Tuesday, November 21, 2006

மனித அவலங்களை புறக்கணித்து செயற்படுகிறது சிறிலங்கா!!!

தமிழர்களின் மனித அவலங்களை புறக்கணித்து சிறிலங்கா அரசாங்கம்: செயற்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:
அமெரிக்க தலைநகர் வோசிங்ரனில் இணைத் தலைமை நாடுகள் கூட்டம் நடைபெறும் நிலையில் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான கடைசி நிமிட முயற்சியாகத்தான் ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் திறப்பதாகக் கூறியுள்ளது.

ஏ-9 பாதையை மீளத் திறப்பது குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமோ அல்லது இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரிடமோ எதுவித தகவலும் தெரிவிக்கவில்லை.

ஏ-9 பாதையை திறப்பதில் உண்மையான அக்கறை இருக்குமேயானால் அவர்களிடம் தெரிவித்திருக்க வேண்டும். இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உத்தியோகப்பூர்வமாக எதுவித தகவலையும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை. ஊடகங்களின் ஊடாகவே நாம் தெரிந்து கொண்டோம் என்றார் தமிழ்ச்செல்வன்.
நன்றி>புதினம்.

No comments: