும், தமிழ்நாட்டு அரசுதான் என்ன செய்யமுடியும், உளவுத்துறையின் முடிவுகளும் மத்திய அரசிடம்தானே கையளிக்கப்படும், எதுவுமே இல்லாது திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த முன்வருவார்களா?, அவர்களுக்கு என்ன வேலை வெட்டி இல்லையா? அவர்களுக்குதான் என்ன நன்மை?
அனானி அண்ணாச்சி,
ஒரு பயனும் இல்லைதான். அரசை எதிர்த்து ஆங்காங்கே சில இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவம், கண்டனம் தெரிவித்துவிட்டு கலைந்துபோவதும் வழக்கமான விஷயம்தானே! வேறென்றும் ஆக்கப் பூர்வமாக நடக்கப் போவதில்லை!
:(
Kavalaip pada vendiya seithi. We should all give our support to lankan tamils. Its our duty....
http://internetbazaar.blogspot.com
இந்த துரோகியின்(கருணா'நிதி') ஆட்சியில் தான் இலங்கை இராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்க பட்டது. இன்று கூட இலங்கை விமான படையினருக்கு பயிற்சி நடைபெறிகிறது. ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் இது போல் எதுவும் நடந்ததில்லை. இந்த விடையத்தில் கருணாநிதியை விட ஜெயலலிதாவே மேல். ஜெயலலிதா புலிகளுக்கு எதிரி மட்டும் தான். ஆனால், கருணாநிதி புலிகளுக்கும், ஈழதமிழர்க்கும் துரோகி.
இந்த துரொகியிடம் 16MPக்கள் உள்ளனர். இவன் நினைத்தால் இந்த பயிற்சியை தடுத்து நிறுத்த முடியும். ஆனால் அவர் செய்ய மாட்டார். ஏனென்றால், செய்தால், தன் பேரனுக்கு மத்திய மந்திரி பதவி பறிபோய்விடும். தன் முதல்வர் பதவியும் போய்விடும். இதற்கு பயந்தே அவர் குரல் கொடுக்க மறுக்கிறார்.
Post a Comment