Sunday, November 19, 2006

அடி பணிந்தது சிறீலங்கா அரசு?

ஏ-9 பாதை திறப்பதற்கு சிறிலங்கா ஐனாதிபதி உத்தரவு!!!

அமெரிக்கா வோஸிங்ரன் நகரில் இணைத்தலைமை நாடுகளுடனான மாநாட்டில் மகிந்த ராஐபக்ஸ அரசாங்கத்தின் மீது கொண்டுவரப்பட்ட சர்வதேச அழுத்தங்கள் காரணமாக ஞாயிறு இரவு சிறிலங்கா அரசாங்கத்தால் ஏ-9 பாதை திறப்பதற்கான உத்தரவு சிறிலங்கா ஐனாதிபதி செயலகத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் பாதை திறக்கும் திகதி குறித்து இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதேவேளை முதல்கட்டமாக ஒருதொகுதி பாரவூர்திகள் ஏ-9 பாதையூடாக மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களுடன் செல்லவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் ஓகஸ்ட் 11 திகதி முதல் ஏ-9 பாதை மூடப்பட்டிருப்பது யாவரும் அறிந்தது.
நன்றி>பதிவு

2வது இணைப்பு:-

யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பிலான மகிந்தவின் திடீர் யோசனை சாத்தியமற்றது: தயா மாஸ்ரர்

யாழ்ப்பாணத்துக்கான அத்தியாவசியப் பொருட்களை ஒரே முறையில் முகமாலை ஊடாக ஏ-9 பாதையில் கொண்டு செல்வதாக மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளது சாத்தியமற்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்ரர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் தெரிவித்துள்ள கருத்து:

ஏ-9 பாதை நிரந்தரமாக மீளத் திறக்கப்பட வேண்டும். யாழ்ப்பாணத்துக்கு ஒரே முறையில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் கொண்டு செல்வது சாத்தியமில்லை என்றார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவு மகிந்த ராஜபக்ச அலுவலகம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பு:

பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கமைய ஏ-9 பாதையூடாக ஒரே முறையில் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்படும். இந்தப் பணியைச் செய்வதற்கு பல நூற்றுக்கணக்கான பாரஊர்திகள் தேவைப்படும் என்பதால் அவற்றைத் தந்து உதவ வேண்டுகிறோம்.

ஓமந்தை மற்றும் முகமாலை சோதனைச் சாவடிகள் ஊடாக வாகன அணிகளைக் கொண்டு செல்வதற்கு சுயாதீன அமைப்புக்களின் உதவியை சிறிலங்காஅரசாங்கம் நாடும். யாழ்ப்பாணத்துக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் "சீல்' செய்யப்படும். வாகன அணி யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்ததும் பொதுமக்கள், மதப் பிரமுகர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் முன்னிலையில் "சீல்' திறக்கப்படும்.

மனிதாபிமான நோக்குடன் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அனைத்துத் தரப்புக்களிடமும் கேட்டுக்கொள்ளப்படும். குடாநாட்டுக்கு எடுத்துச்செல்லப்படும் அத்தியாவசியப் பொருட்கள் மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் கண்காணிப்புடனேயே விநியோகிக்கப்படும்.

அவசர தேவைக்கு விநியோகிப்பதற்கென ஒதுக்கிச் சேமித்து வைக்கப்படும் மேலதிக பொருட்களும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களும் யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபரின் மேற்பார்வையின் கீழ் வைக்கப்படும். ஒரே முறையில் பொருட்களை எடுத்து வரும் வாகன அணிக்கு பாரஊர்திகளைக் கொடுத்து உதவ விரும்பும் பாரஊர்தி உரிமையாளர்கள் அத்தியாவசிய சேவைகள் நாயகத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறு பகிரங்க வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

சர்வதேச அமைப்புக்களின் உதவியும் கோரப்படுகிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழும் மக்களுக்குத் தேவைப்படும் சகல பொருட்களையும் மனிதாபிமான ரீதியில் அனுப்பி தேவையான மேலதிக கையிருப்பை வைத்திருப்பதற்கு சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் உதவியையும் அரசு கேட்டுக்கொள்கிறது. இந்த ஏற்பாடு மக்களின் தேவைகளை நிறைவு செய்வதோடு மக்களிடையே நம்பிக்கையைக் கட்டி எழுப்பவும் பெரிதும் உதவும்.

பாதகமான காலநிலை, வர்த்தக நிலையங்களை மூடுமாறு வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள், மனிதாபிமானப் பொருட்களையும் மக்களையும் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றின் மத்தியிலும் அரசாங்கம் குடாநாட்டு மக்களுக்குத் தேவையான பொருட்களைத் தளர்வின்றி எடுத்துச் சென்றதாக மகிந்தவின் செயலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தொடரும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள், இராணுவத்தில் சிறார் சேர்ப்பு, பாரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் என சர்வதேச சமூகத்தின் கடும் கண்டனத்துக்குள்ளாகியிருக்க��
�ம் சிறிலங்கா அரசாங்கமானது வொசிங்ரனில் இன்று திங்கட்கிழமை நடைபெற உள்ள இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்திலாவது கண்டனத்தைப் பெற்றுவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் இந்த நடைமுறைச் சாத்தியமற்ற திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நன்றி>ஈழம்பேஜ்

5 comments:

நாமக்கல் சிபி said...

//இதேவேளை முதல்கட்டமாக ஒருதொகுதி பாரவூர்திகள் ஏ-9 பாதையூடாக மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களுடன் செல்லவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன//

நல்ல செய்திதான். மகிழ்ச்சியாக இருக்கிறது.

Anonymous said...

The president's office said the opening of the A9 highway was a one-off. - BBC

Anonymous said...

தொடரும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள், இராணுவத்தில் சிறார் சேர்ப்பு, பாரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் என சர்வதேச சமூகத்தின் கடும் கண்டனத்துக்குள்ளாகியிருக்கும் சிறிலங்கா அரசாங்கமானது வொசிங்ரனில் இன்று திங்கட்கிழமை நடைபெற உள்ள இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்திலாவது கண்டனத்தைப் பெற்றுவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் இந்த நடைமுறைச் சாத்தியமற்ற திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Anonymous said...

பாதை திறக்க வேண்டும்,
பொருட்கள் செல்ல வேண்டும்,
பின்பு தான் மகிழ முடியும் ஐயா.

மாசிலா said...

மகிழ்ச்சி தரும் நல்ல செய்தி.
சகோதர சகோதரிகள் நற்பயண் அடைவார்களாக.
நன்றி.