Friday, November 17, 2006

தமிழ்நாட்டில், ஈழத்தமிழருக்கு குரல்கொடுத்த வை.கோ கைது.

சென்னையில் இன்று ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடாத்திய வைகோ, தமிழ்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டார்.

இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வருவதை எதிர்த்து வரும் 27ம் தேதி டெல்லியில் வைகோ உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்.

மதிமுக மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு மற்றும் உயர் நிலைக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. வைகோ தலைமை தாங்கினார். அவைத் தலைவர் எல்.கணேசன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியாவுக்கு வருவதை எதிர்த்தும், ஈழத் தமிழர்கள் அனாதைகள் அல்லர் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையிலும் வருகிற 27ம் தேதி டெல்லியில் வைகோ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.

2. சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன் 17ம் தேதியான, நாளை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இருப்பினும் அதை மீறி அமைதியான முறையில், துளியும் வன்முறைக்கு இடம் கொடுக்காமல் போராட்டம் நடத்தப்படும்.

காலை 10 மணிக்கு மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவிலிருந்து ஊர்வலமாக கிளம்பி டிடிகே சாலை வரை சென்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

3. யாழ்ப்பாணம் மக்கள் பரிதவிக்கும் நிலையை மாற்ற ஏ9 நெடுஞ்சாலையை உடனடியாக திறக்க வேண்டும். இதற்காக இலங்கை அரசை மத்திய அரசு வற்புறுத்த வேண்டும்.

4. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

14 comments:

Anonymous said...

ஈழபாரதி,
இச்செய்தியை எங்கிருந்து பெற்றீர்கள்?

-வன்னியன்-

ஈழபாரதி said...

வைகோ கைது செய்யப்பட்டவிடயம் தினமலரில் வந்திருக்கிறது, ரிரிஎன்னும் செய்தியில் கூறுகிறது,
http://www.maalaimalar.com/
தினமலரில் வந்த செய்தியை எனது புளக்கில் போடமுடியவில்லை, எனவேதான் முதல்வந்த செய்திகளுடன் இணைத்து போட்டேன், முதல் வந்த செய்திகள் இங்கிருக்கின்றன.
http://thatstamil.oneindia.in/news/2006/11/16/lanka.html
http://newstodaynet.com/16nov/ld5.htm

ஈழபாரதி said...

மன்னிக்கவேண்டும் வன்னியன் தினமலர் அல்ல மாலைமலர்.
http://www.maalaimalar.com/

Anonymous said...

ம்.
தலைப்பை ஓரிடத்திலும் செய்தியை வேறிடத்தில் அதுவும் தலைப்புக்குரியதல்லாமல் வேறொன்றைப் போட்டுள்ளதால் இக்கேள்வி எழுந்தது.
செய்தியை நீங்களே எழுதி தகவல் மூலத்தைத் தந்திருக்கலாம்.

வழமையாக எங்கள் ஊடகங்கள் செய்யும் கோமாளி வேலைதானோ என்று சகல தளங்களிலும் தேடினேன். நல்லவேளை இந்தமுறை இதைச்செய்யவில்லை.

-வன்னியன்-

Anonymous said...

அய்யோ.... அய்யய்யோ......
இப்படி பண்ணிட்டாங்களே.....
பக்கத்து வீட்டுக்காரனோடு ஒரே தொல்லை தாங்க முடியல.... வை.கோவுக்கு ஒரு சோடா வாங்கிக்கொடுத்து நாள் முச்சூடும் தெருவே அதிர்ர மாதிரி வசவு கொடுக்கனும்னு திட்டம் வச்சிருந்தேனே... இப்படி ஆகிப்போச்சே......
----------------
அந்த ஆள விடுங்க.... அந்த ஆளாள நல்லத விட கெடுதல்தான் அதிகம். ஈழப் பிரச்ச்னைய வச்சி அரசியல் ஆதாயம் தேடுராறு. உள்ள பொடால போட்டு வெளிய வரமுடியாம செய்யனும்.
-------------------------
தமிழக அரசியல்வாதிகள நம்பி ஒன்னும் ஆகாது. தி.மு.க ஆட்சில இருந்தா ஈழ மக்களுக்கு எதிரா நடவடிக்கை இருக்காது. அதுதான் அவங்க ஆதரவு நிலை. அ.தி.மு.க.ன்னா சந்தர்ப்பம் கிடைச்சா சுளுக்கு எடுப்பாங்க.... ஈழம், புலிகளால கருனாநிதி ரெண்டு தடவ ஆட்சிய கோட்ட வுட்டாரு. கொஞ்சம் அடக்கிதான் ஆதரவு தருவாரு இந்த தடவ.
---------------------------------------

Anonymous said...

இதே ஜெ. ஆட்சி இருந்து வை.கோ. கைதாகியிருந்தால், நம் வலைப்பூ ப.எ.க்கள் என்ன குதி குதித்திருக்கும்? இப்போது என்ன கொழுக்கட்டை வைத்திருக்கிறார்களோ? ஒரு ப.எ.வும் வாயை திறக்க காணோம்?!

திருமாவளவன் said...

வை.கோ., ராமதாஸ், திருமா இவங்களை இந்த விசயத்தில் மனம் விட்டு பாராட்டலாம். வை.கோ. இதை வைத்து ஆதாயம் தேடுரார்-னு சொல்வது தவறு. அவர் எப்பவுமே ஈழத்தமிழர்களுக்கும், புலிகளுக்கும் ஆதரவுக் குரல் கொடுத்து வருகிரார். எந்த ஒரு கணத்திலும் அவர் ஈழத்தமிழர்களுக்கும், புலிகளுக்கும் ஆதரவுக்குரல் கொடுக்கத் தயங்கியதில்லை.

Anonymous said...

திருமாவளவன்,
நானு அப்படித்தாங்க நினச்சுகிட்டு இருந்தேன்..... அப்புறம் ஏங்க 'பொடா'ல தூக்கி போட்டவங்க கூடவே கூட்டணி வச்சாரு? அதவிட மனுசன் நாண்டுகிட்டு சாவலாம்.

G.Ragavan said...

ஒரு அரசியல்வாதியாக எவ்வளவு சிறந்தவர் என்று வைகோவைப் பற்றி கருத்துச் சொல்வது இப்பொழுது மிகக் கடினம். ஆனாலும் அவர் முதலில் இருந்தே இலங்கைத் தமிழர்க்கு ஆதரவாக இருக்கிறார். இந்த விஷயத்தில் வைகோவை நானும் நம்புகிறேன். அவரைக் கைது செய்திருப்பது தவறே.

திருமாவளவன் said...

கருணாநிதி கூட தான் வை.கோ. விடுதலை புலிகளின் துனையுடன் தன்னை கொலை செய்ய சதி செய்கிறார்னு சொன்னார். அப்புரம் அதே கர்ணாநிதிநும் வை.கோ.வும்கூட்டணி அமைக்கலையா.
நான் இதுல அரசியலை கலக்க விரும்பலைங்க. நான் சொல்ல வருவது வை.கோ. அரசியல் ஆதாயத்துக்காக ஈழத்தமிழர் விசயத்தை கையில் எடுத்தது இல்லை என்பது என் கருத்து. தமிழர்கள் எல்லொரும் இணைந்து இந்த விசயத்துல் போராடவேண்டும் என்பதே என் விருப்பம்.

Anonymous said...

இப்படி கூட்டணி சேருவதற்காக நாண்டுகிட்டு சாவலாம் என்றால் தமிழகத்தில் மூத்த அரசியல்வா(ந்)தியான மு.க.வும், பா.ம.க.வின் ராமதாசும் முதலில் நாண்டுகிட்டு சாக வேண்டும்.

Jayaprabhakar said...

புலிகலின் உதவியுடன் என்னை கொலை செய்ய பார்த்தார் என கூறிய கருணாநிதியை எப்படி நீங்கள் நம்புகிறீர்கள்?
இந்த விடையத்தில் கருணாநிதியை விட ஜெயலலிதாவே மேல். ஜெயலலிதா புலிகளுக்கு எதிரி மட்டும் தான். ஆனால், கருணாநிதி புலிகளுக்கும், ஈழதமிழர்க்கும் துரோகி. கருணாநிதிக்கும் கருணாவிற்க்கும் ஒரே வித்தியாசம் தான் - கருணா'நிதி'யிடம் 'நிதி' உள்ளது கருணாவிடம் 'நிதி' இல்லை.

வைகோ இன்றுவரை தன் கொள்கையில் சமரசம் செய்தது கிடையாது. ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தாலும் ஈழதமிழரை ஆதரிப்பதை சிறிதும் நிருத்தவில்லை, ஆனால் அந்த துரோகி (கருணா'நிதி') காங்கிரஸ் உடன் கூட்டணிக்காக, 'ராஜீவ் காந்திக்கு முன், ராஜீவ் காந்திக்கு பின்' என முதுகெலும்பில்லாமல் பேசுகிறார்.

இந்த துரோகியின் ஆட்சியில் தான் இலங்கை இராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்க பட்டது. இன்று கூட இலங்கை விமான படையினருக்கு பயிற்சி நடைபெறிகிறது. ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் இது போல் எதுவும் நடந்ததில்லை.

வைகோ தலைமையில் கடந்த ஆ.தி.மு.க ஆட்சியில் ஈழதமிழரை ஆதரித்து இதே இடத்தில் (இலங்கை தூதரகம் முன்) ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆதிமுக அரசு அதற்கு அனுமதி தந்தது. டில்லியில் கடந்த மாதம் இலங்கை தூதரகம் முன்பு இதே போல் ஆர்ப்பாட்டம் நடந்தது, டில்லி காவல்துறை அதற்கு அனுமதி தந்தது. ஆனால் இந்த துரோகி, அனுமதி தரவில்லை.

கடந்த மாதம், ஈழத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்த போது ஏன் இந்த துரோகி அவர்களை காணமறுத்தார்?

ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தது ம.தி.மு.க.வின் தீவிர தொண்டர்களின் விருப்பதிற்கு அடிபணிந்து. அது அவரது அரசியல் முடிவு. ஆதையும் அவரது கொள்கையையும் சேர்த்து குலப்பிகொள்ளாதீர்கள். ம.தி.மு.க.வை குற்றாம் சாட்டும் தி.மு.க. ஆதரவாளர்கள் ஏன் தி.மு.க. காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துள்ள போது அதை ஆதரிக்கிறீர்கள்?

தமிழகத்தில் இன்றும் வெகு சிலரே புலிகளுக்கு ஆதரவாக உள்ளனர். அப்படி இல்லை என்றால் தி.மு.க. 1991ல்லேயே அபார வெற்றி பெற்றிருக்கும்.

ஈழதமிழரை ஆதரித்து வைகோ பெற்றதை விட இழந்தது தான் அதிகம். அப்படி இருந்தும், உண்மையான ஈழதமிழரின் ஆதரவாழரான வைகோவின் முயற்சிகளை நீங்கள் குறை கூறுவது மிகவும் வறுத்தமாக உள்ளது.

டில்லியில் போராட்டம் நடத்துகிறார் வைகோ. அங்கு அவருக்கு வாக்களிக்க யாரும் இல்லை. ஆனாலும் அங்கு அவர் போராட்டம் ந்டத்துகிறார். காரணாம் அவர் வாக்குகளுக்காக ஈழத்தை ஆதரிக்கவில்லை. இதை புரிந்துகொண்டு கருணாநிதி என்ற துரோகியை நம்பி ஏமாறாமல் இருந்தால் நலம்.

Anonymous said...

ஜெயபிரபாகர், சரியாச் சொன்னீங்க.

ஜெயலலிதா, புலிகளை மட்டும் தான் எதிர்க்கிறார் - ஈழத் தமிழர்களை அல்ல. ஏதோ புலிகளை எதிர்த்தால் ஈழத் தமிழர்களையே எதிர்ப்பது போல சிலர் புருடா கிளப்புகிறார்கள். உதாரணத்துக்கு, தமிழினத் தலைவர் என்று ஒரு தமிழின விரோதியை அழைத்துக் கொண்டு, அவரை எதிர்த்து அரசியல் செய்கிறவர்கள் எல்லாம் தமிழர்களே இல்லை என்று சொல்வது போல.

Anonymous said...

Dear Guys
Now i am understanding why the lankan tamil brothers and sisters are being killed still. If anybody is supporting for tamil people(whoever may be) come forward to support for that guy. If not keep mum please.First up all we are lacking on unity thats why we are being victimised.